Thursday, May 27, 2010

பெர்பெக்ட் மர்டர்

"என்னது ? கொலையா ?" திடுக்கிட்டாள், ஸ்மிதா.. மௌனமாக புன்னகைத்தேன் " ஆமா... பட் டோன்ட் ஒர்ரி.. நான் எதையும் பெர்பெக்டா செய்பவனு உனக்கே நல்லா தெரியும்... இது முடிஞ்சதுக்கு அப்புறம், நம்மக்கு நிறைய பணம் கிடைக்கும்... தவிர, உனக்கும் நல்லது நடக்கும்..நான் யாரை கட்டம் கட்ட போறேன்னு தெரிஞ்ச , ஆச்சர்ய படுவ. "

அவள் அழகான உதடுகள் திகிலில் நடுங்கின.. " யாரை? "

" என் மனைவியை "

********************

என் மனைவி சங்கீதா நல்ல பெண்தான். அன்பானவள் தான்.. ஆனால், ஸ்மிதா போல் எனக்கு ஏற்றவள் அல்ல. அவள் வளர்ப்பு வேறு. சிந்தனை வேறு.

நான் எதையும பெர்பெக்டாக செய்ய நினைப்பவன். அவள் எதையும் பிரியமாக செய்ய நினைப்பவள். அன்புதான் அனைத்துக்கும் ஆதாரம் என்பாள் . வெற்றி, பணம் தான் அனைத்துக்கும் ஆதாரம் என்பேன் நான்.

பிரசினைகால் ஆயிரம் இருந்தாலும், அறிவியல் ஆராய்ச்சி, எரிபொருள் ஆராய்ச்சி என்பதில், எங்களுக்குள் இருந்த பொதுவான் ஈர்ப்பு தன்மை எங்களை இணைத்து வந்தது.

" ராஜ .. இங்கே வாங்க... " ஒரு நாள் தன அறையில் இருந்து உற்சாகமாக கத்தினாள் . உள்ளே ஓடினேன். என் ஆராய்சியை, சற்று விரிவு படுத்தி, பெட்ரோலுக்கு மாற்று கண்டு பிடித்து இருந்தாள் .

இது அறிவியல் துறையில் ஒரு புரட்சி. நாட்டில் எளிதாக கிடைக்கும் அரிசியில் இருந்து பெட்ரோல். பாஸ்மதி அரிசி வேண்டாம்.. மட்டரக அரிசி இருந்தாலே போதும்.. " எஸ். பெர்பெக்ட் கண்டுபிடுப்பு. இதை பெர்பெக்டா விற்கணும் " என்றேன் நான்..

" என்ன சொல்றீங்க "

" ஆமா..இதை அப்படியே, வெளிநாட்டுக்கு வித்துடுவோம். நல்ல காசு கிடைக்கும் "

" வேண்டாம்.. இதை மேம்படுத்தணும். இதை வித்தொம்னோ, விவசாய நிலங்கள் எல்லாம், மட்ட ரக அரிசியை இர்பத்தி செய்யும் இடங்களா மாறும். விவசாயிகள் பாதிக்க படுவ்னாங்க. . அரிசியை முக்கிய உணவ கொண்டுள்ள நம்ம மக்களும் பதிக்க படுவாங்க "

" அதை பத்தி நமக்கு என்ன.. நாம பெர்பெக்டா வேலைய முடிச்சுட்டு, வெளிநாடு போய் செட்டில் ஆயிடலாம் "

அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

அவள் இருக்கும்வரை, அவள் அறையில் இருக்கும் ஆராய்ச்சி குறிப்புகள் எனக்கு கிடைக்காது... நான் பணக்காரன் ஆகவும முடியாது... அவள் இப்போதெல்லாம் அறையை பூட்டி வைத்து கொள்கிறாள்.. அவளை முடிக்க தீர்மானித்தேன். பெர்பெக்ட் திட்டம் தீட்டினேன்.
***********************

கோயம்பத்தூரில், எங்கள புரவிக நிலம் சார்ந்த வசக்கு நடந்து வந்தது.. மேலும் அங்கு சில எதிரிகளும் இருந்தனர். இப்போது அவளுக்கு எதாவது நடந்தால், அவர்களை நோக்கித்தான் சந்தேகம் பாயும். எனவே அங்கிருந்து ஒரு ஆளை, இந்த பணிக்கு தேர்ந்தெடுத்தேன்

*****************************

" சார். எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.. ஆள் போட்டோ கொடுங்க. அட்ரஸ் கொடுங்க. பெர்பெக்டா வேலைய முடிச்றேன் "

அட இவனும் பெர்பெக்ட் ஆளா ? எனக்கு சந்தோசம்...
என்னை பற்றி எதுவும் அவனிடம சொல்லவில்லை. அவள் மனைவி என்றோ, கொலை காரணத்தொயோ சொல்லவில்லை..

அவன் கேட்ட பணம்தான் அதிகமாக இருந்தது..

" சார், நம்ம கிட்ட தொழில் சுத்தமா இருக்கும்.. பெர்பெக்டா இருக்கும்... காசை பத்தி யோசிக்காதீங்க.. "

என் மொத்த கையிருப்பையும் , எல்லா சொத்தையும் விற்றால்தான், அவன் காசை கொடுக்க முடியும்..சரி, கொடுப்போம்.. அந்த பேப்பர்கள் கைக்கு வந்தால், நல்லா சம்பாதித்து கொள்ளலாம் ...

" உன்னை நம்பி அட்வான்ஸ் தர்றேன். பெர்பெக்டா முடிச்சுடு.. என் வாழ்க்கை உன் கையில்தான் இருக்கு " அட்வான்ஸ் கொடுத்தபோது , கை நடுங்கியது..

********************************

ஹோட்டல்... ஸ்மிதா மடியில் படுத்து இருந்தேன்.. இன்றுதான், அவன் வேலையை அவன் முடிக்க வேண்டிய நாள்..முடித்து விட்டு வந்து பார்ப்பதாக சொல்லி இருந்தான்.

" சார்.. உங்களிக்கு விசிட்டர் " ரிசப்சன் .... வர சொல்லுங்க... எழுந்து அமர்ந்தேன்...

" நான் அப்புறம் வர்றேன் " ஸ்மிதா கிளம்பினாள் ... " அவளுக்கு ஆட்டோவுக்கு கொடுத்து விட கூட காசு இல்லை... பிச்சைகாரன் போல் இருந்தேன்..வேலை முடியட்டும்,,நான்தான் ராஜா..

அவன் வந்தான்.. " உட்காருப்பா "

முடிச்சுட்டேன்"

வாவ்.. எனக்கு சந்தோசம்... பெட்டியை கொடுத்தேன்.. " இந்தா உன் பணம்... சரி யாரும் பாக்கலியே. சாட்சி எதுவும் இருக்காதே ? "

" இல்லை சார். பெர்பெக்டா முடுசுட்டேன் .. ஓட பார்த்தா .. கத்திகுத்து வாங்கியும் கூட, ரத்தம் சொட்ட சொட்ட , அப்படியே ஓடி போய், என்னவோ எழுதுனா... அதை பறிச்சு கிழிச்சு போட்டேன் . ரொம்ப அறிவாளி பொண்ணு சார் "

" அட பாவி,., உன் ரேகை பதிஞ்சு இருக்குமே "

" ஆமா சார்.. அது மட்டும இல்ல ... அவ ரூம்ல இருந்த ரகசிய கேமிரா ளையும், என் போட்டோ பதிஞ்சு இருக்கும் .. கேமிரவ கடைசிலதான் பார்த்தேன் "

அதிர்ந்தேன் " அட பாவி "

" பயப்படதீங்க... பெர்பெக்டா முடிச்சுட்டேன்.. ,அவளை கொன்றதும் பெட்ரோல் ஊத்தி, அந்த வீட்டை எரிசுட்டேன். அவ ரூம் , கேமிர, லப் டாப், அங்கு இருந்த பேப்பர் எல்லாம் எரிஞ்சு போச்சு,.,,இனி யாரும், கண்டுபிடிக்க முடியாது..நமக்கு பெர்பெக்ஷன் தானுங்களே முக்கியம் "
அவன் கிளம்பினான்..

அவள் ஆராய்ச்சி பேப்பர் எல்லாம் எரிஞ்சு போச்சா.. ? இனி என்ன செய்வது//

" அம்மா . தாயே ,எதாச்சும் பிச்சை போடுங்க.." வெளியே குரல் கேட்டது

7 comments:

  1. அவள் ஆராய்ச்சி பேப்பர் எல்லாம் எரிஞ்சு போச்சா.. ? இனி என்ன செய்வது//

    " அம்மா . தாயே ,எதாச்சும் பிச்சை போடுங்க.." வெளியே குரல் கேட்டது


    ... perfect! :-)

    ReplyDelete
  2. நல்லா இருக்கு கதை. perfection க்கும் affection க்கும் இடையில் தான் ஒத்தே போறதில்லை.

    ReplyDelete
  3. கத நல்லா இருக்குங்க..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா