சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட போலிஸ் அதிகாரிக்கு மன நிலை சிகிச்சையும், நீதி போதனையும் அளிக்க வேண்டும் என்று கருத்து கந்தசாமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
ஆதரவற்ற சிறுமியின் காப்பாளர்கள் , ஈவு இரக்கமற்ற அந்த பாவிக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என புலம்பினர்..
இந்த கொடூர சம்பவம் பற்றிய விபரம் ...
படிக்க வைக்க வசதி இல்லாமல், படிக்க வேண்டிய 15 வயதில் வேலைக்கு அனுப்பப்பட்டார் ஏழை சிறுமி ஒருவர்... அனைவருக்கும் காவல் அளிக்கும் போலிஸ் அதிகாரியிடம் தங்கள் பெண் பாதுகாப்பாக இருப்பால் என நினைத்து போலிஸ் உயர் அதிகாரி வீட்டில் வேலைக்கு சேர்த்தனர்..
தன்னை நம்ம்பி வந்த சிறுமியை , கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லமால் , தவறாக நடந்து கொண்டு கர்ப்பமாக்கியதாக எழுந்த புகாரின் போரிலஅவர் இபோது ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மும்பை புறநகர் பகுதி ஒன்றில் போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் இந்த அதிகாரி... பெயர் ஷாந்தா கெய்க்வாட் (40)
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கெய்க்வாட் கைது செய்யப்பட்டார். அவரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்ட து.... தற்போது அந்த சிறுமி ஒரு பெண் குழந்தை பெற்றுள்ளார். தொடர்ந்து அந்த போலீஸ் அதிகாரியிடம் விசார ணை நடைபெற்று வருகிறது...
இவ்வளவு பெரிய அதிகாரியை எதிர்த்து எங்களால் வழக்கு நடத்த முடியாது... அதற்கான வசதி இல்லை... கடவுளாக பார்த்து ஏதாவது தண்டனை கொடுத்தால்தான் உண்டு என சிறுமியின் தாய் புலம்புகிறார்...
தண்டனை கொடுப்பதால் மட்டும் இந்த குற்றங்கள் நிற்காது... பிடிபாடாதவர்கள் பலர் இருக்கும் பொது, பிடிபட்ட இவரை மட்டும் தண்டிப்பது சரியாகாது..
அவர் சிறைக்கு சென்று விட்டால் அவர் குடும்பம் கஷ்டப்படும் ..
அவரை தடிப்பது தீர்வு அல்ல...
அவருக்கு நல்ல நீதி நூல்களை தந்து படிக்க சொல்ல வேண்டும்... மனநல மருத்துவமனியில் சேர்க்க வேண்டும்...
அவரை இப்படி ஆகியது சமூகம்தான்.,.. எனவே சமுகம் இந்த்தகிய தண்டனைகளை அனுபவித்துதான் ஆக வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத அறிவு ஜீவிகளும், கருத்து கந்த சாமிகளும்,. மனிதாபிமானிகளும்
கருத்து தெரிவித்துள்ளனர்....
// கடவுளாக பார்த்து ஏதாவது தண்டனை கொடுத்தால்தான் உண்டு //
ReplyDeleteகொடுத்திட்டு தான் மறுவேலை பாக்கும்...
கொடுத்திட்டு தான் மறுவேலை பாக்கும்"
ReplyDelete:)
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கியேதீரவேண்டும். ஒரு சாமானியனுக்கு என்ன தண்டனை உண்டோ அதைவிட பத்துமடங்கு தண்டனையை வழங்கியாகவேண்டும். அதைவிட முக்கியம், நீதியை விரைந்து வழங்கியாகவேண்டும்.
ReplyDelete