சொல்ல பயன்படுவோர் மேலோர்.. கரும்பு போல கொல்ல பயன்படும் கீழ் ...
***************************************************************
கட்சி, ஜாதி, அமைப்பு, இயக்கம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பதுதான் உண்மைக்கு வழிகாட்டும் என்பது ஒரு பார்வை. இதை பற்றி நிறைய எழுது இருக்கிறேன்.
இயக்கத்தை, சாதியை , மதத்தை பாராட்டியோ எதிர்த்தோ பயன் இல்லை என்பது என் கருத்து.. குறிப்பாக, பிராமணர்களை எதிர்ப்பது பேஷனாக ஆகி விட்டது... இதை வெறுப்பவன் நான்...
ஆனால், வினவு தோழர்களை ஒரு வன்முறை இயக்கம் போல சித்தரிக்கும் ஒரு முயற்சி நடப்பதை பார்க்கும் போது, நடுநிலையாளர்களின் பார்வையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
பழைய வரலாறுகளை எல்லாம் புரட்ட விரும்பவில்லை.. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
புதிய விஷயத்தை பார்ப்போமே. ..
சமிபத்தில் , ஒரு நர(கல்) பதிவர் , தன விஷத்தை கக்கி அனைவரையும் இழிவு படுத்தினார்.
அப்படிதான் செய்வோம்.,என்ன வேணும்னாலும் செய்து கொள் என சவாலும் விட்டனர் அவர் தரப்பினர். .. எதிர்த்தவர்களை நையாண்டியும செய்தனர்... இந்நிலையில், வினவு தோழர்களின் எதிர்ப்பு கிளம்பியது... அதை கேட்டதும் தான், நரகல் பதிவரின் சுருதி சற்று இறங்கியது. ..
அவர்கள் அணுகுமுறையை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது முக்கியம் அல்ல.. அது பயன் அளித்தது என்பது முக்கியம்...
இதி இரண்டு விஷயமா இருக்கிறது...
பேருந்து டிக்கட் விலையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம், சாலை மறியல் நடத்தினால், பேருந்தை பயன் படுத்துபவர்களே கூட அதை எதிர்ப்பார்கள். பயணம் தடை படுகிறதே என்ற தற்காலிக இடைஞ்சல் அவர்களுக்கு பிடிக்காது...அவர்களுக்காகத்தான் போராட்டம் என்பது அவர்களுக்கு புரியாது.
விலை ஏற்றத்தால் பயன் பெறுபவர்களும் எதிர்ப்பார்கள்.. அதை புரிந்து கொள்ள முடியும்...
முதல் எதிர்ப்புதான் பரிதாபகரமானது...
சில ஜாதி வெறியர்கள், வினவு தோழர்களை அடாவடி பேர்வழிகள் சொல்வதை கூட , புரிந்து கொள்ள முடிகிறது..
ஆனால், நடு நிலை யாளர்கள் கூட இப்படி பேசுவது பரிதபகரமானது...
வினவு தோழர்களும் , அவர்கள் இயக்கமும் நல்லதுதான் செய்கின்றன.. ..
அவர்கள் வழிமுறைகள் பிடிக்காமல் இருக்கலாம்... அனால் அதற்கான தேவை இல்லாமல் செய்வது, ஆதிக்க சக்திகள் கையில்தான் இருக்கிறது..
எனவே , நடுநிலையாளர்கள் அறிவுரை சொல்ல வேண்டியது, வினவுக்கு அல்ல.. நரகல் பதிவர் போன்ற ஆதிக்க சக்திகளுக்கு..
ஆதிக்க கும்பலின் அடாவடி பழக்கம்தான் அனைத்துக்கும் அடிப்படை...
Some issues,Iam totally against Vinavu but,Most of the cases,Iam not.
ReplyDeleteஉன் போராட்ட ஆயுதத்தை -உன் எதிரி
தான் தீர்மாநிகீரன் !!!
ஒருவருக்கு -எந்த மொழி பூரியுமோ-அந்த மொழியில் தான் - பேச வேண்டும் !!!
வினவு- அப்படி தான் பேசுகிரார்!!
நக்கல் அடித்தால் -மிக நக்கல்
வன்முறைக்கு -மிக வன்முறை
அவர்கள் இயக்கத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என காலையில் கூட நேரடியாக பார்த்தேன்.. சிலர் வேண்டுமென்றே அவர்களை இழிவு படுத்துவதை பார்க்கும்போது ஏற்பட்ட வருத்தத்தினால் தான் இந்த பதவு.. சிலர் விஷயம் புரியாமல் எதிர்ப்பது சோகம்.
ReplyDeleteதாங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி..
எனக்கு தெரிந்து நம்மை போல செய்தி வாசித்து பதிவு போடுபவர்கள் அல்ல தோழர்கள் , களத்தில் இறங்கி
ReplyDeleteமக்களுக்கான வேலைகளை செய்பவர்கள், அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பால் எழுதக்கூடியவர்கள் அல்ல .
நல்ல பதிவு நண்பரே
//ஆனால், நடு நிலை யாளர்கள் கூட இப்படி பேசுவது பரிதபகரமானது...//
ReplyDeleteஐயா,நீங்கள் நடு நிலையாளர் ய்ஜானே?