Wednesday, May 19, 2010

விவசாயியிடம் ஒரு பாடம்


ஜேம்ஸ் ஆலனின் ஒரு நல்ல கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ( அடைப்பு குறியில் இருப்பது அவர் சொன்னதல்ல - ஹி ஹி )

********************************************************************

கிராம்க்களுக்கு சென்றால், விவசாயிகள், தங்கள் வயலில் பணியாற்றுவதை காணலாம். நன்றாக உழுவதையும் , விதை விதைப்பதையும் காணலாம். அவர்களிடம் போய், விதை விதைக்கிரிர்களே, இதில் என்ன விளையும் என எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டு தொலைக்காதீர்கள். அட முட்டாளே என அவர்கள் நினைப்பார்கள். என்ன விதைக்கிறோமோ , அதை அறுவடை செய்வோம். இது சாதாரண பொதுஅறிவு.

இயற்கையின் ஒவ்வொரு விஷயமும், மனிதனுக்கு ஒரு பாடத்தை வைத்து இருக்கிறது. மனித வாழ்வில் துல்லியமாக செயல்படும் அதே விதிகள்தான் நம்மை சுற்றி உள்ள இயற்கையிலும் செயல்படுகின்றன . மனதில் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம்.
நமது எண்ணங்கள்., சொற்கள் , செயல்கள் ( வலை பதிவுகள் !!!! ) எல்லாம் விதைகள்தான். அவை நல்லவையா , கெட்டவையா என்பதை பொருத்து அதன் பலன் இருக்கும்
வெறுப்பான சிந்தனைகளை கொண்டவன் வெறுக்கபடுவான். அன்பான எண்ணங்களை கொண்டவன் நேசிக்கபடுவான்

எண்ணங்கள்,. சொற்கள் , செயல்கள் தூய்மையானதாக இருந்தால், நம்மை சுற்றி தூய்மையானவர்கள் சேர்வார்கள்.
இவை மோசமானதாக இருந்தால், மோசமானவர்கள் நம்மை சூழ்வார்கள் . அயோக்கித்தனமான சிந்தனைகள் , செயல்கள் கொண்ட ஒருவன், நல்ல வாழ்க்கைக்கு இறைவனை வேண்டுவது என்பது, அவரை விதை விதைத்து விட்டு, சுரைக்காய் கிடைக்கும் என எதிர்பார்க்கும் விவசாயியின் எதிர்பார்ப்பைபோன்றது.

விதைப்பதை அறுப்பாய்.. வியக்க வேண்டாம். வயலை கொஞ்சம் பார்

அவரைவிதை அவரையாகும்.. சுரைவிதை சுரைஆகும்..

அவரவர் செயலே, அவரவர் வாழ்வும் ஆகும்


மகிழ்ச்சி வேண்டுமா. அனைவரையும் சந்தோஷபடுதுங்கள். சந்தோஷத்தை பரப்புங்கள்.

விதையை தூவி விட்ட விவசாயி, அதன் பின் இயற்கையஇடம் பொறுப்பை விட்டு விட வேண்டும் ( செடி வளர்கிறதா என தோண்டி பார்த்து கொண்டிருக்க கூடாது )

விதை காணமல் போவது போல தோன்றினாலும் கூட, பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

அதே போல் தான் வாழ்க்கை.. பகிர்ந்து கொள்ளுங்கள்.. அதிகம் பெறுவீர்கள்.. கொடுங்கள் .. உங்களுக்கு கிடைப்பது கிடைக்கும்.

அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்.

அமைதி வேண்டும், ஆனந்தம் வேண்டும் என கடவுளிடம் வேண்டினாலும் கிடைப்பதில்லை . ஏன்? இதை அவர்கள் விதிப்பதில்லை. அதுதான் பிரச்சினை
ஒருவன் கஷ்டப்பட்டால், இதை அவனே அவனிடம் கேட்டு கொள்ள வேண்டும்

என்ன மன விதைகளை நான் விதைத்து வந்தேன்?
என்ன விதைதுகொண்டு இருக்கிறேன்
மற்றவர்களுக்கு என்ன செய்தேன்
மற்றவர்களிடன் எப்படி நடந்து கொள்கிறேன்
தன்னை தானே கேட்டு தெயல்வு பெற்று, அசுத்த விதைகளை நீக்க வேண்டும்

விவசாயிடம் இருந்து இந்த எளிய பாடம் கற்றல் நல்லது

7 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. actually ithu oru arputhamaana pathivu.. ithai pakirnthu kondamaikku nanri... enakku ithai pidiththatharku oru ksaaranam irukkirathu...

    "அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்."

    ayn rand endru aangilaththil oru migach chirantha author undu.. 1930s-40s il ivarathu karuththukalum, chindanaikalum andraya kaalakattaththil our perum puratchiyai thoondiyathu.. indrum kooda- naan kalloriyil padikkum kaalaththil kooda naan gavaniththathu undu.. en nanbargal aneka nabargal ivarin puththagangalaip padiththu vittu athaippola vaazha vendum endru maari viduvaargal..
    ithil enna sikkal endraal- rand-in karuththukal appadiye eduththukkollavendiyavai kidayaathu. ithil kurippittatharku maaraaka- intha ulagam un arivai purinthukollavillai endraal avarkalukku athai koduththu un arivin menmaiyai kuraiththukkollaathey- endra karuththu avarathu..

    enakku rand endraal uyir.. avarathu varigalil moozhippona kaalam undu.. anaal athil ethai eduththukkolla vendum-vidavendum endru naan purinthu ondu vittaen..

    enavey.. ithaippadikkayil en "transformation" enakku ninaivil vanthathu..

    thanks again for sharing..

    ReplyDelete
  3. நமது எண்ணங்கள்., சொற்கள் , செயல்கள் ( வலை பதிவுகள் !!!! ) எல்லாம் விதைகள்தான். அவை நல்லவையா , கெட்டவையா என்பதை பொருத்து அதன் பலன் இருக்கும்
    வெறுப்பான சிந்தனைகளை கொண்டவன் வெறுக்கபடுவான். அன்பான எண்ணங்களை கொண்டவன் நேசிக்கபடுவான்.


    .......ஓஹோ..... சூப்பர்! :-)

    ReplyDelete
  4. ( செடி வளர்கிறதா என தோண்டி பார்த்து கொண்டிருக்க கூடாது )//
    புன்னகைக்க வைத்த வரிகள்.
    ஒரு சமயம் என்னுடன் பணி புரிந்த ஒருவர் அலட்சியமாக இருப்பதைப் பார்த்து" ஏன் சார், நான் சொல்றதை ஞாபகத்தில் வைத்து செய்யலாமே. ஒவ்வொரு தடவையும் கேட்டு கேட்டே செய்றீங்க" என்றதற்கு
    "இன்னும் பதினைந்து வருடம் வேலை செய்யணும். மூளையை இப்போவே காலி பண்ணிட முடியாது" னு சொல்வார்
    உங்கள் பதிவு படித்ததும் நினைவு வந்தது.

    ReplyDelete
  5. வினை விதைத்தவன் வினை அறுப்பான்

    நல்ல கருத்துக்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. thanks jill thanni, chithra ,vinsent and mathanki ...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா