Pages

Friday, October 8, 2010

பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இருக்கும் படுகொலை

அதிகார பூர்வமாக அரசே ஒரு கொலை செய்ய போகிறது ..இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு நீதி மன்றம் துணை போய் இருக்கிறது..

தன்னை நம்பி காரில் வந்த பெண்ணை , பாலியல் வன்முறை செய்து , கொலையும் செய்ததாக குற்றம் சாட்டாப்பட்டு வாகன ஓட்டுனர் உயர்திரு. சிவகுமார் அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது பெங்களூர் விரைவு நீதிமன்றம்..

ஒரு உயிரை எடுப்பதற்கு நீதி மன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது.. சொல்வார்களா?

இறந்த ஒருவருக்கு உயிர் கொடுக்கும ஆற்றல் நீதிமன்றத்துக்கு உண்டா?

இப்படி ஒரு காட்டு மிராண்டி தீர்ப்பை கொடுத்த பின், இது போன்ற குடர்கள் நடக்கவே நடக்காது என உறுதி கொடுக்கவாவது முடியுமா?
ஒருவரை கொன்ற சாடிஸ்ட் திருப்தி மட்டும்தான் இதனால் பலன்...

தீர்ப்பை நீதிபதி வாசித்தவுடன் திரு . சிவகுமார் கதறியது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது...
அவர் எந்த அளவு மன வேதனையை அனுபவிப்பார் என சிந்திக்க வேண்டாமா?
அவரது மனைவியும் கண்ணீர் விட்டு கதறினாரே... " என் கவவர் இறந்ததும் நானும் தற்கொலை செய்து கொள்வேன் " என்று சொல்லி இருக்கிறார்.. ஒன்றும் அறியாத ஒரு பெண்ணும் சாவதற்கு யாருக்கு என்ன தண்டனை கொடுப்பது...

தண்டனியால் குற்றம் குறைந்ததாக வரலாறு இல்லை... எனவே சிவகுமாரிடமும் அவர் மனைவியிடமும் , அவர்கள் அடைந்த மன உளைச்சலுக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்..

, உடனடியாக அவர் விடு விக்கப்பட்டு, அரசு வேலையும் , தகுந்த விருதும் வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்...

( இதெல்லாம் என் கருத்து அல்ல... சில அறிவு ஜீவிகள் நாளை சொல்ல போகும் கருத்து )

*******************************************************************

ஐந்து ஆண்டுகள் கடுமையாக போராடி , இந்த நீதியை பெற்றுள்ள, இறந்த பெண்ணின் தாயார் கூறும்போது,
என் மகளுக்கு பதினைந்து வயது ஆகும்போதே என் கணவரை இழந்து விட்டேன். என் முழு அன்பை கொட்டி அவளை வளர்த்து ஆளாக்கினேன்..
என் மகளின் மரணத்துடன் என் மகிழ்ச்சி அனைத்தையும் இழந்து விட்டேன்.. இந்த தீர்ப்பு சிறிய ஆறுதலை தந்துள்ளது..

என் மகள் எனக்கு இருக்கிறாளோ தெரியவில்லை..எங்கு இருந்தாலும் அவள் ஆத்மா அமைதி அடையும் எப நினைக்கிறன் " என வானை நோக்கி கையை உயர்த்தி கண்ணிருடன் கூறினார்

6 comments:

  1. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை தேவை என்பது என் கருத்து

    ReplyDelete
  2. பெண்களுக்கு மட்டும் அல்ல ,கொடூரமான கொலை செய்யும் யாருக்கும் மரண தண்டனை கொடுக்க தயங்க கூடாது என்பது தான் என் கருத்தும். நாட்டில் எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாய் இந்த மரணத்தையும் ஏற்ற்றுக் கொள்வோம்.

    ReplyDelete
  3. அண்ணே கொஞ்சம் தெளிவாக எழுதுங்கள் ...

    ReplyDelete
  4. இத்தகைய குற்றங்களுக்கான தீர்வுதான் என்ன? மரண தண்டனை என்பது அவனுக்கு ஒரு நொடி துன்பம் மட்டுமே. ஆனால், அவனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் தான் காலம் முழுதும் தண்டனை. அதற்கு பதிலாக மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு குற்றம் செய்தவர்களுக்கு என்று தனி சிறைச்சாலை அமைத்து அங்கே அவன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் அளவுக்கு கடும் வேலைகளுடன் சிறைத்தண்டனை கொடுக்கலாமே?

    ReplyDelete
  5. //பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை தேவை என்பது என் கருத்து//

    அதே அதே!

    ReplyDelete
  6. மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், அவர்கள் குடும்பத்தில் இது மாதிரி நடந்தால் என்ன சொல்வார்கள்?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]