Thursday, February 16, 2012

என்ன தகுதி உனக்கு? ப்ரூஃப் ரீடர் மாமல்லன் எழுத்தில் காணப்படும் பிழைகள்!!!

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவை அவர் வாசகர்கள் நினைப்பதை  விட , அவரது எதிரிகள்தான் அதிகம் நினைக்கிறார்கள்.. நினைத்து விட்டு போகட்டும்.
ஆனால், சிலர் அவரை காப்பி அடித்து அவரைப்போலவே நடிக்க முயல்வதுதான் காமடியாக இருக்கிறது..

சாரு மது அருந்துவதைப்பற்றி எழுதுவதை காப்பி அடித்து ,மனுஷ்யபுத்திரனும் எழுதினார்.. பள்ளி மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்தேன் என பெருமையாக எழுதி வாங்கி கட்டி கொன்டார்.

அதே பாணியில் , விமலாதித்த மாமல்லனும் காமெடி செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் உப பாண்டவம் நாவலை சாரு கடுமையாக விமர்சித்தார். விமர்சித்தார் என்றால் அதற்கான தகுதி அவருக்கு உள்ளது.. அதைப் பார்த்து நாமும் கடுமையாக விமர்சிக்க இயலுமா?

பெரியவர்கள் சண்டையில் சிறுவர்கள் தலையிட முடியுமா?

தமிழ் சரியாக தெரியாத இவர், உப பாண்டவத்தில் இருக்கும் பிழைகளை கிண்டல் செய்துள்ளார்.. இவர் தமிழ் எப்படி?

கொஞ்சம் பார்க்கலாமா  ?
+++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரே ஒரு கதையை மட்டும் அலசலாம்..  பாருங்கள் ..இதில் எழுத்து பிழைகளை மட்டும் பார்க்கலாம்.. கருத்து பிழைகளை பின்னர் அலசலாம்./...


சினிமாக்களில் எப்போதுமே மெஷின்கன்னுடன் மேலே உட்கார்ந்திருப்பவன் வில்லனாகவும் கீழிருந்து, எதன் பின்னாலாவது ஒளிந்தபடி சின்ன கைத்துப்பாக்கியால் உச்சிக் கொட்டகையில் உட்கார்ந்திருப்பவனை சுட்டுச் சாய்ப்பவன், நாயகனாகவுமே இருப்பான்


இந்த வாக்கியத்தில் இருக்கும் பிழையை கவனியுங்கள்.தவறான வாக்கியம்

ஒரு ஆளை மட்டும்


தம்பி . உயிர் எழுத்துக்கு முன் "ஒரு" வராது... 


"செல்லவே செல்லதீர்கள்"


செல்லாதீர்கள் என எழுத வேண்டும்.

அப்படியொரு உபசரிப்பு.

இதிலும் உயிர் எழுத்து பிரச்சினை

 ஒன்றா தோட்டாவால் சாவு இல்லையேல் இனிப்பால் சாவு

ஒன்று தோட்டாவால் சாவு என இருக்க வேண்டும்

விசேஷ பார்வைகளைப் பறிமாரிக்கொள்ள

தம்பி.. அது பறி அல்ல ..பரிமாறுதல்

 மாட்டிகொண்டு

மாட்டிக்கொண்டு 

அவர் அநேகமாய் பேசுபவரே அல்ல.

அல்லர் 

************************************************

இப்படி வரிக்கு வரி தவறாக எழுதும் விமல், மற்றவர்களை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பதே நடு நிலையாளர்களின் கேள்வி

2 comments:

  1. --விமர்சித்தார் என்றார் அதற்கான தகுதி அவருக்கு உள்ளது
    என்றால் என்று வர வேண்டும்
    --பெரியர்வர்கள் சன்டையில் சிறிவர்கள் தலையிட முடியுமா?
    பெரியவர்கள்/சிறுவர்கள் என்று வர வேண்டும்
    இது போல நெறைய தப்பு சார் உங்க எழுத்துல.......
    தகுதி பத்தி எல்லாம் நீங்க பேச கூடாது சார்
    ஆமா, அது யாரு சார் நடு நிலையாளர்கள்?

    ReplyDelete
  2. Nalla Comedy Sir.
    I believe this blog would be a subset of charuonline.com

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா