தினமணி கதிர் 15.6.2025 இதழில் வெளியான துணுக்கு
'பாட்டும் நானே... பாவமும் நானே....'
..........
நடிகர் சிவாஜி கணேசனை வைத்து, `சிவலீலா' எனும் படத்தை பிரபல தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு தயாரித்தார். அது தொடரவில்லை. அதையே ‘திரு விளையாடல்' என்ற பெயரில் ஏ.பி.நாகராஜன் எடுத் தார். 'சிவலீலா' படத்துக்காக, கவி. கா.மு.ஷெரீப் எழு திய ‘பாட்டும் நானே.. பாவமும் நானே...' என்ற பாட லையும் ஏ.பி.நாகராஜனிடம் கொடுத்துவிட்டார். அந் தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற் றது. படம் வெளியானபோது, அந்தப் பாடல் கண் ணதாசன் எழுதியதாக, அவருக்குத் தெரியாமலேயே டைட்டிலில் வந்தது. இதனால் வருத்தப்பட்ட எம்.ஏ. வேணு, “என்ன இப்படி செய்துவிட்டீர்களே” என்று கேட்டார். பின்னர், படக் குழுவினர் கவி.கா.மு.ஷெ ரீப்பை நேரில் சந்தித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரி வித்து, ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆனால் ஷெரிப்போ, "நான் ஒருமுறை எழுதிய பாடலுக்கு ஒரு முறைதான் ஊதியம் வாங்குவேன். ஏற்கெனவே இந்தப் பாடலுக்கு முந்நூறு ரூபாய் வாங்கிவிட்டேன். எனது பாடலை மக்கள் ரசிக்கிறார்களே அதுவே போதும்” என்று கூறிவிட்டார்.
29.06.2025 இதழில் வெளியான மறுப்பு
விளக்கம்...
தினமணி கதிர் 15.6.2025 இதழில் வெளிவந் துள்ள துணுக்கில், 'திருவிளையாடல்' திரைப்ப டத்தில் இடம்பெற்ற 'பாட்டும் நானே.. பாவமும் நானே..பாடல் எழுதியவர் குறித்து வந்த தகவல்
தவறு. இந்தப் பாடல் எழுதப்பட்ட விதம் குறித்து கவி ஞர் கண்ணதாசன் அவர்கள் தனது 'கண்ணதாசன்' ஜூலை 1978 இதழில் 'முக்கியமான இரண்டு கேள் விகள்' என்று தலைப்பிட்டு குறிப்பிடுகிறார். இதில் வந்துள்ள விவரம்:
"எந்தப் பாட்டையும் தனியாக உட்கார்ந்து எழு திக் கொண்டு போய் கொடுத்ததாக வரலாறே கிடை யாது. நான் எப்போது எழுதினாலும், என்னைச் சுற்றி என் உதவியாளர் பஞ்சு அருணாசலம் உள் பட குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். மேற் படி பாடலை நான் சொல்லச் சொல்ல இதை எழு திய ஏ.பி.நாகராஜனின் உதவியாளர் சம்பத் ஐயங் கார் உயிரோடு இருக்கிறார். கூட இருந்தவர் மேலா ளர் வைத்தியநாதன், இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன், அவரது உதவியாளர் புகழேந்தி, ஏ.பி. நாகராஜன் குடும்பத்தினர் எல்லோரும் உயிரோ டுதான் இருக்கிறார்கள் (1978-இல்)" என்று கவி ஞர் கூறியிருக்கிறார். எனவே, கதிரில் வெளிவந்த தகவல் தவறானது. வருந்துகிறோம்.
ஆசிரியர்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]