Thursday, August 12, 2010

கடவுள் ஏன் கல்லானான் ?

அவன் சொன்ன ”காம வெறி” குஜால் ஜோக்கை கேட்டு சிரித்து முடிக்கும்போதுதான், அவன் கையில் அவன் கொண்டு வந்த பை மிஸ் ஆகி இருப்பதை உணர்ந்தேன்..

ஒரு வேலை பைக்கிலேயே வைத்து விட்டானா.....

அவன் சொன்ன ஜோக்கின் தாக்கம் குறைய ஆரம்பித்தது..

”யாரையும் அனுமதிக்க வேண்டாம் “ கண்டிப்ப்பாக சொல்லி விட்டு வேலையில் மூழ்கி இருந்தேன்..

நான் ஒரு சோம்பேறி. வேலையில் இறங்க மாட்டேன். ஆனால் இறங்கி விட்டால் என்னை தடுக்க் முடியாது. எழுத்தாக இருந்தாலும் சரி.. வடிவமைப்பு ஆக இருந்தாலும் சரி..அல்லது டெண்டர் கோருவது பற்றி

தகவல் சேர்ப்ப்பாக இருந்தாலும் சரி..

கனினி முன் அமர்ந்து இருந்த என்னை, ரிஷப்ஷன் குரல் அழைத்தது....

“ சார்..உங்களை பார்க்க.... “


“ யாரக இருந்தாலும் அனுமதிக்க வேண்டாம் “

“ சார்..உங்க நண்பராம். பெயர் சேகராம் “

ஒ..அவனா... கல்யாண மாப்பிள்ளை...

“ சரி.. வர சொல்லுங்க “


கல்யான களையுடன் முகம் பளிச்சிட்டது...

“ என்னடா.. ஆஃபிசுக்கே வந்துட்ட... சாய்ன்காலம் வீட்டுக்கு வர்ரேனு சொல்லி இருந்தேனே “

“ ஜெவல்ஸ் வாங்கனும்டா மச்சான்... நீ கூட இருந்தா நல்லா இருக்கும்... கைல கேஷ் வேற நிறைய இருக்கு “


சற்று யோசித்தேன் ... “ சரி வா , போகலாம் “

*********************************************************************************************************************

முதலில் துணி கடைக்கு சென்றோம்... துணியை விட , அங்கு இருந்த காசாளர் பெண் அவனை கவர்ந்து விட்டாள்...

“ கடலை போட்டது பொதும் .. வா “ முணுமுணுத்தென்... மனதின்றி என்னுடன் வந்தான்...

ஜிகர்தண்டா சாப்பிட்டு விட்டு செல்லலாம் என முடிவெடுத்து, கடையில் நுழைந்தோம்....

பையன் படு உற்சாகமாக இருந்தான்... “ ஒரு ஜோக் டா மச்சி..

ஒரு பெண் டாக்டரிடம் சென்றாள்.. டாக்டர் எனக்கு பாலுணர்வு கட்டுக்கடங்மால் போய்க்கிட்டு இருக்கு. யாராவது சாதரணமா பெசினால் கூட செக்ஸ் அர்த்தம் தான் தோணுது.. அதான் சிகிச்சைக்கு வந்தேன் ..

டாகடர் அவளை பரிவுடன் பார்த்தார்.. “ நல்ல ஸ்பெஷலிஸ்டை பாரும்மா... என் கிட்ட வேண்டாம்.. இங்கே ஃபீஸ் அதிகம் “

“ எவ்வளவு ஃபீஸ் ? “

“ ஒரு மணி நேரத்துக்கு என் ஃபீஸ் 200 ரூபாய் “

அவரை செக்சியாக பார்த்தப்டி கேட்டாள்.. “ ஃபுல் நைட்டுக்கு உங்க ஃபீஸ் எவ்வளவு ? “

அட ஆண்டவா , ஹ ஹா.. என்று சிரித்த எங்களை அனைவரும் திரும்பி பார்த்தனர்..

அப்போதுதான் அவன் கை பை மிஸ் ஆகி இருப்பதை கவனித்தேன்..

” டேய். பேக் எங்கடா ? பைக்ல வச்சுட்டீயா ?’

அதிர்ச்சிசுயுடன் என்னை பார்த்தான்..

ஓ காட்... தெரியலைடா.. எங்கே போச்சு...

கலவரம் எங்களுக்குள் புகுந்தது... முகம் குப் என வியர்ட்து விட்டது....

“ அய்யொ ..எங்கே விட்டோம் .. கேஷ் இருந்துச்சே..ஐய்யொ,,கவன குரைவா இருந்துட்டொமே..பெசாம கார்டை யூஸ் செஞ்சு இருந்து இருக்கலாம்.. கேஷ் கொண்டு வந்தது தப்ப்பா போச்செ...

மனம் புலம்பியது...

“ வாடா.. அந்த துணி கடைக்கு போய் பார்க்கலாம் “

கடவுளை வேண்டிகொண்டே பைக்கில் பறந்தோம்..




அங்கே விட்டு இருந்தாலும், அங்கேயே இருக்குமா.. பலர் வரும் இடம்.....


அந்த காசாளர் பெண் ஆர்வத்துடன் எங்களை பார்த்தாள்...

அவளை சைட் அடிக்க மூடு இல்லை....

சட் என அவன் முகம் பிரகாசமானது.... அந்த பை அவள் அருகில் இருந்த மேஜையிலே வைக்க பட்ட நிலையிலேயே இருந்தது... அன் பிலீவபிள்....

யாரும் கவனிக்க வில்லை போலும்... கவனித்தாலும், அது அந்த பெண்ணுடையது என நினைத்து எடுக்காமல் இருந்திருக்கலாம்..

உற்சாகமாக கிளம்பினோம்..

“ அதை என்கிட்ட கொடு.. நான் வச்சுக்கிரேன்..” பைய வாங்கி நெஞ்சுடன் அனைத்துகொண்டேன்...

“ டேய்.. நேரம் சரியில்லை... இன்னொரு நாள் கூட வாங்கிக்கலாம்.. நேர வீட்டுக்கு போ “ என்றென்..

” இல்லைடா.. கடவுளுக்கு நன்றி சொல்லணும் “

என் பதிலுக்கு காத்திராமல், ஒதுக்குப்புறமாக இருந்த கோயில் முன் வண்டியை நிறுத்தினான்..

எனக்கு ஈடுபாடே வரவில்லை... ஏதோ தவறு நடப்பது போலவே தோன்றியது...பையை இறுக்கமாக பிடித்தப்டி இருந்தேன்.. என் டென்ஷன் அவனுக்கு கிண்டலாக இருந்தது...


வழிபாட்டை முடித்து வெளியெ வந்தோம்..

என்னடா ..பை பத்திரமா இருக்கா?

கிண்டலாக கேட்டான்...

“ பாரு பத்திரமா இருக்கு..சீக்கிரம் வா .. போகலாம்.. வீடு போய் சேர்ந்தால் தான் நிம்மதி “ என்றேன்..

வெளியே வந்தோம்...

அப்போதுதான் கவனித்தோம்...

நிறுத்தி இருந்த புத்தம் புதிய பைக் திருடப்பட்டு இருந்தது...

6 comments:

  1. இதில் இருந்து அறிவது என்ன ,
    கடலை போட்டாலும் காணாமப் போகும்
    கடவுளைக் கும்புட்டாலும்
    காணாமப் போகும்.

    ReplyDelete
  2. அருமையா சொன்னீங்க அய்யா (சாலமன் பாப்பையா ஸ்டைலில் படிக்கவும் )

    ReplyDelete
  3. இதில் இருந்து அறிவது என்ன ,
    கடலை போட்டாலும் காணாமப் போகும்
    கடவுளைக் கும்புட்டாலும்
    காணாமப் போகும்.
    ///

    இதை நான் ரூட் மொழிகிறேன்...

    ReplyDelete
  4. Balu, why do you say title is wrong ? In many situations we think like that you know .

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா