Monday, May 3, 2010

சார், என் குரு மத்த சாமியார்கள் மாதிரி இல்லை ...ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஓர் உரையாடல்


அவர் கிட்ட தியானம் கத்துகிட்டேன்... தியானம் செஞ்சா, மேக கூட்டத்துல பறக்ற மாதிரி ஒரு பேரமைதியை உணர்ந்தேன்... நெற்றியில ஒரு துடிப்பு தெரிஞ்சுது.... நீல ஒளி தெரிந்தது... என்றெல்லாம் சொல்பவர்களை பார்த்து இருக்கிறோம்

அந்த புத்தகம் என்னை மாத்திடுச்சு, அவர் பேச்சு என்னை புரட்டி போட்டுடுச்சு... அவர் என் கிட்ட இருந்தா மூட நம்பிக்களை ஒழிச்சிட்டார்... என்று சொல்பவர்களை ஆன்மிக கூட்டம் , பகுத்தறிவு கூட்டம் என எல்லோரிடமும் பார்த்துள்ளோம்....

என்னதான் சாமியார்கள் மாட்டினாலும்,. எங்க சாமியார் மட்டும் நல்லவர் என கடைசி வரை சாதிப்பவர்கள் பலர்... அப்படி பட்ட ஒருவர், ஜே க்ருஷ்ணமுர்த்தியுடன் பேசுகிறார்... ஜே கே சொல்வதை அப்படியே ஏற்க வேண்டாம்... திறந்த மனதோடு, விருப்பு வெறுப்பு இல்லாமல், அவர் சொல்வதை கவனமாக படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ( அடைப்பு குறிக்குள் இருப்பவை நம்ம சொந்த சரக்கு )

**********************************************************************************************



"சார்.. என் குரு மத்தவங்க மாதிரி இல்லை... என்னோட பல கேள்விகளுக்கு அவரிடம் தான் பதில் கிடைத்தது... ஓர்அமைதி கிடைத்தது...

மத்த சாமியார் மாதிரி, பாடம் நடத்த மாட்டார்... அன்பா பேசுவாரு... திடீர்னு அவமான படுத்தற மாதிரி பேசுவாரு..சில சமயம் அசிங்கமா கூட பேசுவாரு.... நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும... ஆனா, அதெல்லாம், தூங்கிகிட்டு இருக்ற நம்ம ஆன்மாவை விழிப்பட செய்யும் பயிற்சிகள்தான்... கடவுள் எல்லாம் பொய்யி... புனித நூல்கள் சொன்ன படி நடக்காதே ...அப்படீன்னு புரட்சியா பேசுவாரு... பல தியான முறைகள் சொல்லி தந்து இருக்காரு.... கடவுளை உனக்குள் தேடுனு சொல்லுவாரு...

உங்களக்கு வேனும்னா , குரு என்பவர் தேவை படாமல் இருக்கலாம்... சராசரி மனிதனுக்கு குரு தேவை "

நமக்கு ஆறுதல் அளிக்க, உற்சாக படுத்த யாராவது தலைவர்கள் தேவை படறாங்க... ( அரசியல் தலைவர்களுடன் ஐக்கியம் ஆவதும், ஆன்மிக தலைவர்களிடம் ஐக்கியம் ஆவதும் அடிப்படையில் ஒரே மாதிரி தான் ) ...நமக்கு பிடிச்ச மாதிரி யாரு இருக்கங்களோ  அவுங்களிடம் சேர்ந்து கொள்கிறோம்.. நாம் உண்மையை தேடுவதில்லை... நமக்கு தேவை, நான் அவரின் சீடன், அவரின் தொண்டன், அந்த இயக்கத்தின் தொண்டன் என்று சொல்லி கொள்வதில் ஏறபடும் ஒரு வித பெருமைதான்.. பக்கத்தில் யாரும் இல்லேன்னா, யாரவது ஒருவர் போட்டோவை வச்சுக்கிட்டு, அவர்தான் என் தலைவர்/ குரு அப்படீன்னு சொல்லிக்றோம்... நாம வளர்ந்த சூழல், படிக்கும் புத்தகங்கள், இதன் அடிப்படையில் நம்ம தலைவரை/ குருவை தேர்ந்தேடுக்கிறோம் ( சின்ன வயதில் இருந்து புரட்சி கருத்துக்கள், நாத்திக கருத்துகளை படித்து வளர்ந்தால், நாத்திக , சீர்திருத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம்... இல்லேன்னா, ஆன்மிக தலைவர்களை தேர்ந்தேடுப்போம்...இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை )

ஏதோ ஒரு சந்தோசத்தை ( ஆத்ம திருப்தி ) , நிம்மதியை தேடினால் , கண்டிப்பாக இந்த தலைவர்களிடம் கிடைக்கும்.... உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்...ஆனால், தயவு செய்து , இதை உண்மை என அழைக்காதீர்கள்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில்தான், உண்மையை நீங்கள் உணர முடியும்

" ம் ஹூம்/.. குரு அல்லது தலைவர் தேவை இல்லை அப்படீன்னு, நீங்க என்னை இன்னும் கன்வின்ஸ் பண்ணல.. "

உண்மை என்பதை வாதம் செஞ்சு உணர்த்த முடியாது... உண்மை என்பது சில கருத்துக்கள் அல்ல ..

" என்ன இருந்தாலும், என் குரு எனக்கு பல நல்லது பண்ணதை மறுக்க முடியாது... பொறாமை, பேராசை இதெல்லாம் என்னை விட்டு போனதுக்கு அவர்தான் காரணம் .ஒரு புது மனுசனா என்னை மாத்தி அமைத்து இருக்கிறார் "

ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர் இன்னொருவரை மாற்றி அமைக்க முடியுமா...? நீங்கள் உண்மையில் மாறவில்லை... அவரின் பாதிப்பு உங்கள் சிந்தனையை மாற்றி இருக்கு...இந்த பாதிப்பு கொஞ்ச நாள் இருக்க கூடும்... அனால், அடிப்படையில்  நீங்க மாறல... ( ஒரு ஆச்ஷன் படம் பார்த்த, கொஞ்ச நேரத்துக்கு யாரையாவது அடிக்கணும் போல இருக்கும்... அப்புறம் சரியாகி விடும்... சுய முன்னேற்ற புத்தகம் படிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும், தன்னம்பிக்கை பொங்கி வழியும் )

ஓர்  உயர்ந்த சிந்தனை உங்களை ஆக்கிரமித்து இருப்பதற்கும், பொறாமை உங்களை ஆக்கிரமித்து இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை..இரண்டிலுமே, நீங்கள் ஒரு சிந்தனைக்கு அடிமையாக இருக்கிறீர்கள்... இந்த அடிமைத்தனம் உங்களுக்கு பிடிச்சு இருக்கு,... மனதளவில், ஒரு குருவுக்கு, ஒரு தலைவனுக்கு அடிமையா இருப்பதில் ஒரு வித பாதுகாப்பு உணர்வு உங்களுக்கு கிடைக்குது..

" என்ன பேசறீங்க? பேராசை என்பதை நான் வெல்லனும்... அதோடு போராடனும்... அதை வெல்லனும்..அப்பதான் அது என்னை விட்டு போகும்.. குரு அருள் இதற்கு வேண்டும் "

அதாவது, பேராசை இன்னும் உங்களை விட்டு போகல... இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா, பேராசையில் இருந்து விடுதலை ஆகிடுவேன்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... இப்படி ஒன்றை வெல்ல முயல்வதால், எதையாவது புரிந்து கொள்ள முடியுமா...?

ஒன்றை வெல்வது வேறு..ஒன்றை புரிந்து கொள்வது வேறு... ஒன்றை வென்று விட்டாலும் கூட, மீண்டும் மீண்டும் அதனோடு போராடி வென்று கொண்டே இருந்தாக வேண்டும்... ஆனால், ஒன்றை நன்றாக புரிந்து கொண்டால், அதில் இருந்து விடுதலை கிடைக்கும்...

அனால், ஒன்றை மறுப்பது, எதிர்ப்பது என்பது சுலபமானது ...

உண்மையில், இப்போது பேசி கொண்டு இருக்கும் எதையும் நீங்கள் கவனிக்கவில்லை... நீங்கள் உங்கள் குருவிடம் கற்று கொண்ட விஷயங்கள் , இப்போது அதற்கு எதிராக சொல்லலப்படுவதை எதிர்கிறது

" ஒரு விதத்தில் பார்த்தல், நீங்கள் சொல்வது சரி... அனால், இன்னொரு விதத்தில் பார்த்தல், நீங்கள் சொல்வதை ஏற்க முடியல "

நீங்கள் இவ்வளவு நேரம் பேசியதை, கவனிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது... இப்போது சொல்ல பட்டதையும், முன்பு நீங்கள் கற்ற விஷயங்களையும் ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்

" ஆமா ..அதில் என்ன தப்பு... என் அறிவு, நான் படித்த புத்தகங்கள், என் குரு - இதை எல்லாம் நீங்க சொன்னதுக்காக தூக்கி எறிய முடியாது ..ஆனால், இதெல்லாம் தேவையில்லைன்னு தோணுது..ஆனாலும் என்னால தூக்கி எறிய முடியல "

உண்மை என்னனு தெரிஞ்சதக்கு அப்புறமும், பழையவற்றை ஒரு கடமைக்காக பின் பற்றும் போது, உங்களுக்குள் தீவிரமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கும்... கண் முன் இருக்கும் உண்மையை உணர்வதுதான், விடுதலை உணரவை தர முடியும்...

ஒரு பெரிய தலைவரை, குருவை பின்பற்றுவதால் கிடைக்கும் பெருமைக்காக ( ஒரு கிளிகிளுப்புக்காக ) அவர்களை உருவாக்குகிறீர்கள் .. இந்த பெருமைக்காக, எவ்வளவு சோதனைகளையும், அவமானங்களையும் தாங்க தயாராகிறீர்கள்... இப்படி தியாகம் செய்வது உங்களுக்கு பெருமை தருகிறது ( தலைவர்களுக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள், சிறை செல்லும் தொண்டர்களை யோசியுங்கள் )..அதே போல, இப்படி பட்ட சிஷ்யர்களை பெற்ற குருவுக்கும் , இது ஒரு வித பெருமையை தருகிறது..

இருவரும் ஒருவரை ஒருவர் பயன்படுத்தி கொள்கிறீர்கள்... இதன் மூலம் ஒரு போதும் உண்மையை அடைய முடியாது... ஒரு போதும் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது...

3 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா