Monday, July 9, 2012

zorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்றி அமைக்கவல்ல புத்தகம்



  • ஒரு பெண் இயேசு மீது கொண்ட அன்பால் விலை உயர்ந்த தைலத்தால் அவருக்கு அபிஷேகம் செய்தாள். அதைக் கண்ட சிலர், இது வீண் செலவு. அந்த தைலத்தை விற்று ஏழைகளுக்கு உதவி இருக்கலாம் என்றனர். இயேசு இந்த கருத்தை மறுத்து பேசினார்.
  • கோயில் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதில் , அந்த பாலை மக்களுக்கு இலவசமாக தரலாம் என அவ்வப்போது சிலர் ஆலோசனை சொல்கின்றனர்.
  • சும்மா ஊர் சுற்றி பார்ப்பதை , வெளியூர் செல்வதை  தமிழர்கள் பெரும்பாலும்   விரும்புவதில்லை. ஏதேனும் வேலை இருந்தாலும் மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர்.
  • இலக்கிய புத்தகங்களை விட நேரடி பலன் தரக்கூடிய புத்தகங்களே அதிகம் விற்பனை ஆகின்றன.

இது போன்ற பல உதாரணங்களை அன்றாடம் பார்க்கிறோம். எதற்குமே காரணம் தேவைப் படுகிறது. உணர்வு பூர்வமாக செய்வதை விட லாபம் தரக்கூடியதை செய்வதையே விரும்புகிறோம். 
உதாரணமாக ஒருவன் இரவு முழுதும் விழித்து வேலை செய்தால் , அவனை நம் மனம் உயர்வாக நினைக்கும், ஆனால் ஒருவன் இரவு முழுதும் விழித்து பவுர்ணமியை ரசிக்க நினைத்தால் , அவனை பைத்தியக்காரன் என்றே நினைப்போம்.

அறிவுபூர்வமாக வாழ்வதால் பலவற்றை இழக்கிறோம் என்பது ஒரு புறம்.

இன்னொரு வகை உண்டு.

என் நண்பர் ஒருவர் லீவு போட்டு விட்டு ஊட்டி சென்று வந்தார். அங்கு போய் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக சொன்னார். அங்கு போய் என்ன செய்தார் ? ஒரு ரூம் போட்டு , நாள் முழுக்க குடித்து கொண்டு இருந்தாராம். அதை இங்கேயே செய்து இருக்கலாமே என நினைத்து கொண்டேன். அவர் வாழ்வை அனுபவித்தாரா அல்லது வாழ்க்கையின் சவாலை எதிர் கொள்ள முடியாமல் , ஊட்டிக்கு தப்பி சென்றாரா என்பது தெரியவில்லை.
அறிவு பூர்வமாக வாழ்ந்தாலும் இழப்புதான். உழைக்க பயந்து கொண்டு வேறு ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகி , அதுதான் மகிழ்ச்சி , அதுதான் உல்லாசம்   என நினைப்பதும் தவறுதான்.

சரி..அப்படியானால் பேலன்ஸ்டு லைஃப் என்பது என்ன ?

zorba the greek எனும் நாவல் இதற்கி விடை அளிக்கிறது

***************************************************************


கசான்ஸ்சாகிஸ் படைத்த நாவல்தான் இந்த “ ஜோர்பா எனும் கிரேக்கன் “ 

என்ன கதை?

அறிவு ஜீவியாக வாழும் ஒருவன் , வாழ்க்கையில் சலிப்புற்று தீவு ஒன்றுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறான். ( இவன் சொல்வது போல கதைப்போகு அமைந்துள்ளது )   கிட்டத்தட்ட இறந்து போன நிலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்துக்கு உயிர் கொடுத்து நடத்தி , தன் முத்திரையை பதிப்பது அவன் ஆசை. படகுக்காக காத்து இருக்கும் நேரத்தில் சோர்பா எனும் வயதானவரை சந்திக்கிறான். அவரது இசை, இனிய பேச்சால் கவரப்படுகிறான். அவர் தனக்கு வேலை போட்டு தந்து தன்னையும் அழைத்து செல்ல கோருகிறார். அவன் ஏற்கிறான்.

சென்ற இடத்தில் காதல் , மோதல் எல்லாம் நடக்கிறது. அவ்வப்போது முதலாளிக்கும் ( கதை சொல்லிக்கும் ) வேலையாளுக்கும் ( சோர்போ ) இடையே பல விஷயங்கள் குறித்து உரையாடல் நடக்கிறது.

சோர்போவை கவனிப்பது இவன் மனதில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. வாழ்வை கொண்டாடுதல் என்பது முழுமையாக வாழுதலே என உணர்கிறான். சிறிய விஷயங்களை கூட அனுபவித்து ரசிக்கலாம் என்பது புரிகிறது.  எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கும்போது , கையில் காசு இருக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது பெரிய விஷ்யம் அல்ல. கடும் சோதனையின்போதும் , வாழ்வின் மீது நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் என்பது புரிந்து ஊர் திரும்புகிறான். 

கதையை விட ஜோர்போவின் பாத்திர படைப்புதான் அபாரம். அன்றைய விமர்சகர்கள் எழுதினார்கள்.. story is plot-less . but it is not pointless.

இதை விட சுருக்கமாக இதை விமர்சிக்க இயலாது.. நாவல் என்ற முறையில் இதன் தகுதி சற்று சந்தேகிக்கப்பட்டு, நோபல் பரிசை இழந்தது. பிற்காலத்தில்தான் இந்த நாவலின் உன்னதத்தை உணர்ந்தார்கள்.

முதலில் படிக்கும்போது , சாதாரணமாகத்தான் தோன்றும். சில முறை படித்தால்தான் , இதில் ஒளிந்து கிடக்கும் விஷ்யங்கள் புரியும்..

**************************************************

இந்த நாவல் பல விஷயங்களை சொன்னாலும், என்னை கவர்ந்த டாப் 8 விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1 முழுமையாக வாழுங்கள்

       எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும்  ஈடாகாது. ஈடுபாட்டுடன் செய்ய முடியாத வேலையில் இருக்கும் பட்சத்தில் , கூடிய சீக்கிரம் வேறு வேலையை செய்ய ஆரம்பிப்பது நல்லது. 

              When I'm playing, you can talk to me, I hear nothing, and even if I hear, I can't speak.It's no good my trying. I can't!''But why, Zorba?''Oh, don't you see? A passion, that's what it is!'

2 உங்களை மட்டுமே நம்புங்கள்

          இன்றைய நண்பன் நாளைய எதிரி ஆகலாம். எல்லாமே மாறக்கூடியது  , மனிதர்கள் உட்பட. எதுவும் , யாரும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நேற்றைய நீங்களோ , நாளைய நீங்களோ கூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இன்று , இப்போது மட்டுமே இருக்கும் நீங்கள் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் . ஆகவே இந்த கணத்தை முழுமையாக வாழுங்கள். 


I don't believe in anything or any one; only in Zorba. Not because Zorbais better than the others; not at all, not a little bit! He's a brute like the rest! But Ibelieve in Zorba because he's the only being I have in my power, the only one I know.All the rest are ghosts. I see with these eyes, I hear with these ears, I digest withthese guts. All the rest are ghosts, I tell you. When I die, everything'll die. The wholeZorbatic world will go to the bottom!'


3 பழமையின் கண் கொண்டு பார்க்காதீர்கள்.

ஒரு புத்தகத்தை படிக்கும்போதோ , ஒருவர் சொல்வதை கேட்கும்போதோ , உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த அனைததையும் மறந்து விட்டு , புதிதாக கேட்பது போல கேட்டால் , படித்தால் முழுமையான பலன் கிடைக்கும். சாலையில் செல்லும்போது , எப்போதும் செல்லும் பாதைதானே என அசட்டையாக செல்லாமல், விழிப்புணர்வுடன் சென்றால் , சாலை ஓரத்தில் மலர்ந்து இருக்கும் புதிய மலர் கண்ணில் படக்கூடும். 

Boss, did you see that?' he said at last. 'On slopes, stones come to life again.'I said nothing, but I felt a deep joy. This, I thought, is how great visionaries and poetssee everything - as if for the first time. Each morning they see a new world before theireyes; they do not really see it, they create it

Like the child, he sees everything for the first time. He is for everastonished and wonders why and wherefore

4  பயம் வேண்டாம்.

ஒரு கவிஞர் தன் காதலியை பற்றி வர்ணிக்கையில் “ வினை முடிதன்ன இனியள் “ என வர்ணிப்பார். ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுவது , காதலியுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பது போல இனிமையானது. மதுவைப்போல போதை தருவது.  இந்த நிறைவில் பயம் என்பதே இருக்காது. 


Throwing yourself headlong into yourwork, into wine, and love, and never being afraid of either God or devil ... that's whatyouth is!'


5   இந்த கணத்தில் வாழுங்கள்

கடந்த காலம் என்பதை வரையறுக்கலாம். எதிர்காலம் என்பதையும் வரையறுக்க முடியும். நிகழ்காலம் என்பதை மட்டும் வரையறுக்கவே முடியாது. நாம் அதைப்பற்றி நினைக்கும் முன்பே அந்த நிகழ் காலம் , கடந்த காலம் ஆகி இருக்கும். செய்யும் செயலில் முழுமையாக ஈடுப்பட்டு , அந்த செயலாகவே மாறி விடுவதே  நிகழ்காலத்தில் வாழ்வதாகும் . இதை விட சிறந்த தியானம் ஏதும் இல்லை 

What are you doing at this moment, Zorba?" "I'm sleeping." "Well, sleepwell." "What are you doing at this moment, Zorba?" "I'm working.' "Well, work well.""What are you doing at this moment, Zorba?" "I'm kissing a woman." "Well, kiss herwell, Zorba! And forget all the rest while you're doing it; there's nothing else on earth,only you and her! Get on with it


6   உலகத்தை நம்மால் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால் நம்மை மாற்றி கொள்ளலாம்.

          உலகம் அபத்தங்களால் ஆனது. எதிர்பாராமல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நாம் அவற்றை எப்படி கையாள்கிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்தலாம். 

One night on a snow-covered Macedonian mountain a terrible wind arose. It shookthe little hut where I had sheltered and tried to tip it over. But I had shored it up andstrengthened it. I was sitting alone by the fire, laughing at and taunting the wind. "Youwon't get into my little hut, brother; I shan't open the door to you. You won't put my fireout; you won't tip my hut over!"'In these few words of Zorba's I had understood how men should behave and what tone they should adopt when addressing powerful but blind necessity.I walked rapidly along the beach, talking with the invisible enemy. I cried: 'You won'tget into my soul! I shan't open the door to you! You won't put my fire out; you won't tip  me over!


7 அடிமையாகவும் வேண்டாம் , பயப்படவும் வேண்டாம்.

 ஒரு விஷ்யத்தை முழுமையாக செய்வதே அதில் இருந்து தப்பிக்கும் வழியாகும். சிகரட் பிடிக்க ஆசையாக இருக்கிறதா? ஆசை தீரும் அளவுக்கு புகைத்து தள்ளிவிட்டு , அடுத்த விஷ்யத்துக்கு நகர வேண்டும். ஒரே விஷயத்தில் கட்டுண்டு கிடப்பது ஆபத்தானது. ஒரு விஷ்யத்தை அனுபவிக்க பயந்து கொண்டு, ஏங்கி கொண்டே இருப்பது அபத்தமானது.

I'm going to do withmy books what you did with the cherries. I'm going to eat so much paper, it'll make mesick. I shall spew it all up and then be rid of it for ever


8 குழந்தைத்தனதை இழந்து விடாதீர்கள் 

எல்லாவற்றையும் கணக்கு பார்த்து செய்தால் , வெறும் மெஷினாகத்தான் இருப்போம். கொஞ்சம் பைத்தியகாரத்தனம் , குழந்தைத்தனம் தேவை. 


You're young, you have money, health, you're agood fellow, you lack nothing. Nothing, by thunder! Except just one thing - folly


********************************

கண்டிப்பாக படியுங்கள். உங்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்வார் zorba..   ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.. படிக்க படிக்க ஏராளமான விஷ்யங்கள்.

And when the body dissolves, does anything at all remain of what we havecalled the soul? Or does nothing remain, and does our unquenchable desire forimmortality spring, not from the fact that we are immortal, but from the fact that during the short span of our life we are in the service of something immortal?

26 comments:

  1. நீண்ட நாளுக்குப் பிறகு வந்து ஒரு ஆழமான பதிவை படித்துச் செல்கிறேன் நன்றி....

    ReplyDelete
  2. கண்டிப்பாக படித்து விடுகிறேன்.. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. மிகச் சிறந்த உன்னதமான வரிகள் இவை. இதோ புத்தகத்தை வாங்க இருக்கிறேன். புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கான இணைப்பையும் பதிவில் கொடுக்கலாமே! தொடர்ந்து நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Super review boss, Why you left out his view on women, please do it in next. His view on women is very important.

    ........... She's a sickly creature, I tell you, and fretful. If you don't tell her you love and want her, she starts crying. Maybe she doesn't want you at all, maybe you disgust her, maybe she says no. That's another story. But all men who see her must desire her. That's what she wants, the poor creature, so you might try and please her!

    ReplyDelete
  5. Awesome and Thankyou for the post.

    ReplyDelete
  6. நான் ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்றேன். இதுவும் வாழ்க்கையை மாற்றி அமைப்பதுதான்; ஆனால் நம்ம நாட்டுக்காரர் எழுதினது. பெயர் - 'விஷ்ணுபுரம்' கிடைக்குமிடம்- தமிழினி, உடுமலை டாட் காம், நியு புக் வேர்ல்ட்.

    முக்கியமா, கதையைப் படிச்சுட்டு, கடைசியா ஆசிரியர் பேரைப் பாருங்க. (உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, மறந்துட்டுப் படிங்க!) இவ்வளவு நாள் நாம் கொண்டாடி வந்த விஷயங்கள், புத்தகங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லேன்னு தோணும். அதுக்கு நான் பொறுப்பு இல்ல...

    ReplyDelete
  7. pichaikaran ,
    For the bible reference there was a reason for that .
    1 . It happened only once on that day before Jesus was crucified. It is not that every time that lady put the expensive oil on Jesus.

    2. It happened and Jesus let allow because it was like prophecy and it has to be happened , As per their tradition after the death the person's body has to be put with expensive oil before burial.
    So Jesus knew that he is going to be crucified as per the Father's Wish (prophecy)
    from my Bible knowledge

    ReplyDelete
  8. ஒரு அற்புதமான பகிர்வு சகோ. ரசித்துப்படித்தேன்.

    ReplyDelete
  9. Nice! Thanks!
    - Ashok

    ReplyDelete
  10. ஒரு சிறந்த புத்தக மதிப்புரை - நன்றி

    ReplyDelete
  11. சிறந்த புத்தக மதிப்புரை - நன்றி

    ReplyDelete
  12. சிறந்த புத்தக மதிப்புரை - நன்றி

    ReplyDelete
  13. Super introduction of the book. Remembered the movie with Anthony Quinn, and the impact for a long time!

    Added to my must read books.

    Thanks for sharing.

    ReplyDelete
  14. ur introduction of the book mindblowing.tks a great insight.

    ReplyDelete
  15. கோயில் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதில் , அந்த பாலை மக்களுக்கு இலவசமாக தரலாம் என அவ்வப்போது சிலர் ஆலோசனை சொல்கின்றனர். - I still find nothing wrong with the "people's" opinion... letting milk flow upon a stone is waste...

    ReplyDelete
  16. Thank you and Charu for sharing such a wonderful novel....

    ReplyDelete
  17. Thank you and Charu for sharing such a wonderful novel....

    ReplyDelete
  18. Thank you for review

    ReplyDelete
  19. கதை எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாவிட்டாலும், உங்களது கருத்துக்கள் அபாரம்.

    ReplyDelete
  20. நாவலை வாசித்து பல நாட்கள் ஆகிறது. இப்போது இந்த பத்தியின் வாசிப்பு அந்த பக்கங்களை என்னுள் ஓட்டுகிறது. இப்பதிவில் இல்லாத ஒரு வரியை போட்டு பின்னூட்டம் இடுகிறேன். ஸோர்பாவே ஸோர்பாவிற்கு பின்னூட்டமாய் இட தகுதியுடையவர்...

    The proud quixotic reaction of mankind to conquer Necessity and
    make external laws conform to the internal laws of the soul, to deny all that is and
    create a new world according to the laws of one's own heart, which are contrary to the
    inhuman laws of nature - to create a new world which is purer, better and more moral
    than the one that exists?

    ReplyDelete
  21. நல்ல பதிவு. பின்னூட்டம் இட ஆசையாக இருக்கிறது. என்ன இட என தெரியாததால் ஸோர்பாவின் வரிகளையே எழுதி செல்கிறேன்...

    The proud quixotic reaction of mankind to conquer Necessity and
    make external laws conform to the internal laws of the soul, to deny all that is and
    create a new world according to the laws of one's own heart, which are contrary to the
    inhuman laws of nature - to create a new world which is purer, better and more moral
    than the one that exists?

    ReplyDelete
  22. book of mirdad பத்தியும் எழுதுங்கண்ணா! :) ! நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா