Pages

Wednesday, June 5, 2013

குட்டிப்புலி - சினிமாவில் சாதீய அடையாளங்கள் தவறா?


குட்டிப்புலி படம் பார்த்தேன். என்னை அந்த படம் பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை.
ஆனால் பலருக்கு ( வலைப்பூ எழுதாதவர்களுக்கு )  படம் பிடித்து இருப்பதை உணர முடிந்தது.

இந்த படத்தின் கதை அம்சம் குறித்த பொதுவான விமர்சனங்களில் , எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் சிலர் இந்த படத்தின் சாதி அடையாளங்களை விமர்சிப்பதுதான் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

இதற்கு முன்பு தேவர் மகன், சின்ன கவுண்டர் என பல படங்கள் வெளிவந்துள்ளன. இப்போதும் வந்து கொண்டு இருக்கின்றன,

இதில் சசிகுமாரை மட்டும் சாதி வெறியர் , திரையுலக ராமதாஸ் என ஏன் பழிக்கிறார்கள் என தெரியவில்லை.

சமீபத்தில் ட்ஜான்கோ அன்செயிண்ட் என ஒரு படம் வெளிவந்தது. அதில் எல்லாம் இன அடையாளங்களை வெளிப்படையாக காட்டித்தான் எடுத்து இருக்கிறார்கள்.

இதற்காக அங்கு யாரும் சண்டைக்கு வரவில்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு செய்வது போல எடுப்பது தவறுதான், அவதூறு செய்யும் நோக்கத்துடன் பொய்யான தகவல் கொடுப்பதும் தவறுதான்.

ஆனால் சில பகுதிகளில் மக்கள் ஜாதீய அடையாளங்களுடன் வாழ்கிறார்கள் என்பதை பதிவு செய்வது எப்படி தவறாகும் என்பது தெரியவில்லை.

இந்த படத்தின் அதீதப் வன்முறை காட்சிகள், பழங்கால காதல் பாணி போன்றவை எரிச்சலூட்டுகின்றன என்பது வேறு விஷ்யம்.

யாருக்கும் எந்த அடையாளமும் இல்லாமல் , பணக்காரன் என்றால் வில்லன் ஏழைக் கதானாயகன் என்ற பழைய பாணி படங்கள் போலவோ , அல்லது வேறு கிரக மனிதர்களால் பாதிப்பு போன்ற அமெரிக்க படஙகள் போலவோ எடுப்பதுதான் எல்லோருக்கும் நல்லது என தோன்றுகிறது.

2 comments:

  1. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24049:2013-06-04-06-43-20&catid=11:cinema-review&Itemid=129

    ReplyDelete
  2. http://tamilmottu.blogspot.com/2012/10/blog-post_4.html படிச்சு பாருங்க ...காட்சி என்று தளத்தை அறீவீர்கள் என்று நம்புகிறேன் அதையும் படிக்கவும் கமலுக்கு கடிதம் என்றிருக்கும்...படித்து பாருங்கள் அனுபவப்பட்டவன் அறிவான் அந்த சாதி வலிகளை ...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]