Pages

Saturday, February 22, 2020

ரீமிக்ஸ் என்ற அயோக்கியத்தனம்.. ரகுமான் காலம் கடந்த ஞானோதயம்

தனது பாடல் ஒன்றை ரீமிக்ஸ் என்ற பெயரில் நாசமாக்கி விட்டார்கள் என ஏ ஆர் ரகுமான் கடும் வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்


பாடல் உருவாக்கத்துக்குப்பின் எத்தனையோ இனிய நினைவுகள் , உழைப்பு இருக்கும். அதை இப்படி எடுத்தாள்வது தவறு என குமுறியிருக்கிறார்

உண்மையில் , தொட்டால் பூ மலரும் ..பொன் மகள் வந்தாள் ஆகிய பாடல்களை அவர் ரீமிக்ஸ் செய்தது பலருக்கு வருத்தம்தான்

பொன் மகள் வந்தாள் பாடலுக்குப்பின் அப்பாடல் சார்ந்த பல இனிய நினைவுகள் சிவாஜி , எம் எஸ் வி ரசிகர்களிடம் இருக்கும். அதை ரீமிக்ஸ்செய்வது அவர்களை காயப்படுத்தம்

தொட்டால் பூ மலரும் பாடல் ரீமிக்ஸ் எம்ஜி ஆர் ரசிகர்களை வருந்த செய்திருக்கும்

இன்னொரு கொடுமையும் நடக்கிறது

பல பாடல்களை அப்படியே வைத்துக கொண்டு அதற்கேற்ப புதிய நடிகர்களை வைத்து ஷுட் செய்கிறார்கள்

இதெல்லாம் அயோக்கியத்தனம்

ரகுமான் இதற்காக குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது

1 comment:

  1. அன்பு நண்பருக்கு
    பாடல் மறுஉருவாக்கம் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது என நினைக்கிறேன்.... அது அப்பாடலை நீண்டநாள் அடுத்தடுத்த தலைமுறைகள் கேட்பதற்கு உதவும். மேலும் அவர்களை மூலப் பாடலை நோக்கி நகரவும் செய்யும். ஆகையால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் இசையமைப்பாளரின் கருத்தும் ஏற்கக் கூடியது. பாடலுக்கான உழைப்பு உருவாக்கம் போன்றவற்றை மதிப்பிட முடியாது. அதனை மறு உருவாக்க பாடல்கள் சுலபமாக புறந்தள்ளி விடுகின்றன என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

    என்னை பொருத்தவரை அடுத்தடுத்த தலைமுறைகள் கேட்பதற்கு ஏதுவாக பாடலை மறுஉருவாக்கம் செய்வதில் அந்த பாடலின் மதிப்பு கூடுவதாகவே நினைக்கிறேன.
    நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]