Pages

Wednesday, December 8, 2010

உண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா? போரா ?

சமீபத்தில் ஒரு நல்ல புத்தகம் ஒன்று படித்தேன்.
படித்து முடித்ததும்தான் யார் எழுதியது என கவனித்தேன்…’
எழுதியவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணியம் சிவா..
அவர் எழுத்தாளர் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.. ஆச்சர்யமாக இருந்தது…
அந்த புத்தகம் பற்றி பிறகு எழுதுவேன்..
இப்போது நான் சொல்லவந்தது வேறு..



ஓர் ஆட்டோக்காரனுக்குள் ஒரு பாஷா இருப்பது போல , பலருக்குள்ளும் பல திறைமைகள் இருக்கும்..
அந்த திறமை அவருக்கு இருப்பது சிலருக்கு தெரிந்து இருக்கலாம்..சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இப்படி மறைந்து இருக்கும் வைரங்களாக என் பார்வைக்கு பட்ட சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
மற்றவ்ரகளுக்கு முன்பே தெரிந்து இருக்கலாம்..
ஆனால் என் பார்வையில், எனக்கு புதிதாக தெரியவந்த விஷ்யங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள விருப்பம்..
பதிவர் உண்மைதமிழனின்   எழுத்தை பார்த்து அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றுதான் நினைத்து வந்தேன்..
image
இந்த நிலையில் ஒரு நாள் , அவரது புனித போர் என்ற குறும்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததும்தான், அட- அவர் இந்த துறையிலும் இருக்கிறாரா என்பதே எனக்கு தெரிய வந்தது… ஆச்சர்யமாகவும் இருந்தது…
குறும்படங்கள் சில விளையாட்டு போக்கில் இருக்கும், சில காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கும், சில பிரச்சார நெடியில் இருக்கும்..
பெரும்பாலும் ஒரு பொதுதன்மை, ஒரு இலக்கணத்துக்குட்பட்டு இருக்கும்..
அந்த எதிர்பார்ப்பில்தான் இதை பார்க்க ஆரம்பித்தேன்…
என் பார்வையில் எனக்கு இது சற்று வித்தியாசமான படமாக தோன்றியது..
சினிமா என்பது விஷுவல் மீடியா என்பது உண்மைதான்.. ஆனால் இதை மட்டும் பிடித்து கொண்டு, வசனம் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட்டார்கள் பலர்..
பேசிக்கொண்டே இருக்கும் ஒருவன் இருக்க கூடும்.. அல்லது பேச்சை முதன்மையாக கொண்ட ஒரு சூழல் இருக்க கூடும்.. இங்கெல்லாம் வசனம் முக்கியம்தானே..
ஆனால் மந்திரபுன்னகை போன்ற படங்களில் வசனம் அதிகம் என்று சிலர் சொல்கின்றனர்..
அந்த கதாபாத்திரம் அப்படி என்பதை புரிந்து கொள்வதில்லை..
புனித போர் என்ற படத்தில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது வித்தியாசமாக இருந்தது..
அதே சமயம் வெறும் ஆடியோவை கேட்டால் முழு இம்பாக்ட் கிடைக்காது..
அந்த அளவுக்கு காட்சி அமைப்பும் நன்றாக இருந்தது..
முகத்தை காட்டாத யுக்தி , உ.த வுக்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சரியப்பட வைத்தது.. அவரது இந்த பரிமாணம் எனக்கு தெரியாத ஒன்று…
கூல் டிரிங்கை ஒரு கேரகடர் ஆக்கியதும் சூப்பர்…
யாருடன் இந்த புனித போர் என்பதை படத்தில் பாருங்கள்…
குறைகள் இல்லாமல் இல்லை…
அவர் சொல்ல வந்ததை முழுதும் சொல்லவில்லையோ என்ற உணர்வு ஏற்படுகிறது… அவசரத்தில் இருந்தாரோ என்றும் தோன்றுகிறது..
ஆனால் இதெல்லாம் படம் பார்த்த அனுபவத்தை  குலைக்கவில்லை…
நச் என ஒரு சிறுகதை படிப்பது போல இருந்தது…
மொத்ததில் இந்த புனித போர்- போர் அல்ல
நீங்கள் பார்க்க விரும்பினால் , கீழ்கண்ட யூ ட்யூப் இணைப்புகளை க்ளிக் செய்யுங்கள்..
புனிதபோர்-1    புனித போர்-2
நான் யூடூபில் பார்க்கவில்லை…
ஜிபி ஃபைலாக மாற்றி பார்த்தேன்..
எதற்கு சொல்கிறேன் என்றால் , சிலர் சிஸ்டத்தில் யுடூப் ஓப்பன் ஆகாது.. அவர்கள் நான் செய்தது போல செய்யலாம்

4 comments:

  1. ஓகே..பாஸ்..பார்த்துவிட்டு சொல்லுறன்.

    ReplyDelete
  2. ஓகே..பாஸ்..பார்த்துவிட்டு சொல்லுறன்.”

    கண்டிப்பா பாருங்க

    ReplyDelete
  3. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் பார்க்கிறேன்...


    தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]