Pages

Thursday, January 14, 2016

இளங்கோவனின் சாத்வீக பேச்சு - சோ கிண்டல் - துக்ளக் விழா

இளங்கோவன் பேச அழைக்கப்பட்டபோது பலத்த கைதட்டல் எழுந்தது..

அவர் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்

இளங்கோவன்

சோ உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. முடிந்தவரை அல்ல ,, முழுமையாகவே அவர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னை அழைத்து பொன் ராதாவுக்கும் அன்புமணிக்கும் நடுவே அமர வைத்துள்ளார். இந்த விசித்திரத்தை சோ மட்டுமே நிகழ்த்த முடியும்

மெரினாவில் துக்ளக் விழாக்கள் நடந்த கால கட்டத்தில் இருந்தே ஆர்வமாக கவனித்து வருகிறேன். அப்போது இருந்தே சோ மீது எனக்கு பிடிப்பு உண்டு. ஆனால் எனக்கும் அவருக்கும் கொள்கை ரீதியாக ஒத்துப்போகாது. நானும் உயரம் , அவரும் உயரம், அது மட்டுமே ஒற்றுமை

ஆனால் எப்போதாவது ஒத்துப்போகும். பாபர் மசூதி இடிக்க்கப்பட்டபோது அயோத்தியில் அயோக்கியத்தனம் என எழுதினார். கருப்பு அட்டைப்படம் போட்டார். இதெல்லாம் எனக்கும் உடன்பாடானவை.

இன்று நம் முன் பிரச்சனையாக இருப்பவை தீவிரவாதமும் , க்லோபல் வார்மிங்கும்..இன்று பருவ நிலை சீர்கெட்டு விட்டது.குளிரடிக்க வேண்டிய கால கட்டத்தில் இன்று டெல்லியில் குளிர் இல்லை ,
 எனக்கு முன் பேசிய சிலர் கூட்டணிக்கு அஸ்திவாரம் இடுவதுபோல பேசினார்கள்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறி விடும் என்றார்கள்

 நல்ல மாற்றம் வேண்டுமென்றால் ஏரி ஆக்கிரமிப்பு கூடாது

மரங்கள் வெட்டப்படக்கூடாது ( பலத்த சிரிப்பு , இடைவிடாத கை தட்டல் )  கட்டப்பஞ்சாயத்து கூடாது ( அவர் யாரை சாடையாக பேசுகிறார் என உணர்ந்து பலத்த கைதட்டல் )  ஜாதி வெறி கூடாது

 நான் அதிகம் பேச வேண்டாம் என நினைத்தே வந்தேன்.  ஆனால் என்னை பேச வைக்கிறார்கள்

செம்பரம்பாக்கம் ஏரியை பொறுப்பின்றி கையாண்டதால்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என் பேசினார்கள்..இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது..படித்து நல்ல வேலைக்கு சென்று தன்னை தன் குடும்பத்தை வளப்படுத்த வேண்டும்.. பிழைப்புக்காக அரசியலுக்கு வரக்கூடாது

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சூழல் வெகு மோசமானது..இதை மாற்ற சோ முயற்சி செய்ய வேண்டும் .. நீங்கள் இரு தேர்தல்களில் முக்கிய பங்காற்றியது எனக்கு தெரியும்..முதல்வர்களை உருவாக்கியது எனக்கு தெரியும்..ஓட்டுக்கு பணம் என்பதை நீங்கள் மாற்ற வேண்டும்

சோ

இளங்கோவனின் சமீபத்திய பேச்சுகளில் சாத்வீகமான பேச்சு இதுதான் ( பலத்த கைதட்டல் ) இவருக்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் கிடைக்குமோ

ஓட்டுக்கு பணம் என்பது காங்கிரஸ் காலத்தில்தான் ஆரம்பித்தது…அதை இப்போது இவரே எதிர்ப்பது வரவேற்கத்தக்கது ( பலத்த கைதட்டல் ) சுதந்திர போராட்டம் , பார்லிமெண்ட் சிஸ்டம் போன்ற பல நன்மைகளை ஆரம்பித்ததும் காங்கிரஸ்தான்.. ஓட்டுக்கு பணத்தை ஆரம்பித்தது காங்கிரஸ் முதல்வர் ஒய் எஸ் ஆர் தான்… அதைத்தான் தமிழகத்தில் காப்பி அடிக்கிறார்கள்… ஓட்டுக்கு பணம் என்பதை நானும் எதிர்க்கிறேன்.இது ஒழிய வேண்டும்


பொன் ராதாகிருஷ்ணன்

இதே துக்ளக் விழாவில் மோடி பிரதமராக வேண்டும் என சோ பேசினார். அது இன்று நடந்துள்ளது

அன்பு மணி பேசும்போது அவர் என்னவெல்லாம் நிகழ்த்துவேன் என சொன்னாரோ அதை குஜராத்த்தில் நடத்திக்காட்டியவர் மோடி

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு முப்படைகளையும் பயன்படுத்தி உதவினார் மோடி. நிவாரண தொகை ஒதுக்கினார். அவருக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது

தமிழர்களுக்கு சம உரிமை , சம அந்தஸ்த்து வேண்டும் என இலங்கை சென்று பேசினார் மோடி ,  இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட ஒரே பிரதமர் மோடிதான்

தேசிய வாதிகளுக்கு பிராந்திய உணர்வு இருந்தால் நல்லது என்பதற்கு மோடி நல்ல உதாரணம்

ஈ டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து ஊழலை ஒழித்துள்ளார், பதான்கோட் தீவிர வாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்
இலங்கைக்கு பாலம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்

1967ல் செய்த தவறை மக்கள் மீண்டும் செய்து விடக்கூடாது

சோ


மோடி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்த்தாக பேசினார். மோடியை விட அதிக நன்மை செய்தவர் ராஜீவ்தான். ராஜிவ் ஒப்பந்தத்தை அமல் செய்ய வேண்டும் என இப்போது பலர் பேசுவதே அதற்கு சான்று. உணவுப்பொட்டலங்கள் இலங்கையில் போடப்பட்டது அவர் ஆட்சியில்தான்.. அவர் சாதனைகளை பேசுவதில் திமுக கூட்டணி காரணமாக இளங்கோவனுக்கு சங்கடங்கள் இருந்திருக்கலாம்.. அந்த சாதனைகளை இளங்கோவன் பேச வேண்டும்.. அவர் பாணியில் பேசினால்தான் சரிதான்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]