இன்று இருக்கும் நிலையில், பெரிய பதிவுகளை , கதைகளை பலர் படிப்பதில்லை... தலைப்பை மட்டும் பார்த்து விட்டு , வாழ்த்தியோ திட்டியோ பின்னூட்டம் இட்டு விடுகின்றனர்...
அவர்கள் வசதிக்காக , சின்னஞ்சிறிய கதைகள்...
*******************************************************************
இனிது, இனிது, வாழ்க்கை இனிது
சிலு சிலு வென காற்று . பறவைகள் சங்கீதம்.. கால் நீட்டி வசதியாக படுத்தான். இளையராஜா பாடலை வாய் முணுமுணுத்தது
இன்னும் கால் மணி நேரத்தில், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், அவன் படுத்து இருந்த தண்டவாளத்தை கடந்து செல்லும்...
************************************************************************************************
உங்கள் விருப்பம்
ஆடை பிடித்து இருக்கிறதா... ? நகை பிடித்து இருக்கிறதா? அவளின் பெற்றோர் அன்பாக கேட்டனர்..
மாப்பிள்ளை பிடித்து இருக்கிறதா என கேட்க மறந்தனர்.
*********************************************************************************************************
நடிப்பு
சினிமாவில் , நடிப்பில் சிகரம் தொட்ட , நடிகர் அரசியலில் குதித்தார். தோல்வி அடைந்தார்,,
நடிக்க தெரியவில்லையாம்
**************************************************************************************************************
முடிவுரை
தொழில் நுட்ப கோளாறு.. அணு ஆயுத பட்டன் , தேவை இல்லாமல் அழுத்தப்பட்டது.
உலகமும், மூன்றாம் உலக யுத்தமும் முடிந்தன ...
*****************************************************************************************************************
பாவையின் , பார்வை !!
உயிர் காக்கும் , மருத்துவம் படித்த இளம் பெண் . என் உயிரை பறித்தாள்...
ஆயுதத்தால் அல்ல... அவள் பார்வையால்.....
************************************************
கி பி 2050
சென்ற ஆண்டு ... பெரிய விபத்து... அவம் ஆண் உறுப்பு முற்றிலும் சேதம்...
இன்று அவன் கர்ப்பம்...
****************************************************************************************
நன்றி மறப்பது நன்றன்று
" அவன் ரத்தம் சிந்தி, என் நாட்டுக்காக உழைத்தான்... என் உயிரை காத்தான் ... " என்றார் நாட்டின் அதிபர்..
" அதனால் தான் , இப்படி மெலிந்து காண படுகிறானா ? " நண்பர் கேட்டார் .
" அதனால் இல்லை.. ஆராய்சிக்கு ரத்தம் தேவைப்பட்டது... அப்போது உறிஞ்சிய ரத்தத்தால் , இப்படி ஆகி விட்டான்... இப்படி பட்ட நல்லவனின் ரத்தத்தை முழுதும் உறிஞ்சுவது , நன்றி உள்ள செயல் அல்லவே " என்றார் அதிபர்
***************************************************************************************************************
இதயம்
" கடவுளே.. எல்லோரையும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்... அணைத்து பொருகள் மீதும் அன்பு பொங்குகிறது.. இப்போதுதான் , நீங்கள் என் இதயத்தில் குடி புகுந்து இருப்பது போல தோன்றுகிறது :" என்றான் அவன்
" இல்லை.. இப்போதுதான் நீ என் இதயத்தில் குடி புகுந்து இருக்கிறாய் " என்றார் கடவுள்
************************************************************************************************************************
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]