ரிஸானா நஃபீக்.... இந்த சகோதரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி மனதை மிகவும் பாதித்தது.
இலங்கையை சேர்ந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிழைப்புக்காக சவுதிக்கு வேலை தேடி சென்று இருக்கிறார். வயதை மாற்றிக்காட்டி இவரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
வேலை செய்த இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள். பாலூட்டும் போது குழந்தை இறந்து விட்டது. ரிஸானாதான் கொன்று விட்டார் என குழந்தையின் தாயார் குற்றம் சாட்டவே , ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணம் செய்து வழக்காட முடியாத ஏழ்மை , ஆசிய நாட்டில் பிறந்த தவறு , மொழியறிவு இல்லாத நிலையில் , வாக்கு மூலத்தில் ஏற்பட்ட குளறுபடி என பல விஷ்யங்கள் ரிஸானாவுக்கு எதிராக போய் விட்டன.
மனதை கலங்க வைத்தது இந்த செய்தி. அவர் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு இருப்பார். யாராவது காப்பாற்றி விட மாட்டார்களா என எப்படியெல்லாம் ஏங்கி இருப்பார்..
இதயம் கனக்கிறது.
ஆனால் இதைக்கூட ஒருவர் சுயனலத்துக்காக பயன்படுத்த முனைந்த செய்தி , மனிதன் எந்த அளவுக்கு கேவலாமாக செல்வான் என்பதை உணர்த்தியது.
இஸ்லாமிய சட்டங்கள்தான் உலகத்துக்கு சரியான தேர்வான அமையும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கருத்து வலுத்து வருகிறது.
இந்த நிலையில் , மேற்கண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி , இஸ்லாமிய சட்டம் வேண்டும் என சொல்லும் மூடர்கள் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என துரோக புத்திரன் கூறியிருக்கிறார்.
இவர் ஏன் இப்படி சொல்கிறார்?
இவர் ஓர் இஸ்லாமியர். ஆனால் அதை மறைக்கும் வகையில் , வேறொரு மதத்தை சார்ந்தவர் போல ஒரு புனை பெயரை வைத்து கொண்டுள்ளார்.
தோப்பில் முகமது மீரான் , ஏ ஆர் ரகுமான் , முகமது பஷீர் , ஷாகூல் ஹமீது , பீர் முகமது என எத்தனையோ பேர் , இஸ்லாமியர்கள் என்பதை பெருமையாக நினைத்து , அந்த பெயரிலேயே வெற்றி பெறுகின்றனர்.
துரோக புத்திரனோ , தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்தால்தான் மக்கள் தம்மை ஏற்பார்கள் என தவறான கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்.
இந்த அடிப்படையில்தான் ரிஸானா தண்டனையை வைத்து , இஸ்லாமிய சட்டங்களையே எள்ளி நகையாடுகிறார்.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதாலேயே அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டம் கறாராக பின்பற்றப்படுகிறது என சொல்ல முடியாது. எனவே ஒரு நாட்டின் சட்டங்களை வைத்து , கண்மூடித்தனமாக இஸ்லாமிய சட்டங்களை மதிப்பிட கூடாது.
சவுதியில் இஸ்லாமிய சட்டம் முழுமையாக இருக்கிறதா என்பது விவாதத்துக்குரியது .ஆனால் சவுதியின் சட்டம் இந்திய சட்டங்களை விட மேலானதுதான்.
நம் ஊரில் ஒருவனை கொலை செய்து விட்டார்கள் என வைத்து கொள்ளுங்கள்.
அந்த குற்றவாளிக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் , மிதமான தண்டனை கொடுக்க வேண்டும் என ஊரில் இருக்கும் அனைவரும் அரசுக்கு அட்வைஸ் கொடுப்பார்கள். பாதிக்கப்பட்ட குடும்பம் எங்கோ அழுது கொண்டு இருக்கும்.
ஆனால் சவுதியில் அப்படி அல்ல.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்ச்சிகளுக்குத்தான் முன்னுரிமை. சவுதி அரசரே கூட அந்த உரிமையில் தலையிட முடியாது.
நம் ஊரில் ஒரு குழந்தையை கொன்றால் என்ன ஆகும் .?
சின்ன குழந்தைதானே ..சரி விடுங்கள்... இன்னொன்று பெற்று கொள்ளலாம். ஏதோ தெரியாமல் கொன்று விட்டான். இறந்தவனும் சகோதரன் , கொன்றவனும் சகோதரன் என பேசுவோம்.
சின்ன குழந்தைதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?
எனவேதான் தண்டிப்பதா மன்னிப்பதா என்று முடிவு செய்யும் உரிமையை பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கொடுத்துள்ளது சவுதி சட்டம்.
மன்னிக்கும் பெருந்தன்மை உங்களுக்கு இருந்தால் , தாராளாமாக நீங்கள் பாதிக்கப்படும்போது மன்னியுங்கள். ஆனால் மற்றவர் சார்பில் நீங்கள் மன்னிப்பு வழங்காதீர்கள் என்கிறது சவுதி.
நம் ஊரில் பாதிக்கப்பட்ட குடும்பம் எதுவும் செய்வதற்கில்லை.. அறிவு ஜீவுகளும் , பொழுது போகாதவர்களும்தான் குற்றவாளியை என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
சவுதி சட்டத்தை குறை சொல்லலாம்தான். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். நம்மை போன்ற ஒரு நான்காம் உலக நாடுகள் இதை கண்டித்தால் , உலகம் காறி உமிழும்.
இதெல்லாம் துரோக புத்திரனுக்கும் தெரியும். ஆனால் யாரிடமோ நல்ல பெயர் வாங்க இஸ்லாம் சட்டங்களை கண்டிக்கிறார்.
Nonsense Post..
ReplyDeleteஅது சரி!, சவுதியின் சட்டங்கள் மேலானவைதான், அங்கே யாரிடமும் உனக்கு கீழே wet ஆய்டுச்சான்னு கேட்டுட்டு தெனாவட்டா பொலிகாளை மாதிரி திரிய முடியாதுதானே!
ReplyDeleteமனுஷ்யபுத்திரன் மீதுள்ள உங்களின் பொச்சரிப்பை தீர்த்துக் கொள்ள ஒரு ஏழை அப்பாவி பெண்ணின் மரணத்தை பயன் படுத்திக் கொள்கிறீர்கள்.
வெட்கக்கேடு!, யாருக்கோ!!
@ சரவண குமார்.... நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் உண்மை குற்றவாளி யார் எனபது , போக போக உங்களுக்கு தெரியும்
ReplyDeleteஇதைத்தான் பிணத்தைக்கூட வைத்து அரசியல் செய்வது என்பது.
ReplyDeleteபிச்சைக்காரன் செய்வது இதைத்தான். ச்சீய் ......
//இஸ்லாமிய சட்டங்கள்தான் உலகத்துக்கு சரியான தேர்வான அமையும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கருத்து வலுத்து வருகிறது.//
ReplyDeleteஅப்படியா? நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.
இந்தியாவின் சட்டம் குற்றவாளி திருந்த வேண்டும் என்ற அடிப்படியில் உருவாக்கப் பட்டது. ஷரியா சட்டம் கண்ணுக்கு கண். இரத்தத்துக்கு இரத்தம் என்ற பழிக்குப் பழி வாங்கும் சட்டம். இந்திய சட்டத்தின் மூலம் ஒருவன் குறைவான தண்டனையை பெற்றான் என்றால் அல்லாவிடம் அவன் பதில் கூறிக்கொள்வான். பிறகு என்ன கவலை?
ReplyDelete" நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் உண்மை குற்றவாளி யார் எனபது , போக போக உங்களுக்கு தெரியும்" என்று வெறி குட்டியின் காலை நக்கி திரியும் அல்லக்கை பிச்சைகாரன் கூறுகின்றார்.
ReplyDelete"இந்த பதிலை எத்தனை நாளுக்குத்தான் சொல்லுவாங்க"
வெறி குட்டியே இதை ஒரு தடவை ஒப்பு கொண்டு விட்டது. தான் செய்த தவறுகளில் ஒன்று CHAT செய்தது என்று (எது வேறு ஒரு தவறும் செய்யாத மாதிரி நடிக்குது)
ராயகரன் எழுதிய இன்னொரு ஆக்கம். கட்டாயம் நீ படிக்க வேண்டும் \
ReplyDeletehttp://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8822:2013-01-11-083853&catid=368:2013
" இவர் ஓர் இஸ்லாமியர். ஆனால் அதை மறைக்கும் வகையில் , வேறொரு மதத்தை சார்ந்தவர் போல ஒரு புனை பெயரை வைத்து கொண்டுள்ளார். " - பிச்சிகாரன்
ReplyDeleteமனுஷ்ய புத்திரன் பிறப்பால் இஸ்லாமியர். ஆனால் அவர் இஸ்லாமிய நடைமுறைகளை கடைபிடிக்காத போது எதற்காக அவர் இஸ்லாமிய பெயரை சுமக்க வேண்டும். மனுஷ்ய புத்திரன் என்பது எந்த மதத்தையும் குறிக்கும் பெயர் அல்ல.
சாரு நிவேதிதா எதற்காக ஒரு பெண்ணின் பெயரை சுமக்க வேண்டும். தனது சொந்த பெயரான அறிவழகன் என்ற பெயரில் இருந்திருக்கலாமே (தனக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லாத படியால் பெயரை மாற்றி விட்டாரா)
பின்நவீனத்துவம் என்ற பெயரில் பாலியல் அசிங்கங்களை எழுதிவரும் அறிவழகன் பெண் பெயரில் எழுதினால் கூடிய வாசகர்களை கவரலாம் என்ற திட்டத்தில் எழுத தொடங்கியிருப்பார். ஆனால் நடந்தது வேறு. ஹிஹிஹ்ஹி
(பெண் பெயரில் மஞ்சள் பத்திரிகைகளில் கதை எழுதினால் கூடிய வாசகர்களை கவரலாம் என்பது நடைமுறை)
//இஸ்லாமிய சட்டங்கள்தான் உலகத்துக்கு சரியான தேர்வான அமையும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த கருத்து வலுத்து வருகிறது.//
ReplyDeletehaa..haa. Good Joke
கல்லெறியும் தண்டனையையும் அமுல் படுத்த சொல்கிறீர்கள் அப்படிதானே (பெண்ணுக்கு மட்டும்)
14 வயதில் தவறாக கொலை செய்தால் அவளுக்கும் மரண தண்டனை
Have you noticed one thing from Manush FB account. The status the comments and the likes. How dare you compare him with a womaniser( I meant your guru)? You all have to get a tumbler of ________ and drink it. Your Guru had did the same when he was writing in his publication? Feel pity on you? Yenna ungalukku kannu wet aagutha?
ReplyDeleteAn absolute absurd post...guys should regret who follow you...UNSUBSCRIBE!!
ReplyDeletean absolute absurd post...people should regret who follow you...UNSUBSCRIBE!!
ReplyDelete