Pages

Tuesday, April 30, 2019

காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் - அலசல்


எம் ஜி ஆரிடமும் ஜெயலலிதாவிடமும் 30 சீட்டுகளைப் பெற்று 10 சீட்டுகளை அதிமுகவுக்கு கொடுத்து கூட்டணி அமைத்த காங்கிரஸ் இன்று வெறும் 10 சீட்டுகள் பெற்று கூட்டணி அமைக்கிறது
மற்ற பல மா நிலங்களிலும் இப்படித்தான்.. 

இந்த தேர்தலில் , ஒரு சீட் கூட பெறாமல் காங்கிரஸ் மண்ணைக்கவ்வ இருக்கும்  மா நிலங்கள்

உத்தர்கண்ட் -   இங்கு வாஷ் அவுட் ஆனாலும் கூட , பிரதான் எதிர்கட்சி காங்கிரஸ்தான்

மேற்கு வங்கம்..    வாஷ் அவுட்

ஒரிசா-------------------  ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்து பிறகு இரண்டாம் இடம் பெற்று வந்த காங்கிரஸ் இம்முறை மூன்றாம் இடம்


ஹரியானா    -  வாஷ் அவுட் என்றாலும் கவுரவமான இரண்டாம் இடம்

பிஹார் - ஓரிரண்டு இடங்கள் கிடைக்கும்

ஆந்திரா - வாஷ் அவுட்

டெல்லி - வாஷ் அவுட்


கேரளா . பஞ்சாப் , சட்டீஸ்கர் போன்ற சில மானிலங்களில் மட்டும் முதல் இடம் பெறும்

கூட்டணி என்ற வகையில் தமிழ் நாட்டில் முதல் இடம் கிடைக்கும்

கர் நாடகா , ம பி , ராஜஸ்தான்  போன்ற சில மானிலங்களில் இரண்டாம் இடம் பெறும்

காங்கிரஸ் அழிய வேண்டும் என யாரும் நினைக்கப்போவதில்லை.. பாரம்பரிய பெருமை மிக்க அந்த கட்சி அழிவது நாட்டுக்கு நல்லதல்ல

ஆனால் பல தவறான நடவடிக்கைகளால் இபப்டி ஒரு மோசமான நிலைக்கு சென்றுள்ளது

ஆனாலும் சென்ற தேர்தலை ஒப்பிட்டால் , நல்ல முன்னேற்றம்தான்

அனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்


ராமனின் தூதுவனாக சீதையை சந்திக்கிறான் அனுமன்..

ஆரம்பத்தில் அனுமனை அவள் நம்பவில்லை.. ஆனால் பிறகு அவனை நம்புகிறாள் . மனம் விட்டு பேசுகிறாள்.. தன் வேதனையை சொல்கிறாள்

அனுமனுக்கும் ஆரம்பத்தில் சீதை மீது நம்பிக்கை இல்லை.. ராவணனுடம் காம்பரமைஸ் ஆகி இருப்பாள் என்றுகூட நினைக்கிறான்

பிறகுதான் ,என்னதான் ராவணன் இருப்பிடத்தில் அவள் இருந்தாலும் அவள் காதல் மாறவில்லை என்பது பிறகுதான் புரிகிறது

இருவரும் நட்புடன் பேசிக்கொள்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அனுமன் சொல்கிறான்...

“ கவலையை விடுங்கள்....உங்களை அப்படியே தூக்கிச்சென்று ராமனிடம் விட்டு விடுகிறேன்... யாராலும் என்னை தடுக்க முடியாது ‘

சீதைக்கு அதிர்ச்சி... ஏன் இப்படி முட்டாள் மாதிரி பேசுகிறான் என யோசிக்கிறாள்.. அவன் அன்பு அவன் அறிவை மறைக்கிறது என புரிந்து கொள்கிறாள்

அவன் தன்னை தூக்கிச்செல்வதை அவள் விரும்பவில்லை.. ஆனால் அப்படி முகதில் அடித்தாற்போல் சொல்லவும் விரும்பவில்லை

பிறகு எப்படி சொல்கிறாள்

” நீ தூக்கிசெல்லும் ஆற்றல் மிக்கவன் ..அதில் எனக்கு சந்தேகம் இல்லை.. ஆனால் வேகமாக பறக்கும்போது எனக்கு மூச்சு திணறல் ஏற்படலாம்.. அல்லது உய்ரம் காரணமாக எனக்கு மயக்கம் வரலாம்.. அல்லது என் பிடி நழுவி விழுந்து விடலாம்... அல்லது எதிரிகள் உன்னை சூழ்ந்து தாக்கும்போது , என்னதான் நீ வென்றாலும் , அவர்கள் அம்பு என் மீது பட்டு விடலாம்.. இதை எல்லாம் விட இன்னொன்று... ராமன் வந்து காப்பாற்றினால்தான் பெருமை.. இல்லையென்றால் சூழ்ச்சி மூலம் என்னை காப்பாற்றியதன் மூலம் ராவணன் மீது பயம் என்பதை ஒப்புக்கொள்வதாக உலகம் அவன் மீது பழி சொல்லும்.. எனவே உன்னுடன் வரவில்லை “ என்கிறாள்

ஒரு மேனேஜர் உயர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமித்தார்

உதவியாளனுக்கு சந்தேகம்

- சார்,..இந்த பெண்னை விட கல்வி , அனுபவம் , திறமை மிகுந்த பெண்கள் வந்தார்களே...இவளுக்கு ஏன் பதவி? என்றான்

அவர் சொன்னார்

“ இந்த வேலைக்கு கல்வியை விட கூர்மதி தேவை.. அனுபவம் இதை விட அதிகமாய் இருப்பது தவறு... இன்னொன்று இவள் கை எழுத்து நன்றாக இருக்கிறது... இன்னொரு முக்கியமான காரணம் இவள் ஆங்கில உச்சரிப்பு மற்றவர்களை விட அதிகம்...   இன்னொன்று இவள் படித்த கல்லூரி புகழ்  வாய்ந்தது.. கடைசி காரணம் இவள் என் மனைவியின் தங்கை “

உண்மையில் கடைசி காரணம் மட்டும்தான் உண்மை.. மற்றவை எல்லாம் சால்ஜாப்புதான்//

அந்த பாணியில் பதில் அளிக்கிறாள் சீதை

ராமாயணத்தில் வரும் அழகான இடங்களில் ஒன்று இது


Sunday, April 28, 2019

சேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு நூல் குறித்து


சாருவின் நூல்களில் தனித்துவமான நூல் என்று “ ஒழுங்கின்மையின் வெறியாட்டம் “ நூலை சொல்லலாம்..

அவரது இலக்கிய , தத்துவ பார்வையை சொல்லும் ஆவணமாக இதை கருதலாம்..

பலரும் சாருவை ஏதாவது இலக்கிய சர்ச்சைகள் மூலம் அறிந்து கொண்டு அவரைப்பற்றி ஏதாவது ஒரு மன பிம்பம் உருவாக்கி வைத்திருப்பார்கள்.. அவருடன் பழகும் நண்பர்கள் சிலரேகூட அந்த நட்பின் அடிப்படையில் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்..

அவர் எழுதியுள்ள நூல்களை படிக்க படிக்கத்தான் அவர் குறித்த ஒரு முழுமையான பார்வை கிடைக்கும்.. அவரது ஒரு நூல் என்பது நூறு நூல்களுக்கு சமமாகும்.. அத்தனை ரெஃபரன்சுகள் . குறிப்புகள் , அறிமுகங்கள் ஒரு நூலில் இருக்கும்


மற்றவற்றை படிக்காவிடினும் அவரது “ ஒழுங்கின்மையின் வெறியாட்டம் “ என்ற நூலை படிப்பது நல்லது..தனது புத்தகங்களில் தனக்கு பிடித்த புத்தகமாக அவரே சொல்லும் நூல் இது

சமரசம் , விகடன் , குமுதம் , பச்சக் குதிரை ( மலையாளம் ) , கலாகௌமுதி ( மலையாளம் ) , கதை இதழ் , சதங்கை , வெப் உலகம் என பல்வேறு இதழ்களில் வெளி வந்த பேட்டிகளின் தொகுப்பு இது

தன் கருத்தை தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறார் சாரு.. எழுத்து என்பதன் பயன் என்ன , இலக்கியம் , நான் லீனியர் , பின் நவீனத்துவம் என பல விஷ்யங்கள் குறித்து பாடம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்

சில இடங்களில் கேள்வி கேட்பவர் , விபரம் தெரியாமல் கேட்டாலும் , அதை சரியான விதத்தில் உள்வாங்கிக்கொண்டு பதில் அளித்திருப்பது சிறப்பு

உதாரணமாக எழுத்து என்பது சன்னியாசம் போன்றது என்கிறார் சாரு..

அதன் தாத்பர்யம் பேட்டி எடுத்தவருக்கு புலப்படவில்லை..  மனைவியின் அடி தாங்க முடியாமல் , ஊரை விட்டு ஓடுவதுதான் சன்னியாசம் என நினைத்துக்கொண்டு , அவர் கேட்கிறார்.. சன்னியாசம் என்பது வாழ்வில் இருந்து தப்பிச் செல்வது அல்லவா?

அதற்கு சாரு அழகாக பதில் சொல்கிறார்.. நீட்சே , வான்கோ , தாந்த்ரீக யோகம் போன்றவற்றை தொட்டுக்காட்டி , சன்னியாசமும் எழுத்தும் எப்படி கைகுலுக்கிக்கொள்கின்றன என விளக்கி காட்டுகிறார்..

சுந்தர சாமியின் மேன்மையை பேசி இருக்கிறார் .. எழுதி இருக்கிறார்.. அது வேறு.. ஆனால் அவர் எழுத்து ஏன் ஃபேக் எழுத்து என அழைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார்

இணையத்தில் எழுத ஆரம்பித்து அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் சாரு

அந்த தகுதியில் இணைய எழுத்தை அழகாக மதிப்பிட்டுள்ளார்..  ஊடகங்களில் ஒரே சினிமா , அரசியல் என அலுத்துக்கொண்ட நம் சமூகம் , இணையத்தை முழுக்க முழுக்க சினிமாவுக்கும், அரசியலுக்கும்தான் பயன்படுத்துகிறது.... இதை அவர் சொல்லி படிக்கையில் வருத்தமாக இருக்கிறது

தமிழ் இலக்கியம் குறித்து மட்டும் அல்ல.. உலக இலக்கியத்தையும் அறிமுகம் செய்கிறது நூல்

தமிழ் எழுத்தாளரான உங்களுக்கு சமஸ்கிருத பெயர் ஏன் என்ற கேள்விக்கு தனக்கு அறிவழகன் என்ற பெயரும் இருப்பதையும் அது தன் தாய்க்குகூட தெரியாத பள்ளிப்பெயர் என்றும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்

திராவிட இலக்கியம் , கனி மொழியுடனான நட்பு என பரபரப்புக்கும் பஞ்சம் இல்லை

ரஜினியின் இமயமலை பயணம் , தன் இமயமலை பயணம்.. இரண்டுக்குமான ஒப்பீடு கலகல


இப்படி விஷ்ய ஞானம் மிக்க நூலை  நகைச்சுவையுடன் படிப்பது சுகமான இருந்தாலும் ஒரே ஒரு குறை இருந்தது

இலக்கிய தரம் மிக்க இந்த நூலை , ஒரு நாலாம்தர பதிப்பகம் வெளியிட்டு இருந்தது

சேற்றில் முளைத்தாலும் தாமரையின் அழகு குறையப்போவதில்லை என்பதால் தரமற்ற பதிப்பகம் என்றாலும் நூலின் தரம் சிறப்பாகவே இருந்தது

ஆனால் என்னதான் இருந்தாலும் சிங்க பாலை தங்க தட்டில் வைப்பதே சிறப்பு

அந்த வகையில் இந்த நூல் இப்போது ஜீரோ டிகிரி  பதிப்பாக வெளி வருகிறது

 நற்றாமரை குளத்தில் நல்லன்னம் சேர்ந்தது போல தரமான ஒரு நூல் தரமான பதிப்பகம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி


திமுகவின் ம ந கூ அவதூறு - திருமாவளவன் காட்டம்

அரசியல்வாதிகளில் சற்றேனும் நிதானமாக யதார்த்தமாக பேசுபவர் திருமாவளவன் தான்..   ஆரம்ப காலத்தில் ஆக்ரோஷ லாஜிக் அற்ற பேச்சுகள் பேசி இருந்தாலும் தற்போது மிகவும் பக்குவம் அடைந்த தலைவராக உருவாகி உள்ளார்..


அவரது பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் நேற்று ( 27.04.19) ஒளிபரப்பானது.. அதில் நான் ரசித்த சில பதில்கள். ( ரசிப்புக்கான காரணம் அடைப்புக்குள்)

கமல் கட்சி வாக்குகள் வாங்கும் என நினைக்கிறீர்களா?

திருமா- கண்டிப்பாக வாங்கும்.. திமுக மற்றும் அதிமுகவை விரும்பாத கணிசமான வாக்காளர்கள் இங்கு உண்டு.. அவர்கள் வாக்குகள் இவருக்கும் சீமானுக்கும் கிடைக்கும்

( திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச மனதில் நேர்மை வேண்டும் )

பாமக - அதிமுக கூட்டணி பணத்தால் உருவான கூட்டணி என்ற கருத்து குறித்து?

அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்ககூடும் என்றே நினைக்கிறேன்.. என்னிடம் ஆதாரம் இல்லை.. ஆனால் இது பொய் என்றால் அவர்கள் ஏன் மறுக்கவில்லை..   நாங்கள் ம ந கூ உருவாக்கியபோது சிலர் எங்கள் மீது பொய்யாக அவதூறு பரப்பினார்கள்... அதிமுக வின் பி டீம் என்றனர்...  வைகோ இதற்காக கோபித்துக்கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இர்ந்து வெளி நடப்பு செய்தார்.. அந்த தார்மீக இவர்களிடம் ஏன் இல்லை...காரணம் குற்றச்சாட்டு உண்மை

( அவர் குறிப்பிடும் அவதூறை பரப்பிய திமுகவுடன் இப்போது சேர்ந்திருந்தாலும் திமுகவின் செயலை ஆவணப்படுத்தும் துணிச்சல் ஆச்சர்யகரமானது )

திமுகவினர் பணம் கொடுப்பதாக சொல்லி வேலூர் தேர்தலை ரத்து செய்துள்ளார்க்ளே ?

இதற்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும் ( எங்கள் கூட்டணி ஆள் தப்பு செய்யவில்லை என அடித்து விடாத தன்மை ரசிக்க வைத்தது )

தமிழ் நாட்டில் பிஜேபி தோற்றாலும் மற்ற மா நிலங்களில் பிஜேபி வெல்லும் என்கிறார்களே?

அது நடக்காது// எல்லா மா நிலங்களிலுமே பிஜேபிக்கு எதிரான அலை உள்ளது.. அவர்களுடன் கூட்டணி சேரவே பலர் அஞ்சுகிறார்கள்

வங்கத்தில் மம்தா , ஒரிசாவில்  நவீன் , ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு என பலரும் பிஜேபியுடன் சேர அஞ்சுகிறார்கள்.. பிஜேபி தோற்பது உறுதி

( அவர்கள் பிஜேபியுடன் சேரவில்லை என்பது உண்மைதான்.. ஆனால் வங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இம்முறை நான்காம் இடத்துக்கு செல்லும் அபாயம் உள்ளது... ஒரு சீட் கூட கிடைக்காமல் போகக்கூடும்..ஒரிசாவில்  பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரசிடம் இருந்து பிஜேபி கைப்பற்றும் நிலை உள்ளது.. பிஜேபி நவீனுடன் ,மம்தாவுடன் சேர்ந்திருந்தால்தான் காங்கிரசுக்கு நல்லது...  பிஜேபி அங்கு பெரும்பான்மை வெல்ல முடியாது என்பது உண்மை.. காங்கிரஸ் அங்கெல்லாம் அழிவை சந்திப்பதும் உண்மை.. இதைதான் சுட்டிக்காட்டி இருக்கிறார் )





Friday, April 26, 2019

அன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...





இயக்குனர் மகேந்திரனின் பெரும்பாலான படங்களில் பிராதான பெண் கதாபாத்திரங்களுக்கு லட்சுமி என பெயர் வைத்திருப்பார்

லட்சுமி என்ற பெயர் அவரை ஏன் ஈர்த்தது?

சினிமா வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட ஆரம்ப கால கட்டம்.. பல நேரங்களில் சாப்பிட வழி இருக்காது.. நண்பர்கள் தய்வால் வாழ்ந்து வந்தால்

அப்படி அவர் உரிமையாக சாப்பிடும் நண்பர்களில் ஒருவர் செந்தாமரை

வாடா...என உற்சாகமாக வரவேற்பார்...

ரெண்டுபேருக்கும் சாப்பாடு வைமா என மனைவியிடம் சொல்லி விட்டு , சந்தோஷமாக பேசுவார்.. இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள்

காலாப்போக்கில் இருவருமே கலை உலகில் பிரபலமாகி விட்டனர்

துக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்த மகேந்திரனை தங்கப்பதக்கம் நாடகம் எழுத வைத்து கலை உலகுக்கு கொண்டு வந்தவரும் செந்தாமரைதான்

செந்தாமரை குழுவினரின் நாடகத்தைப்பார்த்த சிவாஜி கணேசன் நாடக உரிமையை செந்தாரமரையிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதை சினிமாவாகவும் எடுத்தார்கள்

 இன்ஸ்பெக்டர் பார்த்திரம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்த நாடக கிளைமாக்சை , மாற்றி  , மகனை கொல்வது போல மாற்ற சொன்னார் சிவாஜி... வேறு எந்த மாற்றங்களும் இல்லை

படம் இமாலய வெற்றி

மகேந்திரன் புகழ் பெற்ற இயக்குனர் ஆனார்.. செந்தாமரை நடிகர் ஆனார்

இப்போதுதான் மகேந்திரனுக்கு ஒரு உண்மை தெரிந்தது

ஆரம்ப காலத்தில் செந்தாமரையும் வறுமையில்தான் வாழ்ந்தார்.. ஆனாலும் அதை சற்றும் காட்டிக்கொள்ளாமல் மகேந்திரன் வரும்போது இன்முகத்துடன் உணவு பரிமாறியவர் செந்தாமரையின் மனைவி லட்சுமி..

தனக்கு உணவு இல்லை என்பதை கணவனிடம் கணவன் நண்பனிடம் மறைத்து , தான் பசியால் வாடினாலும் , பிறர் பசி தீர்த்தவர் அவர் என்பதை அறிந்த மகேந்திரன் துடித்துப்போனார்

செந்தாமரையின் மனைவி பெயர்தான் லட்சுமி...

அந்த பெயரைத்தான் போற்றி வணங்கினார்மகேந்திரன்

Thursday, April 25, 2019

சிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ? - மகேந்திரன்


இயக்குனர் மகேந்துரனும் சிவாஜியும்


தங்க பதக்கம் படத்துகு நான் வசனம்..  சிவாஜியின் மனைவி இறந்ததை அறிந்து அவர் எதிர்வினைக்கேற்ப வசனம் எழுத வேண்டும்

இதற்காக ஒரு நாற்பது பக்க நோட்டு தேவைப்படும் என நினைத்தார்கள்.. நானோ ஒரே ஒரு வரி எழுதி கொடுத்தேன் ..அனைவருக்கும் அதிர்ச்சி

நான் விளக்கினேன்

சார்.. உங்க நடிப்புக்கேற்ற காட்சி இது.. வசனம் அதை கெடுக்கலாகாது.. மவுனமாக பார்க்கிறீர்கள்.. பழைய சம்பவங்கள் மனதில் விரிகிறது... உங்கள் உணர்வுகளை முகபாவத்திலும் உடல் மொழியிலும் காட்டுகிறீர்கள்.. வசனம் வேண்டாம்

இப்படி சொன்னதும் சிவாஜி உற்சாகமாகி விட்டார்.. அப்படியே செய்கிறேன் என்று சொல்லி விட்டு பிரமாதமாக நடித்தார்

ஒரு மகா கலைஞன் அப்போது புதியவனான என் பேச்சுக்கு மதிப்பளித்தது என் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று

பிறகு ஒரு நாள் கேட்டேன்

இவ்வளவு இயல்பாக நடிக்கும் உங்களை ஓவர் ஆக்ட் செய்வதாக சொல்கிறார்களே என்றேன்

அவர் சிரித்தார்

வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தின் புகழ்பெற்ற காட்சியான வானம் பொழிகிறது வசனத்தை இயல்பான தொனியில் பேசினார்

அசந்து போனேன்

இதை நீ ரசிக்கலாம்... ஆனால் அன்றைய கால கட்டம் அப்போதுதான் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு நகர்ந்து கொண்டு இருந்த்து.. அதற்கேற்ப சற்று நாடக பாணியில் நடித்தேன்

என் கையில் ஒரு பென்சில் கொடுத்தால் அதற்கேற்ப எழுதுவேன்,, பேனா கொடுத்தால் வேறு பாணி
அதுபோல காலத்துக்கு ஏற்ப கதைக்கேற்ப என் நடிப்பு பாணி அமைகிறது என்றார் அந்த மேதை

--

நானும் சினிமாவும்  - மகேந்திரன்

Wednesday, April 24, 2019

திராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )


 அண்ணாயிசம் என்பது திராவிட கொள்கைகளை சிறப்பாக வரையறுப்பது ஆகும்

ஆனாலும் மற்ற வரையறைகளும் முக்கியமே//

அந்த வகையில் திராவிடர் கழகம் பார்வையில் திராவிட கொள்கைகளை காண்போம்

1, அனைவரும் சமம்’

2 பாலின சமத்துவம்

3சமூக நீதி

4 கடவுள் மறுப்பு

5 எதையும் கேள்வி கேட்டல்

6இந்துத்துவா எதிர்ப்பு

7 அறிவியலை ஏற்றல்

8 தீண்டாமை ஒழிப்பு

9 தனியார் துறை உட்பட அனைத்திலும் ஒடுக்கப்படோருக்கான உரிமை

10 ஆண் பெண் நிகர்

11 அனைத்து மத வழிபாடுகளிலும் பெண்களுக்கு அர்ச்சனை உரிமை

12 ஓரினச் சேர்க்கை உரிமை

13 கிராம நகர பேதமின்மை

14 ,மத பேதமினமை

15 அனைத்தும் ஆட்சி மொழிகள் ,ஆங்கிலம் தொடர்பு மொழி

16பொருளாதார சமத்துவம்

17 தன்னாட்சி

18 உண்மையான மதச்சார்பினமை

19 விகிதாச்சார பிர நிதித்துவம்

20கல்வியை அடிப்படை உரிமை ஆக்கல்

21 நாத்திக ஆத்திக பிரச்சார உரிமை

22 குழந்தை நலம்

23முதியோர் நலம்

24சுற்றுச்சூழல் பாதுகாப்பு

25திருமண உரிமை ஆண் பெண் சார்ந்ததை உறுதி செய்தல்
பிள்ளைப்பேறு பெண் உரிமை

26 மரண தண்டனை நீக்கம்

27 சிக்கனம்

28 சுயமரியாதை

Tuesday, April 23, 2019

வெற்றி யாருக்கு- சூதாட்ட கிளப் என்ன சொல்கிறது

யாருக்கு வெற்றி என ஊடகங்கள் கணிப்புகள் வெளியிடுவதை பார்க்கிறோம்

அதே போல இன்னும் துல்லியமாக கணிப்புகளை நிகழ்த்தும் சூதாட்ட சந்தை ராஜஸ்தான் மா நிலத்தில்  பலோடி என்ற இடத்தில் இருக்கிறது.. டிரம்ப் தான் ஜெயிப்பார் என துல்லியமாக கணித்தவர்கள் இவர்கள்

2018 சட்ட சபை தேர்தலில் பிஜேபி மண்ணைக்கவ்வும் என சரியாக கணித்தார்கள்

இவர்கள் முடிவை அடிப்படையாக வைத்து கோடிக்கணக்கான ரூபாய்களில் சூதாட்டம் நடக்கும்..பல இடங்களில் இது நடந்தாலும் அனைத்து சூதாட்டாங்களின் தலைமையகம் இதுதான்


இம்முறை இவர்கள் கணிப்பு ... பிஜேபி 250   ..பிஜேபி கூட்டணி 350   பிரதமர் மோடி

மோடி பிரதமர் ஆவார் என ஒரு ரூபாய் பெட் கட்டினால் , 1.15 ரூபாய் கிடைக்கும்

ராகுல் பிரதம்ர் என ஒரு ரூ பெட் கட்டினால் 65 ரூபாய் கிடைக்கும்

அதாவது ராகுல் பிரதமர் ஆக வாய்ப்பில்லை.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து பணம் கட்டினால் , ஒருவேளை அவர் வென்றால் ஐம்பது மடங்கு லாபம் கிடைக்கும்

இந்த கணிப்பு சரியாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து

வட இந்திய மன நிலை வேறு... தென்னக சிந்தனை வேறு மாதிரி..

எது எப்படியோ... இந்த கணிப்பு சரியா இல்லையா என அடுத்த மாதம் பார்ப்போம்

Monday, April 22, 2019

ரஜினி தேர்தல் அறிக்கை தயார்- தமிழருவி மணியன் பரபரப்பு

1996ல் கிடைத்த வாய்ப்பை ரஜினி தவற விட்டு விட்டார் என்றும் , கமல் எல்லாம் துணிந்து இறங்கும்போது ரஜினி தாமதிக்கிறார் என்றும் சிலர் சொல்வதுண்டு..

இவற்றுக்கெல்லாம் பதில் அளித்து இருக்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ,  அந்த கால காங்கிரஸ் கட்சியின் வாரிசான காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன்...

துக்ளக் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல விஷ்யங்களை பேசி இருக்கிறார்

22 தொகுதிகளுக்கான் இடைத்தேர்தலில் அதிமுகவோ திமுகவோ பெரும்பான்மையை பிடிக்காது..எனவே கண்டிப்பாக ஆட்சி கவிழும்.. விரைவில் சட்டசபை தேர்தல் வரும்..

தற்போது யாரும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ விரும்பி வாக்களிக்கவில்லை.. வேறு வழியின்றி வாக்களிக்கின்ற்னர்..

மாற்றத்தை விரும்பும் இது போன்ற வாக்காளர்களுக்கு ரஜினி சரியான தேர்வாக இருப்பார்.

செயல் திட்டங்களும் தேர்தல் அறிக்கையும் தயார் நிலையில் உள்ளன.. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர் களத்தில் இறங்குவார்

லோக்சபா தேர்தல் என்பது மத்திய ஆட்சிக்கானது . அதில் அவர் இறங்கி இருக்க வேண்டியதில்லை

1996ல் கலைஞரும் ஜெயலலிதாவும் குறிப்பிட்ட வாக்கு வங்கிகளை வைத்திருந்தனர்.. அந்த சூழலில் ரஜினி வென்று இருக்க முடியாது

இன்று ரசிகர்களை தாண்டி மக்கள் ஆதரவு ரஜினிக்கு உள்ளது.. அவர் மகுடம் சூடுவது உறுதி..

இதனால்தான் கட்சிகள் கலக்கம் அடைந்து அவரைப்பற்றி தவறாக பேசுகின்ற்ன/இது அவற்றின் பதட்டத்தை காட்டுகிறது
\

செல்வாக்கு இல்லாவிட்டால் ஏன் இப்படி பயப்படுகிறார்கள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

தேர்தல் முடிவுகளும் மறைந்த தலைவர்களும்

 தேர்தல் முடிவுகள் வெளி வந்ததும் மறைந்த தலைவர்களின் ஆவி என்ன நினைக்கும்

கலைஞர்

சபாஷ் மகனே... சென்ற தேர்தலில் பூஜ்யம் என்றாலும் சற்றும் கலங்காமல் இந்த தேர்தலில் ஓரளவு வெற்றியை அடைந்து விட்டாய்... என் ரத்தம்  என் பயிற்சி வீண் போகவில்லை

மக்கள் திலகம்

 நான் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை மிஞ்சும் தலைவன் பிறக்கவில்லையே.. இப்போதும் கூட அதிமுக வாக்குகள் பிறரை விட அதிகம்... தினகரன் பிள்ஸ் அதிமுக வாக்குகள் பிரியாமல் இருந்திருந்தால் , நாற்பதும் அதிமுகவுக்கே

காமராஜர்

நான் உருவாக்கிய காங்கிரஸ் வாக்குகள் எங்கே சென்றன?


அண்ணா

திராவிட கட்சிகளின் வாக்கு வங்கி அப்ப்படியே இருப்பதில் மகிழ்கிறேன்


சிவாஜி

என் காலத்தில்தான் தோல்வி என்றால் தோல்விதான்.. இப்போதெல்லாம் தோற்றாலும்கூட , இவ்வளவு சதவிகிதம் பெற்றேன்.. இத்தனை வாக்குகளை பிரித்தேன் .வெற்றி என்கிறார்களே...இவை அன்று கிடையாது

வாஜ்பாயி

தமிழ் நாட்டில் பிஜேபி என்ற கட்சியே இல்லை.. பிஜேபிக்கு எதிராக மெகா கூட்டணி என்று பில்ட் அப் கொடுத்து எங்களுக்கும் ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிய எதிர்கட்சியனருக்கு நன்றி

Sunday, April 21, 2019

அனைவரையும் மகிழச்செய்ய இருக்கும் தேர்தல் முடிவுகள்


தமிழகத்தை பொருத்தவரை எந்த கட்சியும் படுதோல்வி அடையப்போவதும் இல்லை... எதுவும் அபார வெற்றி அடையப்போவதும் இல்லை..

எனவே மக்களுக்கு இந்த தேர்தலில் மகிழ்ச்சிக்கு எதுவும் இல்லை

ஆனால் என்ன சுவாரஸ்யம் என்றால் அனைத்துக்கட்சிகளுக்குமே மகிழ்ச்சி அடைய ஏதாவது கிடைக்கப்போகிறது

அதிமுக

கட்சி உடைந்த சூழலிலும்கூட பதினைந்து சீட்டுகள் ஜெயித்துள்ளோம்.. எங்களுக்கு இதுவே வெற்றிதான்


திமுக

சென்ற தேர்தலில் ஒன்றில்கூட வெல்லாத நாங்கள் பத்துக்கும் மேல் வென்றுள்ளோம்... இது ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த வெற்றி


தினகரன்

அதிமுக ஒன்று பட்டு இருந்தால் 40லும் வெற்றி என்பதை வாக்குகளை பிரித்த்தன் மூலம் காட்டியுள்ளோம்..எங்கள் வெற்றி இது


கமல் , சீமான்

புதிய் வாக்காளர்கள் எங்களுக்கே வாக்களித்துள்ளனர்


பிஜேபி

மூன்று தொகுதிகளில் வென்றுள்ளதில் மகிழ்ச்சி


காங்கிரஸ்

முக்கியமான தொகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம்



ஆக அனைவருமே மகிழக்கூடிய தேர்தல் இது  2019

Saturday, April 20, 2019

தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்


 சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது திமுக

பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பெற்றது...  மூன்றாவது அணி என கருதப்பட்ட பிஜெபி தேமுதிக பாமக மதிமுக அணி இரு சீட்டுகள் பெற்று , திமுக அணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது



ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தல் அந்த அளவுக்கு மோசமாக இராது...

குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் வெற்றி உறுதி...

அதிமுக அணிக்கோ வெற்றி உறுதி என்ற நிலையில் 5 தொகுதிகள்தான் உள்ளன..

மிச்சம் 24 தொகுதிகளில் இழுபறிதான் காணப்படுகிறது..இந்த 24ல் 14ல் அதிமுகவும் 10ல் திமுகவும் நூல் இழை முன்னணி பெற்றாலும் அவை எப்படியும் மாறக்கூடும்...

திமுக வாக்குகள் கூடாவிட்டாலும் கணிசமான அதிமுக வாக்குகளை தினகரன் பிரிப்பதால் , சற்று வசதியான நிலையில் திமுக உள்ளது... அப்படி வாக்குகளை பிரித்தாலுமேகூட எளிதாக வெற்றி பெற முடியாத நிலையில்தான் திமுக உள்ளது


 நாம் கஷ்டப்பட்டு திமுகவை ஜெயிக்க வைக்கிறோம் என உணர்ந்து அதிமுகவினர் ஏதாவது காம்ப்ரமைஸ் செய்து ஒன்றிணைந்து சட்ட சபை தேர்தலை சந்திப்பார்கள் என்றே தோன்றுகிறது

அப்படி நடந்தால் , திமுகவின் மகிழ்ச்சி குறுகிய கால மகிழ்ச்சியாக ஆகி விடக்கூடும்


Thursday, April 18, 2019

வாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்





ஏழு மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி சென்று விட்டேன். எனக்கு முன்பே பலர் குழுமி இருந்தனர்

சுவர் விளம்பரங்கள்  , பூத் ஸ்லிப் , காரில் வந்து அழைத்துச் செல்லம் என பல பாரம்பரியமான விஷ்யங்கள் அழிந்து விட்டன

நெட் மற்றும் ஸ்மார்ட் போன் யுகத்தில் பூத் ஸ்லிப் தேவை இல்லை என ஊழியர்கள் அவர்களாகவே முடிவெடுத்து விட்டதால் , பல இடங்களில் பூத் ஸ்லிப் சரியாக வழங்கப்படவில்லை...

இன்னும் பலருக்கு நெட் மற்றும் போன் இணைப்பு இல்லை என்பதே யதார்த்தம்

ஐந்தரை மணிக்கெல்லாம் கட்சி பிரதினிதிகள் வந்து  . மெஷின் சரியாக இருக்கிறதா என சோதித்து , ஒரு மாதிரி தேர்தல் நடத்தி , முடிவை சரி பார்த்து , கை ஒப்பம் இட்டு , ஏழு மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க தொடங்கலாம் என்பதே திட்டம்

ஆனால் கட்சிபிரதி நிதிகள் யாரும் 5 மணிக்கு வரவில்லை.. அரசு ஊழியர்கள் பாவம் , தேவையின்றி காத்திருந்த்னார்

இதன் காரணமாக , தேர்தல் பல இடங்களில் தாமதமாக தொடங்கியது... பலர் பொறுமையின்றி கிளம்பி விட்டனர்,, வாக்கு எண்ணிக்கை குறைய இதுவும் ஒரு காரணம்

ஆனால் கட்சி பிரதினிதிகளை குறை கூற எந்த பத்திரிக்கையும் தயாராக இல்லை...  மெஷின் கோளாறு , அலுவலர்கள் மெத்தனம் என சேஃப் ஆக செய்தி வெளியிடுகின்றனர்

சென்ற தேர்தலை விட வாக்கு எண்ணிக்கை குறைவு என்பது யாருக்கு சாதகம் என தெரியவில்லை

சென்ற தேர்தலில் மோடிக்க்கு வாக்களித்தவர்கள் இம்முறை வாக்களிக்கவில்லை என வைத்துக்கொண்டால் , அது ராகுலுக்கு சாதகம்

சென்ற முறை நிலவிய ஆளும் கட்சி எதிர்ப்பலை இப்போது இல்லை என வைத்துக்கொண்டால் அது மோடிக்கு சாதகம்

புதிய வாக்காளர்கள் பலர் திரண்டு வந்து வாக்களித்தனர்..இவர்க்ளெல்லாம் பத்திரிகைகள் படிக்காதவர்கள்.. எனவே இவர்கள் வாக்குகளை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது

பொறுத்து இருந்து பார்ப்போம்

Sunday, April 14, 2019

புத்தாண்டில் ஓர் அழகான பாடல்

சின்ன வயதில் தீபாவளி , பொங்கல் கொண்டாடுவோம்

தமிழ்ப் புத்தாண்டு என ஒன்று வருவதும் தெரியாது..போவதும் தெரியாது

ஆனால் இன்று ஊரே மகிழ்ச்சியாக இதை கொண்டாடுகிறது... ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்...  பத்திரிக்கைகளில் சிறப்பு மலர்கள்

அரசியல்வியாதிக்ளின் பப்ளிசிட்டி ஸ்டண்ட் காரணமாக அவர்கள் செய்ய முனைந்த எதிர்மறை விஷ்யம் இப்படி ஒரு விளைவ ஏற்படுத்தியுள்ளது

பிரமாண்டமான இயற்கையின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் நாம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது

சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒரு பழைய பாடல் ஒளிபரப்பானது

படித்தால் மட்டும் போதுமா பட பாடல்.. படம் பார்த்து இருக்கிறேன்.. பாடல்களை ரசித்துள்ளேன்.. ஆனால் கண்ணதாசனின் இந்த் பாடலை இன்றுதான் ஆழ்ந்து ரசித்தேன்

 நாயகன் பாடாத பாடல் என்பதால் முன்பு கவனிக்கவில்லை

இப்போது கவனிக்கையில் பட எல்லைகளை தாண்டி விஸ்வரூபம் எடுக்கும் பாடல் என புர்ந்தது

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி , ராமமூர்த்தி இசை.. கண்ணதாசன் பாடல்... பிபீ ஸ்ரீனிவாஸ், ஏ எல் ராகவன் , வெங்கடேஷ் ஆகியோரின் இனிமையான குரலில் வித்தியாசமான மெட்டு... 

பாடலை இதை சொடுக்கினால் பார்க்கலாம்  



கோமாளி கோமாளி கோமாளி
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பிறந்தது ஐயா
உலகம் செய்த கோமாளித் தனத்தில் உள்ளம் பிறந்தது
உள்ளம் செய்த கோமாளித் தனத்தில் காதல் பிறந்தது
காதல் செய்த கோமாளித் தனத்தில் ஜோடி சேர்ந்தது
அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில்
சிரிப்பவன் கோமாளி
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால்
அறிஞனும் கோமாளி
படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன்
முதல் தரக் கோமாளி
ரொம்ப படித்தவன் போலே நடிப்பவன் உலகில்
என்னாளும் கோமாளி
காசுக்கும் பணத்துக்கும் ஆசை இல்லாமல்
வாழ்பவன் கோமாளி
வரும் காலத்தை கையில் பிடித்துக் கொள்ளாமல்
அலைபவன் கோமாளி
ஆசையில்லாமல் திருமணம் செய்து 
துடிப்பவன் கோமாளி
தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன்
என்னாளும் கோமாளி

Saturday, April 13, 2019

மகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி



ஒருவர் சாதிக்கிறார் என்றால் அதில் அவர் பிறந்த கால கட்டம் , பிறந்த ஊர் , பிறந்த குடும்ப சூழல் என பல விஷ்யங்கள் அடங்கி இருக்கின்றன என்கிறார் மால்கம் கிளாட்வெல் , தனது அவுட்லயர்ஸ் நூலில்..

உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் தென்னிந்திய கிராமம் ஒன்றில் ஏழை பெற்றோருக்கு பிறந்து இருந்தால் , வெளிச்சத்துக்கு வந்து இருப்பாரா என்பது கேள்விக்குறியே.. அவர் பிறந்த மா நிலம் , குடும்ப சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் சேர்ந்துதான் அவரை உருவாக்கியது... ஆனால் அதே மா நிலத்தில் , அதே குடும்ப சூழலில் , அதே கால கட்டத்தில் பிறந்த பலர் சோபிக்க முடியவில்லை.. இயல்பான திறமை , உழைப்பு அடிப்படை தேவை... அத்துடன் மற்ற விஷ்யங்கள் சேரும்போதுதான் வரலாற்று நாயகர்கள் உருவாகுகிறார்கள்

அப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாயகர்க்ளில் ஒருவர்தான்  டாக்டர் டி எஸ் சௌந்திரம் அம்மையார் அவர்கள்..

தலை சிறந்த காந்தியவாதிகளில் ஒருவர் , சின்னாளப்பட்டியில் இருக்கும் காந்தி கிராமம்,  மதுரையில் இருக்கும் காந்தி அருங்காட்சியகம் போன்றவைகளின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்... தலித் மக்களுக்காக பாடுப்பட்டவர் ( குறிப்பாக அவர்கள் கல்விக்கு உழைத்தவர் ) சட்டமன்ற உறுப்பினர் , மத்திய அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் என இவரைப் ப்ற்றி சொல்லிகொண்டே போகலாம்,   காந்தியுடன் நெருங்கிப்ப்ழகியவர் , காந்தியால் பல பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்டவர் , நேருவால் அமைச்சராக்கப்பட்டவர் , இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி என இவரது வாழ்க்கை சுவையானது மட்டும் அல்ல,... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும்கூட

அறம் வளர்த்த அம்மா என்ற பெயரில் வெளிவந்துள்ள  டாக்டர் டி எஸ் சௌந்திரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு முக்கியமான வரலாற்று ஆவணமாகும்

இதை எழுதியவர் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி பேராசிரியர் பி எஸ் சந்திரபிரபு

தொழிலதிபர் டி வி சுந்தரம் அய்யங்கார் , சமூக சேவகர் லட்சுமி அம்மையார் ஆகியோருக்கு பிறந்தவர் இவர்

செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதால் தரமான கல்வி , தன்னம்பிக்கை , தலைவர்கள் தொடர்பு , பெரிய மனிதர்கள் நட்பு , தைரியமான பேசும் பண்பு போன்றவை சின்ன வயதிலேயே கிடைத்து விட்டன

இந்த அனைத்து சாதகமான அம்சங்களும் பதவி பொன் பொருளை சேர்ப்பதற்கு பயன்பட்டு இருந்தால் , வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு  உலகில் வாழ்ந்து மறையும் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக மறைந்து இருப்பார்

ஆனால் அவரது இந்த சாதகமான அம்சங்கள் அனைத்தும் தேச தேவை , பெண் விடுதலை , தலித் கல்வி , சாதி ஒழிப்பு , ஏழ்மையை ஒழித்தல் என பயன்பட்டதால் , வரலாற்று நாயகராக நிற்கிறார் என பல சுவையான தகவல்களுடன் பதிவு செய்கிறது நூல்

இவரது 12 வயதிலேயே திருமணம் ஆகி விடுகிறது.. கணவரும் தேச சேவையில் ஆர்வம் கொண்டவர்.. அவர் ஒரு டாக்டர் என்பதால் , ஒரு முறை  பிளேக் நோயால்  ஊரே பாதிக்கப்பட்ட  சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்தார் .. அப்போது கையுறையில் இருந்த ஓட்டை காரணமாக பிளேக் நோய் இவரையும் தாக்கி உயிரைப்பறித்தது

கலங்கிப்போனார் சௌந்திரம்.. அந்த காலத்தில் எல்லாம் கணவன் மறைந்து விட்டால் வாழ்க்கையே முடிந்தாற்போலத்தான்,. ஆனால் இவர் கணவரின் ஆசைப்படி , டாக்டராகி சமூக சேவை செய்யும் பொருட்டு கடுமையாக படித்தார் .. டெல்லியில் மெடிக்கல் சீட் கிடைத்தது..  அங்குதான் சுசீலா நய்யார் என்பவரின் நட்பு கிடைத்தது.. அவரது குடும்பம் காந்தியுடன் நல்ல பழக்கம் கொண்டிருந்தது,..எனவே காந்தி டெல்லிக்கு வரும்போதெல்லாம் சுசீலா நய்யாருடன் சேர்ந்து காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு அடிக்கடி கிடைத்தது.. காந்தியுடன் நேரடி அனுபவம் கிடைத்தது

அங்கே காந்தியிடம் நேரடிப் பயிற்சி எடுத்து தலித் மக்களுக்காக உழைத்துக்கொண்டு இருந்த ராமச்சந்திரன்  என்பவரின் அறிமுகம் கிடைத்தது... ரசனை , சமூக சேவை , காந்திய ஈடுபாடு போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமை காரணமாக இருவரும் மணப்பது நன்மையாக இருக்கும் என முடிவெடுத்தனர்.. காந்தி தன் பாணியில் சோதனை வைத்த பின் , காதலை ஏற்றார்... குடும்பத்தினர் காதலை ஏற்கவில்லை என்றாலும் காந்தியே நேரடியாக இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்ற அபூர்வமான செய்தியை பதிவு செய்கிறது நூல் . இது மகிழ்ச்சிக்குரிய நாள் ,, இன்று மதிய உணவுடன் பாயசம் வழங்க்ப்படும் என அறிவித்து சேவா கிராம ஊழியர்க்ளை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் காந்தி

இந்த திருமணம் அந்த கால கட்டத்தில் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த திருமணமாகும்

  • அந்த கால சூழலில் விதவை மறுமணம் என்பது வெகு அபூர்வம்
  • இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்.
  • வெவ்வேறு மா நிலங்களை சேர்ந்தவர்கள்
  • வெவ்வேறு தாய்மொழிகளை பேசுபவர்கள்
இப்படி காந்திய தம்பதிகள் திரும்ணம் மூலம் புரட்சி செய்தனர


இந்த தம்பதியர் செய்த சேவைகளுக்கு உருவாக்கிய அமைப்புகளுக்கு நிகராக வேறொரு தம்பதியினரை பார்ப்பது மிகவும் அபூர்வம்.. அந்த அளவுக்கு கருத்தொற்றுமையுடன் பல் வேறு மக்கள் நலப்பணி ஆற்றினர்

மதுரையில் பணியாற்றிய முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் இவர்..

அன்னிய தேச துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆடை களைந்து அப்போதைய போலிசார் அவமானப்படுத்தியதையும் அதற்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தத்தையும் இந்தியன் படத்தில் காட்சிப்படுத்து இருப்பார்கள்

அது நடந்தது இவர் வசித்த ஊரில்தான்..இவரது சம காலத்தில்தான்.. அந்த கொடுமைக்கு எதிராக மக்களை திரட்டி கண்டன கூட்டங்கள் நடத்தினார் இவர்

ஆணும் பெண்ணும் பேசினால் ஃபைன் என இன்றும்கூட அவ்வப்போது சில பள்ளிகளில் காமெடிகள் நடக்கின்றன.. ஆனால் காந்திய இயக்கம் , ஆண்களும் பெண்களும் அறிவாற்றலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்..பயப்படக்கூடாது  என்பதை ஒரு நிபந்தனையாகவே வைத்து இருந்தது என்பது  சுவையான செய்தி

சேவை நிமித்தம் கிராமங்களுக்கு சென்றால் இரவாகி விடுகிறது... ஒரு பெண் எப்படி இரவில் தனியாக வருவது என கேட்கும் பெண்களிடம் , இதில் என்ன பயம்... அண்ணா..  தாமதமாகி விட்டது... இரவில் தங்க்கிக்கொள்ளலாமா என சகோதர உரிமையுடன் யாரிடமாவது கேட்டு நிலைமையை சமாளியுங்கள்  என உற்சாகப்படுத்துகிறார் அம்மையார்...   போலிஸ் பாதுகாப்பு கேட்கும் பெண்களிடம் போலிஸ் எல்லா இடங்களுக்கும் வர முடியுமா... நாம் தான் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என தைரியப்படுத்தி , இரவு பகலாக பயணித்து சேவை செய்த பெண் சேவகர்களை எந்த அசம்பாவிதங்களும் இன்றி வழி நடத்திய அம்மையாரைப்பற்றி படிக்கும்போது வியப்பாக இருக்கிறது

இதில் இன்னொன்றும் இருக்கிறது.. பெண்ணுக்கு துணிச்சல் வேண்டும் என்றாலும் தேவைப்படும்போது ஆணுடன் இணைந்து பணியாற்ற தெரிந்து இருக்க வேண்டும்

கஸ்தூரிபா நிதி அமைப்பு ஒன்று அமைக்கப்ப்ட்டு இருந்தது..இதை பயன்படுத்தி மாதிரி கிராமங்கள் அமைத்து சேவை புரியுமாறு சொல்லி இருந்தார் காந்தி

சென்னைக்கு அருகே அழகான கிராமம் ஒன்றில் இடம் தர சிலர் முன் வந்தனர்//// அனைத்தையும் சென்னையிலேயே அமைக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் போல அல்லாமல் , இதை தென் மாவட்டத்தில் தான் அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தார்... ( சென்னைக்கு அருகே காட்டப்பட்ட கிராமத்தில் மருத்துவ மனை அமைக்கப்பட்டது )

அப்படி அமைந்ததுதான் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமம்... இதற்கு தேவையான உதவிகளை செய்தவர் இலகுமையா என்ற செல்வந்தர் செய்தார்

இவர் குறித்து ஒரு ஃபிளாஷ்பேக்

1946ல் காந்தி ரயிலில் மதுரை சென்று கொண்டு இருந்தார்.. சின்னாளப்பட்டி அருகில் உள்ள அம்பாத்துரை ரயில் நிலையத்தில் அவரைப்பார்க்க தொண்டர் வெள்ளம் காத்திருந்தது

ஆனால் அங்கு ரயில் நிற்காது என சொல்லி விட்டனர்

இலகுமையா ஒரு திட்டம் போட்டார்.. ரயில் அம்பாத்துரயை நெருங்கும்போது திடீரென கைகாட்டி மரத்தின் கை இறக்கப்பட்டது... ரயில் நின்று விட்டது... அனைவரும் காந்தியை கண் குளிர பார்த்தனர்

அந்த பகுதியில்தான் கஸ்தூர்பா நிதியில் கஸ்தூர்பா கிராமம் அமைக்க திட்டமிட்டனர்

சௌந்திரம்தான் இதற்கு அந்த பெயர் வேண்டாம்.. காந்தி கிராமம் என பெயர் வைப்போம் என்றார்,...

காரணம் கஸ்தூர்பா நிதி வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்.. ஆனால் ஆண்கள் பங்களிப்பு இன்றி ஒரு அமைப்பு பெரிய அளவில் வளராது என்று நினைத்த இவர் காந்தி கிராமம் என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என வாதிட்டார்...

அனைவரும் இதை ஏற்றனர்,.. காந்தியும் ஏற்றார்

மருத்துவர்களாகிய நாம் கல்லூரிகளில் கற்றதை வைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.. மக்களிடமும் கற்று சேவையை பலப்படுத்த வேண்டும் என்ற இவர் அறிவுரை அனைவருக்கும் ஊக்க மருந்தாக பயன்பட்டது

இரு முறைகள் சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்றார்... ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகி நேருவால் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார்

இவரது ஐந்தாண்டு பதவிகாலத்தில் நேரு , லால் பகதூர் சாஸ்த்ரி , இந்திரா காந்தி என மூவர் மந்திரி சபை அமைத்தனர்... மூன்றிலுமே இவர் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது’

அயல் நாட்டு உறவு , மொழி பெயர்ப்பு , நீர்ப்பாசனம் என இவர் தொடாத துறைகள் இல்லை

எல்லாவற்றையும் விட இவரது முக்கிய பங்களிப்பு ஒடுகப்பட்டோர் கல்வி பெறுவதில் இவர் காட்டிய நேரடி அக்கறைதான்

சர்வோதய தலைவர் கிருஷ்ணம்மாள் ஜகனாதன் , தன்னளவில் மிகப்பெரிய தலைவர்... அவர் சௌந்திரம் அம்மாவால் உருவாக்கப்பட்டவர்களில் ஒருவர்தான்

பட்டிக்காட்டில் இருந்து சென்ற என்னை ஆவலோடு அணைத்துக்கொண்டார்...தாயுடன் சேர்ந்த கன்றுபோல அவருடன் இணைந்தேன்.. பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து நான் அணியும் உடையில் கூட அக்கறை செலுத்திய அன்பு இன்னும் பசுமையாக நினைவுள்ளது... என நினைவுகூர்கிறார் கிருஷ்ணம்மாள்

முதுகுளத்தூர் சாதி கலவரம் உட்பட பல சாதி கலவரங்களில் இவர் தலைமையிலான காந்திய இயக்கம் அமைதிக்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளதை நூல் பட்டியலிட்டுள்ளது


 நமக்கு வில்லன்களாகவும் கோமாளிகளாகவும் அயோக்கிய அரசியல்வாதிகளால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல நல்லவர்கள் நூல் முழுதும் ஆங்காங்கு வருகின்றனர்.. ஆர் வெங்கட்ராமன் , காமராஜர் , ராஜாஜி போன்ற அரசியல்வாதிகள் மட்டும் அல்ல.. அரசியலில் இல்லாத பல பிரமுகர்களின் அறிமுகமும் கிடைக்கிறது

இவருக்கு சிலை வைத்து பாராட்ட சிலர் முயன்ற போது , அப்படி சிலை வைத்தால் அந்த சிலை அருகில் உண்ணா விரதமிருந்து  உயிர் விடுவேன் என கண்டிப்பாக சிலை முயற்சியை கைவிட வைத்தவர் இவர்... எனக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க.. ஆனால் இவ்வளவு தூரம் சொல்றீங்க ..ஹிஹி என்ற இப்போதைய போலித்தன மறுப்பை பார்த்த நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது

தலித் எழுத்தாளர் , தலித் இலக்கியம் என சொல்லக்கூடாது ,  தலித்துகளின் இலக்கியமே உண்மையான இலக்கியம்.. மற்றவர்கள் எழுதுவதற்கு வேண்டுமானால் சிறப்பு பெயர் இடுங்கள்..  என கோரிக்கைகள் என எழும் சூழலில் வாழும் நமக்கு , இவர் பள்ளிகளில் வசிப்பிடங்களில் சிறப்பு பெயர் இடுவதை தடுக்க குரல் கொடுத்தார் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது... அதாவது  தலித் பள்ளி ,  தலித் மருத்துவமனை என்பதெல்லாம் வேண்டாம்.. பொதுவான பெயர் வேண்டும் என குரல் கொடுத்தார்

தன் மரணத்துக்கு பின் , தன் உடலுக்கு மாலை மரியாதை கூடாது.. அழக்கூடாது.. தன் கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லி அவை நடப்பதை உறுதி செய்யும் வண்ணம் ஏற்பாடுகள் செய்து விட்டுதான் க்ண் மூடினார்.. உண்மையிலேயே தன் காலத்தை மீறி சிந்தித்த யோசித்த முற்போக்குவாதி இவர்..


அம்மா என அன்புடன் அழைக்கப்பட்ட இவர் செய்தவற்றைத்தான் உண்மையான புரட்சி என்றும் இவரைத்தான் புரட்சித்தலைவி என்றும் அழைக்க வேண்டும்

வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாக படியுங்கள்

அறம் வளர்த்த அம்மா

- பி எஸ் சந்திரபிரபு

Thursday, April 11, 2019

பெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்



ஒருவரை எப்படி அழைக்கிறோம் என்பதில் அவர் மீதான நம் பார்வை தெரியும்

உதாரணமாக ரஜினி இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்

ஒரு முறை ஒரு பாடலை எழுத கவிஞரை அழைத்து வா என்றார் இளையராஜா

கவிஞர்னு சொன்னா எப்படி.. எந்த கவிஞர்னு சொல்லுங்கய்யா என கேட்டார் உதவியாளர்

யோவ் கவிஞர்னு நான் சொன்னா அது கண்ணதாசனைத்தான் குறிக்கும் என்றார் ராஜா..

கண்ணதாசன் எம் ஜி ஆரை ஆண்டவனே என அழைப்பார்... எம் ஜி ஆரும் இவரை ஆண்டவனே என்றுதான் அழைப்பார்

கண்ணதாசன் அண்ணாவின் மீதான அன்பு காரணமாக தன் மகனுக்கு அண்ணாதுரை என பெயரிட்டார்

ஒரு முறை அண்ணா கவிஞர் இல்லம் வந்து பேசிக்கொண்டு இருந்தார்


அப்போது சிறுவன் அண்ணாதுரை அழுது அடம்பிடித்துக்கொண்டு இருந்தார்

“ டேய் அண்ணாதுரை,,,பேசாம இருக்கியா. இல்லை அடிவாங்கப்போறியா என சத்தம் போட்டார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , என்னை திட்டுவதற்கு நல்ல வழியை கண்டு பிடித்து இருக்கிறாயே..  என்றார்

அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. என பதறினார் கண்ணதாசன்

அண்ணா சிரித்தபடி , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன என்றார் ..

ஆனாலும் அன்று முதல் தன் பையனை துரை என அழைக்கலானார் கவிஞர்... ஒரு போதும் அண்ணாதுரை என அழைக்கவில்லை

நோட்டா எனும் ஆயுதம்


  நாடகம் இலக்கியம் சினிமா என பல துறைகளில் ஆர்வம் காட்டினாலும் ஞா நியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக நோட்டா மீது அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வை சொல்லலாம்..

எதிர்ப்பு ஓட்டுகள் மூலம் வெற்றி என்ற ஃபார்முலாவை கண்டு பிடித்துள்ள அரசியல் கட்சிகள் ஜன நாயகம் என்பதையே கேலிக்குரியதாக மாற்றி விட்டன,

இவர் நல்லவர்,, நல்லாட்சி தருவார் என நினைக்கிறேன் , எனவே இவருக்கு வாக்களிக்கிறேன் என யாரும் வாக்களிப்பதில்லை

எதிரே நிற்பவன் சரியில்லை... எனவே குறைந்த பட்ச அயோக்கியனாகிய இவனுக்கு வாக்களிக்கிறேன் என வாக்களிக்கிறார்கள்

எனவேதான் அரசியல் காலண்டரில் யாருக்கும் கடைசிப்பக்கம் இல்லாமல் போய் விட்டது

எவ்வளவு பெரிய ஊழல் வழக்கில் சிக்கியவனும் , இனப்படுகொலை செய்தவனும் , மத ஜாதி படுகொலைல்கள் செய்தவனும் , இன்னொரு அயோக்கியனை ஒப்பிட்டு காட்டி ஆட்சிக்கு வந்து விட முடிகிறது

ஒருவர் பிடிக்கவில்லை என்பதற்காக இன்னொரு அயோக்கியனுக்கு வாக்களிக்கலாகாது

வாக்களிப்பை புறக்கணிக்கவும் கூடாது’

யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்... இதனால் என்ன பயன்? குறிப்பிட்ட அளவு கணிசமான வாக்குகளை நோட்டா பெற்றுவிட்டால் , சட்டப்படி அது யார் வெற்றியையும் பாதிக்காது என்றாலும் அரசிய்ல் கட்சிகள் மக்கள் கோபத்தை உணரும்... இவ்வளவு அதிருப்தி வாக்குகள் இருப்பதை அறிந்து புதிய சக்திகள் அரசியலுக்கு வரக்கூடும்...


நோட்டா பிடிக்கவில்லை என்றால் , இருப்பதில் நல்ல சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்

தோற்கப்போகிறவருக்கு ஏன் வாக்கு என நினைப்பது பெரிய தவறு.. நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு என்ற செய்தி பதிவு செய்யப்பட வேண்டும்

தென் சென்னை தொகுதியில் பொது உடைமை இயக்கத்தை சேர்ந்த் தோழர் ரோசி ரம்பம் சின்னத்தில்  சுயேட்சையாக போட்டி இடுகிறார்

பாஜக் என்ற தீமை உருவாக காரணமே காங்  திமுக கட்சிகள்தான்.. மீண்டும் மீண்டும் இவர்களுக்கே வாக்களிக்காதீர்கள் ..எங்களுக்கு வாய்ப்ப்ளியுங்கள் என்கிறார் இவர்

இது போன்ற புதிய கொள்கைப்பிடிப்புள்ள நல்லோரை மக்கள் மன்றத்தில் பேசி நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது நம் கடமை

Wednesday, April 10, 2019

எந்த மந்திரம் சக்தி வாய்ந்தது?



தினம் தோறும் சுந்தர காண்டம் படித்தால் நல்லது...லலிதா சக்ஸ்ர நாமம் , ருத்ரம் , விஷ்ணு சகஸ்ர நாமம் என ஒவ்வொன்றிலும் நல்லது இருப்பதாக சொல்வார்கள்

எதைச்சொன்னால் நல்லது என்ற குழப்பத்தில் பலர் எதையும் படிப்பதில்லை.. நம்பிக்கை இல்லை ..எனவே படிக்கவில்லை என்பது வேறு

குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கை இருப்போருக்கும் குழப்பம் இல்லை..

 நம்பவும் இல்லை.. நம்பாமலும் இல்லை...  முயன்று பார்க்கிறேன்.. பலன் தெரிந்தால் ஓகே..இல்லாவிட்டால் விட்டு விடுகிறேன்.எதைப்படிக்கலாம் என்பவருக்குதான் குழப்பம்


குழப்பம்தான் தெளிவுக்கு வழி வகுக்கும் என்பதால்  எந்த முடிவிலும் இல்லாமல் தேடலுடன் இருப்பது நல்லது

என்னைப்பொருத்தவரை குர் ஆன்  பைபிள் உட்பட அனைத்தையுமே படிக்கிறேன்

படிப்பதால் நன்மை கிடைக்கிறதா கண்டிப்பாக கிடைக்கிறது...

புறவயமான நன்மைகளும் உண்டு.. அகவயமான நன்மைகளும் உண்டு


லலிதா சகஸ்ர நாமம் கேட்பதாலோ படிப்பதாலோ , சிவன் கோபம் அடைந்து  , தக்காளி என்னை விட அவ பெரிய தெய்வமா என நம் மீது தீச்செல் இடப்போவதில்லை

எதைப்படித்தாலும் கேட்டாலும் , மதம் கடந்த ஒரே இறையைத்தான் அது சென்று அடையும்... இறை என்பது நம்பாவிட்டாலும் , படிப்பதன் மூலம் நிறைவை அனுபவிக்கும் “ நான் “ என்பது மாறப்போவதில்லை

ஆக எதைப்படித்தாலுமே நல்லதுதான்...

ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே ஊன்றி படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு விதம்.. மெக்கானிக்கலாக கடமைக்கும் படிக்காமல் , அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு


ஜென்னில் சொல்வது போல , எல்லாவற்றையும் விட முக்கியம் , ஆரம்பித்து விடுதலே... ஏதோ ஒன்றை ஆரம்பித்து விடுவோம்



Sunday, April 7, 2019

சிலம்பொலியார்- அஞ்சலி



தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் என்றாலும் அவர் செய்த பணிகள் காலம் வென்று வாழும்

மூன்று முதல்வர்களுடன் பழகியவர் , தமிழ் மா நாடுகளில் முக்கிய பங்காற்றியவர் , பல நூல்கள் படைத்தவர் , பல மேடைகள் கண்டவர் , சொற்பொழிவுகள் பல ஆற்றியவர் என்பதை எல்லாம் விட , கடைசி மூச்சு வரை தமிழ்ப்பணியில் ஆர்வம் கொண்டு இருந்தார் என்பது மிகப்பெரிய விஷ்யமாகும்

ரத்த அணுக்களில் அந்த அளவு தமிழ் பற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்

கடைசி ஆண்டுகளில் கூட அவரை கூட்டங்களில் பார்க்க முடிந்தது,. அவரிடம் ஆசி பெற பலர் போட்டி போடுவார்கள்

இசை பட வாழ்ந்து புகழுடன் மறைந்த அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Saturday, April 6, 2019

குலக்கல்வி தமிழ் - ராஜாஜி


ஏழைகளும் கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேர நெகிழ்வுத்தன்மையுடன் பள்ளிகளை நடத்த உத்தரவிட்டார் ராஜாஜி... அந்த காலத்தில் பலர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள்.. சிறுவர்கள் வீட்டில் பெற்றோர் வேலைகளுக்கு உதவியாக இருக்கட்டுமே என நினைப்பார்கள்

சரி... தாராளமாக அதை தொடருங்கள்.. அதோடு பள்ளிகளுக்கும் அனுப்புங்கள்..அதற்கேற்ப பள்ளி நேரம் இருக்கும் என சொல்லி அவர்களையும் பள்ளிகளுக்கு வரவழைத்தார் ராஜாஜி... பெற்றோர் தொழிலையே குழந்தைகள் செய்ய வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது.. ஆனாலும் இதை குலக்கல்வி என கொச்சைப்படுத்தினர்... கல்வி புரட்சி ஏற்படுத்திய தலைவரை இப்படி நன்றி கெட்ட தனமாக விமர்சித்ததற்கு பலனாகத்தான் இன்று நம் தகுதிக்கேற்ப தலைவர்களை இயற்கை கொடுத்துள்ளது

தமிழ் மீது ராஜாஜி கொண்ட பற்றுக்கு ஓர் உதாரணம்




வங்காள கவர்னராக, ராஜாஜி, 1947-ல் பதவி ஏற்றபோது, அந்த வரவேற்பு விழாவி்ல் சின்ன அண்ணாமலையை    பேச வைத்தனர். நான் தயங்கிய போது, ராஜாஜி, 'சும்மா தமிழிலேயே பேசுங்க... தி.கே.சி., ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்...' என்றார். 

சரி என ஒப்புக்கொண்டு , சின்ன அண்ணாமலை மைக் அருகே சென்றபோது , ஒரு நிமிடம் என சொன்ன ராஜாஜி , சின்ன அண்ணாமலை கழுத்தில் மாலை அணிவித்தார்...கூட்டத்தாரின் கரகோஷம் அடங்க சற்று நேரம் ஆனது

பிறகு பேச ஆரம்பித்தார்...ராமனுடைய ஆண்மையும், கிருஷ்ணருடைய ராஜதந்திரமும், புத்தருடைய துாய்மையும், சிபி சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தி மற்றும் வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர், ராஜாஜி. 
'ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்கு புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால், சென்னைக்கு வந்து ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேச பக்தியை ஊட்டினார். சித்தரஞ்சன் தாஸ், நாடு முழுவதும் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன் ராய், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நேதாஜி முதலானவர்களால் தமிழகத்துக்கு எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர்பட்ட வங்காளத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம், செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். 
'ஆனால், அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக, எங்கள் ராஜாஜியை, உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம் நுாறு ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்...' என்று அவர் கூறியபோது, சபையினரிடையே, 'ராஜாஜிக்கு ஜே...' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது



விழா முடிந்ததும் சின்ன அண்ணாமலை ராஜாஜியிடம் கேட்டார்... என்னை ஏன் பேச சொன்னீர்கள்  .டிகேசி பேசினால் போதாதா?

ராஜாஜி சொன்னார்...

அவர் ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது.. வங்காளிகள் நம் தமிழையும் கேட்கட்டுமே என்பதற்காகத்தான் உங்களை தமிழில் பேச வைத்தேன்...உங்களை யாரோ சாதாரணமான ஒருவர் என அவர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு மாலை அணிவித்தேன்.. கவர்னரே மாலை அணிவிக்கும் அளவுக்கு பெரிய ஆள் என அவர்கள் உணர்ந்து சிரத்தையாக கேட்பார்கள் அல்லவா என்றார் ராஜாஜி

இந்த மதியூகமும் தமிழ்ப்பற்றும்தான் ராஜாஜி

பூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா


சத்ய சாய் பாபா உரையாடலை படித்த பலர் , இது போன்ற ஞான மார்க்கத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றனர்,..

உண்மையில் ஞானம் , கர்மம் , பக்தி என்பதெல்லாம் ஒன்றுதான்.. உதாரணமாக உருவ வழிபாடு செய்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அடையாத ஞானமா.. செய்யாத சேவையா..

ஆகவே இந்த பிரிவினைகள் தேவை இல்லை

எல்லா இடங்களில் இருந்தும் நல்ல விஷ்யங்களை கிரகிப்பதே முக்கியம்

----------

வெளி நாட்டினர் சிலர் சாய் பாபாவிடம் நிகழ்த்திய உரையாடல்

ஸ்வாமி.. நினைவாற்றல் என்பது ஆன்மிக வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவசியம்?

பாபா- இறந்த கால சுமைகள் என்பது ஆன்மிகத்துக்கு தேவை இல்லை... கஷ்டப்பட்டு ஒன்றை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.. ஆனால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பின் மந்திரங்கள் , குரு உபதேசம் மறக்காது


ஒரு முறை அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டான்,,, எனக்கு கடந்த பிறவிகள் எல்லாம் நினைவு இல்லை.. உனக்கு மட்டும் எப்படி பூர்வஜன்ம நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன

கிருஷ்ணன் கேட்டான்.. போன மாதம் காலை உணவாக என்ன சாப்பிட்டாய்?

அர்ச்சுனன் சொன்னான்.. மறந்து விட்டதே

போன வருடம் முதன் முதலாக யாரைப்பார்த்தாய்?

நினைவு இல்லையே

உனக்கு முதன் முதலில் வில் வித்தை கற்றுத்தந்தவர் யார்?

நினைவு இருக்கிறது

போன வருடம் , போன மாதம் நீ உலகில் இருந்தாய்.. ஆனால் உனக்கு அவை நினைவு இல்லை. நினைவு இல்லை என்பதால் போன வருடம் என்பது இல்லை என ஆகி விடாது

சில விஷ்யங்கள் உனக்கு நினைவு உள்ளது. காரணம் அவற்றின் மீது மட்டும் உனக்கு அக்கறை உண்டு

இப்போது புரிகிறதா... எனக்கு எதுவுமே மறப்பதில்லை.. காரணம் எனக்கு எல்லாவற்றின் மீதுமே அக்கறை உண்டு



Friday, April 5, 2019

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா? பிரார்த்தனை குறித்து சாய்பாபா


புட்டபர்த்தி சாய் பாபா என்றால் , சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்த்தது ,,  அவர் செய்யும் மந்திர ஜாலங்கள் போன்றவைதான் பலர் நினைவுக்கு வரும்.. ஆனால் வெளி நாட்டினர் அவருடன் ஆழமான விவாதங்கள் நிகழ்த்தியுள்ளனர்

-------------------------


ஒருவரின் கர்மா ஒத்துழைத்தால்தான் அவரது பிரார்த்தனை ஏற்கப்படுமா?

பாபா- இல்லை... ஒருவரது இதயம் , சிரத்தை ஆகியவற்றை பொருத்து கர்மாவையும் மீறி இறையருள் வேலை செய்யும்

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.. எனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா... அவரிடம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

பிரார்த்தனை என்பது ஒரு ஆன்மிக பயிற்சியாகும்.. எல்லாம் உன் செயல்... நீ பார்த்து எனக்கு நல்லது செய் என கேட்குமபோது ஈகோ அழிகிறது,,, இதயத்தில் அன்பு மலர்கிறது... கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் நீ கேட்க வேண்டும் என்பது உன் நல்லதற்காகத்தான்... உதாரணமாக குழந்தை சின்ன வயதில் வாய் விட்டு அழுவது ஒரு வகை உடற்பயிற்சிதான்... ஒரு தாய்க்கு குழந்தையின் பசி தெரியாது என்பதல்ல்... ஆனால் அழுதவுடன் பால் கொடுப்பதுதான் நல்லது

பிரார்த்தனை என்பது ஒரு வகையில் பிச்சை எடுப்பது போல தோன்றுகிறதே?

இல்லவே இல்லை... உன்னை விட பெரிய மகான்கள் , இறைசக்தியுடன் நீ நடத்தும் உரையாடல்தான் , பிரார்த்தனை என்பது... பெரியவர்களுடன் உரையாடுகையில் நீயும் அவர்கள் அளவுக்கு உயர்கிறாய்...  இன்னொரு வகையில் பார்த்தால்  , கடவுளிடம் உனக்கு வேண்டியதை கேட்கும் முழு உரிமை உனக்கு இருக்கிறது.... உன் உரிமையைத்தான் நீ கேட்கிறாய்


எனக்கு எந்த தேவையும் இல்லாதபோது என்னவென பிரார்த்திப்பது?

மன அமைதி வேண்டும் என்று கேள்

மன அமைதி என்பது என்ன?

உண்மையில் மனம் என ஒன்றும் இல்லை... வெயிலின் இயல்பு சுடுவது , பனியின் இயல்பு குளிர்வது என்பது போல மனதின் இயல்பு என்பது அலைவது... அலையாத அமைதியான மனம் என பேச்சு வழக்கில் சொல்கிறோம்... உண்மையில் மனம் அழிவது என்பதுதான் விரும்பத்தக்கது




Thursday, April 4, 2019

இலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெளியான படம் - கை கொடுக்கும் கை

பல படங்களை ரீமேக் செய்கிறார்கள்...ரீமேக் செய்தால் , ஒரிஜினல் படத்தை விட்டு இன்று நன்றாக ஓடும் வாய்ப்பு உள்ள படம் கை கொடுக்கும் கை

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி , ரேவதி நடிப்பில் வெளியான படம் இது

ஆக்சன் ஹீரோவாக தோன்றும் ரஜினி பண்பட்ட நடிப்பை காட்டுவார்.. ரேவதியும் பார்வையற்ற பெண்ணாக நடித்து இருப்பார்

பார்வையற்ற சூழலை பயன்படுத்தி பண்ணையார் ரேவதியிடம் தவறாக நடந்து கொள்வார்

அவனை கொன்று சிறைக்கு சென்றால் பாதிக்கப்படபோவது தன் மனைவிதான்

மனைவி மீதான காதல்தான் முக்கியம் என நினைப்பார் ரஜினி.. ரேவதியோ தான் களங்கப்பட்டு விட்டதாக நினைத்து அழுவார்

உன் மீது எந்த களங்கமும் இல்லை.. நீ கெட்டுப்போகவும் இல்லை...   கெட்டுப்போனது இந்த ஊர்தான்...  இந்த கேவலமான ஊர் நமக்கு வேண்டாம்,, வேறு ஊருக்க்கு செல்வோம்.. எல்லாவற்றையும் மறந்து புதிதாக வாழ்வோம் என தன் மனைவியை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு சென்று விடுவார் ரஜினி

இப்படி ஒரு கிளைமேக்ஸ் எந்த படத்திலும் வந்தது இல்லை.. குறிப்பாக ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இப்படி ஒரு முடிவை யாருமே வைக்க மாட்டார்கள்.. ஒரு விஜயோ , அஜீத்தோ  , எம் ஜி ஆரோ நடிக்கவும் மாட்டார்கள்...

ஜெயகாந்தனின்   அக்னி பிரவேசத்துக்கு நிகரான இலக்கியத்தரமான ஒரு படைப்பு என்ற பெருமை மட்டுமே இந்த படத்துக்குப்போதும்.. முரட்டுக்காளை போலவோ , தம்பிக்கு எந்த ஊரு படம் போலவோ ஓட வேண்டியது இல்லை என்ற தெளிவுடன் படத்தில் பணியாற்றிய ரஜினிக்கும் மகேந்திரனுக்கும் தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டுள்ளது


Wednesday, April 3, 2019

மகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி

 ( சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது,, மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு )


தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த மகேந்திரன் சில வருடங்களாக சற்று ஒதுங்கி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம் இன்னும் அப்படியே இருப்பதை கடந்த வாரத்தில் உணர்ந்தேன்.. உயர்ந்த ரசனைகள் கொண்டவர்கள் , படைப்பாளிகள் பலர் மகேந்திரனின் படைப்புகளை அனுபவித்து ரசித்து இருப்பதை உணர முடிந்தது... நான் எழுதும்போது விடுபட்ட தகவல்கள் , பிழைகள் , மாற்று கோணங்கள் என ஃபீட் பேக் கொடுத்து அசத்தி விட்டார்கள்... மகேந்திரன் ரசிகர் கிளப்பில் நான் தான் ஜூனியர் போல.. ஒவ்வொருவரும் அந்த அள்வுக்கு விஷ்யம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

மெட்டி படம் பார்க்காமல் , உங்கள் அனுபவம் முழுமை அடையாது என நண்பர் காரிகன் உட்பட பலர் சொல்லி வந்தனர்.
கணவன் மனைவி உறவு , கை இல்லாத நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவனின் தங்கை பாசம், ஒரு பெண்ணின் தூய காதலால் நெகிழும் கிரிமினல், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகள், மனித மனதின் வக்கிரங்கள் , பெண் மனதின் புதிர்கள் என எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே..இதில் என்ன சொல்லப்போகிறார் என ஒரு வித ஆவலுடன் படம்பார்த்தேன்..

ஆரம்ப காட்சியிலேயே மெட்டி, மெட்டியை மனித மனிதனின் சிறந்த தன்மை , மகிழ்ச்சி போன்றவற்றுடன் இணைத்து நமக்கு அறிமுகம் செய்வது என ஆரம்ப காட்சிகள் கவிதைபோல இருக்கின்றன... இளையராஜாவின் பாடல் இதற்கு பக்கத்துணையாக இருக்கிறது..

தன் இரு மகள்களுடன் ( ராதிகா , வடிவுக்கரசி ) வசிக்கும் தாய் ,  அவர்கள் வீட்டு ஓனர் , எதிர்பாராத விதமாக அவர்களை சந்திக்க நேரும் நாயகன் ( சரத்பாபு )அவர்களுக்கிடையே என்ன உறவு ,  நாயகனின் தந்தை ( செந்தாமரை ) என முக்கிய கேரக்டர்கள் எல்லாம் பதினைந்தே நிமிடத்தில் அறிமுகம் ஆகி விடுவதை திரைக்கதையை கற்க விரும்புபவர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும்..

தன் தந்தையின் போக்கு நாயகனுக்கு பிடிக்கவில்லை..தந்தை ப்யங்கர குடிகாரர்...குறிப்பாக கைக்குழந்தையுடன் தன் சித்தியை ( தந்தையின் இரண்டாம் தாரத்தை ) வீட்டை விட்டு துரத்தியது மனதில் முள்ளாக இருக்கிறது... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி இன்னோர் ஊருக்கு போய் விடுகிறான்.

அங்கே ஒரு பெண் தன் இரு மகள்களுடன் வசித்து வருகிறாள்.. வீட்டு ஓனர் ஒரு குஜராத்திக்காரர்... தாயும் மகள்களும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்கின்ன்றனர்..அந்த வீட்டுக்கு நாயகன் வீடு தேடி வருகிறான்... கடைசியில் பார்த்தால் ,  அன்று தன் தந்தையால் துறத்தப்பட்ட சித்திதான் இந்த பெண்...அந்த இரு மகள்களும் தன் தங்கைகள் என உணர்கிறான்..

இந்த இடத்தில் இடவேளை என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை...இது எல்லாம் நடப்பது பத்தே நிமிடங்களில் !!
எல்லாம் காட்சிபூர்வமாக , வசனங்கள் குறைவாக வைத்து சொல்லப்படுவதால் , இவ்வளவு சுருக்கமாக ஆனால் தெளிவாக ஆழமாக சொல்ல முடிகிறது..

அந்த பெண் துரத்தப்படும்போதே , வயிற்றில் குழந்தையுடன் வந்தவள்..ஆனால் அவ்ள் கண்வன் உட்பட எல்லோருமே அந்த இரண்டாவது மகளை அந்த வீட்டு ஓனருக்கு பிறந்தவள் என தவறாக பேசுகிறார்கள்...

அந்த வீட்டு ஓனர் கொஞ்ச நேரம் வந்தாலும் அவரது மேன்மை நமக்கு புரிந்து விடுகிறது... கல்யாண புரோக்கராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சிறிய கேரக்டர்களும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது...அவருக்கு ஆறு மகள்கள்...அவர்களில் ஒருவரை நாயகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்... ஆனால் , அந்த மகள்கள் பாடும் பாசப்பாடல்களோ. சரத்பாபுவுக்கும் அவர்க்ளுக்கும் டுயட்டோ கிடையாது,,இன்னும் சொல்லப்போனால் , அவர்கள் நேரடியாக காட்டபடுவதே இல்லை...அவர்கள் இருப்பு மட்டும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது... இப்படி தேவையற்ற காட்சிகள் எதுவுமே இல்லை..

அந்த தாய் இறந்து விடுகிறாள்..மீண்டும் அந்த வீட்டில் மெட்டி ஒலி சத்தம் கேட்க வேண்டும்...சந்தோஷம் திரும்பவேண்டும் , என கூடப்பிறக்காத தங்கைகளுக்காக அண்ணன் பாடுபடுவதே கதை...அன்பிற் சிறந்த தவம் இல்லை..அன்புக்கு அழிவும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்..

அன்பு என்றால் பாலுணர்வு என்ற புரிதலில் இருக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை அன்பு , அவர்களுக்கிடையே ஓர் இனிமையான பாடல் என ஒரு வித்தியாசமான அன்பை காட்டி இருக்கிறார் மகேந்திரன்...

மை சன்,என்னை அடிக்காதீங்க மை சன் என அலப்பரை செய்யும் லட்டான கேரக்டர் செந்தாமரைக்கு... தூள் கிளப்பி இருக்கிறார்...

படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது

இயல்பான ஹாஸ்யம்... முழுக்க முழுக்க ஹாஸ்யத்தின் அடிப்படையில் ஒரு பாடல்.. தன்னை காதலிப்பதாக சொல்லும் ராஜேஷிடம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்..தன் கல்யாணம் எப்படி நிகழ வேண்டும் என சொல்வதாக ஒரு பாடல்... அருமை...
 மேற்சொன்ன அந்த பாடல், மெட்டி ஒலி காற்றோடு பாடல் என்ற பாடல் , சந்த கவிதைகள் பாடிடும் என்ற இன்னொரு பாடல் என எல்லாமே சூப்பர் பாடல்கள்... இந்த பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்..

ஆனால் இளையராஜாவின் மேதமை. அவரது வித்தியாசமான முயற்சி , பாடல் வரிகள் என என் மனதை கவர்ந்த்து இந்த பாடல்தான்  rarest song- கேட்க தவறாதீர்கள்  ... மெட்டி மெட்டி என ஆங்காங்கு வார்த்தைகள் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது அல்லவா..

டீக்கடையில் சில பாடல்களை கேட்டால் , இது என்ன படம் என டீக்கடைக்காரரை கேட்போம்...அந்த அளவுக்கு அந்த பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்.. அதுபோல மேற்கண்ட பாடல் என் உள்ளம் கவர்ந்தது... இதை எழுதியது யார் என தேடினேன்... அந்த பாடலைபடைத்தவர் மதுக்கூர் கண்ணன்...

இவர் யார் என விழி உயர்த்துகிறீர்க்ளா... யார் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்து ”யார் கண்ணன் ” என புகழ் பெற்றவர்தான் இவர்... நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா என்ற அமர வரிகளை படைத்தவர் இவர்தான்..

எடிட்டர் , ஒளிபதிவாளர் என பல மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் இது..அந்த மேதைகளில் ஒருவராக இவரும் இந்த படத்தில் இருக்கிறார்..

மேலே போகும்  முன் இந்த புற நானூறு கவிதையை படித்து விடுங்கள்


பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே – பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

யானைக்கு அன்பாக சோறிட்டு வளர்த்த பாகன் , அவ்வளவு பெரிய யானை இல்லாதபோது , அது இருந்த இடத்தின் வெறுமையை பார்த்து கலங்குவான் அல்லவா...அதுபோல மன்றத்தை பார்த்து கலங்கினேன் என சோகத்தை சொல்கிறது பாடல்... இல்லாமையின் இருத்தலியல்..

இதை உணர்வுபூர்வமாக  காட்சிப்படுத்தி இருப்பார் மகேந்திரன்.

அந்த தாய் இறந்து விடுகிறாள்..அப்போதுகூட அந்த இழப்பு தெரியாது..ஆனால் அவள் உடல் எடுத்து செல்லப்பட்டவுடன்  தோன்றும் வெறுமை அவர்களை கதற வைத்து விடுகிறது.... அவள் உடம்பு வைக்கப்பட்ட இடம் வெற்றிடமாக உள்ளது..சுற்றிலும் மலர்கள், மாலைகள்...அந்த வெறுமையை அவர்களால தாங்க முடியவில்லை..கதறி விடுகிறார்கள்...

பிணத்தை பார்த்து அழும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.. வெற்றிடத்தை, வெறுமையை கண்டு அழும் காட்சியை பார்ப்பது இதுவே முதல் முறை..மகேந்திரன்... என்ன ஒரு கலைஞன் !!!!!

இந்த வெறுமையை நாம் வாழ்வில் உணரலாம்...முக்கிய பண்டிகைகளில் , நிகழ்ச்சிகளிதான் , மரணம் அடைந்த நம் தாத்தாவின் இல்லாமை , அவர்து கண்டிப்பு , அலட்டல் போன்றவை இல்லாமை நன்கு தெரியும்...இதை படம் பிடித்த கலைஞன் மகேந்திரன் மட்டுமே...

திருமணத்தை எதிர்த்து சரத்பாபுவும் , ராஜேசும் சண்டை இடுவது , பிறகு ராதிகாவிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து அவர் காலில் விழுவது என்று அன்பை , அதன் வலிமையை , பெண்மையை. அதன் அழகை பீடத்தில் ஏற்றி இருக்கிறார் மகேந்திரன்..

ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே..மெட்டி படம் பார்க்காமல் ஒருவன் வாழ்க்கை முழுமை அடையாது

Tuesday, April 2, 2019

ரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திரன்


என்ன படம் எடுக்கிறீர்கள்.. கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லையே என எம் ஜி ஆர் முகத்துக்கு நேராகவே விமர்சித்தவர் இயக்குனர் மகேந்திரன்

சரி.. நீதான் நல்ல படம் எடுத்துக்காட்டு பார்க்கலாம் என அவரை சென்னைக்கு வரவழைத்து சினிமாவுக்கு முயற்சி செய்ய சொன்னார் எம் ஜி ஆர்

அவரும் சென்னை வந்து விட்டார்..

ஒரு நாள் அவருடன் பேசியபோதுதான் , நண்பர்கள் அறையில் தங்குவதையும் அவர்கள் தயவில் சாப்பிடுவதையும் அறிந்தார் எம் ஜி ஆர்

வசதியான பையன் என நினைத்ததால் அவரது செலவுகளைப் பற்றி யோசிக்காமல் வரவழைத்து விட்டோமே என நினைத்த எம் ஜி ஆர் , நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி என கண்கலங்க தன் தலையில் அடித்துக்கொண்டார். அன்று முதல் மகேந்திரனுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கி வந்தார்

முள்ளும் மலரும் படம் பார்த்த எம் ஜி ஆர் , என்னிடம் சவால் விட்ட மாதிரி நல்ல படம் எடுத்து விட்டீர்கள்.. வார்த்தை வராமல் தவிக்கிறேன்,, பிறர் பாராட்டுகளை படித்தும் கேட்டும் மனம் பூரித்துப்போய் இருக்கிறது.. பிறர் சொல்வது என்ன.. நான் சொல்கிறேன்,,, முள்ளும் மலரும் படம் இந்திய சினிமாவின் ஒரு திருப்பு முனை எனலாம்

கடைசி காட்சியில் ரஜினி சொல்வாரே... இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கல சார்.. ஆனா அவளுக்கு பிடிச்சு இருக்கு.. 

அந்த காட்சியில் எழுந்து நின்று கைதட்டினேன்..

இப்படி மகேந்திரனை வளர்த்து விட்டு ரசித்தவர் எம் ஜி ஆர்

சிவாஜி மட்டும் என்ன,.. மகேந்திரனை கொண்டாடியவர் அவர்

தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மனைவி இறந்து விடுகிறார்.. அந்த காட்சிக்கு வசனம் எழுத வேண்டிய மகேந்திரனை அழைத்தார் சிவாஜி

தம்பி.. இது முக்கியமான காட்சி,, வசனங்கள் அருமையாக இருக்க வேண்டும்.. நன்கு யோசித்து விரிவாக எழுது என்றார்

மகேந்திரனும் யோசித்து எழுதினார்’’

அடுத்த நாள் அவர் காட்டிய பேப்பரை பார்த்த சிவாஜிக்கு அதிர்ச்சி.

என்னப்பா இது ,, பேப்பரில் எதுவுமே இல்லையே? என்றார்

இந்த காட்சிக்கு வசனமே தேவையில்லை சார்.. உங்க முகபாவமும் நடிப்புமே போதும்.. உங்கள் மனைவியை பார்த்ததும் பழைய நினைவுகளால் துடிக்கிறீர்கள்.. கதறுகிறீர்கள்..அதுபோதும் என்றார் மகேந்திரன்’

புதியவன் என நினைக்காமல் அவர் சொன்னதை மதித்து ஏற்றார் நடிகர் திலகம்.. அந்த காட்சி வெகு சிறப்பாக அமைந்தது


ரஜினியை தன் இரண்டாம் தாய் என குறிப்பிடுபவர் மகேந்திரன்.. மகேந்திரன் தன்னை தனக்கே அடையாளம் காட்டியவர் என்பவர் ரஜினி

என்னப்பா..உனக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் என சொல்லி இருக்கிறாயே..என்னை எல்லாம் பிடிக்காதா என பாலச்சந்தரே விளையாட்டாக கேட்கும் அளவுக்கு மகேந்திரனை போற்றியவர் ரஜினி

 நானெல்லாம் மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மகேந்திரன் குறித்து பேசுபவன் ,, எழுதுபவன்

ஓர் உதாரணம்.. மகேந்திரன் பழைய பதிவு


அந்த வகையில் மகேந்திரன் மறைவு பெரிய துக்கம் ..

ஆனாலும் பேட்ட எனும் மெகா ஹிட படத்தில் நடித்து தன் நண்பனின் பெரிய வெற்றியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார் என்பதில் சின்ன ஆறுதல்