பறவைகளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆபத்துக்கள்?
செல்போன் டவரால் குருவிகளுக்கு ஆபத்து.. வறுத்து சாப்பிடும் ஆசாமிகளால் புறாவுக்கு ஆபத்து.. பூனைகளால் ஆபத்து.. சுற்று சூழல் சீர்கேடுகளால் ஆபத்து..
இது போன்று பறவைகளை அழிக்கும் பல விஷ்யங்கள் உங்களுக்கு தெரியும்..
ஆனால் பறவைகளை தினந்தோறும் கொன்று கொண்டு இருக்கும் ஒரு விஷ்யம் பரவ்லாக தெரிய வாய்ப்பில்லை..
பறவைகளை கொல்லும் அந்த எதிரி யார் தெரியுமா?
விமானங்கள்..
ஆம்.. பறவைகளுக்கு தரையில் மட்டும் அல்ல. விண்னிலும் ஆபத்துதான்..
அதி வேகமாக பறக்கும் விமானத்தின் ஜன்னல்கள் மீது மோதி இறக்கும் பறவைகள் எண்ணிக்கை நமப முடியாத அளவு அதிகம்..
அறிவியல் முன்னேற்றம் நல்லதை விட கெட்டதுதான் அதிக செய்கிறது என அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்..
நோயும் அறிவியல்தான்.. அதற்கு தீர்வும் அறிவியல்தான்…
பறவைகளின் இந்த ஆபத்தை நீக்க பல ஆண்டுகளாக யோசித்து வந்தனர்.. சரியான ஐடியா கிடைக்கவில்லை…
இந்த நிலையில், நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்… இதற்கு என்ன தீர்வு?
அவர்களுக்கு உதவ முன் வந்தது சிலந்தி பூச்சி…
விடா முயற்சிக்கு அடையாளமாக சிலந்தியை சொல்லுவார்கள்.. எததனை முறை அதன் வலையை அறுத்தாலும் மீண்டும் கட்டி விடும்..
ஆனால் சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அது செய்து வைக்கிறது..
காட்டில் வலையை அமைக்கும்போது, புற ஊதா கதிர்களை பிரதிபலிக்குமாறு வலையை அமைக்கும்.. இந்த ஒளி கதிர் நம் கண்களுக்கு தெரியாது.. பறவைகளுக்கு தெரியும்.. எனவே அவை வலை மீது மோது அதை சேதப்படுத்தும் அபாயம் தடுக்கப்படும்..
இதை பார்த்து ஆசர்யம் அடைந்த வல்லுனர்கள், இதே பாணியில் செய்யப்பட்ட கண்ணாடியை விமானத்தில் அமைக்க முடிவு செய்தனர்.
ஆர்னால்ட் கிளாஸ் என்ற ஜெர்மன் நிறுவனம் , மேக்ஸ் பிளாங்க் பறவையியல் கல்வி நிலையத்துடன் இணைந்து இதை உருவாக்கி உள்ளது..
மனிதனின் கண்ணுக்கு தெரியாத, பறவைகளுக்கு மட்டும் தெரியக்கூடிய புற ஊதா கதிர்களை இந்த கண்ணாடி பிரதிபலிக்கும்..
எனவே ப்றவைகள் சுதாரித்துக்கொண்டு அதன் மேல் மோதாமல் தப்பிக்கும்…
இதில் கொடுமை என்ன என்றால் இதை சோதித்து பார்க்கும் போது சில பறவைகள் இறக்க நேரிட்டது..
வெவ்வேறு வகையான பறவைகளை பிடித்து, சாதாரண கண்னாடி மற்றும் புற ஊதா கண்ணடியை வைத்து ஆய்வு செய்தனர்..
80% பறவைகள் புற ஊதா கதிர்களை உணர்ந்து அதன் மேல் மோதாமல் தப்பின… சாதா கண்னாடி மீது காயம் அடைந்தன..
எனவே புற ஊதா கண்ணாடியை பயன்படுத்தினால் பற்வைக்ளின் ஆபத்து நீங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது..
வருங்காலத்தில் இது விமானத்தில் நேரடியாக பரிசோதிக்கப்படலாம்..
***************************************************************************
பின்குறிப்பு .
இதற்கிடையில் பறவைகள் சோதனையின்போது இறந்ததாக வெளியான செய்தி தவறு என அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லிசா வெல்ச் கூறினார்..
ஆய்வு செய்யும்போது கண்ணாடிகள் மீது வலையை பொறுத்தி இருந்தோம்… எனவே வலை மீதுதான் பறவைகள் மோதின.. காயம் எதுவும் ஏற்படவில்லை என்றார் அவர்..
சோதனை முடிந்ததும், அவற்றை வறுத்து சாப்பிடவில்லை… சுதந்திரமாக அனைத்து பறவைகளையும் பறக்க விட்டு விட்டொம் என்கிறார் இவர்..
நம்புவோம்…
யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை பற்றி யோசித்திருக்கிறீர்கள்...
ReplyDeleteநல்லதொரு பதிவு... ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...
ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை."
ReplyDeleteஇணைத்து விட்டேன்.. ஆனால் சம் பிராப்ளம்... வாக்களிப்பு பட்டை வேலை செய்யவில்லை
அருமையான ஒரு விசயம்.
ReplyDeleteநல்ல பதிவு...
புதிய புதிய அறிவியல் செய்திகளை தொகுத்து வழங்குகிறீர்கள். நல்ல பதிவு.
ReplyDeleteநல்ல பதிவு.. வாழ்த்துக்கள்... இதை போன்று தொடர்ந்து எழுதுங்கள்..
ReplyDelete”புதிய புதிய அறிவியல் செய்திகளை தொகுத்து வழங்குகிறீர்கள். நல்ல பதிவு"
ReplyDeleteநன்றி