Pages

Wednesday, August 18, 2010

பாலகுமாரன் உடையாரா ?

தமிழில் அவர்தான் இப்போது பெரிய எழுத்தாளர்... இவர்தான் சுஜாதாவின் இடத்தை நிரப்புகிறார் என்றெல்லாம் இலக்கியவாதிகளும் அவர்களது ரசிகர்களும் சச்சரவிடும் நிலையில், ஒருவர்மட்டும்

- இவர்களையெல்லாம் விட அதிகளவு வாசகர்களை கொண்டவர் - ஒதுங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம்.

அவராகவே எழுத்தை குறைத்துக்கொண்டாரே தவிர , அவர் எழுத்தின் வசீகரம் அப்படியே இருக்கிறது...
இலக்கிய அக்கப்போரில் இவர் ஈடுபடுவதும் இல்லை. இலக்கியவாதிகளும் தம் ஆட்டத்தில் இவரை சேர்த்துக்கொள்வதில்லை.

ஒரு காலகட்டத்தில் கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு அவர் மேல் ஈர்ப்பு இருந்தது.

அவர்தான் எழுத்தாளர் திரு பாலகுமாரன் அவர்கள்

இப்போது அவர் எழுத்து தளர்வடைந்து விட்டது போல சிலர் நினைக்கிறார்கள்..


அப்படி எதுவும் நடக்கவில்லை..ஆனாலும் ஏன் அப்படி ஒரு கருத்து பரவியது?

சிலருக்கு எப்போதுமே பாலகுமாரன் எழுத்தை பிடிக்காது.. ஆகவெ அவர்களுக்கு இப்போதும் அவர் எழுத்தை பிடிக்காது... இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. தவறும் எதுவும் இல்லை..

ரசனை ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை.


ஆனால் முன்பு படித்த சிலர் இப்போது படிக்காமல் இருக்க என்ன காரணம் ?

அவர் தீவிரமாக எழுதிய காலத்தில் ரசிகர் மன்றம் வைத்து செயல்படும் அளவுக்கு வேகமாக இருந்த இளைஞர்கள் , இன்று குடும்ப அளவிலும் தமது அலுவலக பணியிலும் மும்முரமாகிவிட்டனர்.

இப்போது அவர் தொடர் எழுதும் பத்திரிக்களை தேடி வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.. ( ஒரு காலத்தில் குப்பை பத்திரிக்கையை கூட அவர் எழுத்துக்காகவே மட்டும் வாங்கும்
நிலை இருந்தது ) முன்பு போல முழு நாவல்கள் , கட்டுரை தொகுப்புகள் வெளியாவதில்லை என்பதால், ஒருவித தொய்வு ..

எனவே அவர் முன் போல எழுதுவதில்லை என பலரும் நினைக்கிறார்கள்.

இன்னொரு விதமானவர்கள் இருக்கிறார்கள்.. மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் போன்றவற்றை படித்தவர்க்ள், அதே போல கதையை அவர் மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

அவர் வேறு ஒரு களத்தை தேர்ந்தெடுத்தால் , ஐயோ இது அது போல இல்லையே ..அவர் தன் இயல்பான நடையை இழந்து விட்டார்களே என்கிறார்கள்..

இந்த நிலையில்தான் , நான் உடையார் நாவலை படிக்க ஆரம்பித்தேன்..

அசந்து விட்டேன்... அவர் படைப்பில் மாஸ்டர் பீஸ் என்றால் அது இதுதான்..

அவரது வேறு எந்த நாவலை படிக்காவிட்டாலும் பரவாயில்லை..இதை அனைவரும் படிக்க வேண்டும்..( உடையார் பற்றி விரிவாக பிறகு எழுதுவேன் )

வரலாற்று கற்பனை கதையாகவோ, அல்லது வரலாற்று தொகுப்பாகவோ இல்லாமல் , ஒரு வித்தியாசமான பாணியை தேர்ந்தெடுத்துள்ளார் பாலகுமாரன்.

மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் முக்கியம்தான்.. குழந்தை பருவம், டீன் ஏஜ், இளமை பருவம், மத்திய வயது, முதுமை என ஒவ்வொன்றுக்கும் ஒரு அழகு உண்டு..

ஆனால் மேலை நாட்டு பதிப்பால், இளமை பருவம் மட்டுமே சிறந்தது என்ற கருத்து இங்கும் பரவுகிறது... சின்னஞ்சிறுவர்களும் வயதுக்கு மீறிய பேச்சுக்கள், செயல்கள் என இருப்பதும் ( ஆனால்

செயற்கௌ ஆபரேழன் மருந்து என்ற அளவுக்கு இன்னும் போகவில்லை ) வயதான பெருசுகளும் இளமை ஆட்டத்தை மீண்டும் அனுபவிக்க நினைப்பதும் , எழுத்தாளர்கலூம் கூட

வயதுக்கு ஏற்ற முதிர்ர்சி இல்லாமல் செயல்படுவதும் நான் அன்றாடம் காணும் ஒன்றுதான்..

வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் எழுதும் , செயல்படும் ஒரே எழுத்தாளர் பாலகுமாரன் என்றுதான் தோன்றுகிறது

அவர் ஓர் உடையார் . அன்பு , அறிவு மற்றும் முதிர்ச்சி உடையார்

11 comments:

 1. உண்மை தான் நண்பரே..!
  ஒரு காலத்தில் அவர் பெயர் போட்ட எதுவும் எனக்கு ஒரு பொக்கிஷமகாதான் தெரிந்தது. இன்றும் கூட
  ஆனால் விழுந்தடித்து வாங்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. பல நாவல்களை நானே அடுத்த தலைமுறைக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்.
  அதையெல்லாம் என் குட்டி தேவதை படிக்கிறேன் பேர்வழி என்று கிழிக்கையில் மனசு வலித்தாலும்
  ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் கிழிப்பதும் ஒரு அழகு தான்.

  ஆனால் அவரின் தரம் எப்போதும் குறையாது.
  He is really a genius writer

  ReplyDelete
 2. வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 3. Once upon a time I was his die hard fan.. Now, lost the interest in his writings.. Then moved to Sujatha, then Osho, then Jeyamohan and S.Ramakrishnan..

  No idea whom I will like tomorrow..

  ReplyDelete
 4. உங்கள் உணர்வு புரிகிறது. பக்குவப்பட்ட மனது . அடுத்த தலைமுறை மேல் உங்கள் அக்கறை பாராட்டதக்கது

  ReplyDelete
 5. Dear கானகம் thanks for sharing your thoughts . It is nice to balakumaran is your starting point and you are expanding your interests . It is healthy . My starting point author is rajeshkumar. Still i like his stories :-)

  ReplyDelete
 6. வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் எழுதும் , செயல்படும் ஒரே எழுத்தாளர் பாலகுமாரன் என்றுதான் தோன்றுகிறது//

  வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 7. நன்றி ராம்ஜி

  ReplyDelete
 8. one of few writers,who brings new dimensions to most of our static thinking.Changes are inevitable both in his writings and readers.Nice blog..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]