ஒரு பட்த்தில் , ராஜேந்தர் ஒரு கொலைகாரனை குறுக்கு விசாரனை செய்வார்,,, அந்த பட்த்தில் ராஜேந்தர் வழக்கறிஞர்..
“ டே.. நீதாண்டா கொலை செஞ்ச “
“ இல்லை .இல்லை .இல்லை “
“ நீதிபதி அவர்களே... இவந்தான் செஞ்சான் கொலை.. அதுக்குத்தான் நான் விரிச்சேன் வலை.. தண்டனைதான் அதுக்கு விலை “
“ இல்லை நான் கொலை செய்யல “
“ நீதிபதி அவர்களே..இதோ இந்த வெள்ளை சட்டையை பாருங்க.. இத போட்டுட்டுதான் அவன் கொலை செஞ்சான் “
“ நோ “
“ பாருங்க ..ரத்த கரை கூட இருக்கு “
“ பொய் ..பொய்..பொய்,,, நான் கொலை செய்யும்போது சிவப்பு சட்டைதான் போட்டு இருந்தேன்.. வெள்ளை சட்டையை காட்டி இவர் ஏமாத்துறார் “
” கொலையாளியே கொலையை ஒப்புகொண்டு விட்டார் யுவர் ஆனர் “
****************************************************************
இதை போலத்தான் கர்னாடகத்தில் பரபரப்பான சம்ப்வங்கள் நடந்து வருகின்றன..
சுயேட்சை எம் எல் ஏக்களை , கட்சி தாவல் தடை சட்ட்த்தின் கீழ் டிஸ்மிஸ் செய்தார் சபானாயகர்..இதை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர்..
” நடவடிக்கை சரிதான்.. நீங்கள் கட்சி தாவினீர்கள்.. கட்சி தாவினீர்கள்.. “ என பி ஜே பி , ராஜெந்தர் பானியில் டார்ச்சர் செய்யவே, அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு , தாங்கள் பீ ஜே பியை விட்டு விலகவில்லை என் கோர்ட்டில் சொல்லி விட்டனர்..
நாங்கள் சுயேட்சைகள் .. பி ஜே பியில் சேரவும் இல்லை.. விலகவும் இல்லை என சொல்லி இருக்க வேண்டும்.. உணர்ச்சி வசப்பட்டு , பி ஜெ பியில் சேர்ந்து இருந்த்தை போல உளறித்தொலைத்து விட்டு இப்போது விழிக்கின்றனர்..
இது ஒரு புறம்..
இன்னொரு புறம் , பி ஜே பியில் இருந்து விலகிய எம் எல் ஏக்கள் வழக்கை கோர்ட் ஒத்தி வைத்து விட்ட்து..
இறுதி தீர்ப்பு வருவதற்குள் , விஷயத்தை சுமூகமாக முடிக்க பி ஜெ பி காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்ட்து..
இரண்டு காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அடுத்தடுது ராஜினாம செய்து விட்டனர்.. எனவே எதிர்கட்சிகளின் பலம் குறைந்து விட்ட்து.. நாளை அவர்கள் பி ஜெ பி சார்பில் போட்டியிட்டு வென்று, பி ஜெ பி யின் பலத்தை உயர்த்துவார்கள்..
இதற்கிடையே , தன் கட்சி எம் எல் ஏ வை விலைக்கு வாங்க பி ஜெ பி முயற்சிக்கிறது என கூறி ஒரு சி டி யை வெளியிட்டுள்ளார், ம ஜ த தலைவர் குமாரசாமி..
பேரம் பேசும் சி டி யில் என்ன இருக்கிறது ? பாருங்கள்
***********************************************************************************
சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : எவ்வளவுதான் வேணும்?
ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : நூறு கோடி வேணும். முடியுமா?
சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : ( சிரித்தபடி ) உள்துறை அமைச்சர் அஷோக்கிடம் பேசி பதினைந்து கோடியில் முடிக்கிறேன்
ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : வெறும் பதினைந்தா ?
சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : அஷோக்கிடம் நேரடியாக பேசி முடித்து கொள்ளலாம். அவரை வந்து பாருங்கள்
ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : பணம் கைக்கு வந்தவுடன், ராஜினமா செய்ய நான் தயார்
சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : அஷோக்கை சந்தித்து பேசுங்கள். அமவுண்ட் முடிவானதும் , ரெண்டு கார்ல வந்து பணத்தை கொண்டு போங்க
ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : பணம் முடிவாகாம நான் எங்கும் வர முடியாது.. இப்படித்தான் அஸ்வத்தாவுக்கு 25 லட்சம் தறேனு சொன்னீங்களாம்.. பாவம், அப்பாவி மனுஷன் , நம்பி ராஜினாமா செஞ்சாரு.. கடைசில அஞ்சு கோடிதான் கொடுத்தீங்களாம்.. பாவம் , எங்கிட்ட ரொம்ப வருத்த பட்டாரு..
நான் அப்படி ஏமாற மாட்டேன்..
சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : பதினைந்து கோடினா உடனே வாங்கி கொடுத்துடுவேன்
ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : குறைந்த்து இருபத்தைந்தாவது வேணும்..
இது மோசடியான சி டி என பி ஜெ பி சொல்லி விட்ட்து..
வாழ்க ஜன நாயகம் !!!!
15 கோடியா?? பேசாம நான் கர்நாடகால போட்டியிடலாம்னு பார்க்குறேன்.
ReplyDeleteT.R படத்தின் காட்சியை உதாரணமாக சொன்ன உங்களது ஞாபக சக்தி சிலிர்க்க வைத்தது... ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன... சரி செய்யவும்...
ReplyDelete15 கோடியா?? பேசாம நான் கர்நாடகால போட்டியிடலாம்னு பார்க்குறேன்"
ReplyDelete2011 ல இங்கும் ரேட் ஏறிடும்.. இங்கேயே போட்டியிடுங்க. 2011 நம்ம கைலதான்
... ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் தென்படுகின்றன... சரி செய்யவும்.
ReplyDeleteந்ன்றி... இனி கவனமாக இருப்பேன் .
October 23, 2010 at 8:33 AM
சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்!
ReplyDelete