தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு துவக்க விழா நடந்ததல்லவா...
அதில் பேசிய ராம் தான் மனம் விட்டு பேசப்போவதாகவும் தயவு செய்து யாரும் வீடீயோ எடுத்து , யூ ட்யூபில் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று யாரும் வீடியோ எடுக்கவில்லை.
இந்த ஜெண்ட்டில்மேன் அக்ரீமெண்டை நம்பிய மிஷ்கின் அவரும் கேஷுவலாக பேசினார். ஆனால் அந்த ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட்டை மதிக்காமல் , தமிழ் ஹிந்து அவர் பேச்சை தன் வலைத்தளத்தில் வெளியிட்டு ஊடக அறத்தை மீறியுள்ளது. வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி சின்ன புத்தியை காட்டியுள்ளது தமிழ் ஹிந்து. தமிழ் ஸ்டுடியோ விழா என்பதை குறிப்பிடவில்லை.. அவர் பேசும் மேடை , தமிழ் ஸ்டுடியோ மேடை என்பதை காட்டும் மேடை பின்புலம் எடிட் செய்யப்பட்டுள்ளது..
அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தின் இன்றைய தேவை நன்கு புரிகிறது.
மிஷ்கின் மனம் விட்டு பேசினார், சில கருத்துகள் சொன்னார். அவர் அப்படி என்ன பேசிவிட்டார் ?
பாரதியார் படத்தில் வட இந்தியரை நடிக்க வைத்ததை சார்லி குறை சொன்னது தவறு , கலையை மொழிக்குள் அடைக்க முடியாது. நான் இண்டர்னெட் பக்கம் போவதில்லை. அங்கு போனால் கெட்ட வார்த்தை மட்டும்தான் கற்க முடியும்.
அதிக பட்ச கெட்ட வார்த்தை எனக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. காப்பி அடிக்கிறேன் என்கிறார்கள். நல்ல கலைஞன் காப்பி அடிக்க மாட்டான். கலை ஒருவனை தூங்க விடாது. பாரல்லல் தாட்ஸ் வருவது சகஜம்தான். அந்த கால மாபெரும் காப்பியங்களில்கூட சில ஒத்த விஷ்யங்கள் உண்டு. அதற்காக காப்பி என சொல்ல முடியுமா.
என்னைப்போன்றவர்கள் நல்ல சினிமாவுக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம். அதை திட்டாதீர்கள். என் பாக்கெட்டில் நூறு ரூபாய்கூட இல்லை. பணக்கார வறுமை என்பது மிக கொடிது.
இந்த அரங்கில் குடித்து வந்து திட்டினானே.. அவனுக்கும் சேர்த்துதான் நான் படம் எடுக்க வேண்டும். அவனுக்கும் படம் புரிய வேண்டும். வாளை மீனுக்கும் பாடல்வெற்றி பெற காரணமாக இருந்தது அகிரா குரசோவாவிடம் நான் கற்ற பாடம்தான். படிமத்தின் ஆற்றலை அவரிடம் கற்றேன். அதனால்தான் அந்த விரல் அசைப்பில் தமிழகத்தை ஆடவைக்க முடிந்தது.
மணிரத்னம் தொடர்ந்து ஃபிலாப் படங்களை கொடுக்கிறார். அவரை யாரேனும் விமர்சிக்கிறார்களா.. கலைஞானி என்கிறீர்களே அவர் என்ன பெரிதாக செய்து விட்டார்.
கமல் மேடையில் அவர் மட்டுமே பேச வேண்டும். நான் ஏதோ பேசி விட்டேன் என்பதற்காக லெனின் சார் எனக்கு எஸ் எம் எஸ் செய்தார். முதலில் உன் படத்தை ஒழுங்காக எடுக்கவும் என முகமூடி படம் வந்தபோது சொன்னார். என் தவறுகளை திருத்திக்கொண்டு ஓனாயும் ஆட்டுக்குட்டியும் எடுத்தேன். அவர் பாராட்டி மெசேஜ் அனுப்புவார் என நினைத்தேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. நான் பெரிதும் மதித்த லெனினே இப்படித்தான் இருக்கிறார்.
விமர்சியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஆரோக்கியமாக விமர்சியுங்கள். அருண் என்னை விமர்சித்தபோது , உன் தகுதி என்னவென்று கேட்டேன், சொன்னார். எனக்கு மகிழ்ச்சி . அவருக்கு விமர்சிக்கும் தகுதி இருக்கிறது.
பாடல் இல்லாமல் இன்னும் சினிமா எடுக்க முடியவில்லை.அதை விமர்சித்து மாற்ற முடிகிறதா. ஐந்து பாடல்கள் , பாடலை உருவாக்க சில காட்சிகள் என பாதி நேரம் அதற்கே போய் விடுகிறது. மிச்சம் இருக்கும் கொஞ்ச நேரத்தில் என்ன படம் எடுப்பது.
ஓர் ஆணும் பெண்ணும் பார்க்கிறார்கள் , உடனே பாடல்.. பாடல் எதற்கு ,, பார்த்த பின் என்ன செய்கிறார்கள் என கேளுங்கள்.. பாடலின்போது வாக் அவுட் செய்யுங்கள்.. நிலை சரியாகி விடும்.
ஒரு குழ்ந்தை பிறந்தா ரசியுங்கள்.. குழந்தை ஏன் கறுப்பா இருக்கு இன்னும் கொஞ்சம் சிவப்பா இருந்திருக்கலாமே.. ஏன் முடி இல்லை என்றெல்லாம் கூறாதீர்கள்.
மற்றபடி கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். திட்டுங்கள். ஆனால் புதிதாக திட்டுங்கள்.. அப்போதுதான் ரசிக்க முடியும்..
இப்படி உணர்வுபூர்வமாக பேசினார்..
கடைசியில் பேசிய அருண் , சினிமாவுக்கு வசனம் முக்கியம் என்ற ராமின் கருத்தை மறுத்தார். அழகாக சிரித்தாள். அன்பாக சிரித்தாள் என்ற சொற்களைவிட நம் மனதில் நிற்பது மோனலிசாவின் பிம்பம்தான். நாம் என்னதான் பேசினாலும் நம மனதில் பிம்பமாகவே பதிகிறது. கூடங்குளம் பிரச்சினையில் நான் என்ன செய்தேன் என ராம் கேட்டார். நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். தமிழ் சினிமா என செய்தது ‘
இப்படி பரபரப்பாக விவாதம் நடந்தது

YES mani rathinam has notbeen crticised for continuous failures. had the other directors failed like him he would bo nowhere. it is also true that the present directors ave not appreciated OONAYUM.... film.kamal has confused thoughts in all subjects but pretends that he knows all....
ReplyDelete