Pages

Sunday, March 6, 2011

கருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்கமும்

 

குருதிபுனல், கறுப்பு ரோஜா விவாதத்தில் பங்கேற்று கருத்துக்களை எடுத்து வைத்த அனைவருக்கும் நன்றி..

சில விளக்கங்கள் கொடுப்பது என் கடமை…

1 கருத்து சொன்னதில் ஒருவர், கேபிள் அண்ணனை விமர்சித்துள்ளார்.. அப்படி விமர்சிப்பது அவர் உரிமை..

ஆனால் அந்த விமர்சனதை நான் ஏற்கவில்லை… என்னை பொருத்தவரை, கேபிள் மீது அன்பும் , நல்லெண்ணமும் கொண்டவன்.. அதனால்தான தவறை சுட்டி காட்டினேன்…

கேபிள்ஜியின் எழுத்துக்கு நான் ரசிகன்…

2. சிலர் கமலை எனக்கு பிடிக்காது என்பதால் , குருதி புனலை திட்டுகிறேன் என நினைப்பது புரிகிறது..

உண்மை அதுவல்ல…கமலை விரும்பாதவன் நான் மட்டுமல்ல..

அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா உலக படங்கள் அனைததையும் பார்ப்பவர்.. அவரே கமலை திட்டுகிறார் என்றால் என்ன அர்த்தம்?

சென்ற வார தினமணியில், கலாரசிகன் எழுதிய கட்டுரையில், கமல் இன்னும் ஒரு படம் கூட உருப்படியாக எடுகவில்லை என எழுதியிருந்தாரே..

ஆக, நடு நிலையாளர்கள் யாரும்  கமலை ரசிக்கவில்லை ..

3 டி டி எஸ் , டால்பிக்கு வித்தியாசம் தெரியாமல் எழுதி இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்..

நான் சொல்ல வந்தது அதுவல்ல… அதாவது ஒரு புள்ளி விபரம் பற்றி நான் பேசவில்லை.. அந்த விபரம் மூலம் நாம் அடையும் முடிவை பற்றியே என் கவலை….

கருப்பு ரோஜா, குருதி புனல் இரண்டுமே தோல்வி படங்கள்.. எனவே எது முதல் டி டி எஸ் படம் என்றாலும், அல்லது டால்பி படம் என்றாலும் , அவை ஏற்படுதிய விளைவு ஒன்றுதான்..

ஒரு புதிய தொழில் நுட்பத்தில் வரும்  படம் பெரிய வெற்றி பெற்றால் அனைவரும் அதை பயன்படுத்த நினைப்பார்கள்.. ஆனால் இவை இரண்டும் தோல்வி படங்கள்…எனவே இந்த தொழில் நுட்பம் பிரபலமாக இந்த இரண்டு படங்களுமே காரணமாக இருந்திருக்க முடியாது என்பதே உண்மை நிலை….

எனவே இன்று ஒலி அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு கறுப்பு ரோஜாவோ , குருதிபுனலோ காரணம் அல்ல என்பதே தர்க்க பூர்வ முடிவு….

விவாதத்தில் பங்கேற்றவர்கள், விஷ்ய ஞானத்தோடும், தர்க்க ரீதியாகவும் கருத்துக்களை எடுத்து வைத்தனர்,,,

அந்த கருத்துக்கள் அனைவரையும் சென்றடய வேண்டும் என்பதால் அவற்றை இங்கு இணைக்கிறேன்

 

***************************************************************************************  

rajuselvaraju49 said...

kuruthi punal was relesed on 1995,karupu roja came in 1996.so which one is true

 

தம்பி கூர்மதியன் said...

ஏன் பாஸ்.. அசின் உள்ளம் கேட்குமேல முதல்ல நடிச்சாலும் m.kumaran s/o mahalakshmiல பேர் போடும் போது அறிமுகம்னு தானே போட்டாங்க..
அதனால வெளிவந்தது வச்சு சொல்றது ஒண்ணும் தப்பில்ல.. கேபிள் அண்ணனை குறை சொல்றதுக்கு முன்னாடி கமல் மீது இருக்கும் வெறுப்பை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வையுங்கள்..

Gopi Ramamoorthy said...

\\முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் கருப்பு ரீஜாதான்..
டி டி எஸ் என்ற வார்த்தை அந்த படம் மூலம்தான் பிரபலமானது...
பணபிரச்சினையால் அது வெளி வர தாமதமாகவே, கமல் அந்த ஐடியாவை தனது போல காட்டி கொண்டு விட்டார்..
இதுதான் வரலாறு..\\ வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற tag line

சைத்தான் said...

ஏங்க dts -க்கும் டால்பிக்கும் வித்யாசம் தெரியாம சும்மா அடிச்சி விடுறிங்க???

Anonmous said...

அவருக்கு வேற வேலை கிடையாது.. அங்க இங்க இருந்து காபி அடிச்சிட, தப்பு தப்பா தமிழில் டிபே அடிச்சிட்டு போற ஆளு.. ஒரு எழவும் தெரியாது.. இது அவருகிட்ட பழகுன எல்லாருக்கும் தெரியும் சிலர் சொல்லி இருக்காங்க, சிலர் போய ஒயரே'ன்னு விட்டுட்டாங்க.. ரெண்டு புக்கு போட்டா பெரிய ஆளுன்னு நினச்சிக்குறாங்க.. எளவு வாந்தி எடுத்து வச்சிருக்கு எல்லாத்துலயும்.. இதுல எளவெடுத்த அஹம்பாவக்க்.. வேறா.. இவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை "எழவு,வாந்தி" என்று சொல்வதால் பொறாமை என்றோ, வயிற்தேரிச்ச்சல் என்றோ யாரும் தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள்.. பாலகுமாரனோ, சுஜாதாவோ, ஜெயமொஹனோ, கூட நெருங்க முடியாத தூரத்தில் இது இருக்கின்றது.. இதைப்பார்த்து நன்ற எழுத வரும் சிலரும் அகம்பாவக்கினட்ட்ரில் விழுந்து விடாதீர்கள்.. தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்திருப்பவன் புத்திசாலி.. தனக்கு ஒன்றுமே தெரியாத போதும், அது தெரியாமல், தனக்கு எல்லாம் தெரியும் என்று தன்னையே எமாற்றிக்கொண்டிருப்பவம்.. அடி முட்டாள்..

Suthershan said...

@ சைத்தான் : உங்க கமெண்ட் ஐ தூக்கி விட்டுட்டார்..
கேபிள் சங்கர் சொல்லறார் : எவேவனோ என்னை அடிச்சு பெரிய ஆள் ஆகி இருக்கான்.. நீயும் என்னை அடிச்சு பெரிய ஆள் ஆகலாம்னு பார்கிராய்?

Ŝ₤Ω..™ said...

ஐயா.. ஒரு பதிவு எழுதறதுக்கு முன்னாடி, அதுவும் ஒருத்தர் செய்தது தப்புன்னு குத்தம் சொல்லறதுக்கு முன்னாடி, கொஞ்சூண்டு விஷயம் என்னான்னு தெரிஞ்சிக்கோங்க.. DTS வேறு Dolby வேறு.. இந்த லிங்க் பாருங்க..
http://www.timefordvd.com/tutorial/SurroundSound.shtml
“கறுப்பு ரோஜா” முதல் DTS படம்.. “குருதிபுனல்” முதல் Dolby படம்..
நீங்க ஒத்துக்கிட்டாலும் இல்லாவிட்டாலும் கமலின் புகழை உங்களால் ஒன்னும் செய்ய முடியாது..
சாரு நிவேதிதாவை அல்டிமேட் ரைட்டரென நீங்க சொல்லி அவரை நக்கலிடிக்கிறீங்களா இல்ல, உங்க இலக்கிய ஞானமே அவ்வளவு தானா???
@ Anonymous.. ராசா.. யாரு ராசா நீ?? சார் நீங்க தான் சூறப்புலியாச்சே.. யாருன்னு சொல்லிட்டே வரவேண்டியது தானே??? கேபிள் தப்பு தப்பா டைப் அடிப்பாருன்னு சொல்லகூட உங்களால தப்பில்லாம சொல்ல முடியல.. இதெல்லாம் தேவையா??? அவரு எழுதின 2 புக்கை முதல்ல நீங்க படிச்சீங்களா??? பொறாமைக்கு அளவுண்டு பாஸ்...

Jana said...

தங்களுக்கு ஏன் கமலை பிடிப்பதில்லை என்று முழுமையான விபரமான ஒரு பதிவை சீக்கிரம் போடுங்கள் தலை

8 comments:

 1. அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா இளையராஜாவையும் திட்டுகிறார். சமயத்தில் ரஹ்மானையும் வாருகிறார். ஆனால் அவர் இரண்டுபேரையுமே ரசிக்கிறார். இதில் குறைபட ஏதுமில்லை! இப்படியான முரண்பாடுகள் நம் எல்லோரிடமும் இருக்கலாம்!

  கமலை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்! இது இயல்பானதே!ஆனால், உங்களுக்கு சாருவை மிகவும் பிடிக்கும் என்பதால், அவர் வெறுக்கும் எல்லோரையும் நீங்கள் வெறுக்க வேண்டுமென்பதில்லை!

  சாருவின் மிஷ்கின் தொடர்பான பிரச்சினைக்குப் பிறகு, நீங்கள் 'யுத்தம்செய்' படம் பற்றி விமர்சித்தது அப்படியே எனக்குத் தோன்றியது!

  கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்! நான் உங்களைக் குறை கூறவில்லை. 'உலகசினிமா' பார்க்கத் தொடங்கியபினரே சினிமா தொடர்பான மதிப்பீடுகள் மாறியது. நீங்களும் பாருங்கள் பாஸ்!

  ReplyDelete
 2. கமலை விமர்சிப்பதற்கு ஆயிரம மேட்டர்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் "சாரு" கண்ணாடி மூலமாகவே பார்ப்பதுபோல ஒரு தோற்றம் உள்ளது. இது தேவையா என யோசிக்கவும்.

  சாரு ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் தான். ஆனால் தேவையான இடங்களில் மட்டுமே அவரது பேரை பயன்படுத்தலாம் அல்லவா?

  சமீபகாலமாக அவர் பெயர் இல்லாமல் நீங்கள் எதுவுமே எழுதுவது இல்லை போல இருக்கிறது.

  ReplyDelete
 3. சமீபகாலமாக அவர் பெயர் இல்லாமல் நீங்கள் எதுவுமே எழுதுவது இல்லை போல இருக்கிறது."

  மாபெரும் நூலான கொற்றவை குறித்து எழுதி இருக்கிறேனே ...

  ReplyDelete
 4. நீங்களும் பாருங்கள் பாஸ்”

  அன்புக்கு நன்றி..கண்டிப்பாக பார்ப்பேன்

  ReplyDelete
 5. ////நான் சொல்ல வந்தது அதுவல்ல… அதாவது ஒரு புள்ளி விபரம் பற்றி நான் பேசவில்லை.. அந்த விபரம் மூலம் நாம் அடையும் முடிவை பற்றியே என் கவலை….

  கருப்பு ரோஜா, குருதி புனல் இரண்டுமே தோல்வி படங்கள்.. எனவே எது முதல் டி டி எஸ் படம் என்றாலும், அல்லது டால்பி படம் என்றாலும் , அவை ஏற்படுதிய விளைவு ஒன்றுதான்..////

  சூப்பர் சமாலிஃபிகேஷங்கோ.. கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலங்கற கதையா இருக்கு..

  இம்புட்டு பேர் கமெண்ட்ஸயும் போட்ட நீங்க, அந்த பதிவையும் போட்டு இருக்கலாம்..

  “தமிழின் முதல் டி டி எஸ் படம் கருப்பு ரோஜா என்பதே வரலாற்று உண்மை….
  இதோ விபரம்…
  கருப்பு ரோஜா
  Karuppu Roja

  நடிக+நடிகைகள்:-ராம்கி, அமர் சித்திக், யோசிகா, வினிதா, ஸ்ரீகாந்த், கரிகாலன், சார்லி, கவிதாஸ்ரீ, கோகிலா, "மேஜிக்"ராதிகா, ஜானகி, அருள்மணி, பிரபாகர், வீரராகவன், வைத்தி, டி.ராஜன் மற்றும் பலர்.
  இவர்களுடன்:-அலெக்ஸ் (குதிரை)
  இசையமைப்பு:-எம்.எஸ்.வி.ராஜா
  தயாரிப்பு:-திருமதி.இந்துமதி + கே.கருணாமூர்த்தி
  கதை+திரைக்கதை+இணை இசை+பாடல்கள்:-ஆபாவாணன்
  இயக்கம்:-ஜே.பன்னீர்

  Karuppu Roja is a Tamil feature film produced by Ayangaran International]]. It starred Ramki and Vinitha.

  It was the first film in India to use DTS audio.

  பாருங்கள் : http://en.wikipedia.org/wiki/Karuppu_Roja

  இந்த விபரம் கேபிள் அண்ணனுக்கு தெரியாததல்ல…”


  இது நீங்க எழுதினது தான??? ஏன் முன்னுக்கு பின் முறனா பேசறீங்க?? யாரோடு நீங்க இது விஷயமாக தர்க்கம் செய்தீர்கள்???

  பொறாமை உங்களை அழித்துவிடும் பாஸ்.. பார்த்துக்கோங்க..

  ReplyDelete
 6. கர்மமடா சாமி. இதுக்கு முன்னாடி எழுதினதே பெட்டர் போலயிருக்கு.

  ReplyDelete
 7. ///சமீபகாலமாக அவர் பெயர் இல்லாமல் நீங்கள் எதுவுமே எழுதுவது இல்லை போல இருக்கிறது."

  மாபெரும் நூலான கொற்றவை குறித்து எழுதி இருக்கிறேனே ...////


  You mentioned Charu name in that article also right? Please think why you need to mention Charu name in that article of "Kottravai"?

  ReplyDelete
 8. Please think why you need to mention Charu name in that article of "Kottravai"?"

  boss.. I wanted to tell it is difficult to start to read a big size book even if it is written by our favorite author...
  if it is difficult start to read our favorite author, it is much more difficult to start others..that's what i told...

  but if it is good book, once we start we cant stop...

  Even though I mentioned ultimate writer charu's name , I did not say anything bad about kotravai..because I liked it..

  That shows my honesty and i never give false information to readers... I wont defame a good book even though it is not written by ultimate writer...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]