Pages

Saturday, December 29, 2012

இந்தியமயமான நாத்திகவாதமும் , பாதிக்கப்படாத இஸ்லாமும்


   வெளியூர்களுக்கு  பேருந்தில் செல்லும்போது , அசந்து தூங்கி விட்டால் பேருந்து நிலையம் வருவது தெரியாமல் போய் விடுமோ என்ற பயம் சிறு வயதில் இருந்தது, இதனாலேயே பேருந்துகளில் நான் தூங்குவது இல்லை, ஆனால் இந்த பயம் அர்த்தமற்றது என போக போக தெரிந்து விட்டது.

  என்னதான் ஆழ்ந்து தூங்கினாலும் , பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்து விட்டால் குப் என்ற துர் நாற்றம் நம்மை எழுப்பி விட்டு விடும்,. கழிப்பறையை விட மோசமான துர் நாற்றம் அங்கே வீசிக்கொண்டு இருக்கும்.

  ஒரு பேருந்து நிலையத்தைக் கூட சுத்தமான வைத்து கொள்ள தெரியாத ஒரு கேவலமான நாடு நம் இந்தியா என்பதில் கூட எனக்கு வருத்தம் இல்லை.. ஒரு பன்றி , பன்றியாக இருப்பதற்காக அதன் மேல் வருத்தப்பட்ட முடியுமா, அதன் இயல்பு அது... அவ்வளவுதான்,,, அதில் கோபப்பட்ட ஏதும் இல்லை.

  ஆனால் , பாரதப்பண்பாடு கலாச்சாரம் ,உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி என போலியாக ஒரு மித் உருவாக்கப்படுகிறதே,,, அதுதான் என் வருத்ததுக்கு காரணம்,.., இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி தேசம் என் இன்றைய தினம் உலகம் எங்கும் இருக்கும் தொலைக்காட்சிகளில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

          இந்தியாவில் தப்பித்தவறி என்றாவது ஒரு நாள் மாற்றம் நிகழ்ந்தால் , அதற்கு காரணம் இஸ்லாமாக மட்டுமே இருக்க முடியும் என எழுதினேன்,, உடனடியாக நம் அருந்தவ இந்திய புதல்வர்கள் , ஆபாச அர்ச்சனைகள் செய்து என் இன்பாக்சை நிரப்பி விட்டார்க்ள்..

       ஒரு சிலர் மட்டுமே அறிவு பூர்வமான எதிர் வாதம் வைத்தார்கள்..

நண்பர் சுரேஷ் ஒரு கேள்வி கேட்டார்.. எந்த ஒரு சித்தாந்தையும் இந்தியப்பண்பு எனும் விஷம் வீரியமிழக்க செய்து விடும் என்கிறீர்க்ளே...இஸ்லாமை மட்டும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது என எப்படி சொல்கிறீர்கள்,,சும்மா அடித்து விடுகிறீர்களா என கேட்டு இருந்தார்,

             இந்திய பண்பு எனும் பன்றி , புதிதாக வரும் சிங்கத்தை கடித்து அதையும் தன்னைப்போலவே பன்றி ஆக்கி விடும் என்பதற்கு முதலில் ஓர் உதாரணம் கொடுத்து விடுகிறேன்..

                          நாத்திக வாதம் என்பது உலக அளவில் வலுவாக இருக்கும் ஒன்று. உலக அளவிலான நாத்திகம் எப்படி வரையறை செய்யப்படுகிறது?

      “ மனித சக்திக்கு மேல் எதுவும் இல்லவே இல்லை.. இயற்கை சக்திகளின் பிரமாண்டத்தினால் பயந்து மனிதன் கடவுள் என்ற கற்பிதத்தை உண்டாக்குகிறோம்,,.. இந்த பயம் தேவை இல்லை.. மனித ஆற்றலால் இயற்கை சக்திகளை அடக்கி ஆள முடியும்.    இறப்புக்கு பின் எதுவும் இல்லை.. இறப்பு என்பது முற்றுப்புள்ளி...இதை தவிர்க்க முடியாது.... இறப்பை பற்றி கவலைப்படாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் “

     இந்த நாத்திக வாதத்துடன் விவாதிக்கலாம்,, ஆனால் அதன் நேர்மையை சந்தேகிக்க இயலாது...
                                         
                            இந்த வலுவான நாத்திகத்தை நம் ஆட்கள் எப்படி நீர்க்க செய்தார்கள் என பார்ப்போம்..

      கடவுள் இல்லை...  ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது.. ஆனால் அதை கடவுள் என சொல்லக்கூடாது,..  இயற்கை என சொல்லலாம்...

             இப்படியாக இறைவனுக்கு இயற்கை என்ற பெயர் கொடுத்து , அதை நம்மூரில் நாத்திகம் என அழைக்கிறார்கள்..


                சில மேடைப்பேச்சுகள் , பேட்டிகளில் இந்த சொற்பிரயொகங்களை கவனித்து இருப்பீர்கள்..

                    அவர் இயற்கை எய்தி விட்டார் (  இறைவனுடன் கலந்து விட்டார், இறையடி சேர்ந்தார் என்பதன் திரிபு )

              அவர் உடல் நலம் பெற இயற்கையை பிரார்த்திக்கிறேன் ( பிரார்த்தனை என வந்து விட்டாலே அது நாத்திகம் இல்லையே...    இயற்கை , இறை என லேபிள்தானே வேறு )

            மேலும் சில...

    என் மேல் பொய் வழக்கு போடுகிறார்கள்,,, அவர்களை இந்த இயற்கை சும்மா விடாது....

           இயற்கை அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனை கொடுத்து விட்டது....’


      இயற்கை என்னை கை விடாது என நம்புகிறேன்...

  மண மக்கள் நீடூழி வாழ இயற்கை இறைஞ்சுகிறேன்...     நாத்திகம் என்ற வீரிய மருந்தை , நம் இந்திய சாக்கடை எப்படி நீர்த்து போக செய்து விட்டது பார்த்தீர்களா,,,

     ஆனால் இஸ்லாம் மதத்தில் இந்த இந்திய குறுக்கு புத்தி வேலையை காட்ட முடியாது... காரணம் அவர்கள் மனிதனை நம்புவதில்லை... குர் ஆனையே நம்புகிறார்கள்..’’’

     குர் ஆன் , மத நூலாக மட்டும் அன்றி வாழ்வியல் நூலாகவும் திகழ்வதே இதற்கு காரணம்,   கணவன் மனைவி பிரச்சினை முதல் கடவுள் வரை குர் ஆன் சொல்வதே இறுதி முடிவு,,,

         வேலைதான் கடவுள் ,, எப்போதவது சாமி கும்பிட்டால் போதும் என இந்திய மனம் , நல்லது சொல்வது போல சோம்பேறித்தனத்தை புகுத்த முயலும்...  

        ஆனால் இஸ்லாமியர்கள் மனதின் இந்த மாய்மாலத்துக்கு பலி ஆவதில்லை... எத்தனை முறை தொழுவது , எவ்வளவு நேரம் தொழுவது என்பதை புனித மறையை கேட்டு அதன் படியே முடிவு செய்கிறார்கள்...


      இப்படி இருப்பதால்தான் , இந்திய சித்தாத்தம் எனும் துர் நாற்றம் இஸ்லாமை களங்க்கப்படுத்த முடியவில்லை...


            இந்தியா காட்டுமிராண்டி தேசமாக மாற காரணம் அன்னிய படையெடுப்புதான், அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடியது என இன்னொரு மித்...

      புற நானூறு போன்ற அன்றைய நூல்களை பாருங்கள்...சக மனிதர்களை கொலவ்தும் , கொள்ளை அடிப்பதும்தான் அன்றைய நாகரிகமாக இருந்து இருக்கிறது..


        பாண்டியர்கள் கட்டிய கோயில்களை சோழன் இடித்து தள்ளுவான். அவர்கள் ஆட்களை இவன் சாகடிப்பான்...

  ஆனால் , பல ஆண்டுகள் நம் நாட்டில் மொகலாயர் ஆட்சிதான் நடந்தது,,, அவர்கள் நினைத்து இருந்தால் , எல்லா கோயில்களையுமே இடித்து தள்ளி இருக்கலாம்,,, ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை...

       அதே நேரத்தில் இந்தியாவின் பெருமை மிகு கண்டு பிடிப்பான புத்த மதம்தான் , யாழ்ப்பாண நூலகம் எனும் மாபெரும் புதையலை எரித்து சாம்பலாக்கியது..

        தனிப்பட்ட முறையில் நாம் நல்லவர்கள்தான்.,.. ஆனால் இந்திய மனப்பான்மை எனும் ஒரு கேவலமான சிறையில் நாம் சிக்கி இருக்கிறோம்.. கம்யூனிசம் , நாத்திகம் , எக்சிஸ்டன்சியலிசம் என இங்கு எது வந்தாலும் , அவை நீர்த்து போய் விடும்..

     ஆனால் குர் ஆன் எனும் அரண் இருப்பதால், இஸ்லாமை மட்டும் நம்மால் கறைப்படுத்த முடியவில்லை....
                 
         


   


 
   

  

47 comments:

 1. salam sago!
  rombo azhakaka solli erukinga.!
  nanri sago!!!!

  ReplyDelete
 2. சலாம் சகோ.ஆனந்த்,
  மிகவும் தைரியமாக உள்ளத்தை திறந்து மழுப்பல் இன்றி எழுதுகிறீர்கள். நன்றி.

  ///ஒரு பேருந்து நிலையத்தைக் கூட சுத்தமான வைத்து கொள்ள தெரியாத ஒரு கேவலமான நாடு நம் இந்தியா என்பதில் கூட எனக்கு வருத்தம் /// ----------எனக்கு நிறைய உண்டு.

  இன்னொரு விஷயம்... இந்த நாறிப்போன பேருந்து நிலையங்கள்... மட்டுமல்ல... எண்ணற்ற நெடுஞ்சாலை சிற்றுண்டி நிலையங்களும் நாறுவதற்கு காரணம்... பேருந்தை விட்டு இறங்கிய வுடனேயே அதன் அருகிலேயே திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தான்..! இவர்களில்... 99.9999999% முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்..! காரணம்... இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது.

  ReplyDelete
 3. நீரை நீர் அடித்து விலகுமோ.. நீவிர் ஞானத்தை கண்டு வியக்கின்றேன்... வாழிய நின் ஆசான், வாழிய நின் புரவலர்.

  ReplyDelete
 4. @ இக்பால்.... நான் எடுத்து வைக்கும் ஆதார பூர்வ உண்மைகளை மறுத்து எதிர் வாதம் எதையும் வைக்க முடியாததால் கிண்டல் செய்து சமாளிக்கிறீர்கள். நான் சொல்வதன் உண்மையை உங்கள் மன சாட்சி அறியும்... அது போதும்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன வாதங்களா? சரி தான், உங்கள் பதிவில் உள்ள பிழைகள் தெள்ளம். என் அடுத்த பதிவில் விளக்கமான பதில் கிட்டும். உங்களுக்கு நாத்திகமும் தெரியவில்லை, இஸ்லாமும் தெரியவில்லை என்பதை இப்பதிவே காட்டிவிட்டது, இனி அடித்தாடுவது எமக்கு எளியவாம்... :)) தொடர்க, போரடித்த பதிவுலகை கொஞ்சம் சுவையாக கொண்டு போவோம்..

   Delete
 5. இஸ்லாத்தின் மேன்மையைச் சொல்ல இந்திய மனப்பான்மையைச் சாட வேண்டியதில்லை. ஏனெனில் நாமும் அத்தகைய இந்தியாவின் ஓர் அங்கம்.

  ReplyDelete
 6. அருமையான நடுநிலை பதிவு....

  இப்ப புதுசா....ஒரு சில பேர் பதிலடி கொடுக்க ....மைண்டுக்குள்ள எவ்ளோ சர்ச் பண்ணினாலும் ஒண்ணும் கிடைக்கலைனா இப்டித்தான் கேலி பண்வாங்களாம்.....

  ReplyDelete
 7. தங்கள் மீது அமைதி நிலவட்டும்..சகோ.ஆனந்த் ,

  மிக அற்புதமாக நாத்திக மாற்றத்தை பதிவு செய்தீர்கள் ..மாறக்கூடாது என்ற நோக்கம் உடைய கொள்கைகளை தவிர மற்ற அனைத்துமே எளிதில் மாறிவிட கூடியதே !!!

  கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் என்பது காட்டுமிராண்டி தனமானது. மன்னிப்பே சிறந்த தண்டனை..குற்றம் செய்தவர்களை அழைத்து கவுன்சலிங் கொடுக்க வேண்டும்..என்பன போன்ற மகா மனிதத்தன்மை தற்போது பரவலாக பேசப்படுகிறது..எந்த கவுன்சலிங்கும்,எந்த அறிவுரையும் குற்றம் செய்யும் மனநிலையில் உள்ளவர்களிடம் எடுபடாது..அந்த நேரத்தில் நீ வலி ஏற்படுத்தினால் உனக்கும் வலி ஏற்படுத்தப்படும் என்ற பயமே மனிதனின் சிந்தனையை தூண்ட வல்லது..எப்பொழுது ஒரு மனிதன் அடுத்தவருக்கு தீங்கு ஏற்படுத்தி தண்டனைக்கு தகுதியாகி விட்டானோ அப்பொழுதே அவன் இருவகையில் சமுதாயத்தில் பங்காற்றுகிறான். ஒன்று குற்றம் செய்ததிற்கு உரிய தண்டனையை அவன் அடைவது..இரண்டாவது மாற்றாருக்கு பாடமாக அமைவது...இவ்வாறு இருவகையிலும் தண்டனை அடைந்தால் மட்டுமே சமுதாயத்தில் குற்றங்கள் குறையும்..

  அப்படியென்றால் இஸ்லாம் ஆட்சி நடக்கும் நாடுகளிலும் குற்றங்கள் தொடர்ந்து நடந்தால் என்ன பொருள்.? சட்டத்தில் தவறுகள் இல்லை.அப்படியானால் அதை அமல்படுத்தும் மனிதர்களிடத்திலே தவறுகள் இருக்ககூடும்..

  இன்றைய உலகுக்கு இஸ்லாமிய சட்டம் காலத்தின் கட்டாயம்..

  " அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்." (அல் குர் ஆன்:61:8)

  நன்றி !!!

  ReplyDelete
 8. //ஆனால் இஸ்லாமியர்கள் மனதின் இந்த மாய்மாலத்துக்கு பலி ஆவதில்லை... எத்தனை முறை தொழுவது , எவ்வளவு நேரம் தொழுவது என்பதை புனித மறையை கேட்டு அதன் படியே முடிவு செய்கிறார்கள்...//திரு பிச்சைக்காரன் அவர்களே,எத்தனை முறை தொழுவது , எவ்வளவு நேரம் தொழுவது என்பது குர் ஆனில் எங்கு உள்ளது என்று கூற முடியுமா........ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை உடைத்தது யார் என்று தெரியுமா

  ReplyDelete
 9. உண்மைகளை உரக்கச்சொல்லும் ஒப்பற்ற பதிவு. அந்த சிறுநீர் கழிப்பது ஒன்று போதும் மறுப்போர் உணர.

  ReplyDelete
 10. உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேளை. அதென்ன பாஸ் இந்தியப் பண்பு. கொஞ்சம் விளக்கிறேளா..,

  ReplyDelete
 11. உண்மையா தூங்குரவங்களக் கூட எழுப்பிடலாம். ஆனா வேணும்னே தூங்குற மாதிரி நடிக்கிரவங்கள எழுப்ப முடியாது சகோ...

  உண்மைய உணர்ந்தாலும் ஏற்க மறுக்கும் இவர்களின் கேலி கிண்டலுக்கு பதில் அளித்தல் செவிடன் காதில் சங்கு போன்று... அருமையான நடுநிலை பகிர்வு.. வாழ்த்துக்கள் சகோ..

  ReplyDelete
 12. @ இக்பால்.... தாரளமாக பதில் அளியுங்கள்... ஆனால் மத துவேஷமோ , விளையாட்டுத்தனமோ இல்லாமல் ஆக்க பூர்வமாக உங்கள் எழுத்து இருக்கட்டும்...

  ReplyDelete
 13. @இக்பால்
  இஸ்லாமை நான் முழுமையாக அறிந்து கொண்டு விட்டேன் என எப்போதுமே சொன்னது இல்லையே.. இஸ்லாம் எனும் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிலை மாணவன் என்று கூட என்னை சொல்லிக்கொள்ள இயலாது... அந்த பல்கலைகழகத்தை எட்டிப்பார்க்க அனுமதி பெறுவதற்கான நுழைவு தேர்வுக்காக படிக்கும் மாணவன் நான் என்றே என்னை கருதிக்கொள்கிறேன். ஆனால் அந்த படிப்பு கூட இல்லாமல் , வெறுமனே துவேஷ அடிப்படையில் சிலர் கருத்து சொல்கிறார்களே...அதுதான் கஷ்டமாக இருக்கிறது

  ReplyDelete
 14. @ ஜானி... ஆப்கானில் புத்தர் சிலையை உடைத்தது யார் என்பது இருக்கட்டும்...

  இலங்கையில், தமிழர்களை கொன்று புத்தர் சிலைக்கு காணிக்கையாக வைத்தார்களே.. அவர்கள் யார் ? தமிழர்களை அழித்து விட்டு , புத்த மத சின்னங்களை அங்கே நிறுவுகிறார்களே ,,, அவர்கள் யார்.. ஒரு சிலைக்காக கவலைப்படுகிறீர்க்ளே... அதே புத்தர் பெயரால் , ஓர் இனமே இலங்கையில் அழிக்கப்படுகிறதே... அது பற்றி கவலைப்பட்டோமோ... இந்த இந்தியப்பண்பு என உலக நாடுகளில் நம்மை கேவலமாக பார்க்க வைக்கிறது

  ReplyDelete
 15. @ ஜானி... தொழுகையின் முக்கியத்துவம் குறைத்தும் குறித்தும், பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் இஸ்லாமிய நூல்களில் ஏராளம் சொல்லப்பட்டு இருக்கிறது.. நேரம் இருப்பின் அதை எல்லாம் படித்து பாருங்கள்.. இதைப்பற்றியெல்லாம் ஆன்மீக விவாதமாக தனியாக பேச வேண்டும். இப்போது நாம் விவாதிப்பது , சமுதாய மாற்றம்.. இதை ஆன்மீக விவாதமாக மாற்ற விரும்பவில்லை.. ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பி கேட்கிறீர்கள் என்ற பாசிட்டிவ் நம்பிக்கையுடன் சில சாம்பிள்கள்


  ”நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103).  மரணத்திற்கு பிறகுள்ள மறுமை விசாரணையில் முஸ்லிம்களிடம் முதல் கேள்வி தொழுகைப் பற்றியதாகும். எவர் அதற்கு முறையான பதலளித்து விடுகிறாரோ அவரது மற்றக் கேள்விகள் இலகுவாக்கப்படும் முதல் கேள்விக்கு பதிலளிப்பதில் சிரமப்படுபவர்களுக்கு மற்றக் கேள்விகளும் கடினமாக்கப்படும்’

  ReplyDelete
 16. சகோ.ஆனந்த்

  //உங்கள் பதிவில் உள்ள பிழைகள் தெள்ளம். என் அடுத்த பதிவில் விளக்கமான பதில் கிட்டும். உங்களுக்கு நாத்திகமும் தெரியவில்லை, இஸ்லாமும் தெரியவில்லை என்பதை இப்பதிவே காட்டிவிட்டது, //

  கோடங்கி செல்வன் பிதற்றுவதை பற்றி யாரும் சட்டை செய்ய தேவை இல்லை..சகோ.ஆனந்த் நீங்கள் இஸ்லாமிய எதிர்வாதங்களை,எதிர்பதிவுகளை சற்று கவனித்தால் உண்மை புலப்படும்..எப்படி ? இஸ்லாம் என்பது குர் ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்தது..இதனை தாக்கி எத்தனையோ கருத்துக்களை வெளியிட்டனர்..அனைத்துக்கும் சரியான விளக்கங்கள் பதிவர்கள் கொடுத்து கொண்டே வந்துள்ளனர்..இனி அதில் குறைகூற வாய்ப்பு இல்லை எல்லா வாயில்களும் அடைக்கப்பட்டு விட்டது என்பதால் இந்த இஸ்லாமியபோபியா நோயினால் அவஸ்தை படுவோர் எடுக்கும் ஆயுதம் தான் " இன்றைய கால மக்களின் வாழ்வு முறை,"

  " பார்த்தீர்களா..! ஹமாஸ் அப்டி செய்யிறான்..பாகிஸ்தான் இப்டி செய்றான்..சவூதி அரேபியாவுல பணிபெண்கள் கொடுமை படுதபடுகின்றனர்..முஸ்லிம் பெண்கள் கலப்பு திருமணம் செய்கின்றனர்..அதனால் இஸ்லாம் தவறான மார்க்கம்.."

  இதுவா இஸ்லாம்..?? ஒருவர் இஸ்லாத்தை பற்றி பேசுவது என்றால் முகம்மத் நபி வாழ்ந்த காலம் வரை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்..நபி இறந்த மறுநாளே ஒரு புதிய செயல் நடைபெற்றால் அது இஸ்லாம் அல்ல...இந்த கோடங்கி செல்வன் மற்றும் இவரின் சகாக்கள் பேசுவது எல்லாமே இஸ்லாமிய மக்களின் வாழ்வில் நடக்கும் அனாச்சாரங்களை பற்றியே..இஸ்லாம் பற்றி பேச புதிதாக ஒன்றும் இல்லை..அதனால் இத்தகையவர்களை சட்டை செய்யாமல் ஒதுங்கி நம் வேலைகளை செய்வதே நமக்கு முக்கியம்..

  இவர்கள் கொண்டுவரும் வாதங்களை எல்லாம் கூகிளில் தேடினால் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டதாகவே இருக்கும்...போன பதிவிலேயே பார்த்தோம் அல்லவா.! அவதூறு தொடர்பாக கூறப்பட்ட வசனத்தை கற்பழிப்பு குற்றத்திற்கு பொருத்தி பார்த்த மாபெரும் அறிவு களஞ்சியங்கள்...

  Dont waste our time and Energy......

  டிஸ்கி : அடுத்து இன்னும் ஆ..ஊ ..ன்னு ஓடிவருவார்கள் பாருங்கள்..

  ReplyDelete
 17. //என் மேல் பொய் வழக்கு போடுகிறார்கள்,,, அவர்களை இந்த இயற்கை சும்மா விடாது....

  இயற்கை அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனை கொடுத்து விட்டது....’

  இயற்கை என்னை கை விடாது என நம்புகிறேன்...

  மண மக்கள் நீடூழி வாழ இயற்கை இறைஞ்சுகிறேன்...//

  இதை எல்லாம் எந்த நாத்திகவாதி சொன்னார் என்பதை அறிய தர முடியுமா ?
  அவரை எந்த காரணத்தை கொண்டு நீங்கள் நாத்திகவாதி என்று நம்ப தொடங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா ?
  அதே போல் ஜானி என்பவர் ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை உடைப்பு பற்றி கேள்வி கேட்டதற்கு வேறு எதையோ கூறுவதற்கு பதிலாக சரியான பதில் தர இயலுமா?

  ReplyDelete
 18. @ kari kalan இந்த இடுகையில் அரசியல் கலக்க கூடாது என்பதற்காகத்தான் , அந்த நாத்திகவாதிகள் பெயரை வெளியிட வில்லை... மேற்கண்ட வரிகளை கூகிளில் டைப் செய்து தேடி பாருங்கள்.. யார் பேசியது , எந்த கூட்டத்தில் பேசியது என்ற எல்லா விபரங்களும் கிடைக்கும். மேலும் அவர்களை நாத்திகவாதிகள் என நான் நம்பவில்லை.. இந்த தமிழ் சமுதாயம் நம்புகிறது,,,

  ReplyDelete
 19. //மேலும் அவர்களை நாத்திகவாதிகள் என நான் நம்பவில்லை.. இந்த தமிழ் சமுதாயம் நம்புகிறது,,,
  //
  அதையே தான் நானும் சொல்ல விரும்பினேன். அவர்கள் உண்மையான நாத்திகவாதிகள் அல்லர். மக்க்ளுக்காக வெளியில் வேஷம் போடும் அவர்கள், உள்ளுக்குள் அனைத்து சடங்குகளும் செய்வார்கள். போடும் துணியில் மங்கள நிறம் பார்ப்பதிலிருந்து, வீட்டில் சாமியாருக்கு பூசை செய்வது வரை எல்லாவற்றையும் திருட்டு தனமாய் செய்வார்கள்.
  அதனால் அவர்களை வைத்து நாத்திகத்தை எடை போட வேண்டாம்

  ReplyDelete
 20. நல்ல பதிவு சகோ...

  நிச்சயமாக எந்த சிந்தாந்தமும் இஸ்லாத்தை ஒன்றும் பண்ணிவிட முடியாது.. ஏனெனில் அது மனிதனுக்கு சரியான, அவனால் செய்ய முடிகிற சட்டங்களை மட்டுமே தன்னகத்தே கொண்டு உள்ளது..... இதை இறை நாடினால் நம் சகோக்கள் அனைவரும் விரைவில் உணருவார்கள்....

  ReplyDelete
 21. நாத்திகர்கள் இயற்கை என்று சொல்லிக்கொண்டு ஆத்திகர்களைப்போல நம்பினால் அது நாத்திகமன்று. மேலும், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதென்றும் அதைக்கடவுள் என்று சொல்லாமல் இயற்கை என்று சொன்னால் அவர்கள் பேர் நாத்திகர்கள் இல்லை.

  ஆத்திகர்கள் இறைவன் உண்டு என்று சொல்வதோடு நிற்காமல் அவன் எப்படியிருப்பான் எனவும் எப்படி அவனை வழிபடவேண்டும் (ஐந்து முறை மேற்கு நோக்கி, இல்லயா?) சொல்லி நம்பி வழிபடுகிறார்கள்.

  இன்னும் சிலர், இறைவன் உண்டு; ஆனால் அவனைப்பற்றி மனிதன் கவலைப்படத்தேவையில்லை என்று சொல்லி இறைவன் என்ற ஒன்றை பலபட கற்பனையாகச் சொல்லி வழிபடும் ஆத்திகர்களை இகழ்வர். இவர்களுக்குப் பெயர் அகனிஸ்டுகள் என நினைக்கிறேன். இன்னும் சிலர் இறைவன் இல்லை. ஆனால ஒரு சக்தியுண்டு என்பர். இவர்கள் மிலியோரிஸ்ட் என்ப.

  இதில் எவரை நீங்கள் போட்டுத்துவைக்கிறீர்கள் என்று பார்த்தால், இறைவன் என்று ஆத்திகர்கள் சொல்லும் இறைவன் கிடையாது. நாங்கள் சொல்லும் இறைவனுக்குப்பெயர் இயறகை என்று பெயர் என்பவர்களைப்பற்றித்தான். இவர்கள் உண்மையில் ஆத்திகர்கள். ஆனால் ட்ரெடிசனல் ஆத்திகர்கள் மக்களைப்பலபல சொல்லி ஏமாற்றுவதால் அவர்களை வெறுத்து அவர்கள் சொல் செயல் அனைத்தையும் எதிர்ப்பவர்கள். இவர்கள்தான் தமிழ்நாட்டில் உண்டு. இவர்கள் செய்வது ஒரு சமூகசேவையென்றுதான் சொல்வேன். இவர்கள் இல்லாவிட்டால் ஆத்திகர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடும். எதிர்க்கட்சி போல. ஆளுங்கட்சியை எதிர்க்கவேண்டும். இல்லாவிடால் ஆளுங்கட்சி அராஜகம் பண்ணும்.

  ReplyDelete

 22. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை உடைப்பு பற்றி கேள்விக் கேட்கும் ஜான் மற்றும் கரிகலான் ,நம் தமிழநாட்டில் கற்பு தெய்வம் என்று தமிழ் ஹிந்துக்களால் வணங்கப்படும் கண்ணகி சிலையை சென்னை கடற்கரை சிலை சாலையிலிருந்து ஜோசியரின் ஆலோசனையின் படி லாரியை வைத்து இடித்து லாவகமாக அப்புரப்படுத்திவிட்டார்களே ,இதை கேட்டீர்களா?லாரி மோதியது என்றால் அதன் பின்னர் அந்த சிலையை வைத்திருக்கலாமே .ஏன் வைக்கவில்லை?
  At the same time, he said the Taliban would not destroy statues actually being worshiped, and would not touch the Hindu temples still left in Afghanistan.
  http://www.nytimes.com/2001/03/19/world/19TALI.html

  முந்தைய ஆப்கான் அரசுடன் ஜப்பான் குழந்தைகளுக்கான மருந்துகளை ஆப்கானுக்கு சப்பளை செய்ய ஒப்பந்தம் செய்து இருந்தது .ஆனால் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கான மருந்து சப்பளை செய்வதை நிறுத்தியது .இதனால் ஆத்திரமுற்ற தாலிபான்கள் தங்கள் குழந்தைகள் மருந்து இன்றி சாகும்பொழுது யாராலும்வணங்கப்படாத புத்தர் சிலையை உடைத்தார்கள் .புத்தர்சிலைக்காக கண்ணீர் விட்டவர்கள்,ஆப்கான் குழந்தைகளுக்காக கண்ணீரை வடிக்க மறந்து வற்ற செய்த புண்ணியம் எது ?
  தமிழ்நாட்டில் வணங்கப்பட்ட கற்புக்கரசி கண்ணகி சிலை தூக்கி வீசப்பட்டதை கண்டுகொள்ளாதவர்கள்,வணங்கப்படாத புத்தர் சிலைக்கு வார்த்தைகளை வடிப்பது ஏன் என்பது புரியவில்லை?

  ReplyDelete
 23. அருமையான பகிர்வு. இக்பால் செல்வனை சட்டை செய்ய வேண்டாம். அவர் அப்படித்தான். :-(

  ReplyDelete
 24. அனானி அவர்களே... இந்த போலி நாத்திகர்கள் செய்வது நல்லதா இல்லையா என்பதற்குள் நான் போகவே இல்லையே... அது வேறு டாபிக்,,, நம் ஊரைப்பொறுத்தவரை , நாத்திகததை சற்று சிதைவு படுத்திதான் நம் ஆட்கள் ஏற்கிறார்கள் என்பதுதானே நான் சொல்வது.

  ReplyDelete
 25. இந்து மதம் வெளிநாட்டிற்கு போனால் "ஆன்மிகம் தழைக்கிறது" என்பார்கள். வெளிநாட்டு மதம் இந்தியாவிற்கு வந்தால் "அந்நிய மதம் ஆக்கிரமிக்கிறது" என்பார்கள்.

  இந்தியாவில் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு கலாச்சாரம்; ஒரே கலாச்சாரம் என்பதே இந்தியாவில் இல்லை. இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அப்போது தான் "இந்து ராஷ்டிரா" சாத்தியப்படும் என்று நம்புகிறார்கள்.

  நானும் கவனிக்கிறேன் ...இங்குள்ள ஐரோப்பிய தொலைக்காட்சிகளிலெலாம் இந்தியாவின் வறுமையையும், அசுத்தத்தையும், ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கும் கும்பமேலாவின் நிர்வாண கஞ்சா சாமியார்களையும் அவர்களது காட்டுமிராண்டித்தனமான அகோரி பிணந்திண்ணி முறைகளையும் காட்டி காட்டி இந்தியர்களான எங்களை மற்றவர்கள் கேள்விகளால் துளைக்க வைத்து விடுகிறார்கள்.

  சரி.. உங்களிடம் ஒரு கேள்வி. இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய போதெல்லாம், பரவிய நாடுகளின் மொழியை, கலாச்சாரத்தை, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட சமயத்தை அழித்து இஸ்லாத்தை நிலை நாட்டியது என்றும், ஆனால் இந்தியாவில் பரவிய போது மட்டும் மொழியை கலாச்சாரத்தை ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட மதத்தை அழிக்க முடியவில்லை என்றும் இது இஸ்லாம் இந்தியாவில் தோற்றதற்கு சாட்சி என்றும் இந்திய கலாச்சாரத்தோடு மோதி இஸ்லாத்தால் ஜெயிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்கள் இந்துத்துவவாதிகள். உங்களிடம் பதில் இருக்கிறதா?

  ReplyDelete
 26. அடுத்து, பேருந்து நிலையத்து மூத்திர துர்நாற்றமும் ஆத்திக நாத்திமும்.

  மதங்கள் புதுமனிதர்களைப்படைக்க முடியா. மனிதர்களே அடித்தளங்கள். அவற்றின் மேல்தான் கட்டிடம் எழுப்பமுடியும். அவர்களின் அடைப்படைக்குணங்களை எந்த மதமும் மாற்றமுடியாது. ஆனால் அச்சத்தை உருவாக்கி அடக்கிவைக்க முடியும்.

  உதாரணம். காமம். மனிதனின் அடிப்படை உணர்ச்சி. எந்த மதமும் அழிக்க முடியாது. அதை நெறிபடுத்த மட்டுமே செய்யமுடியும் இறைவன் பெயரால் செய்வர்.

  இப்படிப்பார்க்கின், இந்திய மனிதனின் அடிப்படை மனம் தன்னலத்தைப்பேணுவது. ஆனால் அத்தன்னலமும் நீள்பார்வை கொண்டதன்று. தற்போது, தற்சமயம் என்றுதான்.

  எ.கா. பேருந்து நிலையத்தை மூத்திரப்பிறையாக்கினால், நோய் பரவி ஊரெல்லாம் மக்கள் சாவார்கள். அப்படி பரவி சாதல் ஆவதற்கு மாதக்கணக்கில் ஆகலாம். ஆனால் மூத்திரம் பெய்துவிட்டு தன்னிச்சையை நிறைசெய்வது ஒரு நிமிடம்.

  ஆக, தன்னலம் பொதுநலத்திலிருந்து வரும்போது நன்று. நன்மை பயக்கும். தன்னலம் அப்படிவராமல் தன்னிலேயே பிறந்து தன்னிலேயே முடிந்தால், டெங்கு வந்து குழந்தைகள் சாவும். அத்தன்னலவாதியின் குழந்தையும் ஒருநாள் சாகும். இத்த‌ன்னல‌ம் இறுதியில் சோக‌ம்.

  இந்திய‌ம‌ன‌ம் இர‌ண‌டாவ‌து த‌ன்ன‌ல‌த்தைக் கொண்ட‌து. அதை எந்த‌ ம‌த‌த்தாலும் மாற்ற‌முடியாது. பொதுவிட‌த்தை அசிங்க‌ம் ப‌ண்ணுகிற‌வ‌ர்க‌ள் எவ‌ரென்று பார்த்தாலும் எல்லாரும் அதிலிருப்ப‌ர். இசுலாம் இந்திய‌ர்க‌ளை மாற்றுமா இல்லையா என்றால், இல்லையென்றுதான் ப‌தில். இப்ப‌திலை நேர‌டியாக‌ப் பார்க்க‌ ஒரு இசுலாமிய‌க்குடியிருப்பின் வீடுக‌ளைப் போய்ப்பாருங்க‌ள். தெரியும். அல்ல‌து அத்தெருவுக்க‌ருகில் அவ‌ர்க‌ள் வ‌ச‌திக்காக‌ ஒரு பொதுக்க‌ழிப்ப‌றையைக் க‌ட்டிவைத்துப் பாருங்க‌ள். அல்ல‌து அவ‌ர்க‌ள் குடியிருப்பில் இருக்கும் க‌றிக்க‌டையைப்பாருங்க‌ள். எந்த‌க்க‌றிக்க‌டைக்கார‌னும் அர‌சின் சுஹாதார‌ ச‌ட்ட‌ங்க‌ளைக் க‌டைபிடிக்க‌மாட்டான். அவ‌னும் இசுலாமிய‌ன்தான். அவ‌னிட‌ன் வாங்கி ச‌மைப்போரும் அவ‌ர்க‌ளே. உங்க‌ள் க‌ருத்தின்ப‌டி இசுலாம் அவ‌ர்க‌ளை மாற்றியிருக்குமானால், ம‌ற்ற‌ம‌த‌த்த‌வ‌ர் வாழுமிட‌த்து க‌றிக்க‌டைக‌ள் ம‌ட்டுமே க‌ம்பியில் க‌றியைக்கட்டித்தொங்க‌ விடும். உண்மையென்ன‌? எல்லாரும் எங்கேயும் விதிமீற‌ல்தான். எங்கே போயிற்று இசுலாம். எங்கேயும் போக‌வில்லை. அழ‌காக‌ வீட்டுக்குள் எப்போது தொழுகை ந‌ட‌த்துகிறார்க‌ளோ அங்கே போய் ஒழிந்து கொண்ட‌து. வாழ்க்கை வேறு. ந‌ம்பிக்கை வேறானா நிலை. எம்ம‌த‌மாயினும் இதே. க‌றிக்க‌டை ஒரு உதார‌ண‌ம். நிறைய‌ உண்டு.

  ஆத்திக‌ர்க‌ள் - எம்ம‌த‌மாயினும் - ஏமாற்றுப் பேர்வ‌ழிக‌ள். ஏனென்றால், ம‌த‌ம் ஒரு வேஷ‌ம். அல்ல‌து ஒரு திருப்தி. அல்ல‌து கூட்டம் எப்ப‌டியோ அப்ப‌டி நானும். நான் சூழ‌ வ‌சிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு ம‌த‌ம் இருக்கிற‌து. என‌வே என‌க்கும். இல்லாவிட்டால் கேள்விமேல்கேள்விகேட்டுக்குடைவார்கள். மேலும் ஒரு போதையைத்த‌ரும். கோயில், குள‌ங்க‌ள், வ‌ழிமுறைக‌ள், அதைப்ப‌ற்றிய‌ நூல் ப‌டிப்புக்க‌ள், ஞான‌ச்செருக்கைத் த‌ருகிற‌து. அதை அனுப‌விக்கத் துடிக்கிறார்க‌ள் ஆத்திக‌ர்க‌ள்.

  உண்மையான‌ இறைந‌ம்பிக்கைக்கும் நேர்மையான‌ ந‌ல்வாழ்வுக்கும் ம‌த‌ம் துணை கிடையாது. ஏசு சொன்னார்; முகமது நபி சொன்னார்; கிருஸ்ணர் சொன்னார். புத்தர் சொன்னார், என்பதால் மட்டுமே நான் நல்லவனா? ஒருவேளை அவர்கள் வராவிட்டால் நான் கெட்டவனாகத்தான் இருப்பேனா? எவர் வந்தாலும் வராவிட்டாலும் நான் நல்லவனாக இருப்பேன். நல்லவருக்கெல்லாம் இரண்டே சாட்சி: ஒன்று, மனசாட்சி, மற்றொன்று தெய்வத்தின் சாட்சியம்மா. இப்படிப்பட்டவர்கள் இறை ந‌ம்பிக்கையும் வாழ்வும் சேர்ந்தே இருப்ப‌தால் பொது ந‌ல‌த்தைப் பேணுவ‌ர். என‌வே பொதுயிட‌த்தைக்க‌ழிப்ப‌றையாக்க‌ மாட்டார்க‌ள்.

  ReplyDelete
 27. இந்தியாவை கேவலமாக நினைக்கும் மூடர்களுக்கு இந்தியாவில் என்ன வேலை?

  ஓ...குண்டு வைத்து இந்தியர்களை கொல்ல வந்த கூட்டத்தில் நீரும் ஒருவரா?

  ReplyDelete
 28. தீவிரவாதிகள் நியாயம் பேச வந்துவிட்டார்கள்....

  ReplyDelete
 29. ஆனந்த் ////பல ஆண்டுகள் நம்நாட்டில் மொகலாயர்கள் ஆட்சி நடந்தது .அவர்கள் நினைத்து இருந்தால் எல்லா கோயில்களையும் இடித்து தள்ளியிருக்கலாமே ,ஆனால் அப்படிநடக்கவில்லை ///

  500 ஆண்டுகள் ஆட்சி செய்த மொகலாயர் நல்ல முஸ்லிம்களாக ,நடந்து இருந்தால் உமர்[ரலி] போலநேர்மையாகவும் பாகுபாடின்றியும் ஆட்சி செய்து இருந்தால் ,,குர்ஆன் மற்றும் நபிவழி தொகுப்புகளை பின் பற்றி ஆட்சி செய்து இருந்தால் , பத்வா ஆலம்கீரி எழுதுவதை விட நபிவழி செய்திகள் அறிந்து ,அவற்றினை பின்பற்றி ஆட்சி செய்தால் ,மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக மாறியிருப்பார்கள் .கோயிலகள பள்ளிவாசல்களாக மாறியிருக்கும் .ஆனால் மொகலாயர்கள் போரில் துவங்கி ,மது மாதுவில் மயங்கி ,நேரு சொன்னதைப்போல மொகலாயர்கள் அரை முஸ்லிம்கள் .
  சித்தூர் ராணி பதிமினியை தோற்கடித்த அலாவுதீன் கில்ஜி அவரை பெண்டாள ,ஓட ,ஓட விரட்டுகிறார் .அவரோ மாடியிலிருந்து குதித்து மரணிக்கிறார். இதி இஸ்லாமா?இல்லை. அலாவுதீன்பத்மினியை கைது செய்து அவருக்கு ராணிக்குரிய கண்ணியத்தை கொடுத்து அவருக்குரிய மரியாதைகளுடன் தனி அறைகள் கொடுத்து சிறப்புடன் நடந்து இருந்தால் ஒருவேளை அவரே அலாவுதினை மனம் செய்ய விரும்பியிருக்கலாம். அல்லது அவர் முஸ்லிமாக மாறியிருக்கலாம்.
  முஹம்மது நபி[ஸல்] அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்ற மலைவாசிகளின் தலைவர் ,தனது மகளை நபி[ஸல்] அவர்களுக்கு மனம் செய்ய முடிவு எடுத்து மகர் பெற்று கொள்கிறார்.பின்னர் தனது மகளை ஒரு தாதியுடன் நபியிடம் அனுப்பிவைக்கிறார்..பேரழகு மிக்க அந்த பெண்ணின் அழகை காண மதினா பெண்கள் கூடிவிட்டனர் .அந்த பெண்ணுடன் தாம்பத்திய வாழ்க்கையை துவங்க அறைக்குள் சென்று அந்த பெண்ணின் கரம்பற்றியதும் ,நான் ஒரு மன்னரின் மகள் நீங்களோ ஆட்டிடையர் ,உங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறியதும் உடன் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் வெளியேறி அந்த பெண்ணுக்கு இரண்டு ஆடைகள் வழங்கி அந்த பெண்ணின் தந்தையிடம் அனுப்பிவைக்குமாறு பணிக்கிறார்.
  இப்படியல்லவா அலாவுதீன் நடந்து இருந்தால் ,,,,,,,

  ReplyDelete
 30. சகோதரர் ஜானி,
  அஸ்ஸலாமு அலைக்கும்

  கொஞ்சம் துவேஷமின்றி சிந்தியுங்கள் சகோ..அந்தப் புத்தர் சிலைகளை விடுங்கள்..இன்று இப்போது புத்த மதத்தின் வரலாற்றுச் சுவடுகள் அழிக்கப்பட்டு அதன் கீழே இருக்கும் உலகின் மிகப்பெரிய தாமிரச் சுரங்கத்தை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கா செயல்படுகிறதே. அதுகுறித்தும் கொஞ்சம் வாய் திறவுங்களேன்.

  http://www.ibnpercy.com/taliban-destroy-historic-buddhist-site-bad-chinese-destroy-buddhist-ancient-site-okay/

  ReplyDelete
 31. சகோதரர் ஆனந்த்,
  அஸ்ஸலாமு அலைக்கும் ,

  அடித்து ஆடுகிறீர்கள்..T 20 மேட்ச் போலிருக்கிறது உங்கள் சமீபத்திய பதிவுகள்...இஸ்லாத்தைப் பற்றியா எழுதுகிறீர்கள்..இருங்கள்...போலி நாத்திகம் என்ற இஸ்லாமோபோபியா பதிவுலகில் தமிழ்மணம் வீசி உங்களை ஆட்கொள்ளும் :) :)

  ReplyDelete
 32. @ ராவணன்,,, இந்தியாவை கேவலமாக நினைக்கவில்லை... கேவலமான நிலையில் இருந்து விடுபட வேண்டும் என நினைக்கிறேன்

  ReplyDelete
 33. @கரிகாலன்.. அவர்களை வைத்து நாத்திகதை நான் எடை போடவில்லை... நீங்களும் அவர்களை நாத்திகவாதிகள் என கருதவில்லை.. ஆனால் பெரும்பான்மை மக்கள் அவர்களைத்தானே நாத்திகவாதிகள் என நினைக்கிறார்கள்... ? சமூகத்தின் இந்த அறியாமையைத்தான் நான் சாடுகிறேன்

  ReplyDelete
 34. அனானிமஸ்///உண்மையான இறைநம்பிக்கைக்கும் நேர்மையான நல்வாழ்வுக்கும் மதம் துணை கிடையாது //

  ,நீங்கள் திருமணம் புரிகையில் எனக்கு மதம் கிடையாது என்று மணப்பெண் வீட்டாரிடம் தெரிவித்து திருமணம் புரிந்தீர்களா? உங்களது மனைவிக்கும் மதம் துணை கிடையாதா?

  ReplyDelete
 35. அனானிமஸ் ////ஒரு இஸ்லாமிய குடியிருப்பின் வீடுகளைப் பொய் பாருங்கள் .தெரியும் அல்லது அவர்களது தெருவுக்கு அருகில்அவர்களது ஒரு பொது கழிப்பறைகளை கட்டிவைத்து பாருங்கள் ////
  ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவனுக்கும் உள்ள வித்தியாசம் தொழுகைதான்.அங்ஙனம் தொழுபவர்கள் பள்ளிவாசலுக்கு வருகிறர்கள் பள்ளிவாசலில் கட்டி வைக்கப்பட்டுள்ள அனைத்தும் பொது கழிப்பறைகளே .
  அந்த கழிப்பறைகளை வந்து பாருங்கள் .இந்த சுத்தத்தை இஸ்லாம் சொல்லித்தருகிறது .
  ////அவர்கள் தெருவிலிருக்கும் எந்த கரிக்கடையை பாருங்கள் .எந்த கரி கடைக்காரனும் அரசுவின் சுகாதார சட்டங்களை கடைபிடிக்க மாட்டன்.///
  எந்த குடிமகனும் அரசுவின் எந்த சட்டங்களையும் கடைபிடிக்கமாட்டான் .சாலைவிதிகளை பின்பற்றுவதை கவனிக்கும் காவலரும் வீட்டுக்கு செல்லும் பொழுது சாலைவிதிகளை புறக்கணித்தே செல்கின்றனர். 50 வீடுகள் இருக்கவேண்டிய இடத்தில் 200 அலல்து 300 வீடுகள் இருக்கின்றன .கிலோ 400 ரூபாய்க்கும் கறியை அவன் 500 ரூபாய்க்கு விற்றால் அவனே சுத்தத்திற்கு என்று தனியாக செலவழிக்க முடியும் .பள்ளி குழந்தைகளை 7 பேர்களுக்கு மேல் ஏற்றி செல்லக் கூடாது என்று அரசு சொல்லுகிறது .அப்படியெனில் மாதம் ஒரு குழந்தைக்கு 500 ரூபாய் வசூலிக்கும் ஆட்டோக்காரர் மாதம் ஒரு குழந்தைக்கு 1200 ரூபாய் வசூலிக்க வேண்டும் .அதற்கு அவர்களின் பொருளாதாரம் ஒத்துக்குமா?
  அதிகமான ஜனத்தொகையில் ஒரு ட்ராக்கை வைத்துக் கொண்டே அதிகமான ரயில் போக்குவரத்துகளை இதுவரை நடத்திவந்த இந்தியாவை மெச்சவேண்டும் .பொருளாதாரம் மேலோங்கினால் இந்தியாவை விட சிறந்த நாடு ஒன்றுமில்லை

  ReplyDelete
 36. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  //இந்த நாறிப்போன பேருந்து நிலையங்கள்... மட்டுமல்ல... எண்ணற்ற நெடுஞ்சாலை சிற்றுண்டி நிலையங்களும் நாறுவதற்கு காரணம்... பேருந்தை விட்டு இறங்கிய வுடனேயே அதன் அருகிலேயே திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தான்..! இவர்களில்... 99.9999999% முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்..! காரணம்... இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது.//

  சூப்பரப்பு ! அப்புடி போடு அருவாளை மோனே .. நம்மாளுங்க ஒன்னுக்குப் போவ மாட்டாங்களா . ஹிஹிஹிஹி !

  நீங்க இந்தியாவுல நம்மாளுங்க ஏரியாவுக்கே போனதில்லையா. மண்ணடிக்கு போங்க தெரியும் மூத்திர நாத்தம் புரியாணி நாத்தத்தை விட குப்புனு அடிக்கும்.

  சரி இங்கனத் தான் ஒன்னு மண்ணா நாமளும் அவங்களும் கலந்துக் கிடக்கோம். செத்த பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தோனேசியா, சூடான், சோமாலியா, எகிப்து இங்கன எல்லாம் போய்ட்டு வாங்க.. மூத்திரம் அடிக்கிறதல. பப்ளிக்கல மணக்க மணக்க நாமளும் கிங்கு தான் !

  ReplyDelete
 37. Mr இப்ராஹிம் ஷேகமுகம்மது!

  நான் எழுதியதில் மதம் துணை கிடையாதென்பதை மதம் அவசியமன்று என்று வாசித்திடவும்.

  நன்னா டெஃபென்ஸ் பண்றேளே. ஆனால், நான் சொன்னவைகளச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென அச்சப்படுகிறேன்.

  நான் மசூதிகளைப் பற்றிப் பேசவேயில்லை. இசுலாமியர் குடியிருப்பைப்பற்றித்தான் பேசுகிறேன். மசூதிவேறே. குடியிருப்பு வேறே. மசூதிகளில் நுழைவில் ஒரு பரந்த நீர்த்தொட்டி இருக்கும். உள்ளுழைபவர்கள் அதில் தங்கள் காலகளைக் கழுவிவிட்டு நுழைவர். உள்ளேயும் சுஹாதாரம் எப்பவும் இருக்கும். அதைப்பற்றியெல்லாம் இங்கே ஏன் பேசவேண்டும?

  குடியிருப்பு ஊரில் எங்கும் இருக்கும். அங்கே ஒரு பொதுக்கழிப்பறையைக்கட்டிவிட்டால், கொஞ்ச நாட்களுக்குப்பின் அதனுள் நுழையும்படி இருக்காது அப்படிப் பண்ணிவிடுவார்கள். நீர் வைத்தாலும் கூட. வெளியில் நின்றுவிட்டு செல்வர் ஏராளம்.

  இதை இசுலாமியர் மட்டுமன்றி, எல்லாரும் செய்வார்கள். இதற்கு நான் சொல்லிய காரணம் இந்தியரின் அடிப்படைக்குணம் தன்னலம். அது தனியாக இந்திய முசுலீம் என்று வராது. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  நான் இதைச் சொல்லக்காரணம் பதிவாளர் இசுலாமியர்கள் தங்கள் மதத்தால் தங்கள் பொதுவாழ்க்கையை மற்றவரைவிட நன்றாக வாழ்கின்றார்கள் என்ற கருத்தை முன்வைக்க முயல்வதால்.

  வெள்ளைக்கார முசுலீம்களை ஜெர்மனியிலும் நெதர்லாண்ட்ஸிலும் பிரிட்டனிலும் நான் பார்த்ததுண்டு. அவர்கள் சுத்தம் வெள்ளைக்காரனின் சுத்தம்.

  நீங்களும் முசுலீம்தான். அவர்களும்தான். ஆனால் அவர்களின் சுத்தம் அவர்களின் அடிப்படைக்குணத்திலிருந்து. உங்கள் சுத்தம் உங்கள் குணத்திலிருந்து.

  கறிக்கடை என்றுதான் எழுதினேன். கரிக்கடை என்றெழுதுகிறீர்களே! கரிக்கடையில் அடுப்புக்கரிதான் விற்பார்கள்.

  ReplyDelete
 38. Ibrahmin Mohanned doesn't know how to defend. When I showed the comments purported to Ibrahmim, my son observed as under:

  Dad, the reason is overwhelming poverty of India. Poverty creats its own culture. In the west, there is some sort of widespread prosperity always. Though it may be interrupted off and on, they recover fast due to thin population. The general prosperity creats a culture of which the importance attached to personal and public hygene s 1. If we are prosperous, we can build state of art toilets, in abundant number, in our cities and the muslim colonies will also have such toilets. Their religon has nothing to do with their public toilet habits. Even if it does, they will observe what others do and seeing that the general habit is well tolerated, they follow suit.

  What abt Ibrahmim's comments (he read that)?

  He shd distinguish between rich and poor muslims. The rich can afford to maintain private habits well. He whitewashes his house many times whereas the poor cant afford to do even once a year. Naturally the poor houses will b dirty. Where comes the religion here? Nowhere.

  Dad, you r wrong to say habits r permanent. Aa they come, so they can go.

  A fine thought.

  I must add, we need money even to observe our religion properly. :-)

  ReplyDelete
 39. // நண்பர் சுரேஷ் ஒரு கேள்வி கேட்டார்.. எந்த ஒரு சித்தாந்தையும் இந்தியப்பண்பு எனும் விஷம் வீரியமிழக்க செய்து விடும் என்கிறீர்க்ளே...இஸ்லாமை மட்டும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது என எப்படி சொல்கிறீர்கள்,,சும்மா அடித்து விடுகிறீர்களா என கேட்டு இருந்தார்,//

  நான் எழுதியிருந்த வார்த்தைகளை பேசாமல் காப்பி பேஸ்ட் செய்து இருக்கலாம். "இந்த சும்மா அடித்து விடுகிறீர்களா" என்ற சொற்களை நான் உபயோகிக்கவே இல்லை.. :) ஓ... இதைத்தான் எதையும் நீர்த்துப்போக செய்யும் "இந்திய பண்பு" என்று குறிப்பிட்டீர்கள் போலும்.

  போகட்டும்...

  என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக உங்கள் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தீர்கள். இதுவரை பதில் கிடைக்காத வினாக்கள்:

  // நண்பர் பிச்சைக்காரன்: உங்களுக்கு என்னுடைய பணிவான ஆலோசனை ஒன்று - தயவு செய்து தவறுகள் நிகழும் எந்தவொரு இடத்திலும் தவறிப்போயும் நின்றுவிடாதீர்கள். ஏனென்றால் பல இடங்களில் வேடிக்கை பார்க்க போனவர்கள்தான் பலியாகி இருக்கிறார்கள். அவ்வகையில் உங்களை தவறுதலாக கைது செய்துவிட்டார்கள் என்று வைத்துகொள்வோம், அச்சமயம் உங்கள் வாயே உங்களை பலிவாங்கிவிடும் அபாயம் உள்ளது... //

  - இதில் ஒரு வினா இருப்பது உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

  // "முசல்மானாக பிறந்ததாலேயே தீவீரவாதியாக பார்கிறார்கள்" என்றும் சொல்லுகிறீர்கள். அதாவது எந்த விசாரணையும் இல்லாமல் முன்முடிவுடன் அணுகுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்த இடத்தில் நீங்கள் இஸ்லாம் சட்டத்தை எதிர்த்துவிட்டு, மற்றவர்களுக்கு நடக்கும்போது மட்டும் இஸ்லாம் சட்டப்படி எந்தவித விசாரணையும் இன்றி தூக்கிலிட வேண்டும், கல்லிலடித்து கொல்ல வேண்டும் என்று அலறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

  என்போன்றவர்கள் உங்களுக்கு இழைக்கப்படும் முன்முடிவு அணுகுமுறைகளை விமரிசனம் செய்துகொண்டிருக்கும்போது நீங்கள் மற்றவர்களின் ஜனநாயக உரிமையை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்? //

  - இது முசல்மான்களுக்காக எழுதப்பட்டது என்று நினைத்துவிட்டீர் போலும்...

  // உங்கள் கூற்றுப்படி நம் நாட்டிற்கு இறக்குமதியான சரக்கில் தண்ணீர் கலந்துவிட்டது; தேநீரில் பால் கலந்துவிட்டது. இந்த நாட்டின் தன்மை அது என்று நீங்கள் உங்கள் திருவாயாலேயே சொல்லிவிட்டீர்கள்.

  ரொம்பவும் பெருமை வாய்ந்ததாகவும் தவறுகளே இல்லாததாகவும் நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய சட்டம் இங்கே இந்தியாவிற்கு வந்தால் அதுவும் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. அதை பலம் வாய்ந்ததாகவே விட்டுவிடுவோமே... // இதற்கான பதிலாக உங்களின் இந்த பதிவு அமைந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...

  இந்த பதிவின் பின்னூட்டத்தில், அனானிமஸ் என்று ஒருவரின் இரண்டாவது பின்னூட்டத்துடன் நான் இயைந்து போகிறேன். அதற்கும் சேர்த்து நீங்கள் பதில் சொன்னால் நன்று...

  கடைசியாக ஒன்று - இதுவும் நிச்சயம் உங்களை காயப்படுத்த அல்ல... புரியவைக்க முடியுமா என்ற நம்பிக்கையில்தான் -

  இஸ்லாம்ய சட்டம் இந்தியாவில் வந்தால் முதலில் ஆப்பு விழுவது உங்கள் சாருவுக்கும் அவர் எழுத்துகுமாகத்தன் இருக்கும் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 40. "பாண்டியர்கள் கட்டிய கோயில்களை சோழன் இடித்து தள்ளுவான். அவர்கள் ஆட்களை இவன் சாகடிப்பான்...

  ஆனால் , பல ஆண்டுகள் நம் நாட்டில் மொகலாயர் ஆட்சிதான் நடந்தது,,, அவர்கள் நினைத்து இருந்தால் , எல்லா கோயில்களையுமே இடித்து தள்ளி இருக்கலாம்,,, ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை.."

  ஒளரங்கசிப் தவிர எந்த முகலாய மன்னர்களும் வுன்மையான முஸ்லிம் கிடையாது . அதனால் ஹிந்து கோயில்கள் தப்பியது.

  ReplyDelete
 41. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  தமிழ்நாடு LIST OF HOLIDAYS

  ReplyDelete
 42. ஃபேமஸ் பாவா said...

  //நீங்க இந்தியாவுல நம்மாளுங்க ஏரியாவுக்கே போனதில்லையா. மண்ணடிக்கு போங்க தெரியும் மூத்திர நாத்தம் புரியாணி நாத்தத்தை விட குப்புனு அடிக்கும்.// இக்பால் சீ என் நீங்கள் உங்கள் பெயரிலே வாரலமே என் இந்த போலி பெரு நீங்கள் எந்த குல்லாவை போட்டாலும் உங்கள் புத்தி வத்தி வச்சிறிது.... நீங்கள் மண்ணாடி பக்கம்மெல்லாம் திருவதுண்டா.... ஹா ஹா ஹா

  ReplyDelete
 43. குலசேகரன் ///நான் மசூதி பற்றி பேசவில்லை .இஸ்லாமியர்களின் குயிருப்புகள் பற்றியே பேசுகிறேன் .///

  நானும் மசூதி பற்றி பேசவில்லை .மசூதிகளில் பரந்த நீர்த்தொட்டி என்பது உடல் அங்கங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்துவது .ஆனால் ஒவ்வொரு மசூதிகளிலும் கழிப்பறைகள் ,சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது .இதை நீங்கள் பார்க்கவில்லை போலும் .மசூதிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மசூதி கழிப்பறைகள் பொதுகழிப்பிடங்கள் ஆகவே பயனாகின்றன.சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்வது இஸ்லாத்தில் கட்டாயமாககப் பட்டுள்ளது என்பதால் முஸ்லிமகளில் பெரும்பான்மையினர் தண்ணீர் இல்லாத சிறுநீர் கழிப்பிடங்களை உபயோகப்படுத்துவது இல்லை .அநேகர் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கே செல்கின்றனர் .
  ///அவர்கள் சுத்தம் அவர்களின் அடிப்படை குணத்திலிருந்து .உங்கள் சுத்தம் உங்கள் குணத்திலிருந்து.///
  தவறு .தொழுபவர்கள் ,மற்றும் தொழாதவர்கள் ஆயினும் இஸ்லாமிய விதிகளை பின்பற்றக் கூடியவர்கள் திறந்த வெளியில் சீறுநீர் கழிப்பது கிடையாது.சீறுநீர் கழித்தபின்னர் சீறுநீர் துவாரம் உட்பட தண்ணீரால் கழுவுவது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று .அப்படி தண்ணீர் கிடைக்காவிட்டாலும் டிஸ்யு பேப்பர் ,நீரை உறிஞ்சும் கல் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்வது வழக்கம்

  ReplyDelete
 44. பேமஸ் பாவா ,மண்ணடியில் முஸ்லிகளும் இருக்கிறார்கள் ,முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கிறர்கள் .ஆதலால அங்கே பிரியாணியும் மணக்கும் மூத்திரமும் நாறும் .அங்கெ உள்ள 90 % முஸ்லிம்கள் பள்ளிவாசலில் உள்ள சீறுநீர் கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர் .ஆதலால் மன்னடி நாற்றத்திற்கு முஸ்லிம்கள் பொறுப்பாக மாட்டார்கள் .மண்ணுக்கு அருகிலே மன்னடி விசயத்திலே பொய் என்றால் எகிப்து வரை பொய்கள் எப்படி நீண்டுள்ளது பாருங்கள்.

  ReplyDelete
 45. சுத்தத்தையும் சுகாதாரத்தையும் இஸ்லாம் வணக்க வழிபாடுகள் சேர்த்துள்ளது. இதை அறியாத முஸ்லிம் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். இஸ்லாம் என்பது ஒரு அழகிய வாழ்வியல் சித்தாந்தம். முழுமையாக உள்வாங்கி கடைபிடித்தால் மனித குலத்திற்கே மாபெரும் நன்மை. யாரும் இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறியை ஆழ்ந்து படித்து கேள்விகளோ ஐயங்களோ எழுப்புவதில்லை. மாறாக.. போகிற போக்கில் கல்லெறிவது போல எவ்வித ஆர்வமும் இன்றி,கேலியாய் கேல்விகள் எழுப்புகிறார்கள். இதுவும் நேர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது, இவர்களின் அபத்தமான கேள்விகளாக இருந்தாலும் அதற்கும் பதில் சொல்ல இஸ்லாத்தை மேலும் மேலும் ஆய்ந்து பார்க்க வித்திடுகிறது. இதனால் வலைதளத்தில் எழுத வந்தவர்கள் எத்தனை தெரியுமா?

  ReplyDelete
 46. இந்த உலகில் தோண்டிய அணைத்து கொள்கைகளும் இஸ்லாத்தின் முன்பு மண்டி இட்டு விட்டன முஸ்லிம்கள் தோற்று உள்ளனர் அனால் இஸ்லாம் எங்கும் தோல்வியுரவில்லை அது இந்த இந்திய வையும் விட்டு வைக்காது இன்சா அல்லா

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]