Pages

Tuesday, March 31, 2020

இளம் பாடகியும் பிரதமரும்

(இது கற்பனைக் கதை)

 " ஏன் என்னை வரச் சொன்னீர்கள்" கேட்டாள் அவள். அழகான முகம். பாடுதல் அவள் தொழில் என்பதை அவள் இனிமையான குரல் உணர்த்தியது

" வெளி நாட்டு அமைச்சரை தே""" *** என திட்டினாயாமே. என்ன அசிங்கம் "
காபமாக கேட்டார் பிரதமர்

அவர் செய்த காரியம் அப்படி என்றாள்

அப்படி என்ன செய்திருக்கப் போகிறார். இப்ப நான் பேசுவதுபோல பேசியிருப்பார். அதற்கு திட்டுவதா ?? பொரிந்தார் பிரதமர்

பேசியதோடு விடவில்லை என்றாள் அவள்

என்ன இப்படி கையைப்பிடித்தாரா ? கேட்டபடி மிருதுவான அவள் கைகளைப்பிடித்தார்

அதற்கு மேல் சென்றார் என்றாள். அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் படபடத்தன

பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதழ்களில் இதழ் பதித்தார்

இப்படி அவர் செய்தாரா.. அதனால்தான் திட்டினாயா .. கேட்டார் பிரதமர்

இல்லை அதற்குப்பின் அவர் ஒன்று சொன்னார் அதனால்தான் திட்டினேன்


உதடுகளை துடைத்தபடி கேட்டார்

அப்படி என்ன சொன்னார்

அவள் சொன்னாள் ..   தனக்கு கொரானா என்றார்


இப்பொது பிரதமர் கத்தினார்

தேxxxx  xxxxxx

Monday, March 30, 2020

அறங்களை அசைத்துப் பார்க்கும் ந பிச்சமூர்த்தி


இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களில் ந பிச்சமூர்த்தி சற்றே வித்தியாசமானவர்

அவரது முதன்மை தேடல் என்பது மெய்ஞான தேடல். அந்த தேடலின் ஒரு,பகுதியாக இலக்கியமும் இருந்தது

மற்றபடி புதுமைப்பித்தன் போன்றோ சிசு
செல்லப்பா போன்றோ முழுக்க,முழுக்க ஊழுத்துக்கு தன் வாழ்வை,அர்ப்பணித்தவர் அல்லர். அனைத்தையும் துறந்த"சன்னியாசி வாழ்க்கை"அவருடையது

அந்த ஞானச்சிதறல்களையே"அவரது கதைகளில் பார்க்க முடிகிறது

 தலித் முதல் பிராமணர்கள்வரை பறவைகள் முதல் பயிர்கள் நாய் பூனை வரை அனைத்துமே இவர் பார்வையில் கதையாகின்றன

பல வரிகளின் வித்தியாத்தன்மை ஈர்க்கிறது

மரத்தைவிட்டு போக மனமில்லாத பிசாசைப்போல


வழிதவறிய கொக்கைப்போல,தனிமையாய் ஒரு மேகம் சென்று கொண்டிருந்தது

ஆகாச மட்டும் பறந்தாலும்,கடைசியில் மண்மீது விழும் கல்லைப்போல

பிந்திக்கிடைக்கப்போகும் வெற்றிலை இன்பத்தை"முன்கூட்டி ரசிப்பதுபோல அவரது"பொக்கை வாய் அசைந்து கொண்டிருந்தது

வெறி பிடித்து தீப்பற்றியதுபோல மரங்கள் பூத்திருந்தன

பாஞ்சாலி,மரம் பளிச்சென எரிவதுபோல உடுத்தியிருந்தாள்

படுக்கையைவிட்டு வர,மனமற்ற ராணியைப்போல கடல் புரண்டு கொண்டிருந்தது

பித்தர்களைப்போல காற்று உச்சகுரலில் உளறிக்கொண்டு இருந்தது

கறுப்பு உடலில் பட்ட காயம்போலசிவப்புக் கொடி பறந்தது

இப்படி பல,வரிகள்

அவர் எடுத்துக் கொள்ளும் பேசுபொருட்களும் காலத்தை மிஞ்சி நிற்கின்றன

குடும்பக்கட்டுப்பாடு தவறு என"ஒரு கதை சொல்கிறது. அந்த கரு காலாவதியாகிவிட்டாலும் அதைச் சொன்னவிதம் ரசிக்க,வைக்கிறது

பதினெட்டாம் பெருக்கு என்று ஒரு கதை
மனைவி ஊருக்குப்போய்விட தனிமையில் இருக்கிறான் அவன். மனைவியிடம் உதவி கேட்க வருகிறாள் ஓர் ஏழைப்பெண்.,வெகு அழகான யுவதி

உதவி செய்துவிட்டு,மாலை வந்து பார்க்குமாறு சொல்லி,அனுப்புகிறான்;
அவளும் ஒப்புக்கொண்டு கிளம்பிவிடுகிறாள்

அவளுக்காக ஆவலாய் காத்திருக்கிறான். அது தவறோ என்றும் தோன்றுகிறது.

கடைசியில் அது தவறு தோன்றுகிறது. அவள் கையில் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பி"விடுகிறான் என கதை முடிகிறது

காவிரி எப்படி கரையை உடைத்துவிடாமல் கடல் நோக்கி,பயணிக்கிறதோ அது,போல அநகத ஏழைப்பெண்ணும் தன் எல்லையைக்கடக்கவில்லை. இவனும் தன் அறத்தை,மீறவில்லை . இதுதான் கதை என அன்றைய வாசகர்கள் புரிந்து"கொண்டிருக்கலாம்

கலத்தல் என்பது இயல்பு. காவிரிக்கு,அது,இயல்பாக நடக்கிறது,அந்த ஏழைப் பெண்ணோ பிறரது மதிப்பீடுகளை சாரந்து வாழ வேண்டிய அவலம். வேறு எந்த உயிரியும் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்க வாய்ப்பில்லை என,யாரேனும் புரிந்து,கொள்ளும் வாய்ப்பையும் கதை தருகிறது. ஒரு ரூபாயை அவன் கொடுத்ததும் அவள் அடையும் அதிர்ச்சி நமது அறங்களை சற்று அசைத்துப்பார்க்கிறது

தவறவிடக்கூடாத ஒரு படைப்பாளி ந பிச்சமூர்த்தி












Saturday, March 28, 2020

இயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்


சாலைகளில் வாகனங்கள் குறைவு,,பறவைகளின் சிறகடிப்புக்கூட துல்லியமாய்க் கேட்கிறது. தூசி குறைந்து விட்டது

இயற்கையை எப்படியெல்லாம் கதறகதற சீரழித்திருக்கிறோம் என புரிகிறது

இயற்கையிடம் மன்னிப்புக்,கேட்க வேண்டிய நேரமிது

இயற்கையை ஒரு மனிதனாக தெய்வமாக உருவகப்படுத்தினால் மன்னிப்புக் கேட்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

 சினம் கொண்ட ருத்ரனாக உருவகப்படுநாத்திக் கொள்ள விரும்புவோரக்கு ருத்ரம் ஸ்லோகங்களின் ஒரு பகுதி ..,படியுங்கள்;
.......
ருத்ரனே வணங்குகிறேன்.பகைவர்களை இரக்கமின்றி,அழிப்பவன் நீ
ன் கோபத்தில் இருந்து எங்களைக் காக்க அன்னையை இறைஞ்சுகிறோம்
கருணைமிகு சிவனே. உம் சினத்தை எம்மீது காட்டாதீர்
நாங்கள் செய்த பிழைகள் மன்னிக்கப்படட்டும்
எம்மை அழிக்க வரும் அம்புகளை,உம் வலிய"கரத்தால் தடுப்பீராக
நல்லவர்கள் அழியக்கூடாது

வலிய பாம்பு தன் எதிரிகளை அழிப்பதுபோல எமைத்தாக்க வரும் வியாதிகளை அழிப்பீராக

எதிரிகள் மீது பாயும் உம் அம்புகள் ஒரு ஃப்ளோவில் எம்மீது பாய்ந்துவிடாமல் காப்பீராக

.....

நுண்ணுயிர்கள் இன்றி,நாம் இல்லை நமது கொடுமைகளால் அவை நமக்கு எதிராக திரும்பியுள்ளன

இயற்கைதான் மிகப்பெரிய வைத்தியன். அதை நம் எதிரியாக்கி நம் குழந்தைகளை மரண வரிசையில் நிறுத்திய கொலைகாரர்களாக இருக்கிறோம்

இந்த சவாலான கால கட்டத்தை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது உடனடி தேவை. கற்றபாடத்தை மறக்காதிருத்தல் நிரந்தர தேவை









Monday, March 23, 2020

எம்"கே யும் வினோபாவும்,.. ஜெயமோகன் கதையை முன்வைத்து


அமுதசுரபி இதழில் இந்திரா
பார்த்தசாரதியின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது

என்ற குறளை அழகாக விளக்கிய கட்டுரை


இது அதிகம் கேட்டிராத குறள்..

உடனடியாக புரிந்து விடாத குறளும்கூட

புகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும் , சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது , அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.,பலர் பல விதமாக இதற்கு வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்

அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன் , சாகும்போது ஏனைய புழுக்கள் , விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது,அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;

இதை மார்ச் இதழில் படித்து,மனதை பறிகொடுத்து அதைப்,பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்

அப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண,எண்ணக் குறைவது கதையை படித்தேன்.

அந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது

அந்த கதையில் பல அழகான தருணங்கள். 


உதாரணமாக இந்த,வரி
ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது

வருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது. 

ஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது

கடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது

இந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது
   சக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்

அனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு,சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்

எதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்

எனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில் , பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.;

இந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க,மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம்
குறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை

இந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக
புரிந்தது


Sunday, March 22, 2020

என்னிடம் என்ன ஸ்பெஷல் ? விசு குறித்து ரஜினி

விசு பல ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர் ..

குடும்பப்பட இயக்குனர் என அறியப்படும் அவர் ரஜினியின் வெற்றிகரமான மசாலாப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் என்ற மாறுபட்ட படத்தை இயக்கியிருக்கிறார்  இன்றும்கூட அதை ரீமேக் செய்யலாம்

உரிமை ஊஞ்சலாடுகிறது என்று ஒரு படம் எடுத்தார். விஜய்க்கு வாழ்வளித்த காதலுக்கு மரியாதை படத்தின் தீம் இந்த படத்தில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. நல்ல தீம் என்றாலும் அது சரியாக சொல்லப்படவில்லை

இயக்குனராக முத்திரை பதித்தாலும் சிறந்த நடிகராகவும் முத்திரை பதித்தார். சின்ன மாப்பிள்ளை போன்ற படங்களில் கதாநாயகனுக்கு இணையாக காட்சிகள் இருக்கும்
ரஜினி, பிரபு என யாருடன் நடித்தாலும் அவரது பிரத்யேக முத்திரைகள் இடம்பெறத்தவறாது

இப்போதெல்லாம் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து புக் செய்து படம் பார்க்கிறோம்
அந்தகாலத்தில் ஏதாச்சும் படம் பார்க்கலாம் என எந்த திட்டமும் இன்றி படம் பார்க்க கிளம்புவார்கள். நட்சத்திர நடிகர்கள் படம் இல்லாவிட்டால் , விசு படத்துக்கு,நம்பி போகலாம்,, போரடிக்காது, என்ற மினிமம் கேரண்டி உண்டு

அவரது பெரும்பாலான படங்களை பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள் . அதற்கு,காரணம் இதுதான்

ரகுவரன் என்ற ஒப்பற்ற கலைஞனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. சம்சாரம்
அது,மின்சாரம் படத்தில் ரகுவரனை மறக்க முடியுமா ??

அவர் எப்போதுமே செய்திகளில் இருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு,முன்புகூட தன் திரைக்கதை ச உரிமைக்காக குரல் கொடுத்தார்

அருணாச்சலம்,படத்தில் இவருக்கு,ஒரு முக்கியமான ரோல். அதை இவருக்கு"அளிக்கச் சொன்னவர் ரஜினி

என்னை ஏன் இதற்கு தேர்வு செய்தீர்கள் என ரஜினியிடம் கேட்டாராம்.

ரஜினி பதில் ;   திரண்ட சொத்து தன் கையில் இருக்கும்போது , அதை அனுபவிக்காமல் , உரியவரிடம் சேர்க்க துடிக்கும் அப்பாவித்தனமும் நேர்மையும்,கறார்தன்மையும் கலந்த இமேஜ் உங்களுக்குமட்டுமே உண்டு. நீங்கள் இதை செய்தால்தான் மக்கள் ஏற்பார்கள்

விசுவின் ஆளுமையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது





Monday, March 16, 2020

டால்ஸ்டாயின் பாதிரியாரும் ஜெமோ−வின் மருத்துவரும்

டால்ஸ்டாயின் கதை ஒன்று

ஒரு பாதிரியார் ஒரு தீவில் வாழ்ந்து வரும் மூவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவர்களுக்கு ஆன்மிகம் போதிக்கும் பொருட்டு அவர்களை பார்க்கச் செல்கிறார்
எங்களுக்கு ஆன்மிகமெல்லாம் தெரியாது
நீங்களும் மூவர். நாங்களும் மூவர். கருணை காட்டுங்கள் என பிரார்த்திப்போம் . அவ்வளவுதான் என்றார்கள் அவர்கள்
அவர்கள் நல்லெண்ணத்தை புரிந்து கொண்ட பாதிரியார் , சரியான பிரார்த்தனை மந்திரங்களை கற்றுக்கொடுத்து விட்டு , ஒரு படகில் அங்கிருந்து கிளம்புகிறார்
பாதி வழியில் யாரோ பின் தொடர்வதை உணர்கிறார்
ஒளி வெள்ளம். அந்த மூவரும் நதியின் மீது ஓடி வருகிறார்கள்
அவர்கள் முகத்திலும் தாடியிலும் அப்படி ஒரு பிரகாசம்
" நீங்கள் கற்பித்த மந்திரம் மறந்து விட்டது. மீண்டும் கற்பியுங்கள் " என்றனர்

" உங்களது தூய இதயத்தை கடவுள் புரிந்து கொண்டார். உங்களுக்கு நான் கற்றுத்தர எதுவுமில்லை. வழக்கம்போல உங்களது எளிய பிரார்த்தனையையே தொடருங்கள். எனக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள் " என,சொல்லி விட்டு கிளம்புகிறார் பாதிரியார்

ஜெயமோகனின் சர்வபூதேஷு கதையை படிக்க எனக்கு முதலில் பிடிக்கவில்லை.

யாதேவி என்ற மகத்தான வாசிப்பனுவத்தை அதன் தொடர்ச்சி பாதித்து விடுமோ என அஞ்சினேன்.

படித்தபின் இது வேறு ஒரு தளம் என புரிந்தது

பிரஞ்ஞை என்பது தோன்றாத நிலை , பிரஞ்ஞை மட்டும் உருவாகி மனம் தோன்றாத நிலை , மனம் தோன்றி ,விழிப்புணர்வு பெற்ற நிலை , மனம் கடந்த நிலை என்பதில் பல்வேறு யோசனைகளும் அறச்சிக்கல்களும் நேர்வது மூன்றாவது நிலையில்தான்

டால்ஸ்டாய் கதையில் அந்த பாதிரியார் இருப்பது மூன்றாவது நிலையில். அவர் மனப்பூர்வமாக நல்லது செய்ய நினைக்கிறார். அதை உயர்நிலை ஒன்று உண்டு என்ற அறிதல் அந்த கதையின் உச்சம்
ஆனால் சர்வபூதேஷு கதை சற்றே சிக்கலானது
சர்வபூதேஷு கதையின் உச்ச கணத்தை படிப்பவர்களின் மனப்பக்குவம்தான் முடிவு செய்ய முடியும்

ஶ்ரீதரன் , எல்லா , மாத்தன் என்ற மூன்று கதாபாத்திரங்களுமே டிரான்ஸ்பார்ம் ஆகி விடுகினறன மனதளவில் ஆன்மிக ரீதியான திறப்பு மூவரிலும் நிகழ்கிறது.

குறிப்பிட்ட ஒருவரை மையமாக்கிப்படித்தால் , ஒரு விதமாகவும் , வேறொருவரை மையமாக்கினால் வேறு விதமாகவும் தோன்றும் கதை. மையமற்ற வாசிப்புதான் பொருத்தமான வாசிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்

வேறோரு கட்டுரையில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார்

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”

இந்த தற்செயலான வரியை கதையுடன் பொருத்திப்பார்த்தால் , குருகுல வாசம் கட்டுப்பாடுகள் போன்றவை ஒரு வழி என்றால் கட்டற்ற பாலியல் , கட்டற்ற வாழ்க்கை போன்றவையும் சிலருக்கு வழிகளாக இருந்தது நினைவுக்கு வந்தது


Friday, March 6, 2020

பேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு

திராவிட இயக்க வரலாற்றில் நாவலருக்கும் , பேராசிரியருக்கும் முக்கியமான இடமுண்டு

இருவருமே தனித்துவமான தலைவர்களாவதற்கான தகுதிகள் இருந்தும் நம்பர் டூ இடத்திலேயே திருப்தி அடைந்தவர்கள் என்பது ஒற்றுமை.  ஆனால் வேற்றுமைகளும் ஏராளம்

பேராசிரியர் அன்பழகன் ஆரம்பத்தில் கலைஞரை கடுமையாக எதிர்த்தார். ஒருகட்டத்தில் கலைஞரை ஏற்றார். அப்போதும் முழுமையாக ஏற்கவில்லை

தலைவராக அல்ல. தளபதியாக ஏற்கிறேன் என்றார்

எப்படியோ.. என்னை ஏற்றதே மகிழ்ச்சி. தளபதியான என்னை தளர் பதியாக மாற்றாமல் இருந்தால் சரி என கலைஞரும் அதை வேடிக்கையாக பேசி ஏற்றார்

அதன் பின் அன்பழகனின் தனித்துவம் மங்கியது.  கலைஞரின் நிழலாகிப் போனார்

நெடுஞ்செழியன் விவகாரம் வேறு விதம்

அண்ணா , கலைஞர், மக்கள் திலகம் , ஜெ என அனைவருடனுமே மோதி இருக்கிறார். அனைவராலுமே கவுரவிக்கப்பட்டும் இருக்கிறார்

உதிர்ந்த ரோமம் என்று இவரை வர்ணித்த ஜெ , தமிழகத்தின் நிரந்தர நிதியமைச்சர் என இவரை உயர்த்தியும் பேசியிருக்கிறார்

தம்பியே வா தலைமையேற்க வா என,அண்ணா இவரை அழைத்துள்ளார்

இவரது தமிழ்த்தொண்டு போதிய விளம்பரம் பெறவில்லை.

அன்பழகன் இப்படி ஏற்ற இறக்கங்களோ தனித்துவ முத்திரையோ பதித்தவர் அல்லர். ஆனாலும் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஓர் ஆளுமை,அவர்

ஜெ முதல்வராக இருந்தபோது , கல்விமான்களுக்கு இடமளிக்கும் வகையில் மேல்சபை கொணர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது

ஜெ பதிலளிக்கையில் , மேல்சபை இல்லாமலேயே அன்பழகன் போன்ற கல்விமான்களுக்கு இடம் கிடைக்கிறதே இது போதும் என்றார். ஒரு திமுக உறுப்பினரை அவர் உயர்த்திப் பேசியது அதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்

கலைஞரின் நெருங்கிய தோழனாக இருந்தார்

வைகோ வின் கூட்டம் ஒன்றில் , நீ கடைசியாகப் பேசு என்றார்

அண்ணாவை உங்கள் உருவில் காண்கிறேன். நிறைவுரை ஆற்றி எங்களை கவுரவியுங்கள். என் உரைக்குப்பின் யாராவது எழுந்து சென்றால் அடுத்த நாள் அந்த நபர் கட்சியில் இருக்க மாட்டார். என வெகு தாழ்மையாக கேட்டுக் கொண்டார்

அன்பழகனைப் பிடிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. நீண்ட நெடிய"அரசியல் வரலாறு கொண்ட அவர் காலத்தில் நாமும்  இருந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்

நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு அஞ்சலி

Wednesday, March 4, 2020

சுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்

சு. சமுத்திரம் அவர்களின் நாவல் ஒன்று திரைப்படமாக்கப்பட்டது.

அதற்கு இசை இளையராஜா.

சமுத்திரம் பற்றிக் கேள்விப்பட்டிருந்த இளையராஜா , அவரை சந்திக்க விரும்பினார். சந்திப்பு ஏற்பாடானது;
வெறும் பத்துப் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு அல்லது டிவி வாய்ப்பு போன்ற அல்ப லாபங்களுக்காக சமரசங்கள் செய்வது அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கும் மக்களைப் பார்ப்பவர்கள் நான்

சமுத்திரத்திற்கு சினிமாவில் பாட்டெழுத ஆர்வம் இருந்தது.  அவர் மட்டும் சற்று நீக்குப்போக்காக இணைய மொண்ணைகள் பார்முலாவை பயன்படுத்தி இருந்தால் அவர் இளையராஜா இசையில் பாடல் வாய்ப்பு பெற்றிருக்கலாம்.

ஆனால் அவர் இளையராஜாவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை. கலை என்பது கலைக்காகவே என்ற ராஜாவின் பார்வையை எதிர்த்து வாதிட்டார். அடித்தட்டு மக்களுக்குப் போராட தான் எழுத்தை பயன்படுத்துவதுபோல ராஜா இசையை பயன்படுத்த வேண்டும் என்றார். கலையின் நோக்கம் பிரச்சாரம் அல்ல என்றார் ராஜா. அந்த விதம் கடும் சண்டையாக மாறி , பிறர் வந்து சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று;

அந்த அளவுக்கு தன் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்

அதனால்தான் அவரால் விமர்சிக்கப்பட்ட கலைஞர் , அவர் நூலை வெளியிட்டுப் பேச ஒப்புக் கொண்டார்.

சமுத்திரம் என்னை முழுமையாக ஆதரிப்பவர் அல்லர். ஆனால் அவர் எழுத்தை மதிக்கும்பொருட்டு இதில் கலந்து கொள்கிறேன் என்றார்;

சமுத்திரத்தின் சோற்றுப்பட்டாளம் , வாடாமல்லி போன்ற பல நாவல்கள் புகழ் பெற்றவை

என்னளவில் அவர் நூல்களில் எனக்குப் பிடித்தது அவரது  " எனது கதைகளின் கதை " என்ற நூல்

கதைக்கான கருக்கள் எப்படி கிடைக்கின்றன ,  அவை எப்படி கதையாக மாறுகின்றன என அழகாக விவரிக்கிறார்

இண்டர்நெட்டிதேடி , உலகப்படங்கள் பார்த்து கதைக்கருவை பிடிக்கும் தேவை அவருக்கு இருந்ததில்லை. அவர் வகித்த"உயரிய பதவி , ஓய்வு பெற்ற பின்னும் அவர் ஈடுபட்ட சமூக சேவை ஆகியவற்றாலும் அவரது முன்கோபம்", சமசரசமற்ற தன்மையாலும் ஏராளமான நேரடி அனுபவங்கள் பெற்றார். அவற்றை இந்நூலில் பகிர்கிறார்

குடித்து விட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறவனை கண்டிக்கிறார். குடியை கைவிட்டால் தொழில் ரீதியாக உதவுவதாக சொல்கிறார். அவன் ஏற்கிறான். கொஞ்ச நாள் கழித்து அவன் குடிப்பதை பார்த்து,அதிர்கிறார். விசாரித்தால் அவனை குடிக்கச்,சொன்னது மனைவிதான். ஏன் என்பது சுவாரஸ்யம்

தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மையில் இருப்பவரை , செல்லமாக " மூஞ்சியப்பாரு . " என"கேலியாக சொல்கிறாள் ஒரு பெண். அதில் இருக்கும் காதலை புரிந்து கொள்ளாமல் அவளை இழந்து விட்டதை பிற்கால சந்திப்பில் உணர்கிறார்
ஒரு ஏழைத்தாய் கிடைக்கும் உணவை குழந்தைக்கு தராமல் தானே உண்கிறாள். ஏன் என்பது மனதை உருக்குகிறது

அவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை கணையாழி கேலியாக எழுதியது.

அது சாதிய வெறி என விட்டுவிடலாம். ஆனால் சுஜாதாவுமேகூட கேலியாக எழுதினார். சுஜாதாவின் அந்த காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது இப்படி பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம்.

படியுங்கள்

பிகு...  சமுத்திரத்தை கேலி செய்த சுஜாதா அதே கட்டுரையில் ஜெயமோகனையும் சீண்டியிருந்தார்






Sunday, March 1, 2020

இறகு சிறகு... என்ன வித்தியாசம்



வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு  உளர் இறகின்விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோதண் கடல் நாட்டே.

குருகு பறவை இறகை விரிப்பதுபோல பூக்கள் மலரும் இடத்தில் அவர் வசிக்கிறார்.  அந்த இடம் தொலைவில் உள்ளது. ஆனால் அவரோ என் இதயத்துக்கு அருகில்தான் இருக்கிறார் என அழகாக சொல்கிறது இந்தப் பாடல்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

என்கிறார் பிரமிள்

சென்ற பாடலில் இறகை விரித்ததாக பார்த்தோம்
இந்தப்பாடலில் சிறகில் இருந்து இறகு உதிர்வதாக படிக்கிறோம்

இறகு எப்படி உதிரும் ?  சரி .. உதிரக்கூடிய சிறு பகுதிதான் இறகு என்றால் , அந்த இறகை எப்படி விரிக்க முடியும் ?

விமானத்துக்கு இருப்பது சிறகா ? இறகா ?


இறகு  அல்லது இறக்கை தான் wings

அதன் சிறிய பகுதி என்பதால் , அதில் இருந்து ஈதிர்வது சிறகு..


பிரமிள் கவிதையில் இறகில் இருந்து பிரிந்த சிறகு என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறார்;

கவிதையில் இப்படி எழுதலாம்.  மயிலிறகு என பேச்சு வழக்கில் சொல்வதில் தப்பில்லை

ஆனால் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

இறகு..  பெரியது

சிறகு..  இறகின் சிறிய பகுதி