Pages

Monday, December 31, 2012

இஸ்லாமை அரைகுறையாக ஏற்கும் இந்தியர்கள்., வெட்கம் வேண்டாம் , முழுமையாக ஏற்கலாமே!!


    எந்த நெறிமுறைகளோ , எந்த நியாய உணர்வுகளோ இல்லாமல் வாழும் சமூகம் நம் இந்திய சமூகம் என்பதை ஒரு நாள் சும்மா ஊர் சுற்றி பார்த்தாலேயே  உணர முடியும்.

        ஓர் உதாரணத்துக்கு இப்படி பார்ப்போம். பத்து பேர் மட்டுமே கொண்ட ஒரு ஊர்  ஒன்று இருப்பதாக வைத்து கொள்ளுங்கள்.

அதில் ஒருவன் மட்டும் பைக்கில் வெளியே செல்கிறான். ரெட் சிக்னலில் நில்லாமல் பறக்கும் வாகனங்கள், ஈவ் டீசிங் , பாலியல் வன்முறைகள், மிருகங்கள் போல நடு ரோட்டிலியே சிறு நீர் கழிக்கும் மனிதர்கள் போன்றவற்றை பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புகிறான் . நம் ஊர் எப்பத்தான் மாறுமோ என அலுத்து கொள்கிறான்..

அடுத்த நாள் ,,,,  இன்னொருவன் வெளியே செல்கிறான் என வைத்து கொள்ளுங்கள், அவனும் முதலாமவன் பார்த்த காட்சிகளையே பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புவான்..

அந்த ஊரில் இருக்கும் பத்து பேருக்கும் இதே அனுபவங்கள்தான் கிடைக்கும்,. இந்த ஊர் எப்போதுதான் மாறுமோ என ஒவ்வொருவரும் அலுத்து கொள்வார்கள்.

அந்த பத்து பேரால் ஆனதுதான் அந்த ஊர் . அந்த பேரும் மாறினால்தான் அந்த ஊர் மாறும். ஆனால் அவர்கள் அப்படியே இருந்து கொண்டு ஊர் மாற வேண்டும் என எதிர்பார்த்தால் முட்டாள்தனம் இல்லையா ?


இந்த முட்டாள்தனம்தான் இந்தியாவில் நடந்து வருகிறது. அதே போல சாக்கடை எலியாகவேதான் வாழ்வோம். ஆனால் இந்தியா அதுவாகவே மாறிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்..

    சாக்கடையில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்தாலும் கூட ,  துர் நாற்றம் அளவுக்கு அதிகமாக போகும்போதுதான் , வேறு ஆப்ஷன் ஏதேனும் இருக்கிறதா என தேட ஆரம்பிக்கிறார்கள்...

  இந்திய பண்பு எனும் இந்த mediocre  கலாச்சாரத்துக்கு மாற்று இஸ்லாம் கலாச்சாரம்தான் என நான் சொன்னபோது , பிரசுரிக்க முடியாத ஆபாச அர்ச்சனைகளால் என் இன்பாக்சை நிரப்பினார்கள் பலர்.

   சிலரோ வலுவற்ற ஆதாரங்களை வைத்தனர்.. நாத்திகம் என்பதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் , உண்மையாக நாத்திகர்கள் பற்றி எழுதாமல் , திராவிட கட்சிகளை நாத்திகத்தின் பிரதினிதியாக கருதி நான் பேசுவதாகவும் சொன்னார்கள்..

      உண்மையான நாத்திக வாதம் என்ன சொல்கிறது என்பதை தேடி தேடி படிப்பவன் நான். நாத்திக வாதத்தை திராவிட இயக்கம் ரெப்ரசண்ட் செய்யவில்லை என்றுதான் நானும் சொல்கிறேன்.

 ஆனால் நம் ஊரில் நாத்திகவாதம் என்பது திராவிட இயக்கம் பேசும் போலி நாத்திகவாதமாக நீர்த்து விட்டது என்பதே நான் சொல்வது.. அதையே அவர்களும் சொல்கிறார்கள்..

 இஸ்லாம் மட்டுமே மாற்று ஆப்சனாக இருக்க முடியும் என நான் சொன்னபோது , சீறியவர்கள் இந்திய பண்பாட்டை காப்பாற்றுவதாக சொல்லும் மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை சொன்னவுடன் வாயடைத்து போய் விட்டார்கள்..

   இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக அனைவரும் உடை அணிந்தால் பிரச்சினை வராது என அவரே சொல்லியிருப்பது , இந்தியா எனும் இருண்ட வானில் நம்பிக்கை நட்சத்திரமாக இஸ்லாம் காட்சி அளிக்க தொடங்கி இருப்பதை  உறுதி செய்கிறது.

ஆனால் அவர் கூறி இருப்பது அரை குறை கருத்து.. பிரச்சினைக்கு அது மட்டுமே  தீர்வல்ல..
ஆடை மட்டும் பிரச்சினையை தீர்க்காது.. ஆனால் இவர் மட்டுமல்ல , வேறு பலரும் தம் தேவைக்கேற்ப இஸ்லாமை துணைக்கு அழிக்கின்றனர்.

சிலர் இஸ்லாம் என்றாலே ,  கடும் தண்டனை , ஆடை கட்டுப்பாடு என்று மட்டும் நினைக்கிறார்கள்..  ஆடைக்கடுப்பாடு , கடும் தண்டனை என்பது ஒரு பகுதிதான் ..அது மட்டுமே இஸ்லாம் அல்ல..


பெண்களின் உடலை காட்டி சம்பாதிக்கும் விகடன் டைம் பாஸ் போன்ற ஆபாச பத்திரிக்கைகள் , பெண்களை போக பொருட்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், cheer leaders போல பெண்களை காட்சி பொருட்களாக்கும் போக்கு, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள் போன்ற போக்குகளை அனுமதித்து விட்டு , ஆடைக்கட்டுப்பாட்டை பெண்களுக்கு மட்டும் போதிப்பது தீர்வாகாது.

       ஆடைக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என சொல்ல முடியாது.. பெண்களை போக பொருட்களாக மனதில் பதிய வைக்கும் நிலை இருக்கையில் , ஒரு பெண் அந்த ஆடை அணிந்து இருந்தாலும் பாதுகாப்பு இருக்காது,

அதே போல எந்த கடுமையான தண்டனையும் பலன் தராது. ஒட்டு மொத்தமாக சமுதாயம் மாற வேண்டும் . அந்த மாற்றத்துக்கு பின்பும் தவறு நடந்தால் அப்போதுதான் தண்டனைகள் பற்றி பேச முடியும் ,

இந்தியாவில் தோன்றிய எந்த சிந்தனை முறையாலும் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஒரு பாத்திரம் அழுக்காக இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.. அதை தூய்மை செய்ய வேண்டும் என்றால் , அந்த பாத்திரத்துக்கு அப்பாற்பட்ட-சோப்பு தூள் போல  - ஒன்று தேவை . அழுக்கை வைத்தே அழுக்கை நீக்க இயலாது.

  இந்திய கலாச்சாரம் அழுகிவிட்டது என்றால் , அதைத்தாண்டிய வேறொரு சிந்தனையை முறையால்தான் அதை சரி செய்ய முடியும் என்பதுதான் லாஜிக்.

வேறொரு சிந்தனை முறை என்றால் , ஜப்பானிய சிந்தனை முறையை இங்கு கொண்டு வர முடியாது. காரணம் அது ஜப்பானுக்கு மட்டுமே உரித்தானது. இந்திய சிந்தனை .முறையும் கூடாது . மாற்று மருந்தாக வரும் சிந்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குரியதாக இல்லாமல் , ஒட்டு மொத்த மானுடத்துக்கானதாகவும் இருக்க வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே என்பது பலருக்கு தெரிந்து விட்டது.. ஆனால் அதை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு , இஸ்லாமின் சில பகுதிகளை மட்டும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

உலகளாவிய சிந்தனை முறை என எப்படி சொல்கிறேன்..


கீழ் காணும் நிகழ்ச்சியை பாருங்கள்...

**********************************************


இறைத்தூதர்(ஸல்அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள்.அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றிநடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பதுஅல்லாஹ்வையும்,அவனுடைய வானவர்களையும்அவனுடைய தூதர்களையும்அவனுடையசந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்இறுதியாக(அனைவரும்உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்றுபதிலளித்தார்கள்.
இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்என்றால் என்ன?’ என்றுஅவர் கேட்டார்நபி(ஸல்அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வைநீங்கள் வணங்குவதும்அவனுக்கு நீங்கள் எதையும்இணைவைக்காமலிருப்பதும்தொழுகையை நிலைநிறுத்துவதும்கடமையானஸக்காத்’ தை வழங்கிவருவதும்ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும்ஆகும்’ என்றார்கள்.

அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால்என்ன?’ என்று கேட்டார்நபி(ஸல்அவர்கள், ‘இஹ்ஸான் என்பதுஅல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன்வணங்குவதாகும்நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும்அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களேமறுமை (நாள்எப்போது வரும்?’ என்றுகேட்கஇ நபி(ஸல்அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,)கேட்பவரைவிட (அதாவது உங்களைவிடஅதிகம் அறிந்தவர் அல்லர்.ஆயினும்நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றைஎடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அதுமறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத,நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன்அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறதுஎனும் அறிவானதுஅல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்துவிஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாகமறுமை (நாள் எப்போது சம்பவிக்கும்என்பதுபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளதுஅவனே மழையைஇறக்கிவைக்கிறான்இன்னும்அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும்(தீர்க்கமாகஅறிகிறான்தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை(அவனைத் தவிர வேறுயாரும் (உறுதியாகஅறிவதில்லைஎந்த இடத்தில்தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை.அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்நன்கறிந்தவன்நுணுக்கமானவன்’(எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர்திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்அவர்கள் அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்!’ என்று கூறினார்கள்மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள்எங்கேயும் காணவில்லைபின்னர்நபி(ஸல்அவர்கள்(ப்போது வந்து போன)வர், (வானவர்ஜிப்ரீல் (அலைஅவர்கள் தாம்.மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர்வந்திருந்தார்’ என்று கூறினார்கள்

*****************************************


நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும்அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)

 இந்த ஒரு வரி போதுமே.. இந்த உணர்வு இருந்தால் உலகில் தவறுகள் ஏதேனும் நிகழுமா ? இந்த வரி ஏதோ குறிப்பிட்ட நாட்டுக்கோ , மதத்துக்கோ , இனத்துக்கோ சொந்தமான வரியாகவா தோன்றுகிறது ?

மேற்கண்ட நிகழ்ச்சியை பாருங்கள்.. ஜீப்ரீல் தனக்கு தெரியாமல் கேள்வி கேட்க வரவில்லை. மக்கள் பொருட்டு அவர் வந்தார்.. எவ்வளவு அழகான ஒரு நிகழ்ச்சி..

    ஆக நான் சொல்ல விரும்புவது இதுதான்....


  •    இயந்திரவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது.. அது எங்கு தோன்றியது என்பது முக்கியமல்ல.. அதே போல இஸ்லாமிய மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது.
  • இந்திய பிரச்சினைக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பது யதார்த்தம் ..இதில் வெட்கப்பட ஏதும் இல்லை. 
  • இஸ்லாமின் சிறிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு அமல் படுத்த முடியாது... அப்படி செய்தால் பயனும் இருக்காது.. முழுமையாக செய்ய வேண்டும். 


Sunday, December 30, 2012

மின் தடையும் , டிடிஎச்சும் - கமல் மீது மோசடி வழக்கு பாயுமா ? சட்ட நிபுணர்கள் கருத்து

மர்ம யோகி படத்துக்காக நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஏமாற்றி விட்டதாக கமல் மேல் புகார் செய்யப்பட்டதை அடுத்து விஸ்வரூபம் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

2008ம் ஆண்டு சாய் மீரா நிறுவனத்திடம் இருந்து கமல் நான்கு கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றாராம் , மர்ம யோகி என்ற படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தமாம்.

ஆனால் அவர்களை ஏமாற்றி , அந்த காசை வேறு வகையில் செலவிட்டு விட்டாராம்.  சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே செலவிடுகிறேன் என்று செய்திகளைப் பரப்புபவர் , ம்ற்றவர்கள் சம்பாதித்த காசை இப்படி செல்விட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாம்..

கமலாகப் பார்த்து காசை திருப்பி கொடுப்பார் என்று காத்து இருந்த பார்த்த அந்த நிறுவனம் வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறது,

 இதை தொடர்ந்து கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 இது ஒரு புறம் இருக்க , இன்னொரு சிக்கலிலும் கமல் சிக்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

 விஸ்வரூபம் படம்  எதிர்பார்த்தபடி வரவில்லை என்பதால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் , அவசர அவசரமாக டி டிஎச்சில் வெளியிட்டு , படத்தைப்பற்றிய கருத்து பரவும் முன்பே சம்பாதிக்க கமல் திட்டமிட்டார் என பேசப்படுகிறது..

    இது தமிழ் சினிமாவை அழிக்கும் என்றாலும் , சட்டப்படி தவறல்ல..

ஆனால் பிரச்சினை வேறொரு வகையில் கிளம்பியுள்ளது.  லட்சக்கணக்கானோர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விஸ்வரூபம் படம் பார்க்க பதிவு செய்துள்ளனர் என ஏர் டெல் அறிவித்துள்ளது.

இதில் கணிசமானோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் .  இதில் சென்னையை சேர்ந்தவர்கள் குறைவுதான்.  சென்னையைத்தவிர்த்த ஏனையை பகுதிகளில்தான் அதிகமாக புக்கிங் ஆகி இருக்கிறதாம்.

     சென்னையை தவிர்த்த ஏனைய பகுதிகளில் எப்போது மின்சாரம் வரும் , எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.. சென்னையிலும் கூட அவ்வபோது மின்சார தடை ஏற்படுகிறது..

  மின்சார தடையால் படம் பார்க்க முடியாமல் போனால் , ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தவர்கள் நீதி மன்றம்  செல்ல வாய்ப்பு இருப்பதால சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 எதிர்பாராத இடையூறு ஏற்பட்டால் விற்பனையாளருக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்பது சட்டம். ஆனால் , மின்சார தடை என்ற இடையூறு ஏற்படும் என்பது தெரிந்த ஒன்று..எனவே இது எதிர்பாராத இடையூறு என்பதில் வராது.

   வாடிக்கையாளர்கள் தெரிந்துதானே வாங்கினார்கள் என்று சொல்லி தப்ப முடியாது... வாடிக்கையாளர்கள் விளம்பரம் போன்றவற்றால் மயங்கினாலும் ,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளிப்பது மோசடியாக கருதப்படும்.

கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டு இருப்பதால்,  கமல் மேல் மோசடி மற்றும் நம்பிக்கை துரோக வழக்கு  ( இந்திய தண்டனை சட்டம் பிரிவு 405 409  மற்றும் பிரிவு 421 424பாயக்கூடும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

          சீனியர் நடிகரான கமல் , இப்படி மோசடி வழக்குக்ளில் சிக்குவது நடு நிலை சினிமா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது .Saturday, December 29, 2012

இந்தியமயமான நாத்திகவாதமும் , பாதிக்கப்படாத இஸ்லாமும்


   வெளியூர்களுக்கு  பேருந்தில் செல்லும்போது , அசந்து தூங்கி விட்டால் பேருந்து நிலையம் வருவது தெரியாமல் போய் விடுமோ என்ற பயம் சிறு வயதில் இருந்தது, இதனாலேயே பேருந்துகளில் நான் தூங்குவது இல்லை, ஆனால் இந்த பயம் அர்த்தமற்றது என போக போக தெரிந்து விட்டது.

  என்னதான் ஆழ்ந்து தூங்கினாலும் , பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்து விட்டால் குப் என்ற துர் நாற்றம் நம்மை எழுப்பி விட்டு விடும்,. கழிப்பறையை விட மோசமான துர் நாற்றம் அங்கே வீசிக்கொண்டு இருக்கும்.

  ஒரு பேருந்து நிலையத்தைக் கூட சுத்தமான வைத்து கொள்ள தெரியாத ஒரு கேவலமான நாடு நம் இந்தியா என்பதில் கூட எனக்கு வருத்தம் இல்லை.. ஒரு பன்றி , பன்றியாக இருப்பதற்காக அதன் மேல் வருத்தப்பட்ட முடியுமா, அதன் இயல்பு அது... அவ்வளவுதான்,,, அதில் கோபப்பட்ட ஏதும் இல்லை.

  ஆனால் , பாரதப்பண்பாடு கலாச்சாரம் ,உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி என போலியாக ஒரு மித் உருவாக்கப்படுகிறதே,,, அதுதான் என் வருத்ததுக்கு காரணம்,.., இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி தேசம் என் இன்றைய தினம் உலகம் எங்கும் இருக்கும் தொலைக்காட்சிகளில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

          இந்தியாவில் தப்பித்தவறி என்றாவது ஒரு நாள் மாற்றம் நிகழ்ந்தால் , அதற்கு காரணம் இஸ்லாமாக மட்டுமே இருக்க முடியும் என எழுதினேன்,, உடனடியாக நம் அருந்தவ இந்திய புதல்வர்கள் , ஆபாச அர்ச்சனைகள் செய்து என் இன்பாக்சை நிரப்பி விட்டார்க்ள்..

       ஒரு சிலர் மட்டுமே அறிவு பூர்வமான எதிர் வாதம் வைத்தார்கள்..

நண்பர் சுரேஷ் ஒரு கேள்வி கேட்டார்.. எந்த ஒரு சித்தாந்தையும் இந்தியப்பண்பு எனும் விஷம் வீரியமிழக்க செய்து விடும் என்கிறீர்க்ளே...இஸ்லாமை மட்டும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது என எப்படி சொல்கிறீர்கள்,,சும்மா அடித்து விடுகிறீர்களா என கேட்டு இருந்தார்,

             இந்திய பண்பு எனும் பன்றி , புதிதாக வரும் சிங்கத்தை கடித்து அதையும் தன்னைப்போலவே பன்றி ஆக்கி விடும் என்பதற்கு முதலில் ஓர் உதாரணம் கொடுத்து விடுகிறேன்..

                          நாத்திக வாதம் என்பது உலக அளவில் வலுவாக இருக்கும் ஒன்று. உலக அளவிலான நாத்திகம் எப்படி வரையறை செய்யப்படுகிறது?

      “ மனித சக்திக்கு மேல் எதுவும் இல்லவே இல்லை.. இயற்கை சக்திகளின் பிரமாண்டத்தினால் பயந்து மனிதன் கடவுள் என்ற கற்பிதத்தை உண்டாக்குகிறோம்,,.. இந்த பயம் தேவை இல்லை.. மனித ஆற்றலால் இயற்கை சக்திகளை அடக்கி ஆள முடியும்.    இறப்புக்கு பின் எதுவும் இல்லை.. இறப்பு என்பது முற்றுப்புள்ளி...இதை தவிர்க்க முடியாது.... இறப்பை பற்றி கவலைப்படாமல் அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் “

     இந்த நாத்திக வாதத்துடன் விவாதிக்கலாம்,, ஆனால் அதன் நேர்மையை சந்தேகிக்க இயலாது...
                                         
                            இந்த வலுவான நாத்திகத்தை நம் ஆட்கள் எப்படி நீர்க்க செய்தார்கள் என பார்ப்போம்..

      கடவுள் இல்லை...  ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது.. ஆனால் அதை கடவுள் என சொல்லக்கூடாது,..  இயற்கை என சொல்லலாம்...

             இப்படியாக இறைவனுக்கு இயற்கை என்ற பெயர் கொடுத்து , அதை நம்மூரில் நாத்திகம் என அழைக்கிறார்கள்..


                சில மேடைப்பேச்சுகள் , பேட்டிகளில் இந்த சொற்பிரயொகங்களை கவனித்து இருப்பீர்கள்..

                    அவர் இயற்கை எய்தி விட்டார் (  இறைவனுடன் கலந்து விட்டார், இறையடி சேர்ந்தார் என்பதன் திரிபு )

              அவர் உடல் நலம் பெற இயற்கையை பிரார்த்திக்கிறேன் ( பிரார்த்தனை என வந்து விட்டாலே அது நாத்திகம் இல்லையே...    இயற்கை , இறை என லேபிள்தானே வேறு )

            மேலும் சில...

    என் மேல் பொய் வழக்கு போடுகிறார்கள்,,, அவர்களை இந்த இயற்கை சும்மா விடாது....

           இயற்கை அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனை கொடுத்து விட்டது....’


      இயற்கை என்னை கை விடாது என நம்புகிறேன்...

  மண மக்கள் நீடூழி வாழ இயற்கை இறைஞ்சுகிறேன்...     நாத்திகம் என்ற வீரிய மருந்தை , நம் இந்திய சாக்கடை எப்படி நீர்த்து போக செய்து விட்டது பார்த்தீர்களா,,,

     ஆனால் இஸ்லாம் மதத்தில் இந்த இந்திய குறுக்கு புத்தி வேலையை காட்ட முடியாது... காரணம் அவர்கள் மனிதனை நம்புவதில்லை... குர் ஆனையே நம்புகிறார்கள்..’’’

     குர் ஆன் , மத நூலாக மட்டும் அன்றி வாழ்வியல் நூலாகவும் திகழ்வதே இதற்கு காரணம்,   கணவன் மனைவி பிரச்சினை முதல் கடவுள் வரை குர் ஆன் சொல்வதே இறுதி முடிவு,,,

         வேலைதான் கடவுள் ,, எப்போதவது சாமி கும்பிட்டால் போதும் என இந்திய மனம் , நல்லது சொல்வது போல சோம்பேறித்தனத்தை புகுத்த முயலும்...  

        ஆனால் இஸ்லாமியர்கள் மனதின் இந்த மாய்மாலத்துக்கு பலி ஆவதில்லை... எத்தனை முறை தொழுவது , எவ்வளவு நேரம் தொழுவது என்பதை புனித மறையை கேட்டு அதன் படியே முடிவு செய்கிறார்கள்...


      இப்படி இருப்பதால்தான் , இந்திய சித்தாத்தம் எனும் துர் நாற்றம் இஸ்லாமை களங்க்கப்படுத்த முடியவில்லை...


            இந்தியா காட்டுமிராண்டி தேசமாக மாற காரணம் அன்னிய படையெடுப்புதான், அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடியது என இன்னொரு மித்...

      புற நானூறு போன்ற அன்றைய நூல்களை பாருங்கள்...சக மனிதர்களை கொலவ்தும் , கொள்ளை அடிப்பதும்தான் அன்றைய நாகரிகமாக இருந்து இருக்கிறது..


        பாண்டியர்கள் கட்டிய கோயில்களை சோழன் இடித்து தள்ளுவான். அவர்கள் ஆட்களை இவன் சாகடிப்பான்...

  ஆனால் , பல ஆண்டுகள் நம் நாட்டில் மொகலாயர் ஆட்சிதான் நடந்தது,,, அவர்கள் நினைத்து இருந்தால் , எல்லா கோயில்களையுமே இடித்து தள்ளி இருக்கலாம்,,, ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை...

       அதே நேரத்தில் இந்தியாவின் பெருமை மிகு கண்டு பிடிப்பான புத்த மதம்தான் , யாழ்ப்பாண நூலகம் எனும் மாபெரும் புதையலை எரித்து சாம்பலாக்கியது..

        தனிப்பட்ட முறையில் நாம் நல்லவர்கள்தான்.,.. ஆனால் இந்திய மனப்பான்மை எனும் ஒரு கேவலமான சிறையில் நாம் சிக்கி இருக்கிறோம்.. கம்யூனிசம் , நாத்திகம் , எக்சிஸ்டன்சியலிசம் என இங்கு எது வந்தாலும் , அவை நீர்த்து போய் விடும்..

     ஆனால் குர் ஆன் எனும் அரண் இருப்பதால், இஸ்லாமை மட்டும் நம்மால் கறைப்படுத்த முடியவில்லை....
                 
         


   


 
   

  

Thursday, December 27, 2012

மொழி எல்லைகளை கடந்து சிறகடிக்கும் சாரு- அல்ட்டிமேட் ரைட்டரின் அசத்தல் ஆங்கில புத்தகம்


 மாற்றத்தை ஏற்பது என்பது உலகிலேயே கடினமான ஒன்று.  தெரியாத தேவதையை விட பழகிய பேயே உத்தமம் என்பதுதான் பலரது மனப்போக்கு.

 வாசிப்பு ஈடுபாடு கொண்ட பலர் கூட மென் நூலாக புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. என்ன இருந்தாலும் , பேருந்து பயணத்தில் புத்தகம் புரட்டிக்கொண்டே செல்லும் சுகம் மென் நூலில் கிடைக்குமா என்பார்கள்.

கணிணியில் தகவல் பெறலாம் . வாசிப்பு இன்பம் கிடைக்குமா என்பது பலரது சந்தேகம் . ஒரு புத்தகம் கையில் வைத்து இருக்கும்போது கிடைக்கும் இன்பம் , மென் நூலில் வரவே வராது , புத்தகம் போல வேகமாக படிக்க முடியாது, ஆங்காங்கு ( நூலக புத்தகம் , இரவல் புத்தக்மாக இருந்தாலும் ) பேனாவால் கோடு போட முடியாது , படித்த இடத்தை நினைவில் கொள்ள மூலையை மடிக்க முடியாது என பல குறைகளை சொல்வார்கள்.

 இதனாலேயே  தமிழில் மென் புத்தகங்கள் இன்னும் பெரிய அளவில் வரவில்லை. அதிகாரபூர்வமற்ற பிடிஎஃப் புத்தகங்கள் மட்டும் வருகின்றன. ஆனால் மென் நூலாகவே புதிதாக வருவது இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை.

 இந்த நிலையில்தான் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் morgue keeper எனும் சிறுகதை தொகுதி  நூல் Amazon மூலம் kindle edition ஆக வெளிவந்தது தமிழ் இலக்கியத்தின் ஒரு பாய்ச்சலாகவே கருதப்பட்டது. ஆங்கில நூல்கள் தமிழில் வருவதை பார்த்து இருக்கிறோம். ஒரு சமகால தமிழ் எழுத்தாளரின் தமிழ் நாவல் , ஆங்கிலத்தில் புதிய தொழில் நுட்பத்தில் வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. 

   சில நூறு பேர் படிக்கும் சிற்றிதழ்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் இலக்கியம் அறிவியல் யுகத்திற்கேற்ப , தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு , உலகம் முழுதும் போய்சேரும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    அந்த வகையில் சாருவின் பெயர் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

      சாருவின் எழுத்துகள் அனைத்தையும் படித்திருக்கும் எனக்கு அவர் தமிழ் மிகவும் பிடிக்கும். அது ஆங்கிலத்தில் சரியாக வருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. 


  ஆனால் Beyond Bounds என்ற முதல் கதையிலேயே மிக மிக சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன்.

 சிறந்த மொழி பெயர்ப்பு , சிறந்த ஆங்கிலம் என்பதற்கிடையே வேறுபாடு உண்டு. 

**********************************

உதாரணமாக , தமிழில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல இருக்கிறதே என எருமைக்காரன் பட்டி குப்பன் யோசித்து கொண்டு இருந்தான்  என மூல நூல் ஆசிரியர் எழுதி இருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள்.

இதை ஓர் ஆங்கில நிபுணர் மொழி பெயர்த்தால் , erumaikkaaran patti kuppan was thinking " That's just robbing Peter to pay Paul."   என மொழி பெயர்க்க கூடும். 

இதே வாக்கியத்தை வேறொரு ரஷ்ய நாவலை தமிழில் மொழிபெயர்க்கும்  தமிழ் மேதை இப்படி மொழி பெயர்க்க கூடும்.

மாஸ்கோ நகரின் பனி பொழியும் சாலையில் நடந்தவாறே இவான் செக்காவ் எண்ணமிட்டான் “ இது கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கும் உடைப்பது போன்றது “


*********************************

மாஸ்கோவில் இருப்பவர் பிள்ளையாரைப்பற்றி யோசிப்பாரா , அல்லது எருமைகாரன் பட்டியில் இருப்பவர் பீட்டர் , பால் என பழமொழி சொல்வாரா... சிலர் மொழி ஆளுமையை காட்டுவதாக நினைத்து , மூல நூலை சிதைத்து விடுவார்கள். மொழி பெயர்ப்பாளர் முத்திரை தெரியும் , மூல ஆசிரியர் முத்திரை மறைந்து விடும்.

ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் அந்த விபத்து நிகழவில்லை. மிக மிக சிறப்பான மொழி பெயர்ப்பு. மூல நூலுக்கு வெகு அருகில் மொழி பெயர்ப்பு இருக்கிறது.

மூல நூலின் கேலிகளும் கிண்டல்களும் மொழி பெயர்ப்பில் அப்படியே உள்ளன. அதேசமயம் , கதை சொல்லி ஓர் ஆங்கிலேயன் என்ற எண்ணம் கிஞ்சித்தும் வரவில்லை.

மொ.ர் தன் ஆங்கில மொழி புலமையை காட்ட நினைத்து இருந்தால் , ஓர் ஆங்கிலேயன் தமிழ் நாட்டு கதையை சொல்கிறான் என்ற எண்ணம் தோன்றி இருக்கும்.

உதாரணம் பாருங்கள்...


The funny thing about India is that the most problems are created by leaders who rise from the grassroots. Since George Fernandes was a Socialist, Perumal expected that he would come to the aid of these ‘withouts’, the season ticket holders ‘without’ permission to travel by Express. But all he did was fart in Perumal’s face.

Nivedita, Charu (2012-12-02). Morgue Keeper (Kindle Locations 83-85). Charu Nivedita. Kindle Edition. 


The ‘withouts’ decided to get together and form a group, which of course needed a name. The ‘Group of Withouts’, suggested Perumal, but the name was not accepted. It would be rude to refer to doctors, engineers and officers as ‘withouts’.

Nivedita, Charu (2012-12-02). Morgue Keeper (Kindle Locations 86-87). Charu Nivedita. Kindle Edition. இது முதல் கதையில்  ( Beyond Bounds )  வரும் சில வரிகள். ( Translated by Vaishna Roy )

ஆனால் இரண்டாவது கதையின்  ( Message Bearers from the Stars and Necrophiles )  மொழி பெயர்ப்பு முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.  காரணம் முதல் கதையின் களம் வேறு , இரண்டாவது கதையின் களம் வேறு.  இதன் மொழி பெயர்ப்பு ராஜேஷ். 

சாருவின் மாஸ்டர் பீசான முள் அடுத்த கதை.. இதை மொழி பெயர்ப்பது மிக மிக கடினம். எப்படி செய்திருக்கிறார்களோ என பயத்துடன் தான் படிக்க ஆரம்பித்தேன்.

சும்மா ரசித்து செய்து இருக்கிறார் மொ.ர் .  ( Jeyakumar Sathyamoorthy)  மூல நூல் ஏற்படுத்தும் பாதிப்ப்பை அப்படியே மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து இருக்கிறார்.


I ran to the backyard and sent my index finger to my throat digging… 
Felt only like throwing up… 
Fish bone???

மூல நூலில் இருப்பது


கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்...
குமட்டல்தான் வந்தது...
முள்....?


மொழி பெயர்ப்பு நடைக்காகவே இன்னொரு முறை படிக்க தோன்றியது.

சாரு எழுத்துகளில் அதிகம் விவாதிக்கபடும் சிறுகதை நேனோ...

இதை எல்லாம் ஒருவர் மொழி பெயர்ப்பது முடியவே முடியாது என்றுதான் நினைத்தேன்... ஒரு தொழில் முறை மொழி பெயர்ப்பாளர் கண்டிப்பாக இதை செய்யவே முடியாது.   சாருவின் எழுத்தை முழுக்க முழுக்க காதலித்து , அந்த எழுத்தில் ஊறிப்போய் இருக்கும் ஒருவர்தான் இதை செய்ய முடியும்.

ஆம். இதை மொழி பெயர்த்து இருப்பவர் ராஜேஷ்... என்ன சொல்லி பாராட்டுவது.  இந்த கதைக்கென்றே பயன்படுத்தப்பட்ட பிரத்தியேக வார்த்தை பிரயோகங்கள், பெயர்கள் , வாக்கிய அமைப்பு என எதையும் மிஸ் செய்யாமல் ஒரு மாபெரும் பணியை செய்து இருக்கிறார்.. ஹேட்ஸ் ஆஃப்.

இந்த கதைக்கு பின் இணைப்பாக , மொ.ர் குறிப்பும் ஒரு நல்ல சிறுகதைபோல அருமையாக இருந்தது..எக்ஸ்ட்ரா போனஸ் . 

ஒரு மாஸ்டர் பீசுக்கு அடுத்து என்ன கதை வந்தாலும் எடுபடுவது கடினம்தான்.. ஆனால் நேனோவுக்கு முற்றிலும் காண்ட்ராஸ்டாக வேறொரு களத்தில் இயங்கும் கதை   The Stalking Shadows.   மொழி பெயர்ப்பு Preeti Venkateshan

இந்த கதையின் பிளஸ் பாயிண்ட் அல்லது உச்சம் என்பது கிளைமேக்சும் அதற்கு முந்தைய சில வரிகளும். அதை நேர்த்தியாக மொழி ஆக்கம் செய்து இருக்கிறார் மொ.ர். 


சாருவின் முக்கிய படைப்புகளின் ஒன்றான Block No 27 Trilokpuri அடுத்த்தாக வருகிறது. Pritham K. Chakravarthy தரமான ஆங்கிலத்தில் அட்டகாசமான மொழி பெயர்ப்பு.  வரலாற்றின் முக்கியமான ஒரு துளியை கண் முன் நிறுத்துகிறது இந்த படைப்பு.

டைட்டில் கதையான Morgue Keeper அதிரடியாக ஆரம்பிக்கிறது. 

 THE SEVERED head of a man, about thirty seven, lay by itself on a table.

இதன் மொழி பெயர்ப்பு Pritham K. Chakravarthy . கதைக்காக மட்டும் அல்ல.. மொழி பெயர்ப்பு நேர்த்திக்காகவும் இது பாராட்ட்டப்பட்டது, தெஹல்காவில் வெளி வந்தது இந்த கதை. 


இந்த கதைகளுக்கு பின் சாருவின் பேட்டி இடம் பெற்று இருப்பது சிறப்பு.

ஒரு சாம்பிள் 

”Internet cannot be compared with TV. It is but an extension of books. Without Internet we could have never read so many writers. The TV is just a shadow. Neither can we feel the shadow nor have a relationship with it. Nevertheless, TV is not bad, just that people use it badly.”

”Mankind would have been extinct without literature. Just like Dostoyevsky was the hope of Tzarist Russia and Pablo Neruda, to Latin America, writers are the torch bearers of the society. They are the hope. Without Literature, man becomes an animal.”

******************************************************************


மொழிகளை கடந்த சாருவின் இந்த கதைகள் , தமிழ் தெரியாத மற்றவர்களுக்கும் செல்வது மகிழ்ச்சி . மூல நூலின் தரம் குறையாமல் அப்படியே ஆங்கிலத்துக்கு செல்வது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

******************************************************

 பின் குறிப்பு 

 நான் எப்போதுமே ஹார்ட் காப்பியாகத்தான் படிக்க விரும்புவேன். ஆனால் இந்த நூல் நல்ல வாசிப்பு அனுபவம் தந்து என எண்ணத்தை மாற்றி இருக்கிறது. நினைத்த இடத்தில் தரவிறக்கி படித்து கொள்ளலாம். ஒரு முறை டவுன் லோட் செய்து விட்டால் , நெட் இல்லாமல் படிக்கலாம்.

  வீட்டில் புத்தகம் வைக்க இடம் இல்லை என்ற பிரச்சினை இல்லை . புததகத்தில் தேவையான பகுதிகளை தேடுவது எளிது என பல அனுகூலங்கள்.

 வங்கி அட்டை இருந்தால்தான் வாங்க முடியும் என்பதில்லை. வேறு முறைகளிலும் வாங்கலாம் .

ஆங்கில நிபுணர் ஆக இருந்தால்தான் வாசிக்க முடியும் என்பதும் இல்லை. நண்பர்களுக்கு பரிசளிக்க சிறந்த மென் நூல்..

 புத்தகம் வாங்க 

டெயில் பீஸ் - ஒவ்வொரு கதையையும் பற்றி விரிவாக பேச ஆசை,  ஒவ்வொன்றை பற்றியும் தனி தனி கட்டுரைகள் எழுத முடியும். 
Tuesday, December 25, 2012

எருமை மாட்டு மனப்பான்மையும் இஸ்லாமும்- இது மதக்கட்டுரை அல்ல

முன் குறிப்பு :  நான் எந்த மதத்திற்கும் பிரச்சாரகன் அல்ல. எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல..  தேசங்களின் அடிப்படையில்  ஒரு பிரச்சினை எப்படி பார்க்கப்படுகிறது என்பதை அலசுவதே என் நோக்கம். 


பாலியல் வக்கிர செய்திகள், பெரிய விபத்துகள் , மற்ற குற்றங்கள் பற்றிய செய்திகள் வரும்போது  மக்கள் எதிர் வினைகளையும் எலைட் க்ரூப் எனப்படும் அறிவு ஜீவிகளின் எதிர் வினைகளையும் கவனித்து இருக்கிறீர்களா?

குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என சாதாரண எளிய மக்கள் ஆவேசம் அடைவார்கள்.. இவர்கள் உணர்ச்சி உண்மையானதுதான் என்றாலும் இது நிரந்தர தீர்வு ஆகாது... ஆனாலும் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியாவது அவர்களிடம் இருப்பது , இன்னும் கொஞ்சம் சுரணை நம்ம்மிடம் இருப்பதன் அறிகுறி என எடுத்து கொள்ளலாம்.

   டில்லி சமீபத்தில் , குற்றவாளிகளுக்கு கிடைத்த டிரீட்மெண்ட் இந்த எளிய மனிதர்களின் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியின் வெளிப்பாடே.

  இந்த நிலையில் அறிவு ஜீவுகள் களம் இறங்குவார்கள்.. ( அதுவும் தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டால் களம் இறங்க மாட்டார்கள். “ இந்திய பெண்கள் “ என்றால்தான் இவர்களுக்கு கருணை சுரக்கும் )

இது போன்ற குற்றங்களுக்கு அந்த குற்றவாளிகளை பழி சொல்லக்கூடாது . இந்த குற்றத்துக்கு காரணம் சமூக பொருளாதார நிலைமைதான். அவர்களை பழி சொல்லி பயன் இல்லை. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரை போல குற்றம் செய்தவர்களும் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான் என்பார்கள்... “ பாதிக்கப்பட்ட்டவர் என் சகோதரி , பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என் சகோதரர்கள்.. அவர்களை தூக்கிலிடக் கூடாது என கமல் சொன்னதை கேட்டு இருப்பீர்கள்.

சரி. இதற்கு இந்த அறிவு ஜீவிகள்  முன் வைக்கும் தீர்வு என்ன ?

சமூக மாற்றம் வேண்டும். சமூகம் மாறினால் , குற்றங்கள் குறைந்து விடும்.


அவ்வளவுதான் இவர்கள் தீர்வு.

நமக்கெல்லாம் இந்த எளிய தீர்வு தெரியாமல் போய் விட்டதே... நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. சமூகம்  மாறினால் போதும் .

சரி. சமூகம் என்பது என்ன .. ? நாம் எல்லாம் சேர்ந்ததுதானே சமூகம்? நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் , அழுகிப்போன நம் போன நம் சமூகம் அதுவாகவே மாறி விடுமா என்ன ?

    எதுவும் செய்யாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமா அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்..

எப்படி எல்லாம் நொள்ளை சொல்கிறார்கள் ..பாருங்கள். லாஜிக்கலாக பேசி மடக்குவவதை கவனியுங்கள்..

   குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும்...

 செல்லாது .செல்லாது... சட்ட மன்றம் , பாராளுமன்றம் , காவல் துறை , நீதி துறை போன்ற எல்லா இடங்களிலும் குற்றவாளிகள்தான் பதவிகளில் இருக்கிறார்கள்.  கடும் தண்டனை கொடுக்க இவர்களிடமே கேட்பதா... கூடாது.  இப்போது இருப்பதே இருக்கட்டும்.

பாலியல் கல்வி , பாலியல் விழிப்புணர்வு தேவை.

செல்லாது செல்லாது. கல்வித்துறையில் இல்லாத பாலியல் குற்றங்களா.. இந்த முய்ற்சி வெற்றி பெறாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.


இது ஒரு காட்டுமிராண்டி தேசம். பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

செல்லாது செல்லாது. எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா. எச்சைரிக்கையாக , பூட்டிய வீட்டில் இருந்தால் கூட குற்றங்கள் நடக்கத்தானே செய்கின்றன.. எச்சரிக்கையக இருக்க சொல்வது ஆணாதிக்கம். அதெல்லாம் முடியாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.


பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் பாணியில் மிக கடுமையான தண்டனைகள் , மரண தண்டனை வழங்க வேண்டும்.

செல்லாது செல்லாது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையாது. மேலும் மரண தண்டனை உண்மையில் தண்டனை அல்ல. இதன் மூலம் இந்த உலகில் இருந்து குற்றவாளிக்கு விடுதலைதான் கிடைக்கிறது .  எனவே இப்போது இருப்பதே இருக்கட்டும்.

************************************************
இப்போது ஒரு பயங்கரமான உண்மையை பார்ப்போம். அப்போதுதான் இஸ்லாமிய பாதைதான் நமக்கு தீர்வு அளிக்கும் என்பது புரியும்.

அறிவு ஜீவிகள் அனைவரும் மேற்கண்ட  status quo  மனோபாவத்தை பெற்று இருப்பதை பார்க்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த அறிவு ஜீவிகள் யார் என கவனித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்.

 இடது சாரிகள், வலது சாரிகள் , ஆளும் கட்சி , எதிர் கட்சி , பகுத்தறிவாளர்கள் , ஆன்மீக வாதிகள் என எல்லா தரப்பில் இருக்கும் அறிவு ஜீவிகளும் ‘இப்போது இருப்பதே” போதும் என்ற மன நிலையில் இருப்பதை கவனிக்க முடியும்.

இவர்களுக்குள் எந்த தொடர்பையும் , பொது தன்மையையும் கண்டு பிடிக்க முடியாது.. எதிரெதிர் முகாம்களில் இருப்பார்கள்.

எருமை மாட்டில் மழை பெய்வது போல , இப்படி அசமந்தமாக இருக்கும் இவர்களிடம்  ஒரே ஒரு பொது தன்மை உண்டு.

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் எனப்தே அந்த பொது தன்மை .


இப்படி மந்தமாக இருப்பதற்கும் , இந்தியர்களாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.

பசுமையே இல்லாத பலைவன பூமி , கடும் வெப்பம். சூடான ரத்தம் . கடும் விஷம் கொண்ட உயிரிகள்.

இந்த சூழ்னிலையில் சில நாடுகள் இருக்கின்றன. இங்கு வாழ்பவர்கள் அதற்கேற்ற தகவமைப்பை காலப்போக்கில் பெறுகிறார்கள். அரபு நாடுகளை உதாரணமாக சொல்லலாம்.

இங்கு தோன்றும் இசை , கலை , எழுத்து போன்றவை அதீத உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும்.


கடும் குளிர் நிலவும் நாடுகள் சில இருக்கின்றன,. வெயில் வருவது அபூர்வம். அப்படி வரும் வெயிலை முழுதும் பயன்படுத்திக்கொண்டாக வேண்டும் , பனி பொழியும் கடும் குளிர் காலத்தில் எந்த பணியும் செய்ய முடியாது.

இந்த சவாலான நிலையில், குறைந்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் , காலப்ப்போக்கில் செயல் திறன் மிக்கவர்கள் ஆகி விடுகிறார்கள்.


இந்தியாவில் இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமும் கிடையாது. மிதமான குளிர் , மிதமான வெயில். சோம்பலான வாழ்க்கை , அடிமையாக வாழும் சுகம். மாற்றங்களை சந்திக்க வேண்டியிராத தட்ப வெப்ப்பம். இந்த சூழ் நிலையிலே வாழ்ந்து வாழ்ந்து , passion என்பதே இங்கு இல்லாமல் போய் விட்டது.

 எதிலுமே மந்த தன்மைதான். மது வா ? அதில் தண்ணீரை கலந்து மந்தமாக்குவது. தே நீரா ? பாலை கலந்து மந்தமாக்குவது . இப்படியே செய்து செய்து , சித்தாதாங்களும் இங்கே வரும்போது , நீர்த்து விடுகின்றன.

 உலகையே கலக்கிய கம்யூனிசம் , நம் ஊரில் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அலையும் அரசியலாக மாறிவிட்டதா இல்லையா ?

சோவியத் யூனியன் இருந்த காலத்தில் கம்யூனிச புரட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தனர். இதை தவிர இன்னொன்றும் செய்தனர். சில நாடுகளில் கம்யூனிச புரட்சி நடக்கும் சூழல் இருக்காது.. ஆனால் குறைந்த சதவிகித்தினர் மட்டும் புரட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அந்த குறைந்த சதவிகிதத்தினரை கைக்குள் போட்டுகொண்டு , சோவியத் யூனியன் மேற்பார்வையில் , ஒரு வித போலி புரட்சி ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்றுவார்கள்.

ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படி செய்ய முடியவில்லை. நம்மூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்தபோது , நம் மக்களின் ஈர விறகு தன்மையை பார்த்து அதிர்ந்து விட்டாராம். இந்தியா இன்னும் புரட்சிக்கு தயாராகவில்லை என சொல்லி அனுப்பி விட்டாராம்.

 கடவுள் மறுப்பு கொள்கை , கம்யூனிசம் என எந்த விஷ்யமும் இந்தியாவுக்குள் வரும்போது நீர்த்து போய் விடும்,

எனவேதான் இந்தியாவில் இருக்கும் எந்த இயக்கங்களாலோ , கட்சிகளாலோ ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது.

 பகுத்தறிவு , இடது சாரி, வலது சாரி  , இந்துத்துவா, இந்துத்துவாவுக்கு எதிரானத்துவா என லேபிள்கள் மாறலாம். ஆனால் சரக்கு ஒன்றுதான்.

 இந்திய தன்மை எனும் இந்த விஷத்தால் பாதிக்கப்படாமல் தாக்கு பிடிக்கும்  ஒரே ஒரு சிந்தனை முறை இஸ்லாம் மட்டுமே.

காரணம் அது கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட மார்க்கம். அப்படியும் சிலர் இந்திய தன்மையால் பாதிக்கப்படத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் அதன் பின் இஸ்லாமியராக தொடர முடியாது. அஹமதியா முஸ்லிம் என்பது போல புதிய பிரிவினராக  மாறிக்கொள்ளலாம். அசல் இஸ்லாம் அப்படியே இருக்கும்.

எனவெதான் , இந்தியாவில் என்றாவது மாற்றம் என ஏற்பட்டால் அது இஸ்லாமால் மட்டுமே முடியும் என குறிப்பிட்டேன்.  வேறு எந்த இயக்கமோ , கட்சியோ , சிந்தனை முறையோ இங்கு எதுவும் செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.

  பாலியல் குற்றங்களை பொறுத்தவரை , நமக்கெல்லாம் அது வெறும் செய்தியாகத்தான் மனதில் பதிகிறது. எனவேதான் மனித உரிமை ,ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசுகிறோம்.

ஆனால் , காலப்போக்கில் இந்த வக்கிரங்களின் கொடுமையை ஒவ்வொரு இந்தியனும் நேரடியாக உணரப்போவது உறுதி. நேரடியாக இல்லாவிட்டாலும் , தெரிந்தவர் , தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையிலாவது பாதிப்பை உணர முடியும்.

அப்போது தான் இஸ்லாமிய வழிமுறைகளை , பிற்போக்கு என்று கிண்டல் அடிக்கும் மனோபாவம் மறைந்து , அதுதான் முற்போக்கான சிந்தனை , ஆணாதிக்க எதிர்ப்பு சிந்தனை என்பது புரியும். இந்த பிரச்சினையை  முகமது நபி எப்படி கையாண்டார் என பாருங்கள். அதில் இருப்பது பெண்ணடிமைத்தனமா , பெண்கள் மேல் பரிவா என தெரியும். நபி (ஸல்) தண்டனை காலத்தில் ஒரு முறை பெண் ஒருத்தி ஒருவனால் பலவந்தமாக கற்பழிக்கப் படுகிறாள். பிறகு அவள் தன்னை கற்பழித்தவனை மக்கள் முன் அடையாளம் கூறியவுடன் மக்கள் அவனை கைது அந்த பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கூட்டிக் கொண்டு போகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பெண்ணை நோக்கி “இங்கிருந்து செல், அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறிய பின்பு கற்பழித்தவனை நோக்கி “இவனை கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று கூறினார்.


    முன்பு  நாயை வைத்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது .  சாப்பாட்டு வேளையில் ஒரு மணி ஒலிக்கப்படும் , மணி சத்தத்தை தொடர்ந்து நாய்க்கு உணவு அளிப்பார்கள்,  ஒவ்வொரு முறை மணி ஒலித்தபின்பும் நாய்க்கு சாப்பாடு கிடைக்கும் . சில தினங்களில் மணி சத்தம் கேட்ட உடனேயே  நாய்க்கு உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்தது , அதன் ஆழ் நினைவில் மணி சத்ததுடன் உணவு இணைந்து விட்டது.

   அதே  போல் சமூகத்தின் மனதில் , கற்பழிப்புடன் கல்லெறி இணைந்து விட்டால் என்ன ஆகும் , தவறாக கை வைக்கும் முன்பு கல்லெறி நினைவுக்கு வருமா இல்லையா..

 இதெல்லாம் காட்டுமிராண்டி முறை என சிலர் சொல்லக்கூடும் , இப்போது மட்டும் , நாம் மனிதர்களாகவா வாழ்ந்து வருகிறோம் ?

Sunday, December 23, 2012

தொடரும் பாலியல் வக்கிரங்கள் - இஸ்லாம்தான் இந்தியாவுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பா ? பெண்களுக்கு எதிரான இழி செயல்கள் இந்தியாவில்  நடப்பது ஒன்றும் புதிதல்ல.. பல இழி செயல்கள் கவனத்துக்கே வருவதில்லை.

   டில்லி நடந்த கேவலமான செயல்  நம்முடைய உண்மையான அவலட்சணமான  முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

  பண்பாடு , ஆன்மீகம் , மனித உரிமை , பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியா என்பது நாகரிக வளர்ச்சி அடையாத காட்டுமிராண்டி நாடு என்பதில் இனி யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கப்போவதில்லை.

  சரி... நாம் காட்டுமிராண்டிகள் தான்...   இதற்கு விடிவே இல்லையா... உலகின் கேவலமான ஒரு நாடாகவே நாம் இருக்கப்போகிறோமோ..

   இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் எதிர் வினை என்பதை பார்த்தால் போதும்.,... அந்த நாட்டு மக்களின் அருகதை தெரிந்து விடும்.

     நம் மக்கள் கருத்து கீழ்கண்ட இருவகைகளில் அடங்கி விடுகிறது  •         நடந்தது  பெரிய குற்றம்தான், ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாது.. அவர்கள் குற்றவாளிகள் , தவறு செய்கிறார்கள் ,, நீதித்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை  மேற்கொண்டால் , நீதித்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போய் விடும். எனவே குற்றவாளிகளுக்கு கவுன்சலிங் கொடுத்து அவர்களை திருத்துவதே நாம் செய்ய வேண்டியது . 
  • பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என கவலைப்படுவது பெண்ணுரிமைக்கு எதிரானது. நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து வெளியே சென்றாலும் , அவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது. எனவே சமூக விரோதிகளுக்கு அறிவுரை சொல்லி தவறு செய்வதை தடுக்க வேண்டுமே தவிர , பெண்களுக்கு அறிவுரை கூறுவது ஆணாதிக்கம்.....


பாம்பையும் கொல்லக்கூடாது.  குச்சியும் உடைந்து விடக்கூடாது , ஆனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் கோமாளித்தனத்தை இந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.

 நான் ஒரு முறை நள்ளிரவில் கோயம்பேட்டில் இறங்கினேன்.  ரோகிணி திரையரங்கம் அருகே செல்ல வேண்டி இருந்தது.  பேருந்து எதுவும் இல்லை .  நடந்து செல்ல தீர்மானித்தேன். 

  பேருந்து செல்லும் சாலையில் சென்றால் நேரமாகும் என்பதால் , கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியிருக்கும் குறுக்கு வழியாக செல்ல தீர்மானித்து , நடக்க தொடங்கினேன்.

 ஒரு முதியவர் என்னை தடுத்து நிறுத்தினார்.  “ இந்த நேரத்தில் இந்த வழியாக போக வேண்டாம் . ஆபத்தான் பகுதி. நேற்றுக் கூட வழிப்பறி நடந்தது  “ என உரிமையுடன் அறிவுரை சொன்னார்.

 என்னிடம் வழிப்பறி செய்ய எதுவும் இல்லை என்றாலும், அந்த முதியவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து , அந்த வழியை தவிர்த்தேன்.

 என் வீரத்துக்கு வேலை இல்லாமல் செய்து விட்டாரே என அவர் மீது கோபம் ஏதும் இல்லை. யாரென்றே தெரியாத ஒருவர் , இனி ஒருபோதும் சந்திக்க வாய்ப்பற்ற ஒருவர் காட்டிய அக்கறை மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

ஆனால் மாடர்ன் பெண்கள் அப்படி இருப்பதில்லை.  பெண்கள்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும், என்ன ஆடை அணிவது , அந்த நேரத்தில் வெளியே செல்வது என்பதை எல்லாம் உரிமை செய்யும் உரிமை அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

ஆனால்  நம்முடைய கேவலமான இந்த நாடு இந்த லட்சிய நிலைக்கு தயாராக இல்லை. மன நோயாளிகள் நிரம்பிய இந்த நாட்டில் பெண்கள் மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.  பாலியல் கல்வி அளித்தோ ,  நீதி போதனை கொடுத்தோ நம் ஊரை திருத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நம் கையாலாகாத  அமைப்பால் முடியாது என்பது நிதர்சனமான உண்மை. எனவே அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 அப்படி ஒரு லட்சிய நாடாக உருவாகும் வரை கடும் தண்டனைகள் அவசியம் . அப்போதுதான் கொஞ்சமாவது குற்றங்களை குறைக்க முடியும்.  

தண்டனை கொடுப்பது மனித உரிமைக்கு எதிரானது.  எச்சரிக்கையாக இருக்க சொல்வது பெண் உரிமைக்கு எதிரானது.

எனவே இப்போது இருக்கும் நிலை மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏதாவது சம்பவங்கள் நடக்கையில் ஆவேசமாக கருத்து சொல்லி விட்டு , பின் மறப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இது மாறவே மாறாது. கடைசி வரை நாம் கேவலமான நாடாகவே இருக்க போகிறோமா..

இந்த நிலை மாற , ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. 

என்றாவது ஒரு நாள் இந்தியா இஸ்லாமிய பாதையில் நடக்க தொடங்கினால் , அன்று இந்த நிலை மாறக்கூடும்.

 இஸ்லாமிய நாடாக மாற வேண்டும் என்பதல்ல நான் சொல்வது. இஸ்லாமிய வழிமுறைகள் , ம்தங்களை கடந்த வழிமுறையாக ஏற்கப்பட வேண்டும்.

 நம் ஆட்கள் இஸ்லாமிய முறைகள் என்றால் பிற்போக்கு என்றே நினைப்பார்கள்.  இந்தியா என்னவோ, நாகரிக வளர்ச்சி அடைந்த நாடு போலவும் , மத நூல் அடிப்படையில் ஒரு நாடு செயல்படுவது பிற்போக்கு என்றும் நினைப்பார்கள்.

உண்மையில் , இப்போதுதான் நாம் பிற்போக்குவாதிகளாக , காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம்.

இஸ்லாம் சொல்லும்  கருத்துகளை பாருங்கள்.  

  • நபியே நீர் முஃமினான ஆண்களுக்குக் கூறு வீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ் தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிகவும் சிறந்த தாகும். நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா அவர்கள் செய்பவற்றை நன்கறிந்த வனாக இருக்கின்றான்.
  • நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது
  • அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல

ஆண்களும் பெண்களும் கட்டுபாடுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல் , மத கோட்பாடாக இல்லாமல் , ஒரு நாட்டின் வழிமுறையாக  மாற்றினால் ,  இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை என்ற நிலையை கொண்டு வந்தால் , குறைந்தது இன்னும் நூறு ஆண்டுகளிலாவது நாமும் மற்றவர்களை போல நாகரிகம் அடைந்த மக்களாக மாற முடியும் என்றே தோன்றுகிறது.