தனக்காக சிந்திக்காமல் , தான் சார்ந்த மக்களுக்காக சிந்திப்பவனே தலைவன்..
இன்று நாம் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை..
ஒரு காலத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் ஆசர்யம் அளிக்கும் விஷயம்..
தலைவர்களில், நல்ல தலைவர்கள் சுயநல தலைவர்கள் என்று இருவிதம உண்டு...
இன்று நாம் பார்ப்பது சுயநல தலைவர்கள்..இவர்களை விட்டு விடுவோம்..
நல்ல தலைவர்களின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது, வாழ்க்கயை தெரிந்து கொள்வது எல்லோருக்குமே நல்லது..
நாம் இந்தியனாக இருக்கலாம்.. அதற்காக ஓர் அமெரிக்க தலைவனின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள கூடாது என்பது இல்லை...
ஒரு தலைவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொது அவன் சார்ந்த சமுகத்தையும், அவனது சமகால வரல்லாற்றையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த விதத்தில் , அம்பேத்கார் படம் நாம் எல்லாம் பார்க்க வேண்டிய படம்...
ஒரு தொட்டியில் இருக்கிறது .
அதில் எந்த இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் , மொத்த தன்ணீர் குறையும்..
அதே போல சமுகத்தில், ஒரு தரப்பினர் கஷ்டப்பட்டால், ஒட்டு மொத்த சமுகத்த்துக்கும்தான் பாதிப்பு..
எனவேதான் சமுக நீதி என்பது முக்கியமாகிறது...
அப்படி பார்த்தால்., அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர்தான்...
அதெல்லாம் கூட வேண்டாம், ..
அவரை தலைவாராக கூட ஏற்க வேண்டாம்... அவர் வரலாற்றில் ஒரு முக்கியமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது..
அவர் என்னதான் சொன்னார்.. என்னதான் செய்தார் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்று...
அம்பேத்கார் படம் பார்ப்பது அந்த வகையில் அவசியமாகிறது...
எந்த கட்சி சார்போ, இயக்க சார்போ, மத சார்போ, இன சார்போ இல்லாமல் ஒரு பார்வையாளனாக இந்த படத்தை படத்தை பார்க்க , நடுநிலையாளர்களை , இந்த பார்வையாளன் அழைக்கிறேன்...
அருமையாகச்சொல்லியுள்ளீர்கள் சகா.. உண்மையில் அம்பேக்கர் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteஇங்கு பார்ப்பது கொஞ்சம் சிரமம்தான் நல்ல டி.வி.டி வந்தவுடன்தான் பார்க்கலாம். கண்டிப்பாக பார்க்கவேண்டும்.
அம்பேக்கர் இருட்டிற்குள் கிடந்தவர்களின்மேல் அடித்த அறிவு வெளிச்சம்.
பகிர்வுக்கு நன்றி.
”அம்பேக்கர் இருட்டிற்குள் கிடந்தவர்களின்மேல் அடித்த அறிவு வெளிச்சம்.”
ReplyDeleteஉண்மை
நிச்சயம் அனைவரும் பார்த்து நிறைய தகவல்களையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் அறிந்திடவும், நமக்கு ஓரு பாடமாக இப்படம் இருக்கும் என கருதுகிறேன்.
ReplyDeleteபகிர்வுககு நன்றி நண்பரே.,!
அனைவரும் பார்த்து நிறைய தகவல்களையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் அறிந்திடவும், நமக்கு ஓரு பாடமாக இப்படம் இருக்கும் என கருதுகிறேன்"
ReplyDeleteme too
இந்தப் படம் குறித்த உங்களது விமர்சனங்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.
ReplyDeleteநல்ல DVD வரட்டும் பார்த்து விடுகிறேன் :-)
ReplyDeleteஇந்தப் படம் குறித்த உங்களது விமர்சனங்களை எதிர் நோக்கியிருக்கிறேன்"
ReplyDeleteஎப்படி இருக்குமோ என்ற ஆவலில் இருக்கிறேன்
நல்ல தலைவர்களின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது, வாழ்க்கயை தெரிந்து கொள்வது எல்லோருக்குமே நல்லது..
ReplyDelete.... true. well-written.
ஒரு நல்லமனிதரைப்பற்றித்தெரிந்துகொள்ள முடியும்.
ReplyDeleteபடம் பார்க்க விருப்பம் தான்... ஆனால் எனக்கு வரும் செவ்வாய்க்கிழமை முக்கியமான தேர்வு ஒன்று இருக்கிறது... படம் பார்க்கும் இரண்டு மணிநேரத்தில் நான் ஒன்றும் படித்து கிழித்துவிட போவதில்லை... இருப்பினும் ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தால் தேவையில்லாத குற்ற உணர்ச்சி ஏற்படும் (அம்பேத்கரின் மீது பழி விழும் :)) ...
ReplyDeleteநான் முடிந்தால் படத்தை அடுத்த வாரத்தில் அல்லது செவ்வாய்க்கிழமையை தாண்டிய பிறகு பார்த்துவிடுகிறேன்...
@ best wishes for exam
ReplyDeleteThank you chitra madam , நன்றி லட்சுமி அம்மா
ReplyDelete