விஸ்வரூபம் படம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தேவை அற்றது என கமல் சொல்லி இருந்தார். அந்த படத்தை பார்த்ததும் , அவர்கள் அச்சம் நீங்கி விடும் என்றும் , கமலை பாராட்டி பிரியாணி விருந்து அளிப்பார்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இஸ்லாமிய தலைவர்களுக்கு தன் படத்தை கமல் திரையிட்டு காட்டினாராம். பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் தவ்ஹீத் ஜமாத் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது..
விரிவான அறிக்கையை கீழே காணலாம்.
அவர்கள் உணர்வு புரிகிறது...
ஆனால் அவர்களுக்கு நடு நிலையாளர்கள் ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறார்கள்...
கமல் செய்வதை வைத்து , ஒட்டு மொத்தமாக மாற்று மத சகோதரர்களை சந்தேகிக்க கூடாது.. புத்தக கண்காட்சியில் பார்த்து இருக்கலாம்.. இஸ்லாமிய புத்தக கடைகளில் , இஸ்லாமியர்களைவிட மாற்று மதத்தினர்தான் அதிகம் புத்தகங்கள் வாங்கினார்கள்..
எனவே விஸ்வரூபம் பிரச்சினையை நிதானமாக கையாண்டு வெற்றி பெற வேண்டுமே தவிர , மத பிரச்சினையாக மாற்றி விடக்கூடாது..
**************************************************************************************************************************
விஸ்வரூபம் வெளியிட அனுமதிக்க மாட்டோம்- தவ்ஹீத் ஜமாத் ஆவேசம்
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா,பிச்சைகாரனை Hit அடிச்சி கொல்லுங்கடா
ReplyDeleteஎஸ்... சரியா சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteபொதுவாகவே இஸ்லாமிய அமைப்புகள் ஒட்டு மொத்தமா யாரையும் குற்றம் சுமத்த மாட்டார்கள்.. பிரச்சனைக்குரியவர்களை மட்டுமே சாடுவார்கள்..
இதிலும் அவ்வாறே நடக்கும் நண்பரே... மீறி யாரும் ஒட்டு மொத்த சமூகத்தை தாக்கினால் முதல் எதிர்ப்பு எங்களிடம் இருந்தே கிளம்பும்...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆனந்த்,
ReplyDelete//எனவே விஸ்வரூபம் பிரச்சினையை நிதானமாக கையாண்டு வெற்றி பெற வேண்டுமே தவிர , மத பிரச்சினையாக மாற்றி விடக்கூடாது.//
இதுவரை அப்படி செய்தததில்லை. இனியும் அப்படி செய்ய மாட்டோம் சகோ. குற்றம் எங்கு நடைபெற்றுள்ளதோ அங்கு மட்டுமே நம்முடைய எதிர்ப்பு இருக்கும். இதற்க்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சொல்ல மாட்டோம். அந்த பாதிப்பை நாங்கள் போதுமானவரை அனுபவித்துவிட்டோம்.
நன்றி
dear brother anand,
ReplyDeletewe oppose only such 'anti-social elements' like 'unnai pol oruvan', 'thuppaakki', 'visvaroopam'... and not even Kamalhasan or vijay. hope you got our point.
ஆமா ராசா௧்௧ளா வாங்௧ நாள௧்கு சாமியார தப்பா கான்பிச்கு இந்து மத்த்த கே வ்ல படுத்திடாங்கனு ஒரு கூட்டம் கெ ளம்பும் நாட்ட ரணகளம் ஆக்குங்க
ReplyDeleteவிஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் -
ReplyDeleteமுஸ்லிம் தலைவர்கள் 30 பேர் போர்க்கொடி
Posted by: Shankar
சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில்,
"நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம்.
அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.
ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன.
மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.
இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும்.
ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.
வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும்.
போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம்.
அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.
உயிரைக் கொடுத்தாவது... படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம்.
இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/muslim-leaders-urged-ban-viswaroopam-168418.html
விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் :
ReplyDeleteமுஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
Tuesday, 22 January 2013 20:49 administrator
E-mail Print PDF
நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.
‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.
இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
SOURCE: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2973:2013-01-22-15-21-34&catid=58:2009-10-11-12-42-41
விஸ்வரூபம் அல்ல இது விஷரூபம்
ReplyDeleteவிஸ்வரூபம் திரைப்படம் குறித்து பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு அளித்த பேட்டி (வீடியோ)
Wednesday, 23 January 2013 12:59
இந்தப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை இப்படம் சீர்குலைக்கும் தன்மையுள்ளது என முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன.
இந்தப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவை இன்று செவ்வாய்க்கிழமை மனு ஒன்றைத் தந்துள்ளன.
முன்னதாக இந்தப் படத்தை கமலஹாசன் வீட்டில் பார்த்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களில் ஒருவரான, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா படத்தின் பல காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருக்கிறது என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் தமிழகத்தின் கோவையில் ஒரு ஆண்டு இருந்ததகாவும்,
12 வயதேயான முஸ்லிம் சிறுவன் ஆயுதங்கள் குறித்த அறிவு கொண்டுள்ளதாக காட்டப்பட்டதாகவும்,
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரார்த்தனை செய்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
கலைஞர்களுக்கு ஒரு கலைப் படைப்பை உருவாக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று வாதிடும் ஜவாஹிருல்லா சமூகப் பொறுப்பின்றி இப்படம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுட்டியை சொடுக்கி >>>> பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் BBC க்கு விஷ (ஸ்வ) ரூபம் திரைப்படம் அளித்த பேட்டி விடியோ காணுங்கள்.
source: http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2975:------bbc----&catid=72:tmmk-videos&Itemid=168
i can feel the pain of aashiq,
ReplyDeletefor 'THEM' all is ONE WAY only... it seems..
ReplyDeleteno pluralism allowed..
now you got my point
மு.செ.மு. நெய்னா முஹம்மது
ReplyDeleteJanuary 23, 2013 at 6:39 PM
(Source Adiraixpress)
நடிகர் கமலுக்கு தேவையில்லாத வேலை இது. நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில் தினம், தினம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து சங்கடப்பட்டு வருகிறோம்.
உதாரணத்திற்கு பருவ மழை பொய்த்துப்போனதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.
4 வயது சிறுமி முதல் 65 வயது கிழவி வரை ஆளாகும் பாலியல் பலாத்காரங்கள்.
அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் ஆதாரமாய் விளங்கும் காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுப்பிரச்சினை.
டீசல், பெட்ரோல், வீட்டு சமையல் எரிவாயுவின் மாதாந்திர விலை ஏற்றம்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நுழைவால் நம்நாட்டு சிறு,குறு வணிகர்களின் வேதனையும், வருத்தங்களும்.
நாட்டில் அண்மையில் ஆங்காங்கே நடந்த குண்டு வெடிப்பில் மதவாத சக்திகளின் அம்பலப்படுத்தப்பட்ட சதிச்செயல்கள்.
பெட்டிக்கடைகளை விட பெருகி வரும் அரசு (டாஸ்மாக்)மதுக்கடைகளால் நடக்கும் அன்றாட குற்றங்கள்.
அன்றாட வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றால் வீடு வந்து சேர்வோமோ? இல்லையோ? என இலங்கை கடற்படையின் அன்றாடம் அரங்கேறும் அட்டூழியங்களால் நிச்சயமற்றுப்போன நம் தமிழக மீனவர்களின் பரிதாப நிலை.
பொறுப்பற்ற அரசு எந்திரங்களால்/அதிகாரிகளால் அன்றாடம் அரங்கேறும் ஊழல், லஞ்ச லாவண்யம், அலட்சிய அதிகாரம் என வறுத்தெடுக்கப்படும் நாட்டு மக்கள்.
சாதித்தீயால் தென்மாவட்டங்களில் கருகி வரும் மனித நேயம். என இப்படி எவ்வளவோ அத்தியாவசிய பிரச்சினைகள் நம் தலைக்கு மேல் வெள்ளமென அன்றாடம் ஓடிக்கொண்டிருக்க உனக்கு ஏன்னய்யா இந்த வேண்டாத வேலை?
உன் மருமகன் மணி ரத்னம் போல் இப்படி ஒரு சிறுபாண்மை சமூகத்தை வேதனைப்படுத்தி அதில் எப்படித்தான் உனக்கு நாலு, காசு பணம் சம்பாதிக்க மனம் வருகிறதோ?
படத்தில் ஃபேக்ட்டைத்தானே சொல்கிறேன் என நீ விதண்டாவாதம் செய்தால் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளெல்லாம் என்ன பக்கத்து பாக்கிஸ்தானின் பிரச்சினைகளா?
இப்படி ஓரிறையை மட்டும் வணங்கி தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும் சமுதாயத்தின் மார்க்க அறிஞர்களைக்கூட தெருவுக்கு வந்து போராட வைத்து சங்கடப்படுத்துவதில் என்ன தான் உனக்கு சந்தோசமோ?
பரபரப்பாய் பேசப்படும் மக்களாலும், உற்சாகப்படுத்தும் ஊடகங்களாலும் கோடிகள் பல உன் காலடியில் வந்து விழும் என்ற மனிதநேயமற்ற உன் கொள்கையில் நீ பிடிவாதமாக இருந்தால் உனக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விருப்பம் "இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமாவை பற்றியோ அல்லது இஸ்ரேலின் உண்மை வரலாறு பற்றியோ உலகமே விமர்சித்து வியக்கும் வண்ணம் படம் எடுத்து பில்லியன் டாலர்கள் பார்க்க உமக்கு துணிவேதும் உண்டோ?
இதற்கு பரிகாரமாக அடுத்த படத்தில் முஸ்லிம் பெயரிட்டு நீ நடித்து விடுவதால் அநியாயமாய் வாங்கிய அடிகளும், அதனால் வரும் தளும்புகளும் வலியின்றி எளிதில் மறைந்து போகாது. சாபமிட்டே அது மரணிக்கும்.
Flazh News :
ReplyDeletehttp://dinamani.com/latest_news/article1432742.ece
'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'
By dn, சென்னை
First Published : 23 January 2013 08:39 PM IST
கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மனநோயாளி எங்கே எனது பின்னூட்டம் ?
ReplyDeleteமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
ReplyDeleteஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"
போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.
உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.
இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை.
தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள்.
ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)
இப்போது விசயத்துக்கு வருவோம்.
விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?
இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.
அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.
சொடுக்கி படிக்கவும் >>>>>
முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?