Pages

Friday, July 14, 2017

கோழிப் பீ சித்தர் -யார்

 கோழிபி சித்தர்.. பெயர்க்காரணம் கூறுக
------
அந்த சித்தர் ஆலந்தூரில் வாழ்ந்து வந்தார்..ஒரு செல்வந்தரின் குழந்தைக்கு கடும் நோய்.. தீர்த்து வைத்தார்...செல்வந்தர் தங்க காசு  ஒன்றை பரிசளித்தார்.. அடச்சீ.. மலத்தை ஏன் கொணர்ந்தாய் என சீறினார் சித்தர் ... செல்வந்தர் புரியாமல் பார்த்தார்... அங்கே தங்க காசு இல்லை... கோழியின் கழிவு இருந்தது....சிரித்த சித்தர  கோழி கழிவை மீண்டும் தங்கமாக்கினார்...
இதைக் கேள்விப்பட்ட சிலர் கோழி கழிவை கொண்டு வந்து தங்கமாக்குமாறு கேட்டனர்... அவருக்கு பிரமாண்ட ஆலயம் அமைப்பதாக சொன்னார்கள்...
இதை விட மனித மலத்தை தங்கமாக்கவது எளிது என்றார் அவர்... அப்படியா என வியந்தவர்கள் அதை கொண்டு வரட்டுமா என்றனர்.. அதுதான் கொண்டு வந்து இருக்கிறீர்களே... பார்ப்தற்கு அழகாக ஆடை அணிந்து வாசனைகள் பூசி இருந்தாலும் உங்களுக்குள் இருப்பது மலம்தான்....மலமாய் பிறந்து மலமாய் மரிக்காதீர்கள்... தங்கமாக விரும்பினால் வாருங்கள் என்றார்.. பலரை தங்க நிலைக்கு உயர்த்தினார்...பல செல்வந்தர்கள்  தங்களது தங்க சேமிப்புகளை கோழி கழிவாக நினைத்தனர்... அவர்களே தங்கமானார்கள்...
கோழிப் பீ சித்தர் வரலாறு இது..
அவர் சமாதி முன் அமர்ந்து பாருங்கள்.. ஏதாவது மாற்றம் தெரிந்தால் தொடர்ந்து செல்லுங்கள்... இல்லையேல் விட்டு விடுங்கள்

எங்கே இருக்கு ?

கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் மோடி சாலையில் -மன்னிக்கவும். ஜி எஸ். டி சாலையில் - நடந்தால் சில அடித் தொலைவில் ஒரு மெட்ரோல் பங்கக் வரும். அதன் இடது பக்கம் ஒரு  சாலை செல்லும்...அதில் சாய்பாபா கோயில் உள்ளது... அருகே இக்கோயில்