Pages

Saturday, May 30, 2020

டிஎம்எஸ் − இளையராஜா பரஸ்பர அவமானங்கள்


ராணி மேரி கல்லூரியில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  பெண் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
    ஒருவர் கேட்டார். உங்கள் முதல் நாட்டு வெளிநாட்டு விஜயத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்


  முதல் விஜயத்தில் எவ்வளவோ பாராட்டுகள் கிடைத்திருக்கலாம். இனிய நிகழ்வுகள் நடந்திருக்கலாம்

   ஆனால் இளையராஜா இப்படி பதிலளித்தார்

   ஆயிரக்கணக்கான மக்கள் முன் எனக்கு இசையறிவு போதாது என டிஎம்எஸ் மட்டம் தட்டி பேசி அவமானப்படுத்தினார். என் படங்களில் பாடிக்கொண்டே இப்படி பேசியதை மறக்க முடியவிநில்லை என்றார்

    வருத்தமாக இருந்தது.

டிஎம்எஸ் பின்விளைவுகள் தெரியாமல் அப்படி பேசக்கூடியவர்தான். ஆனால் ஒரு கணத்திலேயே அதை மாற்றிக் கொள்வார்

   நான் ஒரு ராசி இல்லாத பாடல்தான் தன் மார்க்கெட்டை அழித்தது என கோபமாக பேசுவார். அடுத்த கணமே , அவர்களை குற்றம் சொல்லவில்லை. என் குரல் பிடித்ததால்தான் பாட வைத்தார்கள் என்பார்

டிஎம்எஸ் அப்படி பேசி இருக்ககூடாது. இளையராஜாவும் அதை பெருந்தன்மையாக மறந்திருக்கலாம்

  ஆனால் பிற்காலத்தில் பதிலடி கொடுத்தார்

   நான் வாழ வைப்பேன் படத்தில்  எல்லோரும் பாடுங்கள் என ஒரு பாடல்.

சிவாஜியின் ஆஸ்தான பாடகர் டிஎம்எஸ் பாடினார்

உங்களுக்கு பாடத் தெரியவில்லை என சொல்லிவிட்டு அதே பாடலை எஸ்பிபி யை பாட வைத்தார் இளையராஜா.

முந்தைய அவமானத்துக்கு பதிலடி

மிக மிக வருந்ததக்க நிகழ்வு

அதன்பின் டிஎம்எஸ்சுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை

எந்தன் பொன் வண்ணமே

பூப்போலே

நல்லவர்க்கெல்லாம்

அந்தப்புரத்தில் ஒரு

அம்மா நீ சுமந்த

அன்னக்கிளி உன்னை

தேன்மல்லி பூவே

நேரமிது நேரமிது

ஐம்பதிலும் ஆசைவரும்

எனபது போல பல பாடல்களை இந்த இணை கொடுத்தது

இவர்கள் பிரிவு நிகழ்ந்திராவிட்டால் மேலும் பல நல்ல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கும்








Friday, May 29, 2020

இணைய மொண்ணைகளும் ரமணி சந்திரனும் .. விவாதம்


திண்ணை இதழில் வெளியான  இணைய எழுத்தாளர்களும் ரமணிச்சந்திரனும் என்ற கட்டுரை சார்ந்த விவாதம்


வ.ந.கிரிதரன் says:
May 28, 2020 at 5:45 am
ஆசிரியருக்கு வணக்கம்,

இது பிச்சைக்காரனின் ‘ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை’ என்னும் கட்டுரை பற்றிய சுருக்கமான எனது எதிர்வினை.

முகநூலில் அனைத்துப்பிரிவினருமுள்ளனர். சாதாரண மனிதர்கள் முதல் பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் வரையிலுள்ளனர். முகநூலில் யார் யாருடன் நண்பர்களாகவிருக்க வேண்டுமென்பது முக்கியம். எழுத்தாளர் ஒருவர் கலை, இலக்கியத்துறையில் நாட்டமுள்ளவர்களுடன் நட்பாகவிருக்கலாம். தன் உறவினர்கள், நண்பர்களுடன் இன்னுமொரு குழுவில் இருக்கலாம். அவ்விதமில்லாமல். ஒரு குழுவில் அனைத்துப்பிரிவினரையும் உள்ளடக்கியிருந்தால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். இவரைப்போன்றவர்கள் முகநூலை எவ்விதம் ஆரோக்கியமாகப்பாவிக்கலாம் என்பதைப்புரிந்துகொண்ட பின்னர் அதனைத்தம் தேவைகளுக்கேற்பப்பாவிக்க வேண்டும். அவ்விதம் பாவிக்காவிட்டால் இவர்கள் பார்வையில் ரமணிசந்திரன், முகநூல் எழுத்தாளர்கள் எல்லோரும் ஒரே தட்டில்தான் தெரிவார்கள்.

இவர் முகநூல் ‘லைக்ஸ்’ பற்றிக் கூறுவது, பெரும்பாலான முகநூல் எழுத்தாளர்கள் பற்றிக் கூறுவதில் உண்மைகள் இல்லாமலில்லை. அவை விவாதத்துக்குரியவை. அதே சமயம் நாடறிந்த எழுத்தாளர்கள் பலர் முகநூலிலுள்ளார்கள். தம் எழுத்துகளை , கருத்துகளைப்பகிர்ந்துகொள்கின்றார்கள். அவை ஆரோக்கியமானவை.

இணைய இதழ்கள், இணைய எழுத்துகளையும் ஆரம்பத்தில் இவ்விதமே கூறினார்கள். ஆனால் இன்று இணையத்தின் பயனை எழுத்தாளர்கள் பலரும் உணர்ந்து விட்டார்கள்மதே சமயம் இன்னும் வலைப்பூக்களில் தம் படைப்புகளைப்பதிவேற்றாத எழுத்தாளர்களும் பலருள்ளனர். எவ்விதம் இணையத்தை ஆரோக்கியமாகப்பாவிக்கலாமோ அவ்விதமே முகநூலையும் எவரும் ஆரோக்கியமாகப்பாவிக்கலாம். முகநூலிலுள்ள முக்கியமான நன்மைகளிலொன்று உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விரைவில் தொடர்பு கொள்ளலாம். எங்குமே கிடைக்காத படைப்புகள் பலவற்றை இவ்விதமான தொடர்புகள் மூலம் பெற்றுக்கொள்ளும் சாத்தியங்களுள்ளன. சந்தேகங்கள் பலவற்றை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடிகின்றது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். எனவே முகநூலை அவ்வளவு சாதாரணமாகக் கருதிவிட முடியாது. அதனால் பெறக்கூடிய பயன்களைப்பெறுவதன் மூலம் அதனை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதே சிறப்பான செயற்பாடாகவிருக்க முடியும்.

Reply
பிச்சைக்காரன் says:
May 29, 2020 at 2:52 am
முகநூல் என்பதே தீமை என்பதல்ல. இலக்கியத்தில் தமது முத்திரை பதித்த எழுத்தாளர்கள் உட்பட பல்துறை மேதைகள் முகநூலில் இயங்குகிறார்கள். அது வரவேற்கத்தக்கது

ஆனால் சிலர் முகநூலில் தமது நண்பர்களின் பின்னூட்டத்தை வைத்தே தம்மை இலக்கியவாதிகள் என நினைத்துக்கொள்ள தலைப்படுகிறார்கள். ” போர்ஹெஸ் எழுத்தை மிஞ்சி விட்டீர்கள். கொர்த்தசார் மாதிரியே இருக்கிறது. மாபசானெல்லாம் உங்கள் முன் தூசு ” என்பது போன்ற பின்னூட்டங்களைப்பாரத்து மயங்கி விடுகிறார்கள். முகநூல் தொடர்புகளை வைத்து புத்தகங்களும் வெளிவந்து விடுகின்றன. ரமணிசந்திரன் , ராஜேஷ்குமார் போன்றோர தம்மை இலக்கியவாதிகளாக முன்வைப்பதில்லை. குறிப்பிட்ட பகுதி வாசகர்களை திருப்திபடுத்துகிறோம் என்ற தெளிவு அவர்களிடம் இருக்கிறது. முகநூல் எழுத்தாளர்களுக்கும் இந்த தெளிவு தேவை. லைக்குகளுக்காக எழுதினால் சந்தோஷம். இலக்கிய வாசகனுக்காக எழுதுவது என தீர்மானித்தால் அதற்கேற்ப உழைப்பை நல்க வேண்டும். பின்னூட்டங்களில் மகிழாமல் முகநூல் தொடர்புகளை நம்பாமல் , தனது பிரதியை பொதுவான தளத்தில் விமர்சனத்துக்கு உட்படுத்தி சுயபரிசீலனை செய்ய வேண்டும். இப்படி முகநூல் மூலம் அறிமுகமாகி , தமது தகுதியால் முத்திரை பதித்தோரும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால் பெரும்பாலானோர் தகுதி ஏதும் இன்றி இணைய அரசியல் மூலம் பிரபலமாக இருப்பதும் நடக்கிறது. இந்த தாழ்வுணர்ச்சியை மறைக்க ராஜேஷ்குமார் , ரமணிசந்திரன் போன்றோரை விமர்சித்து , அவர்களைவிட தாங்கள் மேல் என காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்றது. முகநூல் எழுத்து , வணிக எழுத்து , கேளிக்கை எழுத்து என எதுவுமே இழிவு கிடையாது. இலக்கிய தகுதி இன்றி இலக்கியம் என பம்மாத்து செய்வதுதான் தவறீ

சுப்ரபாரதிமணியன் இயல்புவாத கலைஞன்


  சுப்ரபாரதி மணியன் போன்ற எழுத்தாளர்களை அணுகுவதில் ஒரு தர்மசங்கடம் உண்டு.

உதாரணமாக ஒரு தனுஷ் படமோ விஷால் படமோ பார்த்தால் நன்றாக நடித்தீர்கள் என கைகொடுத்துப் பாராட்டலாம். ஆனால் சிவாஜி கணேசன் படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டுவது என்பது சற்றே சங்கடமானது. காரணம் அவர் பார்க்காத பாராட்டா, அவர் பார்க்காத விமர்சனமா?

அதுபோல சுப்ரபாரதிமணியன் பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். பல்வேறு இலக்கியமேடைகளைக் கண்டவர்.  வணிக இதழ்கள் முதல் இலக்கிய இதழ்கள்வரை இவருக்கு பலதரப்பட்ட வாசகர்கள் உண்டு
முற்போக்கு மேடைகளில் இவரை அவ்வப்போது குறிப்பிட்டு பேசுவார்கள்
ஆனால் இவரை முற்போக்கு எழுத்தாளர் என்பதைவிட , பிரச்சார தொனியற்ற ஆசிரியரின் குறுக்கீடு அவ்வளவாக இல்லாத இயல்புவாத எழுத்தாளர் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்

இந்த புரிதலோடு கச்சிதமாக தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுப்புதான் காவ்யா வெளியீடாக வந்துள்ள " ஆழம்" சிறுகதை தொகுப்பு

ரேகைக்காரன் , மிச்சம் , தீர்ப்பு , கசிவு ,இடம் பிடித்தவர்கள் , வேளை , மூன்றாவது வரம் , தீட்டு , மினுக்கம் , வாசம் , கடைசிப்பார்வை , புகை , நசுக்கம் , ஆழம் ஆகிய கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவற்றுள் ரேகைக்காரன் மற்றும் மூன்றாவது வரம் ஆகிய கதைகள் , கைதேரந்த எழுத்தாளர்கள் யார் வேண்டுமென்றாலும் எழுதிவிடக்கூடிய சுவையான கதைகள்

மற்றவை அனைத்துமே சுப்ரபாரதிமணியன் மட்டுமே எழுதக்கூடிய பிரத்யேக கதைகள். ஒவ்வொரு கதையும் ஜோடனைகளோ அலங்காரபாங்களோ ஏதுமின்றி , கதாசிரியரின் தலையீடு இன்றி நடப்பதை நடந்தவாறு , அவை நிகழும் இயல்பான வேகத்திலேயே நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது

கதையை சுவாரஸ்யப்படுத்த சில சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுப்பது , நகாசு வேலைகள் செய்வது , கதாசிரியனின் பார்வையை முன்வைப்பது , விமர்சிப்பது போன்ற யதாரத்தவாத பாணி தவிர்க்கப்பட்டுள்ளது


இயல்புவாதத்தை தவிர பிறவற்றுக்கு தான் எதிரியல்ல என காட்டுவதற்காக முன்பு குறிப்பிட்ட இரு கதைகளை சேர்த்துள்ளாரோ என்னவோ?

தொழில் சார்ந்த நகரம் மனிதனை மனித உணர்வுகளை ஆன்மிகத்தை எப்படி எல்லாம் இயந்திரமயமாக்குகிறது. அதற்குள்ளும் மனிதம் எப்படி இயங்குகிறது என்பதை பல கதைகளில் பார்க்கிறோம்

 ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படங்கள் சில உண்டு. அதுபோல சில கதைகள்.  கேமிராவை ஒரு இடத்தில் வைப்பதோடு கதாசிரியர் வேலை முடிந்து விடுகிறது. கதையின் போக்கில் குறுக்கிடுவதோ சுவையை கூட்டுவதற்கு அழுத்தம்கொடுப்பதோ இல்லை. தயவுதாட்சண்யம் அற்ற அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்கிறது

    புகை என்றொரு கதை. பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் பையன் தர்மராஜ். சக தொழிலாளி கெளசி அவன் அக்கா போன்றவள். ஒரு நாள் யாரோ வருகிறார்கள் என்பதற்காக இருவரும் வேலை முடிந்தபின்னும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். வந்தவன் யார் என்று பாரத்தால் முதலாளிக்கு வேண்டியவன். முன்பு"ஒரு முறை அவளிடம் தவறாக நடக்க முற்பட்டு அவளிடம் அறை வாங்கியவன்.
இப்போது அவளை தனியாக சந்திக்க நேர்ந்ததில் அவனுக்கு குரூர திருப்தி.
இவளோ முன்பு இருந்த கோபக்காரி அல்ல. இது போன்றவற்றை இயல்பாக ஏற்க வேறு வழியின்றி வேதனையுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்

இந்த சூழலில் அந்த ஆள் இவளிடம் தவறாக பேசுகிறான். அது அவளுக்குப்பிடிக்காவிட்டாலும் இவற்றை எல்லாம் எதிர்க்க முடியாது அன்பதை வாழ்க்கை அவளுக்கு கற்றுத்தந்துள்ளது
அவன் இவளை வித்தியாசமாக பழி வாங்க நினைத்து,அந்த அப்பாவி பையனான தர்மராஜை இதில் ஈடுபடுத்த முனைகிறான். அந்த கணத்தில் அவளிடம் மாற்றம் நிகழ்கிறது. இந்த வக்ரத்தில் இருந்து தர்மராஜை காப்பாற்றி அவனை தப்பித்தோட செய்து விட்டு , அவன் முன் கோபமும் எரிச்சலுமாக அசைக்க முடியாத குத்துக்கல்லாக நின்றாள் என முடிகிறது என முடிகிறது கதை.
மனதை உலுக்கிவிடுகிறது இந்த நிகழ்வு

வேலையோ காசோ இல்லாமல் சாலையில் நடை போடும் ஒரு தொழிலாளி , அந்த சிறிய கணப்பொழுதில் எப்படி குற்றவாளியாக மாறுகிறான் என்பதை துல்லியமாக பதிவு செய்யும் கதை ஒன்று அது சொல்லப்படும் விதத்தால் மனதில் தைக்கிறது

நான் லீனியர் பாணி என்பதை ஒரு யுக்தியாக  பயன்படுத்தக்கூடாது. அதற்கு தேவை இருக்க வேண்டும். பிரதி,அதை கோர வேண்டும்
ஆழம் என்ற கதை உண்மையிலேயே அடியற்ற ஆழத்துக்கு நம்மை பயணிக்க வைக்கிறது

மோகன் ,கீர்த்தி , சிந்தாமணி , கீதா ,கந்தசாமி ஆகிய பாத்திரங்களின் மேலடுக்குகள் ஆழங்கள் என பயணித்திருப்பது இந்த தொகுப்பிலேயே வித்தியாசமான கதை.தலைப்புக்கதையாக இதை தேர்ந்தது சிறப்பு. மினுக்கம் கதையும் வித்தியாசமானதுதான்

தொழிற்சாலை , வெயில் , வெப்பம் , வறட்சி , வறுமை என்ற தளத்தில் நின்று வாசிப்பின்பத்தை தருவதற்கு உண்மையிலேயே மேதைமை தேவை

மதுக்கடையில் கிடைக்கும் உயர்ரக வாசம் , சாவதற்கு உதவாமல் போய்விட்டோம்போலயே என்ற குழப்பம் , சாமிக்கு பலி கொடுப்பதில் தந்திரம் என வாழ்வின் நகைமுரண்களைப் படிக்கும்போது அன்றாடம் பல விஷயஙககளை தவற விடுகிறோம்போலயே என தோன்றுகிறது.
  நடைத்துணைக்காக வாங்கும் கைத்தடியால் வாழ்க்கையே இருளில் சிக்குவதும் , பாதிக்கப்பட்டவரின் இடத்தை கைத்தடி பிடிப்பதும் அழகான படிமம் ( இடம் பிடித்தவர்கள்)

இவ்வளவு வறுமையிலும் நோய்மையிலும் அன்பு துளிர்விடும் கதையான வேளை சிறுகதை வெகு வெகு யதார்த்தம்

உண்மையை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இவரது எழுத்துகள் தனித்துவம் வாய்ந்தவை என்பதை இநகத சிறுகதை தொகுப்பும் உணர்த்துகிறது





















Thursday, May 28, 2020

யதார்த்த வாதமும் சாருவும் . விவாதம் தேவை


 எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது சாரு பாணி

எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு , அவரது சிறுகதைகள் பிரமாதம் என்றும் ஆனால் அந்த வகை கதைகளுக்கான தேவை முடிந்து விட்டது என்றும் பேசினார். யதாரத்தவாத பாணி காலாவதியாகிவிட்டது என்றார்

வாசகனை கவர வேண்டுமென்றால் யதார்த்தவாதம் நல்ல பாணிதான். பிரபலமான கதைகள் பல யதார்த்தவாத கதைகள்தான்.

இன்று பிரபலமாக பேசப்படும் பல கதைகளை விட உங்கள் கதைகள் சிறப்பாக உள்ளன என்ற தெளிவுடன் சொல்கிறேன்.  மீண்டும் மீண்டும் இதேபாணியில் எழுதுவதில் அர்த்தமில்லை என்றார் சாரு

மிகை நடிப்பு படங்களை ஒரு காலத்தில் ரசித்தோம். இன்று அப்படி நடிக்கமுடியுமா ? மிகை நடிப்பு படங்கள் இழிவானவை என்பதல்ல. அந்த பாணிக்கான காலம் முடிந்து விட்டது .

அதுபோல யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஆக்கப்பூர்வமாக தன் விமர்சனத்தை முன் வைத்தார் சாரு;

அதன்பின் கார்ல் மார்க்ஸ் பேசினார்

எனக்கு இப்படி எழுதுவதுதான் வசதியாக இருக்கிறது என்றோ , யதார்த்தவாதத்தின் தேவை இன்றும் இருக்கிறது என்றோ சாருவை வெட்டி அவர் பேசியிருக்கலாம். அல்லது சாருவை ஒட்டியும் அவர் பேசியிருக்கலாம். ஆனால் அவர் பேச முனைந்தபோது மனுஷ்யபுத்திரன் சம்பந்தமில்லாமல் பேசி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார். கடைசியில் இந்த விவாதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என சாருவிடம் கேட்டபோது விவாதமே நடக்கவில்லையே என சிரித்தபடி சொன்னார். என் கருத்து அடித்து துவைத்தாலும் , அல்லது ஏற்றாலும் எனக்கு சம்மதமே என அவர் சொல்லியும் அது விவாதிக்கப்படவில்லை

ஆனால் நாஞ்சில் நாடன் தன் கருத்தை அழகாக எடுத்து வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து வரும்போது , ஊருக்கு வந்தால் மது அருந்தமுடியாது என்பதால் பயணம் முழுக்க மதுவில் திளைத்தோரைக் கண்டேன்

அதுபோல விடுமுறை முடிந்து கிளம்புகையில் இனி இரண்டு ஆண்டுகள் பிரிவு என்ற நிலையில் சூழலை மறந்து தன் மனைவியின் இதழ்களில் முத்தமிட்ட கணவனைக் கண்டேன் என்றார்

இதுபோன்ற தருணங்கள்தான் முக்கியம். யதார்த்தவாதம் , பின்நவீனத்துவம் என்ற பிரிவுகள் தேவையில்லை என்றார்

அவரது கூற்று அங்கே விவாதிக்கப்படவில்லை.

ஆனால் நண்பர்கள் சிலர் அவர் கூறிய தருணத்தை , உணர்ச்சி மல்க எப்படி எல்லாம் எழுதியிருக்க முடியும் என விவாதித்தோம். ஒரு நல்ல தருணத்தை செண்டிமெண்ட் குப்பையாக்கி வீணடிப்பது தவறு என்றால் அது எழுதவும் எளிது. படிப்பதும் எளிது என்பதால் பலர் யதார்த்தவாத எழுத்தையே கைக்கொள்ள விரும்புகின்றனர் என்பது தெளிவு
இது நிற்க

அங்கே விவாதம் நடக்காவிட்டாலும் இன்னொரு சூழலில் விவாதம் நடந்தது

அராத்து எழுதிய பொண்டாட்டி நாவலில் இப்படி ஒரு வரி வருகிறது

குத்தவே நினைத்துக்கூட பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தைக் கொடுப்பது எவ்வளவு பெரிய வக்கிரம்


இது தனக்குப் பிடிக்கவில்லை என கார்ல் மார்க்ஸ் இப்படி மாற்றுகிறார்

அவள் குத்துவாள் என்பதை  கற்பனை செய்தே பார்க்க முடியாத அம்மனின் கைகளில் சூலத்தை தந்தது எவ்வளவு பெரிய வக்கிரம்

  மேலோட்டமான பார்வையிலேயே இரண்டின் அர்த்தமும் வேறு வேறு என புரிகிறது அல்லவா

நாவலின் முதல் வரியில் இருந்து கடைசிவரி வரை கன்சிஸ்டண்ட்டாக , இலகுவாக , படிப்பவரைக்கவரும் வண்ணம் எழுதுவது ஒரு பாணி

பண்டித நடை , இலகு நடை , திருகல் நடை என கதம்பமாக எழுதுவது பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்று. சில பகுதிகளில் பிரஞ்ஞைப்பூர்வமாக தப்புதப்பாக எழுதுவதும் உண்டு. எந்த பாத்திரத்தின் கூாற்று , கதையின் சூழல் என பல விஷயங்களைக்கவனித்தாக வேண்டும்

பொண்டாட்டி நாவலில் ஆரம்பத்தில் ஒரு பகுதி அப்படி இருக்கும் . அதற்கு ஒரு காரணம் உண்டு.

மேடையில் சொல்லாததை கார்ல் மாரக்ஸ் இந்த விவாதத்தில் தெளிவு படுத்தினார். அவருக்கு யதார்த்தவாத கதைகள்தான் பிடித்திருக்கிறது.  அதற்கான தேவை இருப்பதாக நினைக்கிறார்.

நல்லதுதான்.  ஆனால் அதற்காக சாருவையோ சாருவின் வாசகர்களையோ எதிரிகளாக நினைக்க வேண்டியதில்லை.

சாருவைப் பொறுத்தவரை அவர் , வழக்கமான சிறுகதை வடிவான , ஆரம்பம் ஒரு முடிவு ஓர் உச்ச கணம் என்ற மரபான கதைகளும் எழுதியதுண்டு.  பெரும்புகழ் பெற்ற அந்த கதைகளுக்காகவே அவரை நினைவுகூர்வோரும் உண்டு
பவராலும் பாராட்டப்படும் பிளாக் நம்பர் 27 த்ரிலோக்புரி என்ற தனது
கதையையே கடுமையாக விமர்சிக்ககூடியவர் சாரு

சமீபத்தில் பீச் என்ற சிறுகதை குறித்துப் பேசினார்.  கதாபாத்திர அறிமுகம் , அதற்கு சிக்கல் , அதன் முடிவு என்பது அதில் இருக்காது. அதாவது அதில் கதை என ஒன்று நிகழாது
ஆனால் அது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக போற்றப்படுகிறது

ராசலீலாவில் இத்தகைய தருணங்கள் ஏராளமாக இருக்கும்

த்ரிலோக்புரி கதையை சீக்கியர் படுகொலை சம்பவத்தின்போது அங்கு இருந்த யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். உன்னத சங்கீதம், நேனோ நட்சத்திரங்களிடம் இருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணத்தின்னிகளும் போன்ற கதைகளை எழுதுவதற்குதான் சாரு தேவை என்பார் அவர்

யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்பது தனது வாழ்வை வேள்வியாக்கி தன்னையே அவியாக்கி அவர் அடைந்த தரிசனம்.

அதை ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதே சாரு என்ற கலைஞனுக்கு நாம் காட்டும் நன்றியாக இருக்க முடியும்















Saturday, May 23, 2020

வேதனையுடன் காலமான தயாரிப்பாளர். அறிமுகப்படுத்தியவரை சந்திக்க மறுத்த,கமல்

கமல்ஹாசனை பாலச்சந்தர் அறிமுகம் செய்தவர் என்றாலும் கமலை முதன்முதலாக,கதாநாயகனாக்கியவர் தயாரிப்பாளர் ரகுநாதன். பட்டாம்பூச்சி என்ற படத்தில் கமலை அறிமுகம் செய்தார்.   நேற்று அவர் காலமான சூழலில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட கமலை சந்திக்க முயன்று அது நடக்காத வேதனையில் அவர் இருந்த செய்தி சினிமா ரசிகரகளை வருத்தப்பட வைத்துள்ளது.
அவர் கடைசியாக மரகதக்காடு என்ற படத்தை தயாரித்தார். அதன்,இசை விழாவில் தராரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசுகையில் இந்த வருத்தத்தை பதிவு செய்தார்
, “தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.

நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.

Monday, May 18, 2020

சகதேவனின் கொடை


மகாபாரதத்தில் சகதேவன் பாத்திரம் அனைவராலும் மதிக்கப்படும் கேரக்டராகும்

பீமனுக்கும் துரியோதனுக்கும் நடந்த இறுதி போரில் அதற்கு நடுவராக துரியோதனன் நியமித்தது சகதேவனை..

அவனைப்பற்றி இன்னொரு செய்தியை தருகிறார் காஞ்சிப் பெரியவர்

மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரிடம்

தர்மர் சில கேள்விகள் கேட்கிறார்

வாழ்வையும் ஜெயிக்க வேண்டும். வாழ்விலும் ஜெயிக்க வேண்டும் . அதற்கு என்ன வழி.    யார் முழு முதல் கடவுள்.  தலை சிறந்த,தர்மம் எது

இந்த கேள்விகளுக்கு பீஷ்மர்அழகுற பதில் சொன்னார்

பதிலில் இருந்த சொல் அழகிலும் பொருளிலும் மயங்கி அனைவரும் மெய்மறந்து கேட்டனர்

சொல்லி முடித்து பீஷ்மர் கண் மூடியதும்தான் , அவர் சொன்னதை குறித்து வைக்கவில்லையே என தர்மர் உணர்ந்து பதறினார்

அவர் சொன்னதை மீட்டெடுக்க கிருஷ்ணரிடம் இறைஞ்சினார்

அதை மீட்டெடுக்க சகதேவனால் மட்டுமே முடியும். சிவ பக்தனான அவன் அணிநகதுள்ள ஸ்படிக மாலையில் பீஷ்மர சொன்ன மந்திரங்கள் கிரகிக்கப்பட்டு இருக்கும்
அவன் சிவனை தியானித்து, அந்த மந்திரத்தை மீட்டெடுத்து வியாசரிடம் சொல்லட்டும் அவர் அதனை எழுதட்டும் என்றார்

அப்படி கிடைத்ததுதான் விஷ்ணு சஹஸ்ரநாமம்


Friday, May 15, 2020

ரஜினி கமலின் சமகால போட்டியாளர்


  வான் நிலா , நிலா அல்ல
உன் வாலிபம் நிலா


உறவுகள் தொடர்கதை

என்னுள்ளில் எங்கோ ஏங்கும்
கீதம்


ஆகாயம்தானே , அழகான கூரை

இதோ உன் காதலி கண்மணி

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

என்பது போன்ற அபூர்வமான தேனமுத பாடல்களை , இசை ரசிகர்கள் மறக்கமுடியாது.

  இலங்கை வானொலி பிரபலமாக இருந்தபோது , இந்த பாடல்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டன

இந்த லட்டு போன்ற பாடல்கள் அமைந்தது ரஜினிக்கோ கமலுக்கோ அல்ல.  அவர்களது சமகாலத்தவரான சிவச்சந்திரனுக்கே இவை கிடைத்தன

ரஜினி , கமலுடன் பயணத்தை தைடங்கியவர்.  ரஜினியின் ஆரம்பகால தண்பர்..   நல்ல அறிமுகம் கிடைத்தன . வெற்றிகள் கிடைத்தன.

ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் இருந்த முனைப்பு இவருக்கு இல்லை

பட்டினப்பிரவேசத்தில் அறிமுகமாகி பிரசித்தி பெற்று இருந்தார்.
அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வாயப்பு தேடி வந்தது. கிழக்கே போகும் ரயிலில் நடிக்க வேண்டியவர் இவர்தான். காரணமே இன்றி இவர் மறுத்து விட்டார். விதி , வேறு என்ன சொல்வது

இன்றளவும் பேசப்படும் அவள் அப்படித்தான் படத்தில் நடித்தார்

பொல்லாதவன் , வெள்ளைரோஜா போன்ற பல படங்களில் 80களில் வில்லனாக நடித்தார்

அந்த வில்லன் இடத்தையும் சத்யராஜிடம் பறி கொடுத்தார்

சில படங்கள் இயக்கினார் , தயாரித்தார்.  கதை வசனம் எழுதினார்

சமீபத்தில் அரசி மெகா சீரியலில் இவரை பார்க்க முடிந்தது

திரைக்கலைஞர் லட்சுமியை மணந்து சம்யுக்தா என்ற இனிய புதல்வியுடன் வாழக்கை இனிதாக சென்றாலும் , வீணடிகப்பட்ட திறமைசாலியாகவே வரலாறு இவரை மதிப்பிடும்

திறமைக்கு வயது பொருட்டில்லை. இன்று சினிமா எடுப்பதில் திரையிடுவதில் நிறைய மாறுதல்கள் வந்துளளன . இதை பயன்படுத்தி , தன் அனுபவம் துணைகொண்டு , படங்கள் இயக்கி தன்னை நிரூபிக்க இன்றும் வாய்ப்பிருக்கிறது.  வாழ்த்துகள்




Wednesday, May 13, 2020

பிண மனிதனாக சிவாஜி நடித்த படம்


தேடல்தான் மனிதனை இந்த அளவு உயர்த்தியுள்ளது.  தன்னை விட வலுவான விலங்குகளை மட்டுமன்று, சக மனித இனங்களைக்கூட வென்று ஹோமோசெப்பியன்ஸ் என்ற இனம் உலகை ஆள்வதற்கான காரணம் அதன் தொடர்தேடல்கள்தான்.
இந்த தேடலே அவனுக்கு அழிவையும் கொண்டு வந்துவிடுகிறது என்பதுதான் 

அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நல்லதுதான் என்றாலும் , இதன் விளைவாக சுறுச்சூழல் சீர்கெட்டு புதிய கிருமிகள் உருவாகி மனிதனையே அழித்து விடுகிறதல்லவா

இந்த கருவை அடிப்படையாக வைத்து மேரி ஷெல்லி எழுதிய நாவல் பிராங்கன்ஸ்டீன் உலக புகழ் பெற்ற கிளாசிக் ஆகும்
இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இருந்தாலும் இன்றும் சுவையாக பொருத்தமாக உள்ளதுதேடலுடன் பயணிக்கும் கப்பல் கேப்டன் வால்டன் தன் சகோதரிக்கு எழுதும் கடிதங்கள் வாயிலாக  நம் முன் விரிகிறது 
பயணத்தின் போது உயிருக்கு ஆபத்தான"நிலையில் சந்திக்கும் விக்டர் பிராங்கன்ஸ்டீன் தன் கதையை சொல்கிறான் 


பல்வேறு பிணங்களின் உறுப்புகளை சேகரித்து மனித உருவமாக்கி அதற்கு உயிர் கொடுப்பதும் , அதன் அடுத்தடுத்த கொலைகளால் மனம் நொந்து அதை அழிக்க முயல்வதும் இவன் பார்வையில் சொல்லப்படுகிறது
என்னால் அழிக்க முடியவில்லை. நீங்களாவது இதை செய்யுங்கள் என சொல்லிவிட்டு இறக்கிறான் அந்த ஆராய்ச்சியாளன்

தான் ஏன் கொலைகாரன் ஆனேன் என்ற பிணமனிதனின் தன்னிலை விளக்கமும் சொல்லப்படுகிறது

தன்னை உருவாக்கியவன் இறந்ததை அறிந்து மனம் உருகி கண்ணீர் விட்டு , தானும் சாகப்போவதாக சொல்லி
கிளம்புகிறான் அந்த பிரேத மனிதன்

மனித இனமே அழிந்து விட்டால் வைரஸ் மட்டும் தனியாக இருந்து செய்யப்போகிறது என இன்றைய சூழலில் தோன்றுகிறது. அணு குண்டு வீச்சால் உலகம் அழியும் தறுவாயில் படித்தால் வேறுவிதமாக தோன்றலாம்
இதனால்தான் இக்கதை காலம் நடந்து நிற்கிறது

இது திரைப்படமாக வந்துளளது.  இதை தழுவி பல படங்கள் வந்துள்ளன

அந்த நாள் போன்ற சோதனை முயற்சிகளில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிய சிவாஜி கணேசன் , இந்த படத்தில் வரும் குரூரமான பிரேதமான நடிக்க ஒப்புக்கொண்டார்.  நான் வணங்கும் தெய்வம் படத்தில் ஆராய்ச்சி மூலம் உயிர் கொடுத்தல் என்ற கான்செப்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு , அதன்மேல் வேறு விதமான கதையை உருவாக்கினர்.; பேசாமல் அந்த கதையை அப்படியே எடுத்திருக்கலாம்

பிரேதமனிதன் என்ற பெயரில் வெகு அற்புதமாக புதுமைப்பித்தன் மொழி ஆக்கம் செய்துள்ளார்.  

கதையின் சாரத்தை உள்வாங்கி சுருக்கமாக தன் பாணியில் எழுதியிருக்கிறார்

முழுமையான மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன  

வாய்ப்பு,கிடைத்தால் சுவையுங்கள்



Friday, May 8, 2020

இணைய மொண்ணைகளும் நிர்வாக மொண்ணைகளும்

நமக்கு வாய்த்த அரசியல்வாதிகளும் சரியில்லை..  இணைய போராளிகளும் சரியில்லை.. ,இருவரிடமும் சிக்கிக் கொண்டு சாவது நாம்தான்

கொரானா இது வரை..


இணைய மொண்ணைகள்..  ,கொரானா பரவுது.. ,கேஷுவலா இருக்கீங்க.  லாக் டவுன் பண்ணுங்க

நிர்வாக மொண்ணைகள்.  ஓகே லாக் டவுன்

;இமொ   அய்யய்யோ  ஜெயிலில் இருக்க மாதிரி இருக்கே. பஜ்ஜி சாப்பிட முடியலயே
நிமொ.  பஜ்ஜி மட்டுமா..   சாராய கடையையே திறந்து விடுறோம்.  தக்காளி சாகுங்க

இமொ     அய்யய்யோ   கடையை மூடுங்க;

நிமொ  ஓகே மூடிருவோம்  ஆனலைன்ல வாங்குங்க  இல்ல  பிளாக்ல  வாங்கி சாகுங்க


இமொ  பேருந்து வசதி இல்லாம மக்கள் தவிக்கிறாங்க;

நிமொ     ஓகே    பேருந்து ஒட வைக்கிறோம்.  சினிமா தியேட்டர் திறக்குறோம்   கொத்து கொத்தா சாகுங்க ஓகேயா;

இமொ  டபுள் ஓகே



Wednesday, May 6, 2020

வெறும் கண்களால் காணக்கூடிய வானியல் நிகழ்வு.. பெருமலர்நிலவு


கொன்றைமலர் தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்று குழல் ஊதினான் நீள்சடையான் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவு அணையில் கண் வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்

என்று பாடுகிறார் காளமேக புலவர்

கோபாலன் கொன்றை மலர் தரித்தான் என்பது நம்மை குழப்புகிறது
கடைசி வரியை முதலில் வைத்து படித்தால் புரிகிறது;  சிக்கலில் வாழும் சிவன் கொன்றை மலர் தரித்தான்.  கோபாலன் குழல் ஊதினான். நீள்சடையான் ருத்ராட்சம் அணிந்தான் மாயனாகிய திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டான் என பொருள்


சித்திரை என்றால் பொன்மலர்கள் என கொன்றை மலர்கள் 
பூத்துககுலுங்கும்.  சித்திரை என்றால் மலர்களின் மாதம்

எனவேதான் சித்திரை மாதத்தில் பெருநிலவு நிகழ்வு ஏற்படின் அதற்கு பெருமலர் நிலவு super flower moon  என்று பெயர்.   நிலவும் பூமியும் அருகருகே வரும்போது , வான் நிலவு வழக்கமான பவுர்ணமி நிலவை விட பெரிதாக தோன்றும்.

அது சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.
மே மாதம் மலர்களின் மாதம் என்பதால் சூப்பர் பிளவர் மூன்;

இன்று (07: 05 :2020)  மாலை இதை கண்டு களிக்கலாம்



திருப்புமுனை தந்த இயக்குனர்களை நிராகரித்த அஜித் & விஜய்

வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டத்தில் வந்து விடாது..  வேறு யாரும் வெற்றியை திணிக்கவும் முடியாது

சத்யராஜ் , பாக்யராஜ் , தியாகராஜன் , பாரதிராஜா , நாகேஷ் , மனோரமா என தன் புதல்வர்களை வளர்த்துவிட நினைத்து தடுமாறியவர்கள் பலர். 

யுவன்சங்கர் ராஜா , பிரபு போன்ற லர் அடைந்த வெற்றிக்கு அவரவர்களின் உழைப்பும் திறமையும்தான் காரணம்


விஜய் , அஜித் இருவரின் வெற்றிக்கும் அவரவர்களின் உழைப்பு ,  புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்கள் , தொழில் ஒழுக்கம் போன்றவைதான் காரணம்


  ஆரம்பத்தில் மட்டமான படங்களில் நடித்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்து நடிப்பதுதான் முக்கியம் என வியூகம் அமைத்தது விஜயின் புத்திசாலித்தனம்.

பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி தந்தன. அதன் பின் பழைய பாணியை கைவிட்டார்


அஜித்தைப் பொருத்தவரை , அப்போதைய பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது ரீச்" சை அதிகப்படுத்தும் வியூகத்தை அமைத்தார்.அதை அப்போதே பேட்டிகளிலும் சொன்னார்.

சத்யராஜ் , கார்த்திக் போன்றோர் படங்களில் நான் நடிப்பதை பார்த்து அவர்கள் ரசிகர்கள் என்னையும் ஏற்றால் நல்லதுதானே என்றார்

பிரசாந்த் , விஜய் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார். 
ஆசை படம் இவருக்கு திருப்புமுனை தந்தது

இதில் என்ன வினோதம் என்றால் தங்களுக்கு திருப்பு முனை அளித்த பூவே உனக்காக மற்றும் ஆசை இயக்குனர்களுடன் இவர்கள் மீண்டும் இணையவில்லை

நேருக்கு நேர் படத்தில் அஜித் கேரக்டரை சற்று டம்மி ஆக்கிவிட்டு , விஜய் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கோபமடைந்த அஜித் படத்தில் இருந்து விலகினார்

இனி ஒரு போதும் வசந்த் படங்களில் நடிக்க மாட்டேன் என பேட்டி அளித்தார்

உன்னை நினைத்து படத்தில் நடித்த விஜய் படத்தின் ஒரு காட்சியை மாற்றச்சொல்லி கேட்டு , அது நிறைவேறாததால் படத்தில் இருந்து விலகினார்

இதனால் விக்ரமன் , வசந்த் படங்களில் இரண்டாவது முறையாக வந்த வாய்ப்பை இருவருமே நிராகரித்து விட்டனர்

நேருக்கு நேர் படத்தில் அஜித் நடித்திருந்தால் விஜய் அஜித் காம்பினேஷன் சுவையான விருந்தாக இருந்திருக்கும்.  மிஸ் ஆகி விட்டது

ஆனால் உன்னை நினைத்து படத்தை விஜய் தவிர்த்தது நல்லதுதான்.  சுமாரான படம்தான் அது



Monday, May 4, 2020

பிரசாந்த் இழந்ததை கைப்பற்றிய அஜித்


சில படங்களை எப்போது பாரக்க நேர்ந்தாலும் முழுமையாக பார்ப்போம். அப்படி ஒரு படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மம்முட்டி , அஜித் , அப்பாஸ் , ரகுவரன் , ஐஸ்வர்யா ராய் , தபு என இன்று நினைத்துப் பார்க்க முடியாத மல்ட்டிஸ்டார் படம்.  அப்பாசுக்கு குரல்கொடுத்தவர் விக்ரம். இசை ரகுமான்.  சுஜாதா இயக்குனர் ராஜிவ் மேனனுக்கு முழு பக்கபலமாக இருந்தார்


 இப்படி ஒரு அபூர்வமான படத்தில் நடிக்க வேண்டியவர் பிரசாந்த்.  அவர் அப்போது விஜய் அஜித் ஆகியோரைவிட பெரிய நிலையில் இருந்தார். அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க் இருந்தவர். அவர் எனக்கு ஜோடியாக வேண்டாம். மம்முட்டி கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ஐஸ்வர்யாராயை என்னுடன் நடிக்க வையுங்கள் என்றார் பிரசாந்த்

டென்ஷனான இயக்குனர் அஜித்தை அணுகினார். இப்படித்தான் அஜித் இதில் நடித்தார்.  படம் ரிலீசாவதற்கு முன்பே பிரசாந்த்தை விட பெரிய நிலைக்கு வந்து விட்டது வரலாறு

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ராணுவ வீரர்கள் செய்கிறார்கள். ஆனால் கார்கில் வீரர்களுக்கு , பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் மோதிய வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் இலங்கையில் நுழைந்த இந்திய அமைதிக்குப் படைக்கு கிடைக்கவில்லை.  சிங்களர்கள் இந்தியரககள் என அனைவரும் திட்டினார்கள்.  எதற்காக போரிடுகிறோம் , ஏன் சாகிறோம் என தெரியாமலேயே போரிட்ட வீரர்களில் ஒருவராக நடித்திருப்பார் மம்முட்டி. அவர்களைப்பற்றிவெளிவந்த ஒரே படமாக இது இருக்கக்கூடும்

தயார் நிலையில் இருப்பவனுக்குதான் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக அஜித்தும் பிரசாந்தும் இருப்பதற்கு சாட்சியாக இந்த படம் இருக்கிறது


கோபு என்ற போராளி


காதலை மையப்படுத்தி வரும் சினிமாக்களில் திருமணம்தான் காதலின் வெற்றி என கட்டமைக்கப்பட்டு இருக்கும் திருமணம் முடிந்ததும் காதலர்கள் இன்புற்று வாழ்ந்தனர் என படம் முடிந்து விடும்

அதுபோல 1947ல் சுதந்திரம் வாங்கியதை போராட்டத்தின் கிளைமாக்ஸாக பொதுவாக நினைக்கிறோம்

உண்மையில் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த சில வருடங்களில் சுதந்திர போராட்டத்தைவிட உக்கிரமான போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தினர். போலிஸ் அடக்குமுறை , போலி என்கவுண்டர் , பண்ணையாரககளின் சதி , எண்ணற்ற துரோகங்கள் என சந்தித்து மக்களுக்காக போராடினர்

அப்படி போராடியவர்களில் ஒருவர்தான் ஏ எம் கோபு என்ற புகழ் பெற்ற பொதுவுடைமை தலைவர்.

அவரது போர்க்குணம் மிகுந்த இளமைக்காலத்தை அழகாக பதிவு செய்துள்ளார் புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளர் முனைவர் ச சுபாஷ் சந்திரபோஸ்

களப்பால் குப்பு , வாட்டாக்குடி இரணியன் , சாம்பவானோடை சிவராமன் , ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்ற பல போராளிகள் குறித்து அற்புதமாக எழுதியவர் இவர்

பொதுவுடைமைப் போராளி ஏ,எம் கோபு என்ற நூலை இலக்கியச்சுவையுடன் படைத்துள்ளார்  இவர்;

தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்களின் கொடுமை தலைவிரித்தாடிய கால கட்டம். அடிமைகளாக தொழிலாளரககளை நடத்துவது , தமது வேலையாட்களுக்கு திருமணமானால் மணப்பெண்ணின் முதலிரவு தன்னுடன் நடக்க வேண்டும் என ஆணையிடும் முதலாளிகளின் அயோக்கியத்தனம் , பணியாட்களுக்கு விதிக்கப்படும் கொடூர தண்டனைகள் என பிரிட்டிஷ் அரசை"விட கொடூரமான ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தனர் உள்ளுர் முதலாளிகள்

இவர்களுக்கெதிராக வீறு கொண்டெழுந்த கம்யூனிஸட் இயக்கத்தில் இணைந்து கொண்டார் கோபு. வசதியான குடும்பம் , கல்வி போனறவை இருந்தும் போராளி வாழ்ககை இவரை ஈர்த்தது.

சிறை தண்டனைகள் பெற்று , துப்பாக்கி குண்டுகளை தாஙகி மகககளுக்காக உழைத்தார்.  ஒரு போராட்டத்தின்போது இவரது கையில் பாயந்த குண்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை

ஆனால் உயிர் பெற்றெழுந்து வீர்யத்துடன் போராடினார்

கம்யூனிஸ்ட்டுகள்தான் தனது முதல் எதிரி என பிரகடனம் செய்த ராஜாஜியை நூலாசிரியர் கடுமையாக சாடியுள்ளார்

கடைசியில் , அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை பாராட்டுவதும் கோபுவுக்கு சட்டரீதியாக உதவுவதையும் பதிவு செய்துள்ளார் நூலின் அறிவு நாணயத்துக்கு இது சான்று;

கம்யூனிஸ்ட் சித்தாந்த வெற்றிக்கு இன்னொரு சான்று


சேரித் தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய மகாதேவ ஐயர் என்பரை கொன்ற குற்றச்சாட்டில் கோபு உள்ளிட்ட பொதுவுடைமை தோழரகள் சிலரை போலிஸ் கைது செய்கிறது

அந்த பட்டியலில் ஆதிக்க சாதியினர் வசதியான சாதியினர என அனைவரும் இருக்கின்றனர்

பாதிக்கப்பட்ட சாதி மட்டும் போராடுவதில் பலனில்லை. அனைவரும் சேர்ந்து போராடுவதை சாதித்துக்காட்டியது இயக்கம்
ஜனசக்தி இதழ் இதற்கு பெரிதும் உதவியுள்ளது

கோபுவின் வாழ்வில் கலைஞரின் பங்களிப்பு ,  ஜெயகாந்தனின் ஜனசக்தி தொடர்பு ஆகியவையும் பதிவாகியுள்ளது

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்

Sunday, May 3, 2020

கோயம்பேடு மலர்கள் மைக்ரோ கதை

அவன ஏண்டி பூ வாங்க கோயம்பேடு அனுப்பிச்ச ?  கோபமாக கத்தினார் அவர்

வீட்டுலயே சிம்பிளா கல்யாணம் நடத்துறோம். பூ இல்லைனா எப்படிங்க ? தயக்கமாக சொன்னாள் மனைவி

ஊர் கெட்டு கிடக்கு..  நேத்துகூட  நாலூபேருக்கு கொரானா.  இப்ப  போயி அனுப்பிஞ்சு இருக்கியே என திட்டும்போதே பையன் வந்தான்

அப்பா  பூ கிடைக்கல என்றான் பையன்;


கடவுள்  காப்பாத்திட்டாரு  மகிழ்ந்து கொண்டாள் மனைவி


ஏண்டா பூ கிடைக்கல  கேட்டார் அவர்


அல்லாத்தையும் அரசாங்கம்  வாங்கிருச்சுப்பா என்றான் பையன்;


அரசாங்கமா, அவங்களுக்கு  ஏண்டா  அவ்வளவு பூ   ..  குழப்பமாய் கேட்டார்


நாட்டு மக்கள்  ஊரடங்கை சிறப்பா கடைபிடிக்கிறத பாராட்டி எல்லா வீட்டு மேலயும் விமானம் மூலமா பூ தூவறங்களாம். குறிப்பா  நம்ம தெருவுல அதிகமா தூவறாங்களாம் என்றான் பையன்

என்னடா  சொல்ற  என அவர் திகிலுடன்  கேட்கும்போதே கோயம்பேடு மலர்கள் அவர்கள் தலையில் விழத்தொடங்கின



Saturday, May 2, 2020

இமையமும் மனுஷ்யபுத்திரனும். நேர்மையற்ற ஒப்பீடு


  படைப்பாளி என்பவன் பொதுவான பார்வையை முன் வைப்பவன். பூனையின் பசியையும் , பூனைக்கு இரையான எலியின் வலியையும் விருப்பு விருப்பின்றி பதிவு செய்பவன்.

அவன் ஒரு போதும் அரசியல் செயல்பாட்டானாக இருக்க முடியாது.

உதாரணமாக மணிரத்தினத்தை ஒரு ஆவேசமான மேடைப்பேச்சாளராகவோ டிவி விவாத பங்கேற்பாயராகவோ நினைத்துப் பார்க்க முடிகிறதா. முடியாது. அவர் ஒரு நேர்மையான படைப்பாளி.

அதற்காக அரசியலே தவறு என்பது இல்லை.  சுதந்திர போராட்டம் , இந்தி எதிர்ப்பு போராட்டம் என பலவற்றில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை நல்கியுள்ளனர். அவை போற்றத்தக்கவை.  ஆனால் அவை பிரச்சார எழுத்து.  இலக்கியம் கிடையாது.

வியாபாரத்துக்காவோ , பத்திரிக்கை வாயப்புகளுக்காகவோ அரசியல் சார்பு எடுப்பது இன்னொரு விதம்

அரசியல் ஈடுபாடு , படைப்பாற்றலை பாதீக்காது என கலைஞர் டிவி புகழ் மனுஷ்ய புத்திரன் கூறியிருக்கிறார். அது அவர் கருத்து. நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

ஆனால் சம்பந்தமின்றி எழுத்தாளர் இமையமும் அரசியல் ஈடுபாடு கொண்டவர் , கட்சி வேட்டி கட்டுகிறார் , அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அதற்காக அவர் படைப்பாளி இல்லை என்றாகி விடுமா என கேட்கிறார் அவர்

இது மிக மிக தவறான ஒப்பீடு. இமையத்தின் படைப்பு சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் , அவர் நடுநிலை தவறாதவர்

பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பெத்தவன் நாவலில் காதலின் அழகையும் சொல்லியிருப்பார் , காதலிக்கும் பெண்ணின் குடும்பம் ஆதிக்க சாதி என்றாலும் அந்த குடும்பத்தின் பார்வையையும் சொல்லி இருப்பார்

அந்த கதை அவர் கட்சிக்கும் பிடிக்கவில்லை.  சாதி வெறியர்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் இலக்கிய வாசகர்கள் அதை கொண்டாடினர்

அவர் இப்படி நடு நிலையாக இருக்க முடிகிறதென்றால் அவர் கட்சியில் இருப்பது டிவி வாய்ப்புகளுக்காகவோ , இந்த சார்புநிலை எடுத்தால் ஊடக வாய்ப்புகள் வரும் என்பதற்காகவோ அல்ல

அவர் உழைத்து சாப்பிடுகிறார். ஆசிரியர் தொழிலை தவமாக நினைப்பவர். ஊரில் அவர் அடையாளம் ஆசிரியர் என்பதுதான்

அவர் அரசியல்வாதியோ , வியாபாரியோ அல்லர்.

அவரைப்போய் மனுஷ்யபுத்திரன் தன்னுடன் ஒப்பிடுவது வேதனை அளிக்கிறது