Tuesday, August 27, 2013

அகப்பாடு-2 அமலா பாலும் , அக தரிசனமும்

  அமலா பால் படத்தை பார்த்து ,  தினம்தோறும் என்று சொல்ல முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது , அல்லது மாதம் இருமுறையாவது , அல்லது எப்போதெல்லாம் மூடு வருகிறதோ அப்போதெல்லாம்  , ஆசைதீர ரசிப்பது என் வழக்கம். எனக்கு அருமை மூலம் உள்ளொளி கிடைக்க அமலா பால் காரணமாவார் என நான் நினைத்ததே இல்லை.

ஒரு நாள் என் அறைக்கு வந்த நண்பன் அருமை , பால் தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னது அதிர்ச்சி அளித்தது.  அவனை ஏன் வர சொன்னேன் என இங்கே சொல்லியாக வேண்டும்.

தீபாவளிக்கு என்னை வர சொல்லி ரொம்ப நாட்களாகவே கேட்டு கொண்டு இருந்தான். ஏமான் , எங்க வீட்டுக்கெல்லாம் வர மாட்டீங்களா  என சோகத்துடன் அவன் கேட்பதை பார்த்தால் பாவமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன்.அதற்கு காரணம் நல்லெண்ணம் மட்டும் அல்ல. மாசக்கடைசி... கையில் காசு இல்லை. எனவே எங்காவது விருந்துக்கு போனால் ரெண்டு நாள் சாப்பாடு மிச்சம் ஆகுமே என்பதுதான் முக்கிய காரணம்.

பக்கத்தில்தான் வீடு. அவன் பைக்கிலேயே சென்றோம். பெட்ரோல் அவன் செலவு என்பதை சொல்ல தேவையில்லை.

மிகவும் வசதி குறைவான வீடு.. ஆனால் நான் இருக்கும் பிளாட்ப்பாரத்தை விட நன்றாகத்தான் இருந்தது. மதிய வேளை. பசித்தது.

என் முகத்தை பார்த்தே நான் ஆச்சார சீலன் என்பதை அவன் அம்மா புரிந்து கொண்டு விட்டார்.

“ நாங்க தினமும் நான் வெஜ்தான் சாப்பிடுவது...உங்களுக்கு எப்படி ? “ என்றார்.

பதறிவிட்டேன்.

” நாங்க எல்லாம் சுத்த ஆச்சாரம்...ஆம்லெட் சாப்பிடுவது என்றாலும், வெங்காயம் சேர்க்க மாட்டேன். அந்த அளவுக்கு ஆச்சாரம். ரத்த பொறியல் , குடல், கிட்னி, மீன் வறுவல் என என்ன வேண்டுமானாலும் சமையுங்கள்..ஆனால் வெங்காயம் வேண்டாம். ஆச்சாரம், அனுஷ்டானம் முக்கியம் “ என்றேன்.

என் ஆச்சாரத்தை பார்த்து வியந்து போனார்கள்.

தீபாவளி ஒரு நாள்தான்  என்றாலும், மூன்று நாள் தங்கி மூன்று வேளையும் சாப்பிட்டு அவர்களே கெஞ்சி கேட்ட பின் தான் வீட்டை விட்டு கிளம்பினேன்.

அப்படி சாப்பாடு போட்ட அவனுக்கு ஒரு நாளாவது ஒரு ட்ரீட் கொடுக்கலாம் என்றுதான் அறைக்கு வர சொன்னேன்.

வந்தவன் அறையெங்கும் ஒட்டப்பட்டு இருந்த அமலா பால் படங்களை பார்த்து கொண்டு இருந்தான்.
“ என்னடா ,அப்படி பார்க்குற...டீ ஏதாவது சாப்பிட்றியா ?” என்றேன் அவன் அதை மறுப்பான் என்ற நம்பிக்கையில்.

“ எனக்கு பால் பிடிக்காதுடா “ என்றான்.

திடுக்கிட்டேன். அமலா பாலை பிடிக்காதவன் ஒருவன் இருக்க முடியும் என்பதே ஒரு பெரிய அக விழிப்பை ஏற்படுத்தியது போல இருந்தது.

” ஏண்டா “ என்றேன் பரிதாபமாக.

பாலு மாட்டுக்க சலமாக்கும்’ என்றான். 
” அப்படீனா ?” விழித்தேன்.
அவன் அமலா பாலை சொல்லவில்லை.. பசும்பாலை சொல்கிறான் என்பது புரிந்தது... ஆனால் முழுமையாக புரியவில்லை.
‘பாலு பசுவுக்க கண்ணீராக்கும்’ என்று விளக்கினான்
அவன் விளக்கம் இன்னும் குழப்பியது.
”என்னதாண்டா சொல்ற .” என்றேன் .
’ பாலைக்குடிச்சா மலங்கூளியம்மையும் குளிகன்சாமியும் சபிச்சுப்போடும்’

வெட்கம் பார்க்காமல் அவன் காலிலேயே விழுந்து விட்டேன்.

“ டேய் ..சொல்றதை தமிழில் சொல்றா... “ என்றேன்.

அவன் மனம் இரங்கி தமிழில் சொன்னான்

“ நாம் பால் குடிப்பதாக நினைக்கிறோம்..உண்மையில் நாம் குடிப்பது  சிறு நீரைத்தான்”  என்றான் .

வாந்தி வருவது போல இருந்தது..

” என்னடா சொல்றா “ அதிர்ச்சியுடன் கேட்டேன்.

அங்கே பார் என காட்டினான்.,

மொண்டி என்ற நாட்டு பசு மேய்ந்து கொண்டு இருந்தது.அதன் பாலைத்தான் நான் வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.

“ அதில் என்னடா இருக்கு ?” என்றேன்.

“ அது என்ன தின்னுது பார்...கண்ட குப்பைகள்.. புல்..அந்த புல்லில்தானே நாம் ஒண்ணுக்கு அடிக்கிறோம்..அதை எப்படி தின்னுது பார். உவ்வே...இது கொடுக்கும் பாலைத்தான் நாம் குடிக்கிறோம் “ என்றான்.

எனக்கு அக தரிசனம் கிடைத்தது போல இருந்தது.

இத்தனை நாள் பசு பால் கொடுக்கும் என்பதை தெரிந்து வைத்து இருந்தேன்..அது என்ன சாப்பிடும் என்பது தெரியாமல் போயிற்றே.

மிகவும் துக்கமாக இருந்தது.

சட் என முடிவு எடுத்து , அந்த மொண்டியை இழுத்து வந்து என் அறையின் முன் புறம் கட்டினேன்..இரும்பு வேலியை பூட்டினேன்.

” அருமை...இன்னிக்கு ஃபுல்லா இதை இங்கே அடைச்சு வச்சு , முழுக்க முழுக்க பால் பொருட்க்ளை மட்டுமே இதுக்கு கொடுக்கப்போறேன். நாளை காலை இது கொடுக்கும் பால் , உண்மையான பால்..அதில் உனக்கு காஃபி போட்டு தந்தால்தான் என் மனம் ஆறும் “ உணர்ச்சிகரமாக பேசியை என்னை பார்த்து அருமை ஆனந்த கண்ணீர் விட்டான்.

வெண்ணெய். நெய், பால் என மொண்டிக்கு கொடுத்தேன்..அதனால் சாப்பிடமுடியவில்லை. வலுக்கட்டாயமாக ஊட்டினேன். அதன் கண்ணீர் என் மனதை மாற்றவில்லை. இனி குப்பையை தின்று அது தரும் பால் எனக்கு தேவையில்லை. அதன் வாயில் புனலை வைத்து பாலை ஊற்றினேன். இரவு முழுக்க அது கண்ணீர் விட்டபடி இருந்தது.


மறுநாள் காலை நான் கண்விழித்ததே அருமை  சொன்ன செய்தியைக் கேட்டுத்தான். பதறியடித்து ஓடியபோதே நான் அழுதுகொண்டிருந்தேன். அறையின் முன்பக்கம் சிமிண்ட் குப்பைத்தொட்டி மீது மிதித்து ஏறி மறுபக்கம் குதிக்கமுயன்ற மொண்டி, இரும்பு வேலிகளில் ஒன்றில் கழுவேறி அமர்ந்திருந்தது.



4 comments:

  1. WHAT YOU ARE COMING TO SAY

    ReplyDelete
  2. உங்களுக்கு உடனடி தேவை நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை

    babu siva

    ReplyDelete
    Replies
    1. இவர் சாருவின் கக்கத்துக்குள் இருப்பவர், இதைவிட எப்படி எழுதுவார்.
      பார்த்தோமா, ஓடிப் போய்விட வேண்டும்.

      Delete
  3. நல்ல கதை
    எதனுடைய மூலத்தை மட்டும்
    பார்த்துக் கொண்டிருந்தால்
    எந்தக் கதையும் ஆகாது
    கறியானாலும் வெங்காயம் சேர்க்காமல்
    சாப்பிடும் ஆசாரம் இருந்தால்தான்
    இந்தக் காலத்தில் வண்டியோட்டமுடியும்
    அவ்ரககெஞ்சிக் கேட்டதும் புறப்பட்ட பொறுமையை
    பெருந்தன்மையை மிகவும் ரசித்தேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா