Pages

Wednesday, March 2, 2011

அரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்கில் தூள் கிளப்பும் சாரு

இன்று காலை பேப்பர் வாங்க சென்று சென்று இருந்தேன்... சிலர் துக்ளக் புத்தகத்தை வைத்து கொண்டு என்னவோ சுவையாக , பரபரப்பாக விவாதிப்பதை பார்க்க முடிந்தது...




என்ன விவாதிக்கிறார்கள் என ஆவல் ஏற்பட்டது..

நானும் ஒரு பிரதி வாங்கினேன்... புரட்டினேன்..



ஒரு பக்கத்தை பார்த்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை...



அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் கட்டுரை தொடர் துக்ளக்கில்...



என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....



ஏன் சிலர் பரபரப்பாக விவாதித்தனர் என்பதை உணர்ந்தேன்..



சாரு பல துறைகளிலும் ஞானம் பெற்றவர் ... அனுபவம் கொண்டவர்... விஷயம் தெரிந்தவர்..



எனவே அவர் எழுத்து எல்லா தரப்பினருக்கும் பயன்படும்...

அந்த வகையில் அவர் துக்ளக்கில் எழுதுவது தமிழ் மொழிக்கு நல்லது...



முதல் கட்டுரையே மிக சிறப்பாக இருந்தது....

அது என்ன கட்டுரை என விரிவாக சொல்ல விரும்பவில்லை.... படித்து தெரிந்து கொள்ளுங்கள்



அவருக்கே உரிய கிண்டல், விஷய ஞானம , அனுபவ பகிர்தல் எல்லாம் இருந்தன...



காதலர் தினத்தை யார் கொண்டாடுகிறார்கள்...என்பதை விவரித்து இருப்பது அழகு என்றால், சில ஆண்டுகளுக்கு முன் காதலர் தினம் கொண்டாடியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை விவரித்து இருப்பது, சார் என்றால் சாருதான் என சொல்ல வைத்தது..





கட்டுரையின் கடைசியில் கொடுக்கும் பஞ்ச்.... வாவ் ...



துக்ளக்கில் எழுத ஒப்புக்கொண்ட சாருவுக்கும், எழுத வாய்ப்பளித்த துக்ளக் ஆசிரியருக்கும் ஒட்டு மொத்த தமிழ் உலகம் சார்பில்  ,என் மனமார்ந்த நன்றி....
 

3 comments:

  1. அப்படியா உடனே போய் பார்க்கிறேன்

    ReplyDelete
  2. // எனவே அவர் எழுத்து எல்லா தரப்பினருக்கும் பயன்படும்...

    அந்த வகையில் அவர் துக்ளக்கில் எழுதுவது தமிழ் மொழிக்கு நல்லது...//


    எல்லாம் சரிதான். மேலே உள்ளது சற்று அதிகமாக இல்லை? இதெல்லாம் வியாபர நுணுக்கம் அன்றி வேறு ஒன்றும் இல்லை. படித்துவிட்டு போகலாம் .

    ReplyDelete
  3. இதுவரை துக்ளக் படித்தது இல்லை

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]