நிறுவனமயமாதல் என்று வந்து விட்டால் அது ஆபத்துக்கு அறிகுறி என்பதை காலம் காலமாக பார்த்து வருகிறோம்..
நல்ல விஷ்யமும் கூட விஷமாவது இதனால்தான்..
விளக்கமாக சொல்கிறேன்..
உங்களுக்கு ரோஜா பூ பிடிக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.. அது உங்கள் ரசனை சார்ந்த விஷயம்.. வீட்டில் விதமாக பூக்கள் வளர்த்து ரசிக்கலாம்..
ஆனால் ரோஜா பூ ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்…
வம்பு ஆரம்பம் என அர்த்தம்…
நாம் vs அவர்கள் என்ற சிந்தனை உருவாக ஆரம்பிக்கும்.. ரோஜாவை ரசிக்காத அனைவரும் ரசனை இல்லாதவர்கள் என நினைக்க ஆரம்பிப்பீர்கள்.
காலப்போக்கில் ரோஜா மீது இருக்கும் ஆர்வத்தை விட நீங்கள் உருவாக்கிய ரோஜா ரசிகர் சங்கம் மீதான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிக்கும்…
ரோஜாவையே பார்த்திராத சிலர் கூட இந்த சங்கத்தில் சேர்ந்த்து , நாம் எல்லாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறோம்.. உலகம் ஏன் ரோஜாவின் அருமையை புரிந்து கொள்ளாமல் அறியாமையில் இருக்கிறது என வருந்த ஆரம்பிப்பார்கள்..
ஆன்மீகம் , நாத்திகம் என்று எல்லாமே இது போலத்தான் ஆகி விட்டன..
உதாரணமாக பெரியாரை எடுத்து கொண்டால், அவர் மக்கள் மேல் பேரன்பு கொண்டவர்.. மக்கள் கஷ்டத்துக்கு காரணம் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி சிலர் அவர்களை ஏமாற்றுவதாக நினைத்தார்… எனவே கடவுள் நம்பிக்கையை எதிர்த்தார்..
அவர் புத்தகங்கள் அனைத்தையும் படித்தால் தெரியும்.. அவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் மட்டுமே இயங்கவில்லை..
பெண் விடுதலை, சமூக நீதி, சமத்துவம், சமுதாய மாற்றம் என பல தளங்களில் இயங்கி இருக்கிறார்..
இந்த மாற்றங்களுக்கு கடவுள் தேவை இல்லை என்பது அவர் ஆராய்ந்து கண்ட முடிவு..…
ஆனால் இது போன்ற ஆய்வு பார்வையோ, சமுதாய பார்வையோ இல்லாமல் , நாத்திகன் என சொல்லி கொள்வதில் கிடைக்கும் ஒரு ”கிக்” கிற்காக அப்படி சொல்லி கொள்பவர்களே அதிகம்..
இது குழு மனப்பான்மை…
ஒரு குழுவுடன் தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ஆர்வம்..
சினிமா நடிகர் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மனதில் செயல்படுவது இதுதான்..
அதே போல சாமியார் பக்தர்கள்..
சத் குரு, மகா குரு என்றெல்லாம் படம் காட்டுவார்கள்.. அந்த குருவை விட இவர் சூப்பர் என்பார்கள்..
இதுவும் குழு மனப்பான்மைதான்…
சமீபத்தில் நண்பர் ஆதியின் இடுகை ஒன்றை படித்தேன்..
எழுதியது அவர்தானா என மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது…
ஏன் என்றால் , அவர் எழுத்தில் என்றுமே பண்பை கடைபிடிக்க கூடியவர்.. யாரையும் புண்படுத்தாதவர்…
அன் பார்லிமெண்ட்ரி வார்த்தைகள் மறந்தும் அவர் எழுத்தில் வராது.. அது மட்டும் அல்ல… மிக மிக சாதாரண நெகடிவ் வார்தைகள் கூட வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்..
அப்படிப்ப்பட்ட அவர், நாத்திகவாதிகள் என்ற குழுவில் இல்லாத அனைவரும் ஆட்டு மந்தை கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது போல எழுதி இருந்ததை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது…
“ நம்ம குரு எவ்வளவு உன்மத்தமானவர் .. இவரை இந்த உலகம் புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கிறதே..” என அங்கலாய்க்கும் சராசரி சீடன் போல பேசுகிறாரே என ஆச்சர்யமாக இருந்தது..
ஆனால் குழு மனப்பான்மையில் சிக்கினால் , ஒரு குழுவுடன் அடையாள படுத்தி கொண்டால் , மற்றவர்களை கிண்டல் செய்வது இயல்புதான் ..
“ எங்கள் அணியில் நீ இல்லை என்றால், நீ குற்றவாளிகள் அணியை சேர்ந்தவன் “ என்று புஷ் சொன்னது இதனால்தான்..
சரி விடுங்கள்..
நாம் குழு மனப்பான்மையில் சிக்காத குழுவை சேர்ந்தவர்கள்… மற்றவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்..
நாம் மட்டும் வித்தியாசமாக சிந்திக்கிறோம் என்கிறீர்களா?
ம்ம்.. என்ன சொல்வது?
மிக சரியான பார்வை -ஆன்மீக எப்படி நிறுவனமாக படுகிறதோ ,அதே போல் நாத்திகமும் நிறுவ படுகிறது ,நிறுவ படுவது எல்லாமே ஏதோ ஒரு கட்டத்தில் தனி மனிதனுக்கு எதிராக திரும்புகிறது .எதுவுமே நிருவபடாமல் ஒரு வாழ்க்கை என்பது சாத்தியம் இல்லை .தன் சுய நிறுவல் என்பதை கடந்து -அது சித்தாந்த, கோட்பாடு ,ரசனி சார்ந்த ஒரு மேட்டிமை வாதமாக மாறும் பொழுது இதர விஷயங்கள் கீழ்மையாக சித்தரிக்க படுகிறது ,அதன் மேல் வெறுப்பு திணிக்க படுகிறது ,ஒரு கட்டத்திற்கு மேல் சுய சிந்தனை இல்லாமல் பொய் வெறும் குழு மனப்பான்மை மட்டும் நிலைக்கிறது
ReplyDelete//ஆனால் இது போன்ற ஆய்வு பார்வையோ, சமுதாய பார்வையோ இல்லாமல் , நாத்திகன் என சொல்லி கொள்வதில் கிடைக்கும் ஒரு ”கிக்” கிற்காக அப்படி சொல்லி கொள்பவர்களே அதிகம்..//
ReplyDeleteநாத்திகனாய் வாழ்வது வேறு!
அப்படியே இருந்தாலும் அதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது உறுத்துகிறது! பெரியார் வாழ்ந்த காலத்தில் அதற்கான தேவை இருந்தது!
// நாம் vs அவர்கள் என்ற சிந்தனை உருவாக ஆரம்பிக்கும்.. ரோஜாவை ரசிக்காத அனைவரும் ரசனை இல்லாதவர்கள் என நினைக்க ஆரம்பிப்பீர்கள்... //
ReplyDeleteஉதாரணத்திற்கு சாருவை படிக்காதவர்கள், ரஜினியை பிடிக்காதவர்கள் எல்லாம் ரசனை கெட்டவர்கள் என்று சிலர் நினைக்கிறார்களே... அப்படித்தானே...
நாத்திகம் ,ஆத்திகம் னு குழுக்களா பிரிஞ்சு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் அடிச்சாலும்...இந்த ரெண்டு குழுக்களையும் விமர்சனம் பண்ணும் மூணாவது குழுவும் இருக்கே :))) (இங்கயும் மூணாவது அணியா...:)) )
ReplyDeleteநண்பரே, நாத்திகம் என்பது (இஸ்லாமிய) ஆன்மீகத்தின் முதல் படி :).
ReplyDelete'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்று சொல்லப் படுவது போல முதலில் எல்லாவற்றையும் மறுக்க வேண்டும், உண்மையைக் கண்டு பிடிக்கப் படும் வரை.
'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற தாரக மந்திரத்தில் (இஸ்லாமிய பிரம்ம சூத்திரத்தில்) முதலில் லா என்பது எல்லாவற்றையும் மறுப்பது.
ஆதலால் நல்லெண்ணம் கொண்ட நாத்திக வாதிகள் உண்மையான ஆன்மீகத்தின் முதல் படியில் இருக்கிறார்கள் . இனி அவர்கள் உண்மையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதுதான் பாக்கி :)
//ஆன்மீகம் , நாத்திகம் என்று எல்லாமே இது போலத்தான் ஆகி விட்டன..//
ReplyDelete//நாம் குழு மனப்பான்மையில் சிக்காத குழுவை சேர்ந்தவர்கள்… மற்றவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்..//
நீங்கள் கூட பதிவர் என்ற குழியில் ...மன்னிக்கவும் ...குழுவில் இருந்து கொண்டு ....நாத்திகம் ,ஆன்மிகம் என்ற குழுவை விமர்சனம் செய்கிறியர்கள் ....:)
குழுவை சேராதவனுக்கு இங்கு என்ன வேலை ? :))
எல்லோரும் நாதிகன்தான்
ReplyDeleteஒரு இந்து மசூதியை பார்க்கும் போது அவன் அங்கு நாத்திகன், ஒரு கிறிஸ்தவன் ஒரு இந்து கோவிலின் உள்ளே நாத்திகன்தான், ஒரு முசிலீம் சர்ச்சுக்குள் நாத்திகன். இன்னும் சொல்லப்போனால் சன்னி முசுலிம் ஷியா தர்காவில் நாத்திகன், ஒரு சைவன் வைய்ணவ தலத்தில் நாத்திகன். ஒரு ரோமன் கத்தோலிக்கன் பெந்தகோச்து சபையில் நாத்திகன். எல்லோரும் நாத்திகன்தான்.
கடவுளை நம்பும் ஒருவன் எல்லா மதத்தையும் வெறுக்கிறான் , அவன் பெயர் என்ன?
நண்பரே
ReplyDeleteஆதியின் பதிவில் எனக்கு பெரிதாய் பிழையொன்றும் தெரியவில்லை. மந்தைகள் என்ற வார்த்தை ஒரு ப்ளோவில் வந்திர்க்கும். நாத்திகர்களுக்கு ஆத்திகர்கள் மேல் இருப்பது ஒரு ஆதங்கமே ஒழிய வெறுப்பு இல்லை.
ஒரு குழுவுடன் தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ஆர்வம்..
ReplyDeleteஇது மிகமோசமானது தோழா. பதிவுலகத்திலும் இது ஆரோக்கியமானதல்ல.
// எங்கள் அணியில் நீ இல்லை என்றால், நீ குற்றவாளிகள் அணியை சேர்ந்தவன்// I totally agree with you. It has become a kind of show off now-a-days for the atheists to say, "I am an atheist, so I am a better/intelligent person than the theists".
ReplyDeleteமனிதன் ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதற்கு ஆசைப் படுகிறான், குழு மனப்பான்மை மனிதனுடைய இயல்பு என்று எனக்குத் தோன்றுகிறது
ReplyDelete