Pages

Monday, November 21, 2011

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்

ஒரு பிச்சைக்காரன் என்ற முறையில் பல்வேறு வகை சாப்பாடுகளை சாப்பிடுவது என் இயல்பு. இந்த சாப்பாடுதான் பிடிக்கும், இதுதான் ஒத்துக்கொள்ளும் என்பது கிடையாது.

அந்த வகையில் , கார்ல் மார்க்ஸ் குறித்த தகவல்களை புரட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது..

எப்போதோ வாழ்ந்த அவர் , இப்போதைய பிரச்சினைகளை பற்றி கருத்து சொல்கிறாரே என நினைத்தேன்.

1848ல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை பொருள் செறிவு கொண்டது, காலம் கடந்து நிற்பது..

அதில் என்ன சொல்கிறார்..

வரலாற்றில் முந்தைய சகாப்தங்களில் அநேகமாக  எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைப்பு இருக்க காண்கிறோம்

எந்த ஒரு சமூகத்தைப் பார்த்தால் அதில் பாகுபாடுகள் , ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.
நல்லதொரு அரசாங்க அமைப்பு ஏழைகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கி அவர்களை உயர்த்த வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது. வசதியானவர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்புகள், வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. ஏழைகள் மேலும் மேலும் நசுக்கப்படுகின்றனர்.

அவர் கூறுகிறார்..

”சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாக ,எதிரும் புதிருமான இரு வர்க்கங்களாக- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாக -பிளவுண்டு வருகிறது ”

ஏழை பணக்காரன் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பெரிய நிறுவனம் நஷ்டம் அடைந்தால் , அரசு அதை காக்க பணம் செலவழிக்க தயாராகிறது, ஏழைகள் அழிவதில் கவலை இல்லை..

200 கோடி செலவழித்து நூலகம் அமைப்பது ஒரு புறம் நடக்கிறது. கடன் சுமையால் , ஏழை விவசாயிகள் துன்புறுவது இன்னொரு புறம் நடக்கிறது..

பேருந்தில் செல்ல முடியாத அளவு கட்டண உயர்வு.  கேட்டால் நிதி சுமையாம்.

நிதி சுமை என்றால் எப்படி 200 கோடியில் நூல்கம் அமைக்கிறார்கள்.. எப்படி 30 கோடி செலவழித்து பராமரிக்கிறார்கள்?

ஏற்கனவே படிக்கும் வாய்ப்புகள் கொண்ட , அய் அய் டி அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆடம்பர நூலகம்...

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை..

படிப்பு , பணம் எல்லாம் ஒரு சிறிய பகுதி மக்களிடமே சிக்கி கொள்ளும். மற்றவர்கள் அனைவரும் அல்லல்படும் பிரிவாக மாறுவார்கள்...

இப்போது ஓரளவு வசதியாக இருக்கிறோமே என இந்த போக்கை ஆதரித்தால், காலப்போக்கில் நாமும் அல்லல் படும் பிரிவில் தள்ளப்பட்டு விடுவோம் என்பதே லாஜிக்..

இந்த புத்தகத்தை படித்தால், ஒவ்வொரு இடத்திலும் பாரபட்சம் நிலவுவது நம் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும்

விலை மிக மிக குறைவு.... இருபது ரூபாய் மட்டுமே..

புத்தக கண்காட்சியில் வாங்கும் நூலாக இதுவும் இருக்கட்டும்.






4 comments:

  1. சரி உடுங்க உங்களுக்கு அதிமுக வட்ட செயலாளர் பதவி கண்பார்ம்ட்!சாருவுக்கு சதுர செயலாளர் பதவி!

    ReplyDelete
  2. அரைத்து அதிமுகவில் சேர போகிராராமே?கேள்விப்பட்டேன்!நீங்களும் சேர போகிரீர்கலாமே?

    ReplyDelete
  3. சரி தவறுகள் இருந்தா உடனே மூடிடனுமா?இல்லை மருத்துவமனையா மாற்றிடனுமா?ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் உள்ளது?அதையும் காட்டுங்கோ !!

    ReplyDelete
  4. நண்பரே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி .
    கண்டிப்பாய் படியுங்கள் படிக்க வேண்டிய புத்தகம் .

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]