Pages

Thursday, December 27, 2012

மொழி எல்லைகளை கடந்து சிறகடிக்கும் சாரு- அல்ட்டிமேட் ரைட்டரின் அசத்தல் ஆங்கில புத்தகம்


 மாற்றத்தை ஏற்பது என்பது உலகிலேயே கடினமான ஒன்று.  தெரியாத தேவதையை விட பழகிய பேயே உத்தமம் என்பதுதான் பலரது மனப்போக்கு.

 வாசிப்பு ஈடுபாடு கொண்ட பலர் கூட மென் நூலாக புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. என்ன இருந்தாலும் , பேருந்து பயணத்தில் புத்தகம் புரட்டிக்கொண்டே செல்லும் சுகம் மென் நூலில் கிடைக்குமா என்பார்கள்.

கணிணியில் தகவல் பெறலாம் . வாசிப்பு இன்பம் கிடைக்குமா என்பது பலரது சந்தேகம் . ஒரு புத்தகம் கையில் வைத்து இருக்கும்போது கிடைக்கும் இன்பம் , மென் நூலில் வரவே வராது , புத்தகம் போல வேகமாக படிக்க முடியாது, ஆங்காங்கு ( நூலக புத்தகம் , இரவல் புத்தக்மாக இருந்தாலும் ) பேனாவால் கோடு போட முடியாது , படித்த இடத்தை நினைவில் கொள்ள மூலையை மடிக்க முடியாது என பல குறைகளை சொல்வார்கள்.

 இதனாலேயே  தமிழில் மென் புத்தகங்கள் இன்னும் பெரிய அளவில் வரவில்லை. அதிகாரபூர்வமற்ற பிடிஎஃப் புத்தகங்கள் மட்டும் வருகின்றன. ஆனால் மென் நூலாகவே புதிதாக வருவது இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை.

 இந்த நிலையில்தான் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் morgue keeper எனும் சிறுகதை தொகுதி  நூல் Amazon மூலம் kindle edition ஆக வெளிவந்தது தமிழ் இலக்கியத்தின் ஒரு பாய்ச்சலாகவே கருதப்பட்டது. ஆங்கில நூல்கள் தமிழில் வருவதை பார்த்து இருக்கிறோம். ஒரு சமகால தமிழ் எழுத்தாளரின் தமிழ் நாவல் , ஆங்கிலத்தில் புதிய தொழில் நுட்பத்தில் வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. 

   சில நூறு பேர் படிக்கும் சிற்றிதழ்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் இலக்கியம் அறிவியல் யுகத்திற்கேற்ப , தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு , உலகம் முழுதும் போய்சேரும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    அந்த வகையில் சாருவின் பெயர் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

      சாருவின் எழுத்துகள் அனைத்தையும் படித்திருக்கும் எனக்கு அவர் தமிழ் மிகவும் பிடிக்கும். அது ஆங்கிலத்தில் சரியாக வருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. 


  ஆனால் Beyond Bounds என்ற முதல் கதையிலேயே மிக மிக சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன்.

 சிறந்த மொழி பெயர்ப்பு , சிறந்த ஆங்கிலம் என்பதற்கிடையே வேறுபாடு உண்டு. 

**********************************

உதாரணமாக , தமிழில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல இருக்கிறதே என எருமைக்காரன் பட்டி குப்பன் யோசித்து கொண்டு இருந்தான்  என மூல நூல் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள்.

இதை ஓர் ஆங்கில நிபுணர் மொழி பெயர்த்தால் , erumaikkaaran patti kuppan was thinking " That's just robbing Peter to pay Paul."   என மொழி பெயர்க்க கூடும். 

இதே வாக்கியத்தை வேறொரு ரஷ்ய நாவலை தமிழில் மொழிபெயர்க்கும்  தமிழ் மேதை இப்படி மொழி பெயர்க்க கூடும்.

மாஸ்கோ நகரின் பனி பொழியும் சாலையில் நடந்தவாறே இவான் செக்காவ் எண்ணமிட்டான் “ இது கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கும் உடைப்பது போன்றது “


*********************************

மாஸ்கோவில் இருப்பவர் பிள்ளையாரைப்பற்றி யோசிப்பாரா , அல்லது எருமைகாரன் பட்டியில் இருப்பவர் பீட்டர் , பால் என பழமொழி சொல்வாரா... சிலர் மொழி ஆளுமையை காட்டுவதாக நினைத்து , மூல நூலை சிதைத்து விடுவார்கள். மொழி பெயர்ப்பாளர் முத்திரை தெரியும் , மூல ஆசிரியர் முத்திரை மறைந்து விடும்.

ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் அந்த விபத்து நிகழவில்லை. மிக மிக சிறப்பான மொழி பெயர்ப்பு. மூல நூலுக்கு வெகு அருகில் மொழி பெயர்ப்பு இருக்கிறது.

மூல நூலின் கேலிகளும் கிண்டல்களும் மொழி பெயர்ப்பில் அப்படியே உள்ளன. அதேசமயம் , கதை சொல்லி ஓர் ஆங்கிலேயன் என்ற எண்ணம் கிஞ்சித்தும் வரவில்லை.

மொ.ர் தன் ஆங்கில மொழி புலமையை காட்ட நினைத்து இருந்தால் , ஓர் ஆங்கிலேயன் தமிழ் நாட்டு கதையை சொல்கிறான் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்.

உதாரணம் பாருங்கள்...


The funny thing about India is that the most problems are created by leaders who rise from the grassroots. Since George Fernandes was a Socialist, Perumal expected that he would come to the aid of these ‘withouts’, the season ticket holders ‘without’ permission to travel by Express. But all he did was fart in Perumal’s face.

Nivedita, Charu (2012-12-02). Morgue Keeper (Kindle Locations 83-85). Charu Nivedita. Kindle Edition. 


The ‘withouts’ decided to get together and form a group, which of course needed a name. The ‘Group of Withouts’, suggested Perumal, but the name was not accepted. It would be rude to refer to doctors, engineers and officers as ‘withouts’.

Nivedita, Charu (2012-12-02). Morgue Keeper (Kindle Locations 86-87). Charu Nivedita. Kindle Edition. இது முதல் கதையில்  ( Beyond Bounds )  வரும் சில வரிகள். ( Translated by Vaishna Roy )

ஆனால் இரண்டாவது கதையின்  ( Message Bearers from the Stars and Necrophiles )  மொழி பெயர்ப்பு முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.  காரணம் முதல் கதையின் களம் வேறு , இரண்டாவது கதையின் களம் வேறு.  இதன் மொழி பெயர்ப்பு ராஜேஷ். 

சாருவின் மாஸ்டர் பீசான முள் அடுத்த கதை.. இதை மொழி பெயர்ப்பது மிக மிக கடினம். எப்படி செய்திருக்கிறார்களோ என பயத்துடன் தான் படிக்க ஆரம்பித்தேன்.

சும்மா ரசித்து செய்து இருக்கிறார் மொ.ர் .  ( Jeyakumar Sathyamoorthy)  மூல நூல் ஏற்படுத்தும் பாதிப்ப்பை அப்படியே மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து இருக்கிறார்.


I ran to the backyard and sent my index finger to my throat digging… 
Felt only like throwing up… 
Fish bone???

மூல நூலில் இருப்பது


கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்...
குமட்டல்தான் வந்தது...
முள்....?


மொழி பெயர்ப்பு நடைக்காகவே இன்னொரு முறை படிக்க தோன்றியது.

சாரு எழுத்துகளில் அதிகம் விவாதிக்கபடும் சிறுகதை நேனோ...

இதை எல்லாம் ஒருவர் மொழி பெயர்ப்பது முடியவே முடியாது என்றுதான் நினைத்தேன்... ஒரு தொழில் முறை மொழி பெயர்ப்பாளர் கண்டிப்பாக இதை செய்யவே முடியாது.   சாருவின் எழுத்தை முழுக்க முழுக்க காதலித்து , அந்த எழுத்தில் ஊறிப்போய் இருக்கும் ஒருவர்தான் இதை செய்ய முடியும்.

ஆம். இதை மொழி பெயர்த்து இருப்பவர் ராஜேஷ்... என்ன சொல்லி பாராட்டுவது.  இந்த கதைக்கென்றே பயன்படுத்தப்பட்ட பிரத்தியேக வார்த்தை பிரயோகங்கள், பெயர்கள் , வாக்கிய அமைப்பு என எதையும் மிஸ் செய்யாமல் ஒரு மாபெரும் பணியை செய்து இருக்கிறார்.. ஹேட்ஸ் ஆஃப்.

இந்த கதைக்கு பின் இணைப்பாக , மொ.ர் குறிப்பும் ஒரு நல்ல சிறுகதைபோல அருமையாக இருந்தது..எக்ஸ்ட்ரா போனஸ் . 

ஒரு மாஸ்டர் பீசுக்கு அடுத்து என்ன கதை வந்தாலும் எடுபடுவது கடினம்தான்.. ஆனால் நேனோவுக்கு முற்றிலும் காண்ட்ராஸ்டாக வேறொரு களத்தில் இயங்கும் கதை   The Stalking Shadows.   மொழி பெயர்ப்பு Preeti Venkateshan

இந்த கதையின் பிளஸ் பாயிண்ட் அல்லது உச்சம் என்பது கிளைமேக்சும் அதற்கு முந்தைய சில வரிகளும். அதை நேர்த்தியாக மொழி ஆக்கம் செய்து இருக்கிறார் மொ.ர். 


சாருவின் முக்கிய படைப்புகளின் ஒன்றான Block No 27 Trilokpuri அடுத்த்தாக வருகிறது. Pritham K. Chakravarthy தரமான ஆங்கிலத்தில் அட்டகாசமான மொழி பெயர்ப்பு.  வரலாற்றின் முக்கியமான ஒரு துளியை கண் முன் நிறுத்துகிறது இந்த படைப்பு.

டைட்டில் கதையான Morgue Keeper அதிரடியாக ஆரம்பிக்கிறது. 

 THE SEVERED head of a man, about thirty seven, lay by itself on a table.

இதன் மொழி பெயர்ப்பு Pritham K. Chakravarthy . கதைக்காக மட்டும் அல்ல.. மொழி பெயர்ப்பு நேர்த்திக்காகவும் இது பாராட்ட்டப்பட்டது, தெஹல்காவில் வெளி வந்தது இந்த கதை. 


இந்த கதைகளுக்கு பின் சாருவின் பேட்டி இடம் பெற்று இருப்பது சிறப்பு.

ஒரு சாம்பிள் 

”Internet cannot be compared with TV. It is but an extension of books. Without Internet we could have never read so many writers. The TV is just a shadow. Neither can we feel the shadow nor have a relationship with it. Nevertheless, TV is not bad, just that people use it badly.”

”Mankind would have been extinct without literature. Just like Dostoyevsky was the hope of Tzarist Russia and Pablo Neruda, to Latin America, writers are the torch bearers of the society. They are the hope. Without Literature, man becomes an animal.”

******************************************************************


மொழிகளை கடந்த சாருவின் இந்த கதைகள் , தமிழ் தெரியாத மற்றவர்களுக்கும் செல்வது மகிழ்ச்சி . மூல நூலின் தரம் குறையாமல் அப்படியே ஆங்கிலத்துக்கு செல்வது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

******************************************************

 பின் குறிப்பு 

 நான் எப்போதுமே ஹார்ட் காப்பியாகத்தான் படிக்க விரும்புவேன். ஆனால் இந்த நூல் நல்ல வாசிப்பு அனுபவம் தந்து என எண்ணத்தை மாற்றி இருக்கிறது. நினைத்த இடத்தில் தரவிறக்கி படித்து கொள்ளலாம். ஒரு முறை டவுன் லோட் செய்து விட்டால் , நெட் இல்லாமல் படிக்கலாம்.

  வீட்டில் புத்தகம் வைக்க இடம் இல்லை என்ற பிரச்சினை இல்லை . புததகத்தில் தேவையான பகுதிகளை தேடுவது எளிது என பல அனுகூலங்கள்.

 வங்கி அட்டை இருந்தால்தான் வாங்க முடியும் என்பதில்லை. வேறு முறைகளிலும் வாங்கலாம் .

ஆங்கில நிபுணர் ஆக இருந்தால்தான் வாசிக்க முடியும் என்பதும் இல்லை. நண்பர்களுக்கு பரிசளிக்க சிறந்த மென் நூல்..

 புத்தகம் வாங்க 

டெயில் பீஸ் - ஒவ்வொரு கதையையும் பற்றி விரிவாக பேச ஆசை,  ஒவ்வொன்றை பற்றியும் தனி தனி கட்டுரைகள் எழுத முடியும். 
9 comments:

 1. எப்படியாவது 29 வது காப்பியை விற்றுவிடும் பிரயத்தனமா இந்த பதிவு...

  ReplyDelete

 2. விற்பனைபற்றி கவலை இல்லை... நல்ல நூல்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே என் அக்கறை

  ReplyDelete
 3. விற்பனைபற்றி கவலை இல்லை... நல்ல நூல்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே என் அக்கறை/// அப்போ Free யாக் குடுக்க வேண்டியது தானே....

  ReplyDelete
 4. உங்ககிட்ட மாற்று கருத்தே கிடையாதா........

  ReplyDelete
 5. உங்ககிட்ட மாற்று கருத்தே கிடையாதா.....

  ReplyDelete
 6. Inni Tamil mella savum yaru sonnadhu.... Please avara innime Englishla yea elutha sollunga...
  Ullurla vela pogadha maadu pala mozhi kooda ninaivukku varudhu... Ore oru kelvi ungalukku .... Charuvin illakiyathaal neengal valkaiil adaintha alladhu ungal kudumpathinargal adaitha palan yenna? Yenakku ithumathiri ilakkiyangal time pass... Thayavuseithu hero worshipaa vidunga...

  ReplyDelete
 7. இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன செய்துவிடமுடியும்? என்று இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் தெரியும். பெயரைக்கூட குறிப்பிடத் துணிவில்லாதவர்கள், ஆங்கிலத்தில் எழுதி தமிழைக்காப்பாற்றச் சொல்பவர்கள், இவர்களையெல்லாம் பொருட்படுத்துவது மடமை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளவேண்டும். நிற்க.
  சாருவின் படைப்பு எம்மொழியிலும் வென்றுநிற்கும் என்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு கட்டியம் கூறுகிறது என்று சொல்லும் நண்பரே வாழ்க நீவிரும் நீர்போற்றும் அப்பெரும் படைப்பாளனும்.

  ReplyDelete
 8. All the best for you and saaru.

  tamilarasi.

  ReplyDelete
 9. have a doubt. you are charu...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]