Pages

Saturday, March 26, 2011

கமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்

 குருதிபுனல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் என சிலர் சொல்லி வரும் நிலையில், அந்த படம் குறித்து சினிமா ஞானம் மிகுந்த, நடு நிலையாளான எழுத்தாளர் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா, அந்த படத்திற்கு எழுதிய விமர்சனத்தை படிக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்..



பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக , சாருவின் குருதிபுனல் விமர்சனத்தை வெளியிடுவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது..

புத்தகத்தில் படித்தால்தான் முழு இம்பேக்ட் கிடைக்கும்.. அதற்கு முன் ஓர் அறிமுகத்துக்காக இதை படியுங்கள்...

இதன் அடுத்தபாகம் நாளை வெளிவரும்

*******************************************************

குருதிப்புனல் - அல்ட்டிமேட் ரைட்டர் சாரு விமர்சனம் - பார்ட்1 


குருதிப்புனலின் வில்லன்கள் நக்ஸல்பாரிகள். மக்கள் விடுதலைக்காக போராடுபவர்களை “பொறுக்கிகள்” என்கிறார் கமல்ஹாசன்.. அவர்கள் குழந்தைகளை கொல்பவர்கள் என்கிறார். படத்தின் துவக்கத்திலேயே சிறுவர்கள் பயணம் செய்யும் பேருந்து வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் வேண்டுமென்றே அவர்கள் குழந்தைகள் பேருந்துக்கு குண்டு வைக்கவிலை. போலீஸ் வாகனத்துக்கு வைத்த குண்டுதான் தவறுதலாக குழந்தைகள் பேருந்தை தகர்த்து விடுகிறது என கமல் சமாதானம் சொல்லலாம். இருந்தாலும், மக்கள் விடுதலை என சொல்லி ஆயுதம் ஏந்துபவர்கள் அனைவரும் குழந்தைகளை கூட ஈவு இரக்கமின்றி கொலபவர்கள் என்ற செய்தி படதில் அழுத்தமாக சொல்லப்படுகிறது.
போராளிகளுள் ஒருவன், போலீஸ் அதிகாரையான அப்பாஸின் மகளை - 13வயது சிறுமியை- கற்பழிக்க முயல்கிறான். இதன் மூலம் போராளிகள் என்பவர்கள் கற்பழிப்பவர்கள் என்ற செய்தியையும் மக்களுக்கு சொல்லி விடுகிறார் கமல்.அந்த போராளி அச்சிறுமியை பார்க்கும்போதே அவள் பிருஷ்டத்தைத்தான் பார்க்கிறான் என்பதை சொல்வதற்காக அச்சிறுமியின் பின் பக்கத்தை காமிரா அந்த போராளியின் பார்வையுனூடாக நமக்கும் காட்டுகிறது.
அவன் அச்சிறுமியை கற்பழிக்க முயலும்போது ஆதியின் (கமல்) மனைவி முன்னே வந்து “ அவள் குழந்தை .அவளை விட்டு விடு,என்னை எடுத்து கொள் “ என்று புடவையை அவிழ்த்து போட்டு விட்டு, கற்பு தியாகம் செய்ய முன் வருகிறாள்.
இந்த படத்தை பொறுத்தமட்டில் போராளிகள் மக்கள் விடுதலைக்காக போராட்டம் எதுவும் செய்வதில்லை. கமலின் ஆர்ட் டைரக்டர் போட்ட செட்டுக்குள் அமர்ந்து ஆதி என்ற போலீஸ் அதிகாரியின் நாயை கொல்வது எப்படி என்றும் , ஆதியின் மனைவியையும் குழந்தையையும் கொல்வதாக சொல்லி ஆதியை மிரட்டுவது எப்படி என்றும் மட்டுமே திட்டமிடுகின்றனர். இதன் பொருட்டு ஒரு கமாண்டோ குழுவை ஆதியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்,  அந்த குழுவில் ஒருவன் தான் புடவை அவிழ்ப்பு புரட்சியில் ஈடுபடுகிறான்.
என்ன ஒரு சமூகவியல் ஞானம் ! புரட்சி பற்றிய என்ன ஒரு மதிப்பீடு !
டால்பி ஸ்டீரியோ ஒலிப்பதிவு முறையை அலட்டிக்கொள்ளாமல் அதன் முழு சாத்தியத்தையும் பயன்படுத்தி இருக்கும் இந்த திறமைசாலிகள் , ஓராண்டு தினதந்தியை படித்திருந்தால்கூட போராளிகளைப்பற்றி ஒரு விழுக்காடு ஞானமாவது லபித்திருக்கும்

( தொடரும் )

next :போராளிகளை பொறுக்கி என்பதா? - கமலுக்கு சாரு நிவேதிதா கண்டனம்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]