Pages

Wednesday, June 8, 2011

கலைஞர் டீவியை நடத்துவது பேய் பிசாசா? சாரு நிவேதிதா கலக்கல் காமெடி


அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களுக்கு சில பொது தன்மைகள் உண்டு.. சமரசமற்ற பார்வை, புதிய விஷயங்கள் அறிமுகம் , சரளமான நடை , மொழி ஆளுமை போன்றவை அவரது எல்லா எழுத்துக்களிலும் இருக்கும் . இதைத்தவிர , சொல்லும் விஷ்யத்தை பொறுத்து கடுமை, ஆக்ரோஷம் , காதல் போன்றவை இருக்கும்.
இன்று காலை நான் படித்த அவ்ரது கட்டுரையில் ,  செமத்தியான நகைச்சுவை விருந்து படைத்து இருந்தார் .. பொது இடத்திலேயே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்…
அதைத்தவிர ச்மூக அக்கறை , சக எழுத்தாளர்களை பற்றி குறிப்பிடுதல் போன்றவையும் அருமையாக இருந்தது..
இது இண்டர்னெட்டில் வந்தது அல்ல . துக்ளக் இதழில் வந்தது .
அந்த கட்டுரையில் சில பகுதிகள் , உங்கள் பார்வைக்கு…

  • ஆணாதிக்கத்தைப்பற்றி கனி மொழி ஆக்ரோஷமாக எழுதி இருக்கிறார். இப்போது “ நான் ஒரு பெண் “ என சொல்லி ஜாமீன் கேட்கிறார்.
  • தந்தையின் பகுத்தறிவு ஆர்ய மாயையை திட்டிக்கொண்டே மஞ்சள் துண்டு அணிந்து கொள்ளும். அதேபோல மகள் கனிமொழிக்கு அகப்பட்டது பெண் ஈயம் – ஸாரி பெண்ணியம்
  • கை எழுத்து போட்டதை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார் கனிமொழி. சரத்குமாரோ த்னக்கும் எதுவும் தெரியாது என்கிறார். தயாளு அம்மாளுக்கோ ஆங்கிலம் தெரியாது. இந்த மூன்று பேரும்தான் கலைஞர் டீவியின் பங்குதாரர்கள். இவர்கள் மூவருக்குமே எதுவும் தெரியாது என்றால் கலைஞர் டீவியை ஏதாவது பேய் பிசாசு நடத்துகிறதா? பகுத்தறிவின்படி பார்த்தால் கடவுள் இல்லை என்றால் பேய் பிசாசும் இல்லை என்று ஆகிறதே ? அப்ப்டியென்றால் கலைஞர் டீவியை யார்தான் நடத்துகிறார்கள்?
  • என் நண்பர் ஒருவர் பஸ்ஸுக்காக காத்து இருந்தபோது எதிர் திசையில் வந்த பைக் மோதி காலில் எலும்பு முறிவு. பைக்கிள் மூன்று பேர். மூவரும் போதை. “ ழாழி பிழதழ் “ என்றாராம் வண்டியை ஓட்டி வந்தவர் ( ஸாரி பிரதர் என்று மொழி பெயர்த்துக்கொள்ளவும் )

இந்த கட்டுரையில் ஜெயமோகன் , மனுஷ் பற்றியெல்லாம்  குறிப்பிட்டு இருக்கிறார். சாரு புண்ணியத்தில் , அரசியல் பத்திரிக்கையில் இலக்கியவாதிகள் பெயரெல்லாம் இடம் பெறுவது மகிழ்ச்சி.

1 comment:

  1. இங்கு போற்றப்படும் எழுத்தாளரும் கனி போலவே ! 'பல்டி' அடித்து அதனை (இரண்டு எதிர்மறையான கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தல் ) சரி என தன குறுகிய வாசகர் வட்டத்தை கன்வின்ஸ் செய்வதில் பலே ஆசாமி. கனி க்கும் ஒரு ப்ளாக் தந்தால் அது எப்படி ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் செயல் அல்ல என்று வாதமிடுவார். அதுவும் ஏற்புடையதாகவே இருக்கும். நாஜி கூட்டம் அந்த கோட்பாடுகளை நம்பியது. ஒன்றல்ல பல்லாயிரம் ஏற்று கொண்டனர். இன்று அவர்களே அதனை அருவருப்புடன் ஒதுக்குவார். அது போல. கனி யை விமர்சிக்க இந்த சாறு க்கு தகுதி ஒன்றும் கிடையாது. I was so bored this summer I hit you through some aimless browsing.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]