Pages

Tuesday, November 30, 2010

தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்

தமிழ் மணம்  ஒவ்வொரு வாரமும், டாப் 20 வலைபதிவுகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது..

இந்த பதிவுகளை பற்றி என் கருத்து என்ன? நான் இந்த பதிவுகளை எப்படி பார்க்கிறேன்... இவை எந்த அளவு என்னை கவர்ந்துள்ளன அல்லது எரிச்சலூட்டுகின்றன... ? என்னை இவை எப்படி பாதித்தன் .. இவற்றுடன் எனக்கு இருக்கும் உள்ள உறவு என்ன ?

ஒரு சுருக்கமான பார்வை இது...

நான் படிக்கும் எல்லா பதிவுகள் பற்றியும் அடுத்து எழுதுவேன்..

அதற்கு ஒரு தொடக்கமாக இது இருக்கட்டும்...




டாப் 20 தமிழ்மண பதிவுகள் , என் பார்வையில்.. ( இவை தீர்ப்பு அல்ல ,,விமர்சனமும் அல்ல...என்னை எப்படி பாதித்துள்ளன என்ற என் தனிப்பட்ட கருத்துக்கள் )



1 வினவு..

இவர்களின் சமூக பார்வை எனக்கு பிடித்தமானவை... பெரும்பாலும் ஏற்கத்தக்க கருத்துக்கள்தான்..

போபால் பிரச்சினைகள் இவர்கள் காட்டிய தீவிரம் முக்கியமான ஒன்று...

பிடிக்காதது என்னவென பார்த்தால், தேவை இல்லாத பிரச்சிநைகளில் தம் சக்தியை வீணடிப்பது..

உதாரணமாக, இருக்காட்டுகோட்டையில் நச்சு வாயு விபத்து ஏறபடட்போதே, அனைத்து நிறுவனக்களின் பாதுகாப்பையும் பற்றிய விழிப்புனரவை தூண்டி இருக்க வேண்டும்..

அதை செய்யாமல், அப்போது வந்த எந்திரன் படத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்ததால், சிறிது காலம் கழித்து அம்பிகா என்ற தொழிலாளி இறப்பதை தடுக்க முடியாமல் போய் விட்டது.. இதர்கு காரணம் பாதுகாப்பு குளறுபடிகள்.. இன்னும் இதே போன்ற பாதுகாப்பு குளறுபடிகள் நீடிக்கின்றன



2 உண்மை தமிழன்

எழுத்து சினிமா என பல்துறை வல்லுனாரக இருந்த போதிலும், அதையெல்லாம் மீறி ஒரு நல்ல மனிதர் என்பதே இவர் அடையாளம்...

இவர் சொலவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன... அதை கஷ்டப்பட்டு சுருக்கி எழுகிறார்.. அபப்டி சுருக்கி எழுதியதே,பக்கம் பக்கமாக இருக்கும்....

இவரிடம் பத்து நிமிடம் பேசினால், ஒரு மணி நேரம் நூலகத்தில் இருந்த எபக்ட் கிடைக்கும் என்பது என் அனுபவம் ...
வேறு எங்குமே படிக்க முடியாத விஷயங்களை இவர் பதிவில் படிக்கலாம்..

நாளை வலை பதிவு வரலாறு எழுதப்பட்டால், அதில் முக்கிய இடம் இவருக்குத்தான்..  சுஜாதா பதிவு உள்ளிட்ட பல பதிவுகள், எழுத்துலகின் உச்சம் என்று சொல்லலாம்..

இவரிடம் பிடிக்காதது, அவ்வபோது உணர்ச்சிவசப்பட்டு தவறான கருத்து கூறுவது..

லேட்டஸ்ட் உதாரணம், என்கவுண்டர் விவகாரம்..

பதிவுலக வரலாறில் அதிக நெகடிவ் ஒட்டு வாங்கிய பெருமை இதன் மூலம் அண்ணனுக்கு கிடைத்தது..

இன்னும் கூட பலர் தேடி சென்று நெகடிவ் ஓட்டு குத்துகிறார்கள்...

நந்தாலாலா படம் குறித்து நான் விமர்சனம் வைத்தபோது, கேபிள் சங்கர் பொறுமையாக விளக்கம் அளித்தார்..
அண்ணன் உண்மை தமிழனோ, பிடித்தால் பார், இல்லைனா போ, யாருக்கும் நஷ்டம் இல்லை என சொல்லி விட்டார்...
அந்த அளவுக்கு படத்தை நேசிக்கிறார்,, கலை படைப்பை காதலிக்கிறார் என அதை புரிந்து கொண்டேன்...
இதுவும் என்னை பொறுத்தவரை ஒரு மறக்க முடியாத அனுபவம்..



3 கொஞ்சம் வெட்டி பேச்சு ( சித்ரா )

நகைசுவைக்கு  என்றே ஒரு வலைபதிவு என்றால் அது இதுதான்..

புண்படுத்தல், கீழ்தரமான உணர்வுகளை தூண்டி விடுதல், போன்றவை இல்லாமல் சிரிக்க வைக்க முடியும் என காட்டியவர் இவர்...இவரது பழைய பதிவுகளை கூட அவ்வபோது படிப்பேன்.. எப்போதும் சிரிக்க வைக்கும் இவர், சமிபத்தில் அழவும் வைத்து விட்டார்...
ஒரு குறிப்பட்ட பதிவு, என் பெர்சனல் வாழ்க்கையிலும் மிகவும் பயன்பட்டது... அந்த நேரத்தில் உதவியாகவும் இருந்தது...  விரிவாக பிறகு சொல்கிறேன்...
இவர் பதிவில் குறை என்ன

கடைசியில் சொல்கிறேன்



4 கே ஆர் பி செந்தில்



இவரது தெளிவான சிந்தனை எனக்கு பிடிக்கும்,,, சில கருத்துக்களை நான் ஏற்பதில்லை என்ற போதிலும், அவர் நம்புவதை அவர் சொல்கிறார் என்ற விதத்தில் அவர் கருத்துக்கள் எனக்கு முக்கியமானவை..

ஆன்மிகம், பணம் பற்றி அவர் ஒரு வாக்கியத்தில் விளக்கம் கொடுப்பது எனக்கு பிடிக்கும்... ( அது என்ன என்பது என் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் பார்க்கலாம் )அவர் எழுதும் தொடர் கட்டுரைகளுக்கு ரசிகன் நான்,,

எதிர் கருத்துக்களை அவர் கவனிப்பதில்லை என்பது என்னை பொறுத்தவரை ஒரு குறை...



5 நண்டு@நொரண்டு

யதார்த்தமான கருத்துக்களுக்கு சொந்த காரர் இவர்.. எழுத்தில் பண்பை கடைபிடிப்பவர்...

இவர் எழுத்தை படியுங்கள் என யாருக்கு வேண்டுமானாலும் தைரியமாக refer செய்யலாம்..

இதுதான் ஒரு விதத்தில் என்னை பொறுத்தவரை குறையும் கூட... நான் எதிர்பார்க்கும் சில விஷயக்கள், இதில் இருப்பதில்லை ( ஹி ஹி )



6 தீராத பக்கங்கள் மாதவராஜ்

சமூக பார்வை கொண்டவர்... புதியவர்களை ஊக்குவிப்பவர்...

நான் எழுத ஆரம்பித்தபோது, என்னை தன் பதிவின் மூலம் அறிமுகம் செய்தவர்...

எல்லாம் பிடித்து இருந்தும், பாலில் விஷம் கலந்தது போல, அவரது ஒரு நிலைப்பாடு எனக்கு பிடிக்காது..

ஊரில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் ரஜினியும், எந்திரனும்தான் காரணம் என நினைப்பது, இவர் அனைத்தயுமே உணர்ச்சி வசப்பட்டுதான் பார்ப்போரோ என நினைக்க வைக்கிறது..

7 மனிதாபிமானம் துமிழ்

இந்த பதிவை மற்ற பதிவுகள் வரிசையில் வைக்க முடியாது... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்...

ஆனால் பயனுள்ள விஷ்ய்கள் தரும் இவர், அவ்வபோது ( நமக்கே தெரிந்த ) தேவையில்லாத விஷயங்களையும் சொல்வது எனக்கு பிடிக்காது



8 : பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... ஜாக்கி சேகர்



எழுத்தாளர் ஜெயமோகனை "கவர்ந்த" பதிவு ஒன்று இருக்கிறது என்றால் அது இவர் பதிவுதான்... அந்த அளவுக்கு சுவையாக எழுத கூடியவர்,,, தினமும் படிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று..

ஆனால் நான் எதிர்பார்க்கும் சில விஷயங்களை இவர் எழுதுவதில்லை



9 கேபிள் சங்கர்..

சினிமா, கவிதை, கதை என இவரிடம் ரசிப்பதற்கு பல இருந்தாலும், நான் ரசிப்பது...

ஹி ஹி...சாப்பாடு கடை எனும் பகுதிதான்.

ஒரு காலத்தில், நான்  கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறைவாக இருந்து.. வலை பூக்கள் படிப்பதும் குறைவே...

ஆனால் ஒரு பதிவை விடாமல் படித்தேன் என்றால் ,அது அந்த சாப்பாட்டு கடைதான்..

அவர் சொன்னதில் பலவற்றில் சாப்பிட்டும் இருக்கிறேன்..

பிடிக்காதது என்ன என்று பார்த்தால், அதீத மனித பண்பு..

அது என்ன ..அதனால்  நான் எப்படி ஏமாற்றம் அடைந்தேன் இப்போது சொலவது தேவையற்றது..

ஆனால், அது உயர் பண்புகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது... அது ஒரு தவறு அல்ல...
தன தொழில் மேல் இருக்கும் ஆர்வம் , சரளமான எழுத்து , மற்றவரை மதிக்கும் பண்பு  என அவரிடம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன,,,
ஆனால் நான் சொன்ன அந்த மைன்ஸ் பாயின்ட் என்னிடம் இருக்க கூடாது என்பதில் நான் இன்னும் உறுதியானதற்கும் அவர்தான் காரணம் ;-)


10 நனைவோமா? ம.தி.சுதா

பல்வேறு தகவல்கலை வாரி வழங்கும் இவர் எழுத்தை தொடர்ந்து படிப்பவன் நான்.. பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடுதான்..

இவரிடம் எனக்கு பிடித்தது, இவர் எழுத்து ஸ்டைல்...

பிடிக்காதது, கடைசியில் சொல்கிறேன்...



இன்னும் பத்து பதிவுகள் பற்றி அடுத்த பதிவில் சொல்வேன்...

16 comments:

  1. பார்வை நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. நன்றி அன்பரசன் சார்

    ReplyDelete
  3. அப்படியே தமிழ்மணம் லிஸ்ட்ல எப்பவுமே 21 வது இடத்தில் இருக்கிற எங்களையும் விமர்சியுங்கள் நண்பரே!!

    ReplyDelete
  4. அப்படியே தமிழ்மணம் லிஸ்ட்ல எப்பவுமே 21 வது இடத்தில் இருக்கிற எங்களையும் விமர்சியுங்கள் நண்பரே!! "


    விமர்சித்தா ஆட்டோ அனுபிசுட கூடாது ..பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. ஓகே வா ?

    ReplyDelete
  5. ஜீ... said...

    Nice! :-)

    thank u ஜீ

    ReplyDelete
  6. தங்களின் பார்வைக்கு எனது வணக்கங்கள் .

    ReplyDelete
  7. சுவாரசியமான பதிவா இருக்கே!!!!

    சூப்பர்.. கலக்கிட்டீங்க

    ReplyDelete
  8. மிக்க நன்றிங்க.


    ....நெகிழ்ந்தேன்.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. உங்கள் நியாயங்கள் சரியானவை.

    ReplyDelete
  10. // இன்னும் பத்து பதிவுகள் பற்றி அடுத்த பதிவில் சொல்வேன்... //

    காத்திருக்கிறேன்... பாதிநோராவது இடம் பெற்றவன் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிந்துக்கொள்வதற்காக... உங்கள் மனதில் தோன்றுவதை கூச்சப்படாமல் கொட்டிவிடுங்கள்;...

    ReplyDelete
  11. வெளிப்படையான உங்கள் கருத்துக்கு என் சல்யூட்..

    ReplyDelete
  12. [[[அண்ணன் உண்மை தமிழனோ, பிடித்தால் பார், இல்லைனா போ, யாருக்கும் நஷ்டம் இல்லை என சொல்லி விட்டார்...]]]

    சினிமா என்பது அவரவர் ரசனை சார்ந்தது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும். பொதுவான ஆர்வம் மட்டுமே அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு இருக்கும். நந்தலாலாவை ஆதரித்து எழுதியவர்களின் கட்டுரைகளைத் தொகுத்துப் பாருங்கள்.. ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள்.. எதிர்ப்பாளர்களின் கட்டுரைகளைப் பாருங்கள்.. அதிகபட்சம் சிலவற்றை மட்டுமே அனைவரும் ஒன்றுபோல் குறிப்பிடுவார்கள்..!

    இது சொன்னால் புரியாதது.. அனுபவித்தால்தான் புரியும்..!

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு. உங்கள் நியாயங்கள் சரியானவை.

    நன்றி

    ReplyDelete
  14. ”இது சொன்னால் புரியாதது.. அனுபவித்தால்தான் புரியும்..!”

    மெயில் அனுப்புகிறென்,,, பாருங்கள்..

    ReplyDelete
  15. நல்ல சுவாரஸ்யமா இருக்கே. தொடருங்க.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]