Pages

Monday, July 5, 2010

மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..

ராவணன் படம் எடுத்த மணிரத்தினம் சில நேரங்களில் ராமனை போல காட்சி அளிக்கிறார்.. சில நேரங்களில் ராவணன்..

உண்மையில் அவர் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..

**********************************************************************

ராவணன் போல தோன்ற காரணங்கள்..

1 மற்றவர் பொருளை , கதையை , அபேஸ் செய்கிறார்.

2 ஒரு தலை நியாயம் பேசுகிறது.. ஒரு தலை பொய் பேசுகிறது ( ஞானி அவர்களுக்கு அநீதி செய்தது ஓர் உதாரணம் ) . ஆக பத்து தலை கொண்டவர்

3 சகோதர்களின் நலனை விட தம் நலனே முக்கியம் என செயல்படுதல்

ஆனால் ராவணன் இல்லை என தோன்ற காரணங்கள்

1 கடத்திய கதையை , கடத்திய பொருளின் கண்ணியத்தை காப்பாற்றவில்லை

2 வீரம் , நேர்மை இல்லை


ராமன் என தோன்ற காரணம்

1 தமிழர் விரோத போக்கு

2 அனுமான்களை பயன்படுத்தி கொண்டு , பின்னர் கழட்டி விடும் போக்கு

3 சரியோ , தவறா - தனக்கென ஒரு அஜெந்தா, கொள்கை வைத்து இருத்தல்..

4 மற்றவர் பேச்சை கேட்டு குழம்புதல் ( தாக்கரேவுக்கு பயந்து கதையை மாற்றியது, இருவர் கதியை மாற்றியது எல்லாம் மறக்க முடியுமா )

ராமர் இல்லை என தோன்ற காரணம்

1 சகோதர பாசம் இல்லாமல் போனது

2 வெற்றி கிடைக்காமல் போனது

3 ஆள்வோராக இல்லாமல், ஆள்வோருக்கு ஆதரவாளராக இருப்பது,( முதலாளித்துவ ஆதரவு )


ஆகவே, கூட்டி கழித்து பார்த்தால், மணிரத்ரம் அவர்கள்,. ராமனும் இல்லை , ராவணனும் இல்லை என்றே தோன்றுகிறது

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைகாரன். பிளாக்ஸ்பாட் . காம்

5 comments:

  1. ராமனும் நானே ...ராவணனும் நானே ...

    ReplyDelete
  2. அனுமான் யார் ?

    ReplyDelete
  3. //அனுமான் யார் ?//

    தென்னிந்திய திராவிடர் (குரங்குகளாகத் தெரிந்தனர் வடயிந்திய ராமனுக்கு)

    இலங்காபுரி இராவணன் பத்து கலைகளில் தலை சிறந்தவன். (தொங்கும் பத்து தலைகள் அல்ல) வீணை வித்துவான், சிவ பக்தன், சிறந்த ஆளுமை மிக்கவன், வீரன், புராதனக் காலத்திலேயே உலகம் விமானம் என்ற ஒன்றை கண்டிராத, கேள்வியும் பட்டிராத காலங்களிலேயே வைத்திருந்தவன் எனுன் அறிஞன். இவனை கொல்லுதல் அத்தனை எளிதல்ல. எனவே தென்னிந்திய திராவிடர்களின் உதவியும் (அனுமான்) இலங்கைத் தமிழ் வேந்தனை வடயிந்திய ராமன் சூழ்ச்சியால் வெற்றிக்கொண்ட வரலாறு "இராமாயணம்".

    இராமாயணம் எழுதப்பட்டது வடமொழியில். எழுதியவர் ஒரு வடயிந்தியர். அவர் வடயிந்தியனை கடவுளின் அவதாரமாகவும் (ராமன்) தமிழனை இராட்சதனுமாகவும், தென்னிந்தியரை குரங்குகளாகவும் (அனுமன்) சித்தரிக்கப்பட்ட வரலாற்றுக் கதை.

    ReplyDelete
  4. ராமன்னா ராமன் ராவணன்னா ராவண் இரண்டுதான் இரண்டுதான்னு அவரே சொல்லிட்டாரே. ஒவ்வொரு மனிதனுக்க்குள்ளும் ராமனும் இருக்கிறான் ராவணனும் இருக்கின்றான். அதில் ராமன் கூடுதலாக இருந்தால் நல்லவன், இராவணன் கூடுதல் இருந்தால் கெட்டவன்.

    ReplyDelete
  5. நமக்குள் நல்லவையும் இருக்கின்றன , கேட்டவையும் இருக்கின்றன என்ற உங்கள் பார்வை மிகவும் சரியானது...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]