Pages

Thursday, January 30, 2020

ஆறுதல் அளிக்கும் நூல்

வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.
உண்மையில் வாசிப்பதற்கு பலர் தயாராக உள்ளனர். அக்கறையுடன் எழுதுவதற்கு ஆட்கள் குறைவு.

கணினியும் ஓர் அறையும் இருந்தால் போதும். தமிழ் தெரிகிறதோ இல்லையோ, உலக அனுபவம் இருக்கிறதோ இல்லையோ..   அபார தன்னம்பிக்கையுடன் தப்புத்தப்பாக எழுதுகிறார்கள்.  அவரவர்கள் அரசியல் சார்புகளுக்கு ஏற்ப பதிப்பகங்கள் கிடைத்து அந்த குப்பைகள்  நூல் வடிவமாகின்றன..

தமிழ் ஆளுமையும் இல்லாத , வாழ்வியல் தரிசனமும் இல்லாத , சத்தியமும் இல்லாத இவற்றை ஒரு சராசரி வாசகன் சட்டை செய்வதில்லை

புத்தக கண்காட்சியில் , சமையல் ஜோதிடம் மொழிஅகராதி என எந்த ஒரு பிரிவிலும் ?அந்தந்த துறைகளில் உச்சத்தில் இருக்கும் நூல்கள் கிடைக்கின்றன.  பரபரப்பாக விற்கின்றன

ஆனால் இலக்கியம் , புனைவு,அபுனைவு என்று வந்து விட்டால் ஏமாற்றம்தான் என பலர் நினைப்பதால்தான் தமிழ் நூலகள் என்றாலே இன்றைய இளைய சமூகம் அலறி விலகுகிறது

உண்மையில் குப்பைகள் சூழ்ந்த இந்த சூழலில் குப்பைக்குள் மாணிக்கங்களும் இருக்கின்றன என்பதே உண்மை

அப்படி நான் தற்போது படித்து முடித்த நல்ல நூல் −   எங்கே போகிறோம் நாம் ?  என்ற "தமிழருவி மணியன்" எழுதிய நூல் (விகடன் பிரசுரம்)

அழகான தங்கு தடையற்ற தமிழ் , ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் , பல்வேறு அறிஞர்கள் குறித்த தகவல்கள் என படிப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எழுதப்பட்டது வாசகனுக்கு மகிழ்வூட்ட அன்று. ஆனால் சத்திய ஒளி ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிரும் நூல் ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வே அவ்வளவு திருப்தியாக இருக்கிறது



முகநூல்  வாட்சப் போன்றவை அற்புதமான தகவல் தொடர்பு சாதனங்கள். ஆனால் அவற்றிலேயே புழங்கிக்கொண்டு அந்த மொழியிலேயே படித்துக கொண்டிருந்தால் கண்டிப்பாக நம் மொழித்திறன் அடி வாங்கும்.  அவ்வப்போது இது போன்ற நூல்களை படிப்பது நம் மொழி வளத்துக்கு நல்லது செய்யும்

அரசியல் நாகரிகம் குறித்த ஒரு கட்டுரை. அதில் லிஙகன் சொன்ன கதை ஒன்றை குறிப்பிடுகிறார்;
.ஒரு பெரிய மனிதரின் தலையில் அவர் மனைவி ஓங்கி அடித்து விட்டாள்.  ஏன் தடுக்கவில்லை என நண்பர்கள் கேட்டனர்

அடிப்பதில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. எனக்கு அப்படி ஒன்றும் அளவற்ற துன்பம் இல்லை என்றார் அவர்




இப்படி பொருத்தமான நகைச்சுவை , ஊழலில் சிக்கியவர் சட்டமன்ற உறுப்பினராக முடியாது என அந்த காலத்தில் இருந்த சட்டத்தின் மாண்பை மதித்து (???!!!! )  ஊழல் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய இந்திராவின் சாமர்த்தியம் என ஒவ்வொரு பக்கத்திலும் சிறுகதை ஒன்று விரிகிறது

அரசியல்  காதல் இட ஒதுக்கீடு ஆன்மிகம் புரட்சி என அனைத்தும் நேர்மையான பார்வையில் அலசப்படுகிறது

தமிழருவி மணியன் காமராஜ் கலைஞர் மூப்பனார் என பலருடன் நேரில் பழகி அரசியல் களத்தை நேரில் கண்டவர்

இணையத்தில் படிக்கும் அரசியல் செய்திகளை வைத்து நூல்கள் எழுதி தமிழ் அறிவியக்கத்தை அழிக்கும் சூழலில் இம்மாதிரி நூல்கள் ஆறுதல் அளிக்கின்றன









No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]