Sunday, December 2, 2012

life of pi - வாசிப்பு அனுபவம் திரையில் கிடைத்ததா ?


நாவலாக வந்த கதையை சினிமாவாக எடுக்கும்போது , மிகப்பெரும்பாலானோர் அந்த நாவலை கெடுத்து விடுவார்கள். உதாரணமாக விக்ரம் க்தை குமுதத்தில் வெளி வந்தபோது அது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதை திரைப்படமாக எடுத்த பிரபஞ்ச நாயகன் , ஃபிளாப் படமாக எடுத்து வெளியிட்டு, சுஜாதாவை அப்செட் செய்தார் . இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஆனால் சில படங்கள் , நாவலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும். To kill a mocking bird படம் பார்த்து அசந்து போய்தான் அந்த நாவலையே படித்தேன், அந்த அளவுக்கு நன்றாக எடுத்து இருந்தார்கள்.  zorba the greek  நாவலும் சிறப்பாக படம் எடுக்கப்பட்டு இருந்தது.


Life of pi படம் எப்படி ?

இது ஒரு சிறப்பான படம் என்பதில் சந்தேகம் இல்லை.  நடிகர்கள் , கேமிரா மேன் , இசை அமைப்பாளர் என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தனர்.

வழக்கமான மசாலாவையே பார்த்து அலுத்து போய் இருந்த நமக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இருந்தது.   நம் ஊர் கதைக்களனை , நம்மை விட பல மடங்கு சிறப்பாக படமாக்கிய இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அந்த நாவலை படிக்காமல் , இந்த படத்தை பார்த்தால் , நமக்கு கிடைக்கும் உணர்வுகள் வேறு. ஒரு வித உன்னத உணர்வு கிடைக்கும்.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் ஒரு ரசிகன் படத்தை எப்படி புரிந்து கொள்கிறான் ?

சில விலங்குகளுடனும் குடும்பத்துடனும் பயணிக்கும் கதா நாயகன் பை , அனைவரையும் இழக்கிறான்.  ஒரு புலியும் , இவனும் மட்டுமே பயணிக்க வேண்டிய சூழல் .

காலப்போக்கில் புலியும் , இவனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறார்கள் .....        என தமிழ் படத்தில் முடித்து இருப்பார்கள். ஆனால் , இந்த படம் அப்படி முடியவில்லை. இருவரும் தம் இயல்பை இழக்கவில்லை.

கடைசியில் , கொஞ்சம் கூட “ நன்றி “ இல்லாமல் அந்த புலி சென்று விடுகிறது..

ஒரு அட்வென்சர், சாகச பயணம் , தத்ரூபமான காட்சிகள் என்ற அளவில் படம் நம்மை ஈர்க்கிறது. குழந்தைகள் உட்பட இந்த படத்தை யார் பார்த்தாலும் , மீண்டும் ஒரு முறையாவது இந்த படத்தை பார்ப்பார்கள். அதுவே இந்த படத்தின்  வெற்றிக்கு காரணம்.


ஆனால்  , நாவலை படித்தால் நமக்கு தோன்றும் உணர்வுகள் வேறு. இந்த படத்தில் புலி , மீன்கள் , விலங்குகள் நம் கவனத்தை ( தொழில் நுட்ப உதவியுடன் ) கவர்ந்து , வேறு எதையும் கவனிக்க விடாமல் செய்கின்றன. ஆனால் ,  நாவலாக படிக்கும்போது , தொழில் நுட்ப உதவி இல்லாமல் , முழுக்க முழுக்க நம் மனதில் கதை நிகழ்கிறது.


அப்போது வேறொரு பரிமாணம் கிடைக்கிறது.  நாவலில் இந்த கதை “ நிகழ்வதில்லை” . கதை    “ சொல்லப்படுகிறது “  .   படத்திலும் இதை முயன்று இருந்தாலும் , இது “ நிகழ்கிறது “ என்ற உணர்வை தடுக்க முடியவில்லை.

       நாவலின் இறுதியில் , இந்த புலிக்கதை எல்லாம் குறியீடுதான் என்ற எண்ணம் தோன்றும் . தன்னால் செய்ய முடியாத வீர தீர செயல்களை , கற்பனையில் நிகழ்த்தி பார்ப்பது போல , தன்னைத்தான் கதா நாயகன் புலியாக உருவகப்படுத்தி சொல்லி இருக்கிறான் என்பது போல தோன்றும்.

 அதிகாரிகள் நம்பாததால் , அவர்களிடன் இன்னொரு கதை சொன்னேன் என்று சொல்வது , படத்தில் தேவையற்ற காட்சி போல இருக்கிறது.  பாவம்பா.. அவர்கள் உண்மையை நம்பவில்லை , எனவே கஷ்டப்பட்டு எதையோ சொல்லி சமாளிக்கிறான் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவுக்கு புலி கதையுடன்  ஈர்க்கப்பட்டு விடுகிறோம்.

ஆனால்  நாவலில் ,  அந்த அதிகாரிகளிடம் சொல்லும் கதை மனதை ஸ்தம்பிக்க செய்து , அதே புலி கதையை வேறொரு விதத்தில் புரிந்து வைக்கிறது.

எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் , எல்லோரும் நல்லவர்கள்தான் . ஆனால் சர்வைவல் போன்ற முக்கியமான நிகழ்வுகளில்தான் , மனிதனின் கீழ்மை வெளிப்படும் . சில சமயங்களில் , ஹீரோயிசமும் வெளிப்படலாம். அந்த சம்பவம் முடிந்து பிறகு யோசித்து பார்த்தால் , இதை எல்லாம் நாம்தான் செய்தோமோ என்ற எண்ணம் ஏற்படலாம் .

  கதா நாயகன் பொய் கதை சொல்லவில்லை.  உருவகமாக மாற்றி, உண்மையை சொல்கிறான் .காரணம் அவன் பொய்யன் அல்லன்.  அந்த உண்மையை சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை என்பதே காரண்ம்.

உண்மையை கடவுளாக உருவகித்தால் , அந்த உண்மையை நாமேதான் தேடி அடைய வேண்டும் என்ற எண்ணமே நாவலை முடித்தவுடன் தோன்றும்.

படத்தில் முடிந்த அளவுக்கு நாவலுக்கு உண்மையாக இருந்து இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு சராசரி ரசிகன் இதை ஒரு சாகச படமாகவே பார்க்க முடிகிறது என்பதையும் மறுக்க முடியாது..


வெர்டிக்ட் :   life of pi -  Giving life to Novel  - don't miss it 
 



3 comments:


  1. And so it goes with God
    The Life Of Pi படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனாலும் நாவல் வாசிப்பு அற்ப்புதமான அனுபவத்தை தந்தது. நாவலின் முதலில் பையின் ஆன்மிக தேடல் சொல்லப்படும், அவன் ஒரே நேரத்தில் கிறுஸ்துவனாகவும், இந்துவாகவும், முஸ்லிமாகவும் வாழ ஆசைப்படுவான், அந்த மதங்களின் கதைகளை பற்றி வியப்பும் ஆச்சரியமும் அவனுக்குள் இருக்கும். இந்த கதைகள் எல்லாம் எதற்க்கு எது உண்மை? எது பொய்? இவற்றின் தேவை என்ன? போன்ற கேள்விகளுக்கு அவனுக்கு விடை தெரியவருகிறது நாவலின் முடிவில். 227 நாட்கள் கடலில் இருந்ததை இரு கதைகளாக சொல்லுவான் ”பை”. ஒரு கதை மிருகங்களை வைத்து மற்றொன்று மிருகங்கள் இல்லாமலும் சொல்லுவான். முதல் கதையில் ஒரு ஓரங்குட்டன், வரிக்குதிரை, கழுதைபுலி, ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி மற்றும் பை. அடுத்த கதையில் அவன், அவனோட அம்மா, கண் தெரியாத ஒரு பிரஞ்ச்காரன், ஒரு சமையல்காரன், ஒரு தைவான் மாலுமி. முதல் கதையில் ஓரங்குட்டனையும் , வரிகுதிரையையும் கழுதை புலி சாப்பிடும், கழுதை புலியை ரிச்சர்ட் பார்க்கர் என்னும் புலி சாப்பிடும். அடுத்த கதையிலும் அப்படியே சக மனிதர்
    களை கொன்று சாப்பிடுவாரகள். முதல் கதை புலிதான் இரண்டாம் கதையில் பை.இந்த இரு கதைகளையும் சொல்லிவிட்டு அவனுக்கும் இன்சூரன்ஸ் அதிகாரிகளோடு நடக்கும் உரையாடல்தான் அந்த நாவல்லின் கரு.
    இதுதான் அந்த உரையாடல்
    “You can’t prove which story is true and which is not. You must take my word for it.”
    “I guess so.”
    “In both stories the ship sinks, my entire family dies, and I suffer.”
    “Yes, that’s true.”
    So tell me, since it makes no factual difference to you and you can’t prove the question
    either way, which story do you prefer? Which is the better story, the story with animals or the story without animals?”
    Mr. Okamoto: “That’s an interesting question…”
    Mr. Chiba: “The story with animals.”
    Mr. Okamoto: [translation] “Yes. [/translation] The story with animals is the better story.”
    Pi Patel: “Thank you. And so it goes with God.”
    "Religion is the hope of the hopeless என காரல் மார்க்ஸ் சொன்ன வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது. கடவுளும் மதங்களும் நமக்கு தரும் Belief, Hope, Courage, Love வின் குறியுடுதான் புலி என நான் நினைக்கிறேன். மனிதனின் இறுத்தலின் முக்கியமான அம்சமான Belief / Hope / Courage and Love க்கு இடம் கொடுக்காத அறிவியல் முறை சிந்தனையை, முற்ப்போக்கு / நாத்திக வாழ்க்கை முறையை மறு பரிசிலனை செய்யும் பின் நவினத்துவ சிந்தனை முயற்ச்சி இந்த நாவல்.
    இந்த கதை மேஜிக்கல் ரியலிசம் எனும் முறையில் எழுதப்பட்டது அதாவது சாதாரன மனிதர்கள் அசாதாரன வாழ்க்கை அல்லது புலன்களுக்கு அப்பாற்ப்பட்ட சூழலோடு வாழ்வது போல அதே சமையம் எதார்த்தமாகவும் எழுதுவது. இது இதிகாச கதை சொல்லுதல் மாதிரி இருந்தாலும் சற்று மாறுதல் உடையது
    ஒரு கப்பலின் லைஃப் போட் (Life boat) இவ்வளவு அழகாகவா இருக்கும் - ஃபோட்டாவில் அப்படிதான் இருக்கு? - இதிலும் இயக்குனர் ஏதோ சொல்கிறார் நன்பா.

    ReplyDelete

  2. நிர்மல் , சரியாக சொன்னீங்க. அதிகாரிகளுடன் நடக்கும் உரையாடல்தான் நாவலின் ஜீவனாக இருந்தது. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் , புலியும் ஜீவனாக இருக்கிறது.. நாவலின் குறியீடுகளை இயக்குனர் படத்தில் கொண்டு வரப்பார்த்து இருக்கிறார். ஆனால் ஒரு சராசரி ரசிகனால் அதை உணர முடியவில்லை.. அப்படி உணராவிட்டாலும் , படத்தை ரசிக்க முடிகிறது என்பதே படத்தின் வெற்றி..

    புலி , வரிக்குதிரை போன்றவை எதன் குறியீடுகள் என்ற யோசிக்கும் அவகாசம் இல்லாமல் , அதை “ அப்படியே “ நம்பும் வகையில் , அந்த சம்பவங்கள் மனதை ஈர்த்து விடுகின்றன

    ReplyDelete
  3. To be frank... After seeing the you tube link of Charu's review, I give up seeing this movie such a crap review... I know u r a die hard fan of his writings/ speaking/living. But, be yourself rather copying or hailing someone blindly... Idulla kamal copy adikiraram.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா