Pages

Thursday, January 16, 2014

படிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின் அசத்தல் பேச்சு

சாருவின் சன் டீவீ பேச்சு மிக சிறப்பாக இருந்தது... அதில் இருந்து சில பகுதிகள்..

****************************************************************

1. அகத்தியம் எனும் நூல் காணாமல் போய்விட்டது..


2. அவர் எழுதிய சமஸ்கிருத புக் இருக்கிறது...அதில் நுட்பமான அறிவ்யல் தகவல்கள் உள்ளன

3. ஒரு பத்திரிக்கையில் வரும் கட்டுரையை படிக்கிறார்கள்...புத்தகமாக வந்தால் படிப்பதில்லை...வஞ்சிரம் மீனை விட குறைவான காசுதான் புக் வாங்க செலவாகும்.

4. ஏன் படிக்க வேண்டும் என்றால் நம் பேப்பர்களை பார்த்தாலே போதும்... ஓர் ஆன்ம வெற்றிடம் இருக்கிறது...இதை நிரப்ப வாசிப்பால் மட்டுமே முடியும்..

5 இன்று எழுத எவ்வளவோ ஸ்பேஸ் இருக்கிறது...வாசிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் வாசிப்பே எழுதாமல் எழுத வந்து விடுகிறார்கள்..எழுத்து பிழை , அழகியல் இன்மை என இருக்கின்றன.. அன்புள்ள சாருவிற்கு என எழுதுகிறார்கள்... அவன் வந்தான் அவன் வந்தான் என ஒரே பக்கத்தில் பத்து தடவை எழுதுகிறார்கள்...ஒற்று பிழைகளைப்பற்றி கவலைப்படுவதே இல்லை..

6. என் வாசகர்களை இலக்கியம் , இசை , சினிமா என எல்லாம் தெரிந்தவர்களாக உருவாக்குகிறேன்

7. தருண் தேஜ்பால் புத்தகங்கள் படிக்க வேண்டும் ..சங்க இலக்கியம் , தொல்காப்பியம் , பாரதியார் , ப சிங்காரம் , சுஜாதாவின் கடைசி பக்கங்கள் , நகுலம் , கரிச்சான் குஞ்சு , திஜா , ஆதவன் , இபா , நா முத்துசாமி ( நீர்மை மறக்க முடியாது )

8. தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்... என்ன படித்தாலும்  அதில் தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும்..

7 comments:

  1. என்ன படித்தாலும் அதில் தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. :-)

    ReplyDelete
  2. சிறப்பான பரிந்துரை...

    ReplyDelete
  3. பேச்சு சுவாரசியம்தான்!ஹீ

    ReplyDelete
  4. கேட்டேன்... மறுபடியும் வாசித்தேன்...

    ReplyDelete
  5. ஆதவன் நவீன்January 16, 2014 at 9:42 PM

    இதன் வீடியோ கிடைக்குமா?

    ReplyDelete
  6. ஒரு இலக்கிய (இளகிய) ஆதங்கம்.

    ReplyDelete
  7. நல்ல கருத்துப் பகிர்தல்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]