Saturday, March 27, 2010

ஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப்பூட்டும் புத்தகம்

ஓர் உண்மை சம்பவம்...ஒருவர் புதிதாக ஒரு கார் வாங்கினார்.. சில நாட்களிலேயே , தயாரிப்பு நிறுவனத்துக்கு புகாருடன் வந்தார்..
" கார் நல்லாதான் இருக்கு.. ஆனா ஒரு பிரச்னை.. இந்த காரை எடுத்து போய், சாகலேட் , பிஸ்தா ஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆக மறுக்கிறது... வெனிலா ஐஸ் கிரீம் வாங்கினால் மட்டும் ஸ்டார்ட் ஆகிறது "
நிறுவனத்தாரால் இதை நம்ப முடியவில்லை... எதாவது சாமியாரின் திருவிளையாடலா அல்லது வாடிக்கையாளர் இலக்கியவாதியா அல்லது பாமரத்தனமாக உளறுகிறார என்றெல்லாம் அன்வசியாமாக குழம்பாமல், உண்மையை ஆராய்ந்தார்கள்... அவர்கள் கண்டுபித்த லாஜிகலான உண்மை , நாம் சற்றும் எதிர் பாராதது...

இது போன்ற பல சுவையான தகவல்கள், ஆலோசனைகள் , என விற்பனை துறையில் வெற்றி கோடி கட்ட விரும்புவோருக்கு பயன் படும் வகையில் எழுதப் பட்டுள்ள புத்தகம் தான் ... நம்பர் ஒன சேல்ஸ் மேன் என்ற இந்த புத்தகம்

இந்த துறையில் வல்லுனர்கள் பலர் இருக்கலாம்... திறமையாக எழுத தெரிந்தவர்களும் பலர் இருக்கலாம்..

அனால், நிபுணத்துவமும் , எழுதும் ஒரு சேர பெற்றவர்கள் , வெகு சிலர்தான் ...அந்த ஒரு சிலரில் ஒருவரான, சோம வள்ளியப்பன் இதை எழுதி படைத்தது இருக்கிறார்...

விற்பனை துறையில் இருக்கும் சிலருக்கு கூட அந்த துறையில் பெரிய ஈர்ப்பு இருப்பதில்லை.. அவர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்...
பாட்டா நிறுவன முதலாளி, தன வர்த்தக அட்டையில், தன்னை முதலாளி என்றோ டைரக்டர் என்றோ குறிப்பிட மாட்டார்.. சீனியர் சேல்ஸ் பர்சன் என குறிப்பிட்டு கொள்வார்.. என்பதை அறியும் போது, இந்த துறை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்ர்வம் ஏற்படுகிறது..
எல்லா பொருளையும் ஒரே மாதிரி விற்க முடியாது... விற்கவும் கூடாது, என்பதை தெளிவாக புரிய வைக்கிறார் நூலாசிரியர்..

செயற்கையான தமிழ் எழுதாமல், இயல்பாக நம்முடன் உரையாடுவது போல் எழுதப்பட்டு இருப்பதால், நூலுடன் ஒன்றி படிக்க முடிகிறது...
வாய்ப்புள்ள வாடிக்கையாளர் ( வாவா) என்ற சொல் அமைப்பு அருமை... இயல்பான தமிழ்..

வாடிக்கையாளரை எப்படி அணுகுவது, பொருளை எப்படி அறிமுகம் செய்வது மறுப்பை எப்படி சமாளிப்பது, எப்படி விறபனை முடிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் ஆழமாக அலசி உள்ளார் வள்ளியப்பன்...
வர்த்தக அட்டையை எப்படி கொடுப்பது , என்பதை படிக்கும்போது, இதில் கூட மேட்டர் இருக்கிறதா என அசந்து போகிறோம்..
இது போன்ற பல நுணுக்கமான தகவல்கள் நிரம்பி உள்ளன..
மேலோட்டமாக எழுதப் படாமல் , ஆழமாக எழுதப்பட்டு இருப்பதால், பல முறை படிக்க வேண்டி இருக்கிறது..

பெரும்பாலும் இன்சூரன்ஸ் துறையை மட்டும் உதாரணமாக காட்டி எழுதப் பட்டுள்ளது ஒரு சிறிய குறை... ஆனாலும் அவற்றில் இருந்தும் கற்று கொள்ள முடியும் என்பதால், அதை பொருட் படுத்த வேண்டியது இல்லை...நமக்கு ஏற்றவாறு , மாற்றி கொள்ளும் பொறுப்பை நாமே ஏற்று கொள்ள வேண்டியது தான்..
பொதுவாக , எழுத்தாளரின் தொடர்பு விபரங்கள் , புத்தகத்தில் இருக்காது... இதில் , நாம் தொடர்பு கொள்ள வசதியாக , நூலாசிரியரின் மின் அஞ்சல் முகவரி கொடுத்து இருப்பது, வாசகரின் கருத்துக்கு அவர் கொடுக்கும் மதிப்பை மட்டும் அல்ல, தொடர்பு கொள்ளும் கலை என்பதை போதிக்க , இவர் தான் தகுதியானவர் என்ற எண்ணத்தையும் உறுதி படுத்திகிறது...

சில நல்ல திரை படங்களை, திரை அரங்குகளின் குறைகளால் , ரசிக்க முடியாமல் போய் விடும்... சில நல்ல எழுத்தாளர்களின், எழுத்துகளும், புத்தக வடிவமைப்பு குறைகளால், பாதிப்பு அடைய வாய்ப்புண்டு... ஆனால் இந்த புத்தகம், சிறப்பாக வடிவமைக்க பட்டுள்ளது..

விற்பனை ஆர்வம், புரிந்துணர்வு என்பதை விளக்கும், 2 X 2 matrix கட்டம் மட்டும், சிறிதாக அச்சிட பட்டு இருப்பதால், முழு இம்பக்ட் கிடைக்கவில்லை... வேகமாக படிக்கும் , சிலருக்கு அது புரிய வில்லை. நிறுத்தி
படித்தால்தான் புரிகிறது... proof reader .. கொஞ்சம் கவனிங்க, ப்ளீஸ்

பின் இணைப்பு
மிகவும் உபயோகம் உள்ளது... பத்து கட்டளைகளும் அருமை...

ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட வைக்க எழுதுவது, அறிமுகம் கொடுக்க எழுதுவது ஒரு வகை...இந்த புத்தகம், ஒரு துறையில் நிபுணத்துவம் பெற எழுதப்பட்டு , அதில் வெற்றியும் பெற்றுள்ளது..
விற்பனை துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டும்..
கல்லூரி மாணவர்கள், வேலை தேடுபவர்கள், கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்...
மற்ற துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது இல்லை... ஆனால், படித்தால் சுவையாக இருக்கும்... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்..
விற்பனை என்பது ஒரு கலை, விரபனயாளர்கள் ஒரு விதத்தில் , கலைஞர்கள் என்ற எண்ணத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துவதுடன், இந்த துறைக்கே உரிய வித்தைகளை, அழகு தமிழில் , இனிமையாக போதிக்கிறது...

வாழ்கையில் வெற்றி பெற நினைபவர்கள், இளைஞர்கள் , இந்த புத்தகத்தை , தவற விட்டு விட கூடாது...
மொத்தத்தில் , இந்த புத்தகம் , சர்வ தேச தரத்தில் எழுப்பட்ட , ஒரு தமிழ் நூல்...

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்களின் வசதிக்காக , கீழ் காணும் இணைப்பை தருகிறேன்
http://nhm.in/shop/978-81-8493-165-5.html

5 comments:

  1. புத்தகத்தை வாங்க நினைக்கிறவங்க என்ன எதிபார்க்கிறாங்கன்னு புரிஞ்சுகிட்டு சரியான அளவுல சரியான முறையில மதிப்புரை எழுதி இருக்கீங்க, வாழ்த்துக்கள். நீங்க வனில்லா வாங்கினா மட்டும் கார் கிளம்புவது ஏன்னு சொல்லாம விட்டு அந்த ரகசியத்தை மட்டும் தெரிஞ்சுக்கவாவது புத்தகத்தை வாங்கும் ஆர்வத்தை தூண்டிட்டிங்க. ஆனால் எல்லாரும் எல்லா புத்தகங்களும் வாங்க முடியுங்களா? நானும் எதையும் விக்கப் போறதில்லைங்க, அதனால தயவு பண்ணி அந்த கார் விஷயத்தை மட்டும் எப்படின்னு விளக்கிப் போடுங்க, புண்ணியமா போயிரும். யோசிச்சு யோசிச்சு மண்டையிலே இருக்கிற முடியெல்லாம் கொட்டிப் போயிரும் போல இருக்கு!

    ReplyDelete
  2. அது ஒரு சாம்பிள் மேட்டர் தானுங்கண்ணா ..

    ஒருவர் ,ஒரே ஒரு மீன் தூண்டில் விற்று , ஒரு லட்சம் டாலர் எப்படி சம்பாதித்தார்

    இதே நூலாசிரியரின் நூலை, ஒரு துணி கடை அதிபர் ஏன் வாங்க மறுத்தார் ?

    ஒரு வெற்றி கரமான , விரபனயாளர், ஏன் தேவையில்லாத ஊருக்கு விமாந பயன் செய்தார்...

    இப்படி பல மேட்டர் இருக்கு.. அனைத்தையும் எழுதுனா, என் பதிவே ஒரு புத்தகம் மாதிரி ஆகி போயிரும்...
    என்ன செய்றதுன்னு தெரியலீங்கண்ணா

    ReplyDelete
  3. ஒரு கேள்விக்கே முழி பிதுங்குது- இன்னமும் மூணா?? இது நியாயமுங்களா? எனக்கு சுத்தமா பிடிக்கலீங்க.

    ஆனா பாருங்க, இப்படி மேல மேல கேள்வி கேட்டு எங்கள புக்கு வாங்க வெச்சிரணும்னு நீங்க நினைக்கிறாப்ல இருக்கு,,,அப்படி "நம்பர் ஒன சேல்ஸ் மேன்" என்கிற புத்தகத்தை வெச்சிக்கிட்டு நான் எந்த குப்பைய கிழிக்கப் போறேன், அந்த நினைப்புதான் என்னைப் புத்தகம் வாங்க விடாம தடுக்குது...

    அதனால பெரிய மனசு பண்ணி, கேள்வியை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு, வனில்லா வாங்க மட்டும் அந்த கார் ஏன் கெளம்புது? அத மட்டும் சொல்லிப் போடுங்க, போதும்.

    ReplyDelete
  4. " ஆனா பாருங்க, இப்படி மேல மேல கேள்வி கேட்டு எங்கள புக்கு வாங்க வெச்சிரணும்னு நீங்க நினைக்கிறாப்ல இருக்கு,,,"

    அட அப்படி எல்லாம் எனக்கு ஒரு நினைப்பு இல்லீங்கண்ணா ... புத்தகம் படிச்சேன்.. என் கருத்தை சொன்னேன்.. பிடிக்கலைனா , குப்பை புத்தகம்.. சில அறிவு ஜீவிகள் எழுதுன , உலக இலக்கியம் மாதிரி இருக்குனு சொல்லி இருப்பேன்.. ஏன்னா, நான் சொல்றத நம்பி படிச்சுட்டு , நாளைக்கு என்னை குறை சொல்ல கூடாது பாருங்க...

    நானும் எதையும் விற்க போவது இல்லை.. ஆனா, நிறைய விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது...

    " அத மட்டும் சொல்லிப் போடுங்க, போதும்"

    அதை மட்டும் படிச்சா , முழு இம்பாக்ட் இருக்காது... சரி.. அந்த முழு அத்தியாயத்தை மட்டும் , அப்படியே பி டி எப் ல , நெட்ல , நம்ம ப்ளாக்ல , போடலாம்னு அனுமதி கேட்டு பாக்றேன்... அனுமதி கிடைச்சா, இந்திய பதிவுலக வரலாற்றில் , முதல் முறையா, நம்ம ப்ளாக் ல வரும்...

    படிங்க... என்ன நான் சொல்றது ?

    ReplyDelete
  5. நீங்க குடுக்கற பில்ட்-அப்பைப் பாத்தா புத்தகத்தை வாங்கித்தான் தீரணும் போலத் தெரியுது...
    முயற்சி பண்ணிப் பாக்கறேன்...
    உங்க பதில்களுக்கு நன்றி!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா