Pages

Friday, April 2, 2010

வெட்கி தலை குனிகிறேன்

என் வறுமையை கிண்டல் செய்த போது
வேதனை பட்டேன்... வெட்கப்படவில்லை...

வேகமாய் நடந்தபோது , செருப்பு அறுந்தது
விரலில் அடிபட்டு வலித்தது... வெட்கப்படவில்லை...

வெகு நாள் கழித்து நண்பன் வந்தான்...
கடன் வாங்கி சமாளித்தேன் .. வெட்கப்படவில்லை...

அந்த வீட்டு ஜன்னல்களில், பல சட்டைகள் தொங்கியதை.
ஏக்கத்துடன் என் மகன் காட்டியபோது அவன் சட்டையை கவனித்தேன்..
அதில்தான் எத்தனை ஜன்னல்கள்,,, வேதனை பட்டேன் வெட்கப்படவில்லை...


என் போன்றோர் பிரச்சினை கண் முன் இருக்கையில்,
கண் முன் இல்லாத கடவுள் பிரச்சினையில்
காலம் கழிப்போரை காணுகையில் வேதனை பட்டேன்..


இந்த நாடு, அவர் போன்றோரைதான்,
அறிவாளிகள் என் போற்றுவதை அறிந்து
வெட்கி தலை குனிந்தேன்...


கடவுள் இருக்கட்டும் ..இல்லாமல் போகட்டும்...
நாங்கள் இருக்கிறோம்,.,எங்கள் பிரச்சினைகள் இருக்கின்றன...

- ஒரு பிச்சைக்காரன்

8 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]