Sunday, April 3, 2011

கிரிக்கெட்- ராஜபக்சேவின் வெற்றியும் , சிலரின் அப்பாவித்தனமான மகிழ்ச்சியும் ..

உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மெக் கிராத் , வார்னே, இம்ரான்கான், ரிச்சர்ட்ஸ், அரவ்ந்த் டி சில்வா, போன்ற உலகத்தரம் மிக்க வீரர்கள் இல்லாமல் இந்த போட்டி டல் அடித்தாலும், சச்சின் டெண்டுல்கர், முரளிதரன், போன்றோரால் கொஞ்சமாவது இந்த போட்டிக்கு மரியாதை இருந்தது.

தோனியின் கேப்டன்சி அருமையாக இருந்தது..

எனவே சிறந்த அணிதான் வென்று இருக்கிறது..

மழை, விதிகள், அம்பயர் தவறுகள் என்று அதிர்ஷ்டத்தின் அடிப்படயில் இல்லாமல் , திறமை அடிப்படையில் வெற்றி பெற்றி இருப்பது திருப்தி அளிக்கிறது..

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் இப்போது கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதில்லை..எனவே தற்போது கிரிக்கெட் என்பது , ஆசிய நாடுகளின் விளையாட்டு ஆகி விட்டது..எனவே இந்த வெற்றியில் பெரிய பெருமை எதுவும் இல்லை என சிலர் சொன்னாலும், இதிலாவது இந்தியா முன்னணியில் இருப்பது மகிழ்ச்சிதான்..

 

அதெல்லாம் வேறு விஷயம்..

ஆனால் சிலர் ராஜபக்சே தோற்று விட்டார் என அப்பாவித்தனமாக மகிழ்வதை பார்த்தால் பாவமாக இருக்கிறது..

உலகமெங்கும் மனித உரிமை, போர் நடத்தை விதி முறைகள் என்றெல்லாம் பேசப்படும்போது, நம் ஊரில் அதைப்ப்ற்றியெல்லாம் எந்த அக்கறையும் இன்றி இருக்கிறோம்..

இலங்கையில் நடந்த கொடூரங்கள் வேறு எந்த இனத்துக்கு எதிராகவும் நடந்து இருந்தால் நம்மை போல இருந்திருப்பார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயம்..

ராஜபக்சேவுக்கு தண்டனை வேண்டும் என்று கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் விளக்கம் கேட்க கூட நம்மால் முடியவில்லை..

அவர் ஜாலியாக வந்து கிரிக்கெட் பார்க்க முடிகிறது.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச முடிகிறது என்றால் அது அவருக்கு வெற்றி..

இதை புரிந்து கொள்ளாமல் அவர் தோல்வி அடைந்து விட்டதை போல சிலர் அப்பாவித்தனமாக நினைப்பதை பார்த்து வருத்தமாக இருக்கிறது…

விளையாட்டில் நாம் ஜெயித்தாலும், ராஜதந்திரத்தில் ஜெயித்தது அவர்தான்…

கிரிக்கெட்டில் திறமையான அணி வெற்றி பெற்றுள்ளது.. புத்திசாலித்தனம் ஜெயித்தது…

ஆனால், இதை ராஜபக்சேக்கு எதிரான வெற்றியாக நினப்பது புத்திசாலித்தனமா?

விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய நினைத்தாய்?

8 comments:

  1. நீங்கள் சொல்லி இருப்பது என்னை சாடி பேசுவது போல உள்ளது.. ஏனென்றால் நான் தான் காலையில் ராஜபக்ஷே வந்து அசிங்கப்பட்டார் என சொல்லியிருந்தேன்..

    புரிந்துகொள்ளுங்கள்.. ராஜபக்ஷே அவர் நாடு ஜெயிக்கவேண்டும் என்று திருப்பதிலாம் போயிட்டு வந்து நம்பிக்கையோடு உட்காந்திருந்து ஏமாந்துபோனதை தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்..

    ஒன்றுக்கு உதவாத ராஜபக்ஷேவுக்கு முழுதும் சப்போர்ட்டாக இருந்த இந்தியாவில் அவர் நீங்கள் கூறியது போல நடந்துகொண்டது அவருக்கான வெற்றியா.??? இல்லை.. இல்லவே இல்லை..

    சோனியா காந்திக்கு ஈழத்தமிழர்கள் மீது கோபம் உண்டு.. எதிரிக்கு எதிரி நண்பர் என்னும் முறையில் செயல்படுகிறார்கள்.. இன்னும் யாரும் வெற்றிபெறவில்லை.. ராஜபக்ஷே அடி வாங்கியிருக்கார்.. ஏமாற்றம் பெற்றிருக்கிறார்.. அவ்வளவு தான்..

    ReplyDelete
  2. இன்ட்லியில் இணைக்கலையா.?

    ReplyDelete
  3. ஜெஸ்..பொஸ். ராஜதந்திரத்தில் மேன்மைதங்கிய அதி கௌரவ ராஜபக்ஸ அவர்கள். இந்தியாவை ஜெயித்தது மட்டும் இன்றி பெரும் சிக்கலுக்குள்ளும், சைனாவின் சுற்றுப்பிடிக்குள்ளும் சிக்காட வைத்துள்ளார் என்பது உண்மையிலும் உண்மை.

    ReplyDelete
  4. @தம்பி கூர்மதியன்

    இல்ங்கை என்பது இஸ்லாமிய சகோதரர்கள், தமிழ் சகோதரர்கள் ஆகியோருடன் சிங்களர்களுக்கும் சொந்தமான ஓர் இடம்..

    இதில் ராஜபக்சே மட்டும் இலங்கையின் பிரதினிதி என நினைப்பதே தவறு.. அவர் சட்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய ஒருவர்..
    இலங்கை அணி தோறறதற்காக அந்த நாட்டை சேர்ந்தவன் என்ற முரையில் ஓர் இலங்கை தமிழன் வருத்தப்பட்ட்டால் அர்த்தம் இருக்கிறது..

    ஆனால் சட்டம் முன் நிற்க வேண்டிய்அ ராஜபக்சே, இந்திய ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கேட் பார்க்க முடிகிறது என்றால் அது அவருக்கு வெற்றிதான்...

    ReplyDelete
  5. எப்படி சினிமா இந்தியர்களை (ஓரளவேனும்) ஒன்றினைக்கிறதோ அது போல கிரிக்கெட்டும் இணைக்கட்டுமே! என்ன தவறு நேர்ந்துவிடும்? இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கு நமது ஒற்றுமை மிக மிக அவசியம்!! மொழி வாரியாக ஜாதி வாரியாக வெல்லாம் பிரித்துதான் அரசியல்வியாதிகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்! நம் தேச ஒற்றுமை முழுமையடையாமல், கொள்ளைத் தலைவர்களை விரட்ட இயலாது!! நம் நாடும், நம் சந்ததிகளும் நிம்மதி காண இது ரொம்ப முக்கியம்! அதற்கு கிரிக்கெட் ஒரு கருவியாக இருந்து விட்டுப் போகட்டுமே!!
    நம்ம பக்கம் எட்டியாவது பாருங்க நண்பர்களே!!

    http://sagamanithan.blogspot.com/

    ReplyDelete
  6. உண்மையில் உங்கள் நிலை என்ன?

    ஏன் தேவையில்லாமல் விளையாட்டையும் அரசியலையும் கலந்து குழம்புகிறீர்கள்?

    ReplyDelete
  7. ஜனலோக்பால் மசோதா தெரிய வேண்டிய சில தகவல்
    http://nirmalcb.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  8. Rajapakshe bows in front of Indians. Then why you are supporting that b*****d.c. You thoughts are same like your blog title

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா