Thursday, November 22, 2012

பாரதிராஜா, வைகோ - யார் சொல்வது சரி? நீங்கள் திராவிடனா , தமிழனா ?


  ஆரியர், திராவிடர் என்பது எனக்கு கொஞ்சம் குழ்ப்பமான சமாச்சாரமே இருந்து வருகிறது. திராவிடம் என சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், திராவிடன் என நாம்தான் சொல்லிக்கொண்டு அலைகிறோம். மலையாளிகளோ , கன்னடர்களோ , தெலுங்கர்களோ அப்படி சொல்லிகொள்வதும் இல்லை.. நினைத்து கொள்வதும் இல்லை. எனவே நம்மை திராவிடர்கள் என சொல்லிக்கொண்டு இழப்புகளை சந்தித்து வருகிறோம். நாம் எல்லாம் தமிழர்கள் என்ற பேச்சுகளும் நன்றாகத்தான் இருக்கிறது..

கொருக்குப்பேட்டை வாசி , சென்னை வாசி, தமிழன் ,  திராவிடன் , ஆசியன் என்பதை எல்லாம் தாண்டிய நிலையில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட , நடைமுறை வாழ்வில் ஓர் அடையாளத்துடன் வாழ வேண்டி இருக்கிறது. அந்த அடையாளத்துக்கு உண்மையாகவும் இருக்க வேண்டி இருக்கிறது.  நம் அனடை மாநிலங்களில், நம்மை திராவிடர்கள் என ஒப்புக்கொள்ளாவிட்டாலும் , வட இந்தியா சென்றால் , தென்னிந்தியர்களை ஒன்றாகத்தான் வகைப்படுத்துகிறார்கள் . 

தமிழ் நாட்டுக்குள் இருக்கும்போது , திராவிடன் என்ற அடையாளம் நல்லது செய்து இருக்கிறதா இல்லையா என்பதை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது என தோன்றுகிறது.  திராவிடம் என சொன்னாலும் , அண்ணா போன்ற உண்மையான திராவிட தலைவர்கள் , தமிழுக்குத்தான் பெருமை சேர்த்தார்கள் என்பதை மறுக்க முடியாது.  சமஸ்கிருதத்தை கலந்து எழுதுவது , வட மொழி சொற்கள் ஆதிக்கம் போன்றவை ஒழிய திராவிட இயக்கம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் , படிப்படியாக அன்று இருந்த வட மொழி ஆதிக்கத்தின் இடத்தை ஆங்கிலம் பிடித்து இருப்பதை எங்கும் பார்க்கிறோம். இதற்கு காரணம் , திராவிடம் என்ற மாயையில் நாம் மூழ்கியதுதான் என சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது , “ திராவிடர்கள் “ யாரும் உதவிக் குரல் எழுப்பவில்லையே... 

இது குறித்த விரிவான விவாதம் தேவை என நினைக்கிறேன். 


   இது குறித்து , இயக்குனர் பாரதிராஜாவுக்கும் , வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.


தா பா பிறந்த நாள் விழாவில் பாரதிராஜா பேசினார்.. 


பாரதிராஜா 

ஈழப்பிரச்சினையில் நாம் தோற்று விட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்து விட்டனர். தமிழினம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திராவிடத்தை பேசிக்கொண்டே ஈழத்தை காப்பாற்றாமல் விட்டு விட்டார்கள். பேசியே தமிழர்களை மழுங்கடித்து விட்டனர். 

இதற்கு பின் பேசிய வைகோ ஆவேசமாக காணப்பட்டார். பேசி விட்டு கோபத்துடன் கிளம்பி விட்டார்.. 


வைகோ 

பாரதிராஜாவே , வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என பேசிவிட்டு போய் இருக்கிறீர்கள் . திராவிடத்தைப் பற்றி பேசுவது சிலருக்கு பொழுது போக்கு. திராவிடம் இல்லை என்றால் இங்கே எதுவுமே  இல்லை. அண்ணா , பெரியார் இல்லாமல் இங்கே எதுவும் நடந்து இருக்காது.  இனி திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால் , நாங்கள்  பத்து வார்த்தை பேச வேண்டி வரும்,


அதன் பின் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். 



பாரதிராஜா 
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்



***********************************************************************************


ம்ம்... நான் திராவிடனா அல்லது தமிழனா எனக்கு குழப்பமாக இருக்கிறது . நீங்கள் திராவிடனா , தமிழனா ? 


8 comments:

  1. Kabeer Vavanan in FB

    திராவிடம் என்பது வேத காலத்தில் பார்பனர்கள் தங்களை உயர்வாக கருதி இங்குள்ள பூர்வகுடியினரை தஸ்யூக்கள் என்று குறிப்பிடுவதற்கு எதிராய் திரண்ட பதம்.

    திராவிடம் அறியப் பட்ட போது, மற்ற திராவிட மொழிகள் தோன்றவில்லை. தமிழ் தான் கோலோச்சியது. தமிழ்தான் திராவிடமாய் இருந்தது. திராவிடம் தான் தமிழாய் இருந்தது. திராவிடம் என்பது பார்பனர்களை ஓரங்கட்ட தேவைப்பட்ட சொல்.

    மேலை சாளுக்கியர்கள், கீழை சாளுக்கியர்கள் காலத்திற்கு முன் தெலுங்கோ, கன்னடமோ ஜீவித்திருக்க வில்லை. விசயநகர ஆட்சியாளர்களின் உதவியுடன் கால் பத்திதது தான் இந்த மொழிகள். சிலப்பதிகார காலத்திலோ, ஏன் சேர பேரரசின் அல்லது பிற்கால சோழர்களின் காலத்திலோ மலையாளம் ஒரு மொழியாக அறியப் பட வில்லை. நம்பூதிரிகளின் வஞ்சகத்தால் சமஸ்கிருதம் கலந்த தமிழ் தான் மலையாளம்.

    மௌரிய பேரரசின் நாலந்தா பல்கலைகழகம் என்ற சொல்லே தமிழ் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் (நாளும் தா - நாலந்தா). தமிழ் கங்கை நதிகரைகளிலும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. அப்போது அவர்கள் சனாதனம் எதிர்த்த திராவிடர்களாய் இருந்தனர்.

    இன்று பார்பனர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழி பேசுபவர்களாகவும் அந்தந்த மொழி சார்ந்த இனக் குழுக்களாக தன்னை அடையாளம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் தன்னை ஒருபோதும் திராவிடன் என்று சொல்ல துணிவதில்லை.

    அது தான் இந்த சொல்லின் வெற்றி. அதனால் நாம் மொழியால் தமிழர். இனத்தால் திராவிடர்.

    ReplyDelete
  2. @ பிரகாஷ்... very interesting.. ஆனால் மற்றவர்கள் கன்னடர்கள்- இந்தியர்கள் , தெலுங்கர்கள் - இந்தியர்கள் என்ற அடையாளத்துடன் இருக்கும்போது , நாம் மட்டும் தமிழன் - திராவிடன் - இந்தியன் என இருப்பது வரமா சாபமா என்பது குழப்பமாக இருக்கிறதே

    ReplyDelete
  3. வாழ்க பாரதம்!


    மனிதன் பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு திருப்தி அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன் பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
    கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால் அவர்கள்,மக்கள் நலத்திற்காக கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
    நாடு துண்டு களானது. இந்த மன்னர்கள் நாட்டை விட தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
    எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து தன் அரண்மனை கரூலத்தில் சேர்த்து வைத்தனர்.
    அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
    பல மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி வரை வேறுபாடு இருந்தாலும் ஒரு தெய்வ ஷக்தி நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
    சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள் வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

    இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம் வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
    ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
    மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
    அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர். अथिति देवो भव्
    ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி வழிபாடு புரியாத.? என்ன.
    சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
    அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
    பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
    மக்கள் தன் நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
    பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து நாட்டைப் பாதுகாக்கும்
    உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
    வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!
    ananthako.blogspot.com

    ReplyDelete
  4. இங்க என்னய்யா நடக்குது? திராவிடம் தேவையில்லைங்கிறது, பெரியார் எதிர்மறை ஆசான் என்பது, சாதி மறுப்புத் திருமணங்களை வெளிப்படையாக எதிர்ப்பது, இட ஒதுக்கீட்டை கேள்வி கேட்பது, குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களே வைப்பது, பிராமணாள் கஃபே என்று பெயர் வைப்பது என்று நீதிக்கட்சி தொடங்கி, பெரியார் - அண்ணா வரை அரும்பாடுபட்டு நிலைநாட்டப் போராடிய விழுமியங்கள் கண்ணை மூடிக்கொண்டு சர்வ அலட்சியத்துடன் கடாசப்படுகின்றன. இதற்கு முதன்மையான பொறுப்பேர்க்க வேண்டியவர்கள் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவே. இவர்கள் திராவிட இயக்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு மூடநம்பிக்கைகள், ஊழல், குடும்ப ஆட்சி, எதேச்சதிகாரம் என்று இருந்தது ஆரிய ஆதரவு சக்திகளுக்கு வசதியாகப் போய்விட்டது!

    இன்று கொஞ்ச நஞ்சம் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பவர் வைகோ தான். அவர் தன்னை சிறை வைத்த ஜெயிடம் கூட்டணி வைத்ததும், பிறகு திமுக, கடைசி நிமிடத்தில் திரும்ப அதிமுக என்று கூட்டணி வைத்து தனது கட்சிக்கு சமாதி கட்டிவிட்டார். போன தேர்தலில் ஜெ-யால் தன்னிச்சையாகக் கூட்டணியிலிருந்து கழட்டிவிடப்பட்போது அனுதாபத்துக்குப் பதில் 'நல்லா வேணும்' என்று தோன்ற வைத்ததே அவரது தோல்வி.

    பாரதிராஜா திராவிடம் பற்றி லெக்சர் கொடுப்பதற்குப் பதில் தேவர் குருபூஜை நடத்துபவர்களிடம் தேவர் என்பது படித்து வாங்கிய பட்டமா என்று கொஞ்சம் கேட்டுச் சொல்லலாம்!

    சரவணன்

    ReplyDelete
  5. appa tamilezham patri kolumbil thane pesavendum

    ReplyDelete

  6. ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர் களையோ இழிவுபடுத்த வேண்டாம்!

    திராவிட என்ற சொல் அவாள் மொழியிலேயே தமிழைக் குறிப்பதால்தான் அவர்களுக்குக் காட்டம். திராவிடம் என்ற சொல்லை அவாள் விரும்புவதுமில்லை. அவாளின் பெரும்போலோருக்கு அன்றும் இன்றும் என்றும் தமிழை பிடிக்காது என்பது உண்மை.

    உணரவேண்டியத் தமிழர் உணர வேண்டிய தெளிவும் தெரிவும் பெற வேண்டும்.
    அறிவுறுத்தப்பட வேண்டும்

    அன்பன்

    ReplyDelete
  7. அட..போங்கப்பா...போய் பிள்ளைகுட்டிகளை படிக்க வைங்க....அரசியல் வேனாம்

    ReplyDelete
  8. சார் இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.. நடைமுறை என்ற உரைகல்லைப்
    பார்த்தால் போதுமானது.. பாருங்கள் நம் பக்கத்து மாநிலத்தில் எத்தனை பிரச்சனை
    ஆனால் தமிழ்நாடு எத்தனை சுபிட்சமாக இருக்கிறது.. கர்நாடகத்தில் காவிரியில் தண்ணீர்
    தர மாட்டேன் என்று அத்தனை கன்னடர்கள் ஒற்றுமையாக சண்டை போடுகிறார்கள்.
    மலையாளிகள் அதே போல டாம் கட்டுவேன் என்று வீண்பிடிவாதம் பிடிக்கிறார்கள்
    தெலுங்கர்களும் பாலாற்றில் அப்படிச் செய்கிறார்கள்.. நாம் தமிழ்நாட்டில் அப்படி எந்த
    வித சண்டையும் செய்வதில்லையே.. கம்மென்றுதான் இருக்கிறோம்.. அது பொருக்கவில்லையா
    இந்த பாரதிராசாவுக்கு... நமது பக்கத்து மாநிலம் வறண்டு கிடக்கும் போது நம் திராவிடதமிழ்
    நாட்டில் பாலும் தேனும் ஓடிக்கொண்டேயிருக்கிறது.. பக்கத்து மொழிக்காரர்கள் தத்தம் மொழிப்
    பற்று இல்லாமல் கிடக்கும் போது நாம் எத்தனை தமிழ்ப் பற்றுடன் இருக்கிறோம் அதை எத்தனை
    முறை உலகுக்கு பறை சாற்றியிருக்கிறோம்.. உதாரணமாக முள்ளிவாய்க்கால்.. இப்படி நமது
    பற்றை சொல்லிக் கொண்டே செல்லலாம.. திரவிடத்தை மறந்தால் பிராமணர்கள் வந்துவிடுவார்கள்
    அவர்கள் நம் மொழியை படிக்கவே கூடாது என்று தடை போடவேண்டும் இல்லாவிட்டால் தேவையற்ற
    பாரதி போன்றவர்கள் புதுக்கவிதை என்று தமிழை கொச்சை படுத்திவிடுவார்கள்.. நமது திராவிடத்
    திருநாட்டில் எந்தவித மதக்கலவரம் இல்லாமல் அமைதிப்பூங்காவாக இது நாள் வரை திகழ்கிறதா இல்லையா
    அதை கெடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறாரா இந்த பா ரா...
    ஜாக்கிரதை.. விடக்கூடாது.. ஆமாம்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா