Monday, July 25, 2011

இளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் கவனித்தவை

   சாரு நிவேதிவாவை ஒருவர் வெறுக்கலாம், தூற்றலாம், போற்றலாம், நேசிக்கலாம்.. ஆனால் அவரை புறக்கணிக்க முடியாது.. ஒரு புறம் பார்த்தால் , தம் தாய் தந்தையர் , மனைவியை விட அவரை நேசிக்கும் வாசகர்கள் ...
இன்னொரு புறம் பார்த்தால் , அவர் மீது பழி சுமத்துவதையே முழு வேலையாக செய்யும் இலக்கிய வாதிகள்... இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே வாழ்பவர்  அவர்..

ங்கே எனது நேரடி அனுபவங்கள் இரண்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

1 ஒரு புத்தக வெளியீட்டு விழா. சினிமா விழா போல பயங்கர கூட்டம்.. அவரிடம் கை எழுத்து வாங்க பலர் ஆர்வமாக போட்டி போட்டு கொண்டு இருந்தனர்,,, அவரது புத்தகத்தில் கை எழுத்து போட்டு தந்து கொண்டு இருந்தார். கூட்டம் சற்று தணிந்த நிலையில், ஓர் அழகு சிலை அவரிடம் சென்று கை எழுத்து கேட்டாள்..  அவள் கையில் பேப்பரோ, புத்தகமோ இல்லை... மறந்து விட்டு விட்டார் போல.. சாருவிடம் நன்றாக திட்டு வாங்க போகிறார் என பயத்துடன் கவனித்தேன்.. ஆனால் சாரு சற்று அமைதியாக , புத்தகமோ , நோட்டோ எடுத்து வாருங்கள் ...கை எழுத்து போடுகிறேன் என்றார்..
அதற்கு அந்த பெண் , எனக்கு புத்தகத்தில் கை எழுத்து வேண்டாம், என்று சொன்னார்.. வேறு எங்கு கை எழுத்து வேண்டும் என்றும் சொன்னார்... பார்த்து கொண்டிருந்த எனக்கு , சாரு மீது கடும் பொறாமை ஏற்பட்டது...  அந்த பெண் எங்கு கை எழுத்து கேட்டார் என இப்போது சொல்ல விரும்பவில்லை... இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..  ( இதை நான் பார்த்து கொண்டு இருந்தேன் என்பது சாருவுக்கு தெரியாது )

2 . அதே புத்தகம் தொடர்பாக இன்னொரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.. சாரு எழுதிய புத்தகங்களில் மட்டும் அல்ல,,,  தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களில் சிறந்த புத்தகம் அந்த புத்தகம் என்பது சிலர் கருத்து...அப்படி நினைக்கும் சில நண்பர்கள் என்னை அணுகி, குறிப்பிட்ட அளவு புத்தகங்களை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் உங்கள் வலைப்பூ நண்பர்களுக்கு அளியுங்கள்...  நாங்கள் ஸ்பான்சர் செய்கிறோம்....   நீங்கள் ஆர்கனைஸ் செய்யுங்கள் என்றனர்..  உற்சாகமடைந்த நான் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் சார்பில் சில உதவிகள் கேட்டேன்..அவர்கள் அரசாங்க அலுவலக பாணியில் மேம்போக்காக பதில் அளித்தனர்..  சரி, அவர்கள் உதவி செய்ய மாட்டர்கள் என உணர்ந்து புத்தகங்களை மொத்தமாக வாங்கி நாமே ஆர்கனைஸ் செய்யலாம் என முடிவு செய்தேன்...

அவர்களை தொடர்பு கொண்டு , குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் கேட்டபோது, பைண்டிங் செய்யவில்லை.. மை காயவில்லை , பின் அடிக்கவில்லை என்பது போல சில காரணங்கள் சொல்லி ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டனர்... அதற்குள் அந்த நண்பர்களும் என் தொட்ர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதால், அந்த முயற்சி அந்த அளவில் தோல்வியில் முடிந்தது...

தனக்கு லாபம் தரும் ஒரு விஷ்யத்தை அந்த பதிப்பகம் ஏன் ஊக்குவிக்கவில்லை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.. பிறகு நடந்த சம்பவங்கள் மூலம், தனக்கு லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை ..சாரு நஷ்டம் அடைய வேண்டும் என்பதுதான் அந்த பதிப்பகத்தின் நோக்கம் என புரிந்தது... மக்களை போல்வர் கயவர் என்ற திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது... துரோகிகள் முகத்தில் துரோகிகள் என எழுதி இருக்காது... அவர்களும் நண்பர்கள் போலவே காட்சி அளிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்..

இந்த அளவுக்கு வன்மம் ஏன் என்பதும் புரியவில்லை.. முதல் சம்பவத்த்தில், அந்த பெண் ஏன் அந்த அளவுக்கு சாரு மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை...

ஆனால் இந்த இரு தரப்புக்க்கும் மத்தியில்தான் சாரு  இயங்கி வருகிறார் என்பது மட்டும் புரிந்தது...


ந்த நிலையில் சாருவுடன் நேரடியாக உரையாட வாய்ப்பாக ஒரு  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு நடந்த நிகழ்ச்சி அது..  ஜிப்பா, ஜோல்னா பையுடன் சிலரை சந்திக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வந்து இருந்த புதியவர்கள் , இனப அதிர்ச்சியில் திகைத்தனர்..  இலக்கிய கூட்டம் போன்று அல்லாது, நண்பர்கள் சந்திப்பு போல இருந்த்து...



சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தேகம், ராசலீலா , காமரூப கதைகள் என படித்து, நோட்ஸ் எடுத்து , பக்கா ஹோம் வொர்க்குடன் நான் சென்று இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து..

ஆனால்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருந்தவர்களை சும்மா கவனித்து கொண்டு இருந்தாலே போதும். பல விஷ்யங்களை கற்று கொள்ளலாம் என என் பேச்சை தவிர்த்து விட்டு, பார்வையாளனான அனைவரையும் கவனித்தேன்...

பல துறையில் பணி புரிபவர்கள்.. அவரவர் துறையில் கில்லாடிகள், .. இலக்கியத்தில் இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பது , நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நண்பர் பெங்களூரில் இருந்து வந்தார்.. அடுத்த நாள் பெங்களூரில் அவசர வேலை என்ப்தால் , 15 நிமிடத்தில் கிளம்பி விட்டார்...

அந்த 15 நிமிடத்துக்காக, பெங்களூரில் இருந்து சென்னை வந்து இருந்தார்.. கிரேட்...

இன்னொரு இளைஞர் , முதல் முறையாக சாருவை பார்க்க வந்து இருந்தார்... ஓர் எழுத்தாளரை நாம் சந்திக்கப்போகிறோம் என்பதையே அவரால் நம்ப முடியவில்லை.. ஒரு வித பரவசத்துடன் காத்து இருந்தார்...

ஆனால் சாருவை சந்த்தித்து பேச ஆரம்பித்ததும், ஒரு தந்தையின் வாஞ்சையுடன் , அக்கறையுடன் அவர்  நடந்து கொள்வதை பார்த்து நெகிழ்ந்து விட்டார்...

அறிவு பூர்வமான விஷ்யத்தை கேட்டு கொண்டு இருப்பதே பெரிய போதை..இதில் மது தரும் போதை தேவை இல்லை என்ப்தால் , நான் மதுவை தொடவில்லை..( சிக்கன், மட்டன், ஐஸ் கிரீம், பிரியாணி என புகுந்து விளையாடியது வேறு விஷயம் )
 சிலர் போதைக்கு , போதை ஏற்றினால்தான் நல்லது என்ற அடிப்படையில், மது வரவழைத்து இருந்தனர்...

மது அருந்துபவர்கள் மது அருந்தாதவர்களை வேற்று கிரக வாசிகள் போல பார்ப்பது இயல்பு..ஆனால் குடிகாரர் என சிலரால் கருதப்படும் சாரு ” இங்கு மாணவர்கள் யாரும் இருந்தால், தயவு செய்து மது அருந்த வேண்டாம்.. அதற்கு என காலம் வரும்போது அருந்துங்கள்..இப்போது வேண்டாம் “ என்றார்...

சமூகத்தின் மீது, தனி மனிதன் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதை  நினைத்துக்கொண்டேன்..

மது அருந்துவது பெரும் பாவம் என்பவர்கள் ஒரு புறம்... மது அருந்தாதவர்கள் வாழ தகுதியவற்றவர்கள் என நினைப்பவர்கள் ஒரு புறம்..இவர்களுக்கு மத்தியில், இதை சரியான முறையில் அணுகும் சாரு ஒரு ஞானியைப்போல ( விமர்சகர் ஞானி அல்ல ) என் கண்ணுக்கு தெரிந்தார் ..

இந்த சந்திப்பில் சாரு பகிர்ந்து கொண்ட விஷ்யங்களை வைத்து , குறைந்தது 10 கட்டுரைகள் எழுதலாம்..
அரசியல், ஆன்மீகம், இலக்கியம் , இசை, சினிமா , உணவு, ஆரோக்கியம் என effortless ஆக அவர் பேசிய்தற்கு ஈடு கொடுத்து , வாசகர்களும் பேசியதை பார்த்தால், ஓர் ஆரோக்கியமான தலைமுறையை அவர் உருவாக்கி வைத்து இருப்பது புரிந்தது...
சில துரோகிகளின் கவிதை உட்பட அனைத்தையும் வாசிக்க கூடியவர்கள் இவர்கள் ....

சாரு பேசும்போது, டீ காப்பிக்கு பதிலாக , அவர் அருந்தும் ஓர் பானத்தை பற்றி அவர் சொன்ன ரகசியத்தை நைசாக நோட் செய்து கொண்டு விட்டேன்... அதை நானும் பின்பற்ற இருக்கிறேன்.. அதைப்பற்றி அவரே சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்பதால், அந்த ரகசிய பானத்தை பற்றிய தகவலை இப்போதைக்கு பகிர்ந்து கொள்ள முடியாது...

அதேபோல தெய்வ திருமகள் திரைப்படத்தை இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசியதையும் மிகவும் ரசித்தேன்... ஆனால் இதையும் , அவர் எழுதினால்தான் நன்றாக இருப்பதால், என் கைகள் கட்டப்பட்டு விட்டன...

அவர் சொன்ன சிகரட் கதை, தன்னையே  பொறாமைப்பட வைத்த தமிழ் எழுத்தாளர் என அவர் பகிர்ந்து கொண்ட சுவையான பலவற்றை  அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..

இப்போதைக்கு அவரது ஆன்மீக பார்வையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. சாருவை ஆன்மீகவாதி என்று சொன்னால் , சாருவின் தீவிர வாசகர்கள் சிலரே கூட என்னை இளக்காரமாக பார்ப்பார்கள்.. ஆனால் உண்மையான ஆன்மீகம் என்பது வெளி வேஷம் சார்ந்தது இல்லை... மனம் சம்பந்தப்பட்டது...  சாருவுக்கு மதம் எதுவும் இல்லை .. ஆனால் அவர் ஆன்மீக வாதி என்பது என் கருத்து..

இமயமலைப்பகுதிகளில் அவ்வளவு உய்ரத்தில் வாகனம் செலுத்தும் டிரைவர்கள் , தம் திறமையை மட்டும் நம்புவதில்லை... தன் முன் வைக்கப்பட்டு இருக்கும் சிறிய கடவுள் படத்தின் மீது வைத்து இருக்கும் ஆழ்ந்த  நம்பிக்கைதான் வாகனம் பத்திரமாக செல்ல உதவுகிறது என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது...

சாருவை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.. அவர் மனதளவில் இஸ்லாமியராக வாழ்பவர்..  இந்த சந்திப்பில், குர் ஆன் ஓதுவதன் சிறப்பை அவர் விளக்கியது அற்புதமாக இருந்தது..

 நேரில் இனிமையாக பழக கூடிய சாரு, சில சமயம் வாசகர்களுக்கு எதிராக கடுமையாக எதிர் வினை ஆற்றுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், அவர் மேன்மையை உணர்த்துவதாக இருந்தது...

“ என்னிடம் ஒருவர் கேள்வி கேட்டால், அவரை எனக்கு இணையானவராக மதிப்பது என் வழக்கம்...  சிறியவராயிற்றே , என மென்மையாக, போலியாக  பதில் சொல்ல விரும்புவதில்லை...  நேர்மையாக பதில் சொல்வது சில சமயம் கடுமையாக இருப்பது போல தோன்றுகிறது..” என்றார்..

ஒரு சான்றோனை சந்தித்த மகிழ்ச்சியடனும்,   நேரம் போதவில்லையே என்ற் வருத்தத்துடனும் சந்திப்பு முடிந்தது....

There was not a single dull moment...

 நல்லோரை காண்பதும் நன்றே.. நல்லோர் சொல் கேட்டலும் நன்றே 

26 comments:

  1. Hope the next time I will be also attend such gathering. Thank you for this coverage.

    ReplyDelete
  2. Your comment will be visible after approval.

    அப்போ கண்டிப்பா தெரியாது?---வாகை

    ReplyDelete
  3. super article bro

    ReplyDelete
  4. charu has given some french songs in his blog..its really nice to hear but without the meaning we could nt enjoy to the core..he might scold me if i am posting this in his website...
    regards
    Karthick

    ReplyDelete
  5. சாருவை மீது பல்வேறு திசைகளில் இருந்து, பலதரப்பட்ட மனிதர்கள் சேறு வாரி இறைக்கும் இந்த தருணத்தில், அவரை பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் அவர் மேல் மதிப்பை கூட்டுகிறது...

    அருமையான இந்த பகிர்வுக்கு நன்றி தலைவா..

    ReplyDelete
  6. //சாரு மீது கடும் பொறாமை ஏற்பட்டது... அந்த பெண் எங்கு கை எழுத்து கேட்டார் என இப்போது சொல்ல விரும்பவில்லை.//
    ஆக பெண்க்ள் சாருவை அப்படித்தான் பார்க்கிறார்கள்.. உங்கள் சாரு பக்தி கண்ணை மறைக்கிறது... dont generalize the ladies....

    ReplyDelete
  7. engal thalai charu patri ezhuthiatharkku nandri

    ReplyDelete
  8. நன்றி....சாருவின் மதிப்பு வாய்ந்த எழுத்தை எந்த சேறும் மறைக்க முடியாது

    ReplyDelete
  9. விஸ்வக்சேனாJuly 26, 2011 at 11:47 AM

    அழகான மனிதனுக்கு அவமானம் அப்பாற்பட்டது.அது எளிது.புரியாது...அவருக்கு அல்ல.....எதிரானவர்களுக்கு..................

    ReplyDelete
  10. விரைவில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தால்தான் எல்லோருக்கும் அவருடைய அபத்தஙகளிலிருந்தும், உங்களைப்போல பைத்தியங்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று தெரிகிறது. அல்லது நல்ல மன நல மருத்துவரை அணுகி சாருவுக்கு Attention Deficit Disorder என்ற நோய்க்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  11. இப்படி தீவிர ரசிகர் கூட்டம் இருக்கும் வரை, எந்த எழுத்தாளனும் திருந்தமாட்டான். இன்னும் நாலு பொண்ணுகளை கைய பிடிச்சு இழுக்கத்தான் தோணும். ஏத்திவிட்டு, அடி வாங்காம விட மாட்டீங்க போல!

    ReplyDelete
  12. 1.சாருவின் பழைய திரைப்பட விமர்சனங்கள் (மகாநதி போன்ற ) கொண்ட புத்தகம் உள்ளதா?அதை இங்கு அறிமுகம் செய்யுங்கள்
    *
    2.www.ragamtv.com இல வந்த சாருவின் நேர்காணலை இங்கு வீடியோவின் இணைப்பை கொடுங்கள்.அங்கு கிடைக்கவில்லை!!
    *************************************************
    யோவ இந்த ரெண்டு கேள்விகளுக்கும் பதிலை சொல்லு !!!

    ReplyDelete
  13. அவர் மனைவி எழுதிய கடிதத்தை படித்த பிறகும் உங்கள்ளுக்கு அவர் மீது பக்தி இருந்தது என்றால் , உங்கள் மனநிலையையும் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

    ReplyDelete
  14. ராசப்பன்July 27, 2011 at 7:08 AM

    சரி அந்த பொண்ணுக்கு "அந்த" இடத்தில் கைஎழுதிட்டாரா இல்லையா அதை சொல்லும்!!

    ReplyDelete
  15. Wait for my detailed reply Wait for my detailed reply

    ReplyDelete
  16. அடியேன், அடியேன் என்று வார்த்தைகளால் தாழ்த்தி கொள்வது ஒரு அரசியல் வாதி கூறும் வார்த்தைகளுக்கு ஒப்பானது. உண்மையிலேயே நீர் அடியேனா? பசப்பு வார்த்தைகளால் பலர் வீழலாம். அது போல் நீர் பசப்பில் விழுந்தீர். அடியேனுக்கு அகங்காரம் ஏன்?.

    ReplyDelete
  17. ஆனந்த்July 27, 2011 at 10:00 PM

    ஆர்.கே.சதீஷ்குமார் said...

    நன்றி....சாருவின் மதிப்பு வாய்ந்த எழுத்தை எந்த சேறும் மறைக்க முடியாது
    ////////////////////.
    .
    .
    ஜாதக பக்தி பழம்னு ஒங்களை நெனச்சா சாருவின் ரசிகரா?(நானும்தான்.ஆனா நமக்கு சாமி பூதம் எல்லாம் கிடையாது!!)

    ReplyDelete
  18. Is this blog dedicated to charu nivedita? Don't u have any other things to write? If so, y don't u write these as comments in charuonline blog? What a CRAP!!!!!!!

    ReplyDelete
  19. Is this blog dedicated to charu nivedita? Don't u have any other things to write? If so, y don't u write these as comments in charuonline blog? What a CRAP!!!!!!! /////////
    .
    .
    அண்ணா மொதல்ல சாரு தளத்தை பாத்துட்டு வாங்க!!அங்க எங்க கமன்ட் போட?

    ReplyDelete
  20. People who met Charu in person pretty much say the same - that he is a very nice in person. But I get a different image from his replies to some of his "fans"/peers/even friends. IMO, some of this should do with the people who approach him. But in other cases, he gives a different response in his writings (unknowingly, I guess).
    In general, this bit of eccentricity (for the lack of better description) is a mark of very creative people and we have to give that space to them.

    If we agree that his personality (based on your account) is very nice in person and his writings (some responses in blogs) reflects he is not that nice (nice = considerate), I wonder whether putting him in pedestal based on your few hours interaction is the right thing.
    Again, I am not saying one should bash him either.

    He constantly writes that he doesn't understand why people are scared of meeting him. That tells me, he thinks (rightfully) that hebehaves in person and doesn't realize he behaves erratically (IMO, of course) through his writings (responses).

    Having said all of this, I am very glad that writers get some publicity.

    ReplyDelete
  21. I have never any geek like Charu!!!! Ellaraiyum thiituvaru.....He thins himself he is the best writer!!!!

    ReplyDelete
  22. I have never any geek like Charu!!!! Ellaraiyum thiituvaru.....He thins himself he is the best writer!!!! //////////////........யோவ தமிழ்ல எழுதும் ஒரு தலத்தில் ஆங்கிலத்துல காமனட் போடுறது அயோக்கியத்தனம் இல்லையா?

    ReplyDelete
  23. சாரு பற்றிய இந்தக் பதிவு முக்கியமானது. ஆனால்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா