Pages

Thursday, January 30, 2020

ஆறுதல் அளிக்கும் நூல்

வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.
உண்மையில் வாசிப்பதற்கு பலர் தயாராக உள்ளனர். அக்கறையுடன் எழுதுவதற்கு ஆட்கள் குறைவு.

கணினியும் ஓர் அறையும் இருந்தால் போதும். தமிழ் தெரிகிறதோ இல்லையோ, உலக அனுபவம் இருக்கிறதோ இல்லையோ..   அபார தன்னம்பிக்கையுடன் தப்புத்தப்பாக எழுதுகிறார்கள்.  அவரவர்கள் அரசியல் சார்புகளுக்கு ஏற்ப பதிப்பகங்கள் கிடைத்து அந்த குப்பைகள்  நூல் வடிவமாகின்றன..

தமிழ் ஆளுமையும் இல்லாத , வாழ்வியல் தரிசனமும் இல்லாத , சத்தியமும் இல்லாத இவற்றை ஒரு சராசரி வாசகன் சட்டை செய்வதில்லை

புத்தக கண்காட்சியில் , சமையல் ஜோதிடம் மொழிஅகராதி என எந்த ஒரு பிரிவிலும் ?அந்தந்த துறைகளில் உச்சத்தில் இருக்கும் நூல்கள் கிடைக்கின்றன.  பரபரப்பாக விற்கின்றன

ஆனால் இலக்கியம் , புனைவு,அபுனைவு என்று வந்து விட்டால் ஏமாற்றம்தான் என பலர் நினைப்பதால்தான் தமிழ் நூலகள் என்றாலே இன்றைய இளைய சமூகம் அலறி விலகுகிறது

உண்மையில் குப்பைகள் சூழ்ந்த இந்த சூழலில் குப்பைக்குள் மாணிக்கங்களும் இருக்கின்றன என்பதே உண்மை

அப்படி நான் தற்போது படித்து முடித்த நல்ல நூல் −   எங்கே போகிறோம் நாம் ?  என்ற "தமிழருவி மணியன்" எழுதிய நூல் (விகடன் பிரசுரம்)

அழகான தங்கு தடையற்ற தமிழ் , ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் , பல்வேறு அறிஞர்கள் குறித்த தகவல்கள் என படிப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எழுதப்பட்டது வாசகனுக்கு மகிழ்வூட்ட அன்று. ஆனால் சத்திய ஒளி ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிரும் நூல் ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வே அவ்வளவு திருப்தியாக இருக்கிறது



முகநூல்  வாட்சப் போன்றவை அற்புதமான தகவல் தொடர்பு சாதனங்கள். ஆனால் அவற்றிலேயே புழங்கிக்கொண்டு அந்த மொழியிலேயே படித்துக கொண்டிருந்தால் கண்டிப்பாக நம் மொழித்திறன் அடி வாங்கும்.  அவ்வப்போது இது போன்ற நூல்களை படிப்பது நம் மொழி வளத்துக்கு நல்லது செய்யும்

அரசியல் நாகரிகம் குறித்த ஒரு கட்டுரை. அதில் லிஙகன் சொன்ன கதை ஒன்றை குறிப்பிடுகிறார்;
.ஒரு பெரிய மனிதரின் தலையில் அவர் மனைவி ஓங்கி அடித்து விட்டாள்.  ஏன் தடுக்கவில்லை என நண்பர்கள் கேட்டனர்

அடிப்பதில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. எனக்கு அப்படி ஒன்றும் அளவற்ற துன்பம் இல்லை என்றார் அவர்




இப்படி பொருத்தமான நகைச்சுவை , ஊழலில் சிக்கியவர் சட்டமன்ற உறுப்பினராக முடியாது என அந்த காலத்தில் இருந்த சட்டத்தின் மாண்பை மதித்து (???!!!! )  ஊழல் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய இந்திராவின் சாமர்த்தியம் என ஒவ்வொரு பக்கத்திலும் சிறுகதை ஒன்று விரிகிறது

அரசியல்  காதல் இட ஒதுக்கீடு ஆன்மிகம் புரட்சி என அனைத்தும் நேர்மையான பார்வையில் அலசப்படுகிறது

தமிழருவி மணியன் காமராஜ் கலைஞர் மூப்பனார் என பலருடன் நேரில் பழகி அரசியல் களத்தை நேரில் கண்டவர்

இணையத்தில் படிக்கும் அரசியல் செய்திகளை வைத்து நூல்கள் எழுதி தமிழ் அறிவியக்கத்தை அழிக்கும் சூழலில் இம்மாதிரி நூல்கள் ஆறுதல் அளிக்கின்றன









Saturday, January 25, 2020

துக்ளக் பொன்விழா மலர் .. திராவிட இயக்க தலைவர்கள்



நாம் நம்பும் விஷயங்களைத்தான் ஒரு பத்திரிக்கை எழுத வேண்டும் என்பதல்ல.  தான் நம்புவதை எழுதினால் போதும். பல பத்திரிக்கைகள் தான் நம்பாதவற்றை சும்மா விற்பனைக்காக பரபரப்புக்காக எழுதுகின்றன
துக்ளக் அப்படி செய்வதில்லை. எனவேதான் பல கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் , கலைஞர் ஸ்டாலின் மூப்பனார் மக்கள்திலகம் ஜெ  ரரஜினி உட்பட பலர் துக்ளக் வாசகர்கள்.

நானும் பல வருடங்களாக படிக்கிறேன். சிறப்பிதழ்கள் ஏதும் வெளியிட்டிராத துக்ளக் அதன் வரலாற்றின் முதல் முறையாக பொன்விழா சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது

முன்பதிவு செய்தவர்களே வாங்க முடியும் என்பதால் முன்பதிவு செய்துதான் வாங்கினேன்

தரமான பேப்பர் , அழகான வடிவமைப்பு ,என வரலாற்றுத் தருணத்தை உணரந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது

ஓபிஎஸ் , ஸ்டாலின் , கி.வீரமணி , ரஜினி மாக்டர் ராமதாஸ் ,தமிழருவி மணியன் உட்பட பலர் சிறப்புக்கட்டுரை எழுதியுள்ளனர்

இதில் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று இருக்கிறது

துக்ளக்கால் பாராட்டப்பட்ட  , துக்ளக்கில் எழுதிய (தினமணி ஆசிரியர் ) வைத்தியநாதன் கட்டுரை இதில் இல்லை.  வேலைப்பளு காரணமாக எழுதமுடியவில்லை என்கிறார் அவர்

ஆனால் துக்ளக்"கால் விமர்சிக்கப்பட்ட ஸ்டாலின் , கி. வீரமணி , ஓபிஎஸ் போன்றோர் தங்கள் வேலைப்பணிகளுக்கிடையே வெகு அற்புதமான உணர்வுப்பூர்வமான கட்டுரைகள் தந்துள்ளனர்..  பத்திரிக்கைகள் மீது திராவிட இயக்கம்வைத்திருக்கும் மரியாதையை ணாட்டுவது போல இது அமைந்துள்ளது

எம்ஜிஆரின் கட்டுரை , கலைஞர் பேட்டி , பெரியார் பற்றிய துக்ளக்கின் மரியாதையை காட்டும் கட்டுரை , அவுரங்கசீப் கடிதம் , பழைய அட்டைப்படங்கள் , கேள்வி பதில்கள் என காலப்பயணம் செயவது போன்ற அனுபவம் தருகிறது சிறப்புமலர்

ராஜிவ்காந்தி உட்பட பல தலைவர்களின் பேட்டிகள் இடம் பெறாதது ஏமாற்றம். தமிழக தலைவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம் போல

மணக்காடு ரஜினி அருள் போன்ற நண்பர்களின் கேள்விகள் இடம்பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி


நல்லதொரு வரலாற்று ஆவணம்






Wednesday, January 22, 2020

ஜெயகாந்தன் அயன்ராண்ட் -ஒப்பீடு

அந்த காலத்தில் நான் அயன் ராண்ட் ரசிகன்..
சோவியத் நூல்கள் படித்து வளர்ந்த எனக்கு அவரது வலதுசாரிக் கருத்துகள் புதுமையாக இருந்தன. அவரது மொழியாளுமை , வலுவான வாதங்கள் போன்றவை ஈர்த்தன

இத்தனை இருந்தும் அது இலக்கியம் ஆகாதுதான். பிரச்சார எழுத்து

ஜெயகாந்தன் புனைவு ஒன்றை வாசிக்கையில் அயன் ராண்ட் நினைவு வந்தது.  வலுவான வாதங்கள் , மொழி ஆளுமை என பல ஒற்றுமைகள் . ஆனால் ஜெயகாந்தனின் உக்கிரம் அவரிடம் இல்லை. அவரது பிரச்சாரம் ஜெகா விடம் இல்லை

பாரம்பர்யத்தில் நம்பிக்கை கொண்ட பிராமணர் அவர். நம் பாரம்பரியம் உயர்வானது,. சில சீர்திருத்தங்கள் தேவை என்பது அவர் நிலைப்பாடு. மனைவி இல்லாமல் தானே கஷ்டப்பட்டு வளர்த்த மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்.

அவர் வீட்டுக்கருகே கடவுளை மற. மனிதமே முக்கியம் என நம்பும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட ஓர் இளைஞன் குடிவருகிறான்.. இவன் பிராமணன். ஆனால் தன்னை பிராமணனாக உணரவில்லை. விருப்பமும் இல்லை

பாரம்பரியமும் புதுமையும் அருகருகே. ஒருவரை தீமையும் வடிவமாக சித்தரிக்கும் வாயப்பை புறக்கணித்து விட்டு இருவரின் வாதங்களை நம் முன் வைக்கிறார் எழுத்தாளர்

இந்த சூழலில் வேறொரு சாதியை சேரந்த ஆனால் பாரம்பர்ய ஞானமும் தேடலும் கொண்ட இன்னொரு இளைஞன் அவருக்கு அறிமுகமாகிறான்

இந்த நான்கு கதாபாத்திரங்கள் கடைசியில் எதை அடைகிறாரககள் என்பதை சுவாரஸ்யமாக தர்க்கபூர்வமாக சொல்கிறது அந்த கதை

வெளிவந்த காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய எழுத்து.. இன்றும் படிக்க முடிகிறது
ஆனால் அயன் ராண்ட் சலித்துப்போய் விடும்


Tuesday, January 21, 2020

சிவாஜியுடன் சிறப்பு அனுபவங்கள்

சின்ன வயதில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் அன்னையின் ஆணை என்ற படம் பார்த்தேன். சின்ன வயது என்பதால் படம் அவ்வளவாக நினைவில்லை . ஆனால் ஒரு காட்சி மனதில் பசை போட்டு உட்காரந்து விட்டது
அதில் சிவாஜியின் மனைவியாக வரும் சாவித்ரி , கணவனை கடுமையாக திட்டுவார். சிவாஜியின் நெஞ்சில் நகத்தால் பிராண்டி காயப்படுத்துவார்.சிவாஜி எந்த எதிர்வினையும் காட்டாமல் வாஷ்பேசின் சென்று காயத்தை கழுவிக் கொள்வார். நிதானமாக துண்டால் துடைப்பார். எதிர்பாரா ஒரு கணத்தில் திடீரென ஆக்ரோஷத்தை காட்டுவார். பிரமிப்பாக இருக்கும்

இந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று என்ற தகவல் இந்த நூலை எனக்கு நெருக்கமாக்கியது ....  நான் சுவாசிக்கும் சிவாஜி _ஒய் ஜீ மஹேந்திரா

வரலாற்றுச் சம்பவங்களும் நேரடி அனுபவங்களும் கலந்து எழுதப்பட்ட நூல் என்பது இதன் தனித்துவம்

நூலாசிரியர் சிவாஜியுடன் அவர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் என்பதால் பல அபூர்வ தகவல்களைத் தருகிறார். ஒரு சராசரி ரசிகனாக தான் ரசித்த காட்சிகளையும் சொல்கிறார்

அதாவது என்பதை வெவ்வேறு மாடுலேஷன்களில் சொல்வது , ஒரே பாடலை வெவ்வேறு பாணியில் வெளிப்படுத்துவது , இரண்டு கண்களில்,இருவேறு உணர்ச்சிகளைக் காட்டுவது . அதற்கான ஷாட் என இவர் சொல்லும் காட்சிகளை இன்றைய தொழால்நுட்ப வளர்ச்சியால் நாம் உடனே யூட்யூபில் கண்டு ரசிக்க முடிவது கூடுதல் அனுகூலம்

களைப்பாக இருப்பதுபோல நடிப்பதற்காக பயிற்சி செய்யும் நடிகரிடம் களைப்பாக இருப்பது போல நடிக்க பழகுங்கள் , நிஜமாகவே களைப்பது நடிப்பல்ல என பாடம் எடுப்பது , காஞ்சிப் பெரியவரின் ஆசி , கவுரவம் படத்தில் மகன் வேடத்தில் முத்துராமன் போன்ற பிற நடிகர்களை நடிக வைக்காமல் தந்தை மகன் என இரண்டு வேடங்களையும் செய்ததற்கான காரணம் , ரஜினியின் அனுபவம் , பாலு மகேந்திரா சேரன் போன்றோர் சிவாஜிக்காக கதை சொன்ன நிகழ்வுகள் என சினிமாத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் அரிய பொக்கிஷமாக வந்துள்ளது புத்தகம்

கண்ணதாசன் பதிப்பகம் வெகு ஸ்டைலிஷாக நூலை வெளியிட்டுள்ளனர். வண்ணப்படங்கள் உட்பட ஏராளமான படங்கள் , பிழைகளற்ற தமிழ் என கவியரசருக்கு மரியாதை செய்துள்ளது பதிப்பகம்

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்

Sunday, January 19, 2020

ஜெயகாந்தன் எழுத்துலகின் ஒரு துளி

ஜெயகாந்தனின் புனைவு ஒன்று

ஒருவன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை , பெற்றோர் கோரிக்கையை நிராகரித்து விட்டு

எனக்கு திருமணம் வேண்டாம். அவ்வப்போது பாலியல் தொழிலாளிகளிடம் உடல் இச்சையை தீர்த்துக் கொள்வேன்  அது போதும் என தன் நண்பர்களிடம் சொல்கிறான்.

காசு இருக்கும்வரை நன்றாகத்தான் இருக்கும். காசில்லாதவனை எந்த வேசியும் மதிக்க மாட்டாள் என்கிறார் நண்பர் , பேச்சு வாக்கில்

ஓகேயா..   ? ஒரு நாள் ஒரு விலைமாது வீட்டுக்கு செல்கிறான். அவள் வரவேற்கிறாள்..

அப்போதுதான் காசு கொண்டு வர மறந்துவிட்டது என உணர்கிறான். கிளம்ப எத்தனிக்கிறான்.

பரவாயில்லை. கொஞ்ச நேரம் பேசி விட்டு செல்லலாம் , உங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் என பண்புடன் கூறுகிறாள் அவள். அந்த நட்பை ஏற்று அமர்கிறான்.
சரி ஆடை மாற்றி விட்டு வருகிறேன் என,தன் அறைக்கு சென்று கதவை அடைக்கிறாள் அவள்

அந்த கேரக்டரை எப்படி உயர்த்திக் காட்டுகிறார் என வியப்பாக இருந்தது.

அறுபதுகளில் இப்படி ஒரு சித்தரிப்பு

செலவுக்கு ஏதும் காசு வேண்டுமா என,அவள் கேட்பதை மறுத்து,விட்டு அவள் கைகளால்  சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறான்

அந்த கதை இதற்கு மேல் எப்படி செல்கிறது என்பது,வேறு.

ஆனால் அதன் உச்ச கணம் இங்கேயே நிகழ்கிறது

காசில்லாவிட்டால் வேசி மதிக்க மாட்டாள் என நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது

ஆனால்,நீ சொன்னது தவறாகி விட்டது என மேற்படி சம்பவத்தை உதாரணமாக சொல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை

நல்ல எழுத்தை , மனவோட்டத்தை படித்த மகிழ்ச்சி கிடைத்தது

Saturday, January 18, 2020

சாருவிடம் கலை உருவாகாதா ? ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி

என்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்

அறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்

அதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .

தம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.

காரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன்.  துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.

இலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்




இந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு

நிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது

கலை என்பதன் அவசியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு

ஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு.  அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்

இங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.

ஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்

சாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்

பிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார்  சாருவின் உரை காணொளி

நேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை

அப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து

பொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்

தமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது

Friday, January 17, 2020

ரஜினியின் முரசொலி பேச்சும் பிஎச் பாண்டியனும்

முரசொலி வைத்திருப்பவர்கள் திமுகவினர் என ரஜினி சொன்னது விவாதப் பொருளாகியுள்ளது

முரசொலி வைத்திருந்தால் பொதுவாக திமுகவினர் என்றுதான் நினைப்பார்கள். இது உண்மை

ஆனால் நடுநிலையாளர்களும் முரசொலி படிக்கக்கூடும். நானெல்லாம் முரசொலி சங்கொலி மக்கள்குரல் தீக்கதிர் என அனைத்தும் படிப்பவன்

நான் முரசொலி படிப்பதை பார்த்தால் என்னை திமுக காரன் என நினைப்பார்கள் என்பதுதான் யதார்த்தம்

இது நிற்க

எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது திமூக சட்ட எரிப்பு போராட்டம் நடத்தியது. தம்மை கைது செய்வார்கள் என திமுக நினைத்தது.  ஆனால் எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டுவிட்டது அதிமுக அரசு.

எரித்தபின் , நீங்கள் சட்டத்தை மீறி விட்டீர்கள் என சொல்லி திமுக எம் எல் ஏக்களை பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் பி எச் பாண்டியன்

அதிர்ந்துபோன திமுக நாங்கள் வெற்றுத்தாளைத்தான் எரித்தோம் பதவி நீக்கம் செல்லாது என நீதிமன்றம் சென்றது

பதவி போனால் போகட்டும். மிச்சம் இருக்கும் எம் எல் ஏக்களும் எரிப்பார்கள். என சொல்லி இருந்தால் கெத் ஆக இருந்திருக்கும்;
அது போல ராமர் ஊர்வல விவகாரத்தில் நாங்கள் அப்படித்தான் செய்தோம் . மீண்டும் செய்வோம். ஏனென்றால் அதன்,மூலம் பக்தி என்பது தவறு என காட்டுகிறோம் என்றுதான் பெரியார் சொல்லி இருப்பார். திக வின் நிலைப்பாடும் அதுதான்;
ஆனால் 

Thursday, January 16, 2020

திராவிட இயக்க படைப்பாளி விந்தன்


ஒரு காலத்தில் புத்தக கண்காட்சி என்றால் இணையமே அல்லோலகல்லோப்படும். பலரும் பலவற்றை படித்து பட்டியலிடுவார்கள்
;காலப்போக்கில் ஆளுக்கொரு கட்சியிலோ அமைப்புகளிலோ இணைந்து கொண்டு அவை சார்ந்தவற்றை படிக்க ஆரம்பித்து விட்டனர்.  பொது வாசிப்பு இல்லாமல் போய்விட்டது

சரி , கொள்கை சார்ந்து படித்தாலும் விந்தன் போன்ற திராவிட சாய்வு எழுத்தாளர்களை படிக்கிறாரகளா என்றால் அதுவும் இல்லை

சிறுகதை கவிதை சினிமா பாடல் திரைக்கதை பத்திரிக்கை என பல்துறை வித்தகர் விந்தன்

கொன்றை வேந்தன்  ஆத்திச்சூடி பாணியில் அவர் எழுதியவையும் பஜகோவிந்தம் போல எழுதிய பசி கோவிந்தமும் புகழ் பெற்றவை

சில மாதிரிகள்..

சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ராவண காவியம் ரசித்துப் படி
மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
பீடை என்பது பிராமணியமே
முக்தியால் வளர்வது மூடத்தனமே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் தீது
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை
கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கோயில் இல்லா ஊரில் குடி இரு


மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்
மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்
சிந்திக்கும் முன் எதையும் செய்ய வேண்டாம்
செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்
பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்
படித்துவிட்டு பகுத்தறிவை இழக்க வேண்டாம்
எம்மதமும் சம்மதமே என்ற மேலோன்
ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே



மக்கள் திலகமும் நடிகர் திலகமும்,இணைந்த,ஒரே படமான கூண்டுக்கிளியில் பாடல் எழுதியிருக்கிறார்

மயக்கும்,மாலை போபோ ,  இதய வானின்
உதய நிலவே என்பது,போன்ற ஹிட் பாடல்கள் எழுதியுள்ளார்;

அவரது நாவல்கள்தான் அவர் படைப்புகளின்,உச்சம்

சிறுகதைகள் நேரடியானவை. கலையம்சம் குறைவு என்றாலும் நேர்மையானவை.  காலத்தை ஆவணப்படுத்துபவை

பசியால் வாடும் இருவர் அன்னதானம் வாங்க செல்கிறார்கள். தன் தாயக்கு,உணவு மறுக்கப்பட்டால் எனக்கும்,வேண்டாம் என குரல் எழுப்பி அடி வாங்கிச் செல்லும் சிறுமிக்கும் தாய்க்கும் தமது,உணவை அளித்து,விட்டு காலி வயிற்றுடன் நாட்டைப்பற்றி யோசிக்கும்"இரு,இளைஞர்கள் ,  மக்களுக்கு உதவாத அரசின் திட்டங்கள் , கன்னம்,சிவக்க,அறைந்தவளின் காதலை வென்று அதே கன்னத்தில், முத்தம் பெறும் காதலன்என, பல,தளங்களை"தொடுகிறார்

சொல்,அலங்காரஙகளோ சிறுகதை நுணுக்கங்களோ கலை அம்சமோ குறைவு

ஆனால் அவர் காட்டும் மனிதர்கள்,சம்பவங்களின்,நிஜத்தன்மை,மனதில் பாய்கிறது;;;

வாய்ப்பிருப்பின்,படியுங்கள்

Tuesday, January 14, 2020

பாட்ஷா , தர்பார் ..விமர்சகர்களின் அறியாமை

இலக்கியம் குறித்து எழுத விரும்புகிறேன். தர்பார்  பற்றி எழுத விரும்பவில்லை. ஆனாலும் எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.


பாட்ஷா படத்தை முதல்நாள் பார்த்தபோதே இது வேறு லெவல் படம் என புரிந்து விட்டது. திரைக்கதை இசை வசனம் நடிப்பு என எல்லாம் பிரமாதம். நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன். நானே பலரை அழைத்துச் சென்றேன்

சரி பத்திரிக்கைகளில் என்ன எழுதியிருக்கிறார்கள் என ஆவலுடன் பார்த்தால் மிதமான ஏமாற்றம்.

வழக்கமான ரஜினி படம் , அவருக்காக ஓடும் என எழுதியிருந்தார்கள்

தேவா இசை இன்றும் நிற்கிறது. ஆனால் அதை மட்டம் எழுதியிருந்தது ஒரு பத்திரிக்கை. தேவா இதை வருத்தமுடன் சொல்லி வருகிறார்.

இன்று கல்ட் ஸ்டேடஸை அடைந்த மக்களால் கொண்டாடப்படும் படம் குறித்து அன்றைய விமர்சகர்கள் என்ன எழுதினார்கள் என பார்த்தால் விமர்சகர்களின் அறியாமையும் காழ்ப்பும் தெரியும்.


தர்பார் படம் கண்டிப்பாக வரலாற்றில் நிற்கும். இன்றைய விமர்சனங்களை,வருங்காலத்தில் பார்ப்பவர்கள் எள்ளி நகையாடுவார்கள்

வில்லன் சுனில் ஷெட்டி அதிக நேரம் வருவதில்லை. போதுமான கொடுமைகள் செய்வதில்லை என்பதை,ஒரு குறையாக ரஜினி ரசிகர்கள் உட்பட பலர் சொல்கிறாரககள்

வில்லனை அப்படி காட்டுவது பழங்கால யுக்தி. subtle ஆக அவன் பலத்தை காட்ட வேண்டும்.  தர்பாரில் வில்லன் நேரடியாக வருவதில்லை. அவன் மீதான பயம்தான் பலரை இயக்குகிறது. அவன் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஹீரோவுக்குத் தெரியாது என்பதுதான் திரைக்கதை யுக்தி.

ரஜினி படங்களில் அவ்வளவாக நாம் பார்த்திராத திரைக்கதை மாயாஜாலங்கள் படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது

ஆண்டவன் சொல்றான் என்பது,போன்ற ரஜினியிச வசனங்களோ அலுத்துப்போன பஞ்ச் டயலாக்குகளோ இன்றி தரமான படம் தந்த முருகதாஸ் கண்டிப்பாக திரைக்கதை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்

Sunday, January 12, 2020

தர்பார் ரஜினி படமா முருகதாஸ் படமா ?

தர்பார் ரஜினி படமா அல்லது முருகதாஸ் படமா என ஒரு விவாதம் நடந்து வருகிறது .


பேட்ட படம் ஒரு அட்டகாசமான புதுமையான திரைக்கதை என்றாலும் கார்த்திக்சுப்புராஜ் அதை மறைத்து அது எண்பதுகளின் ரஜினி படம் என நினைக்க வைத்து விட்டார். எனவே அதன் வெற்றி ரகசியம் சராசரி இயக்குனர்களுக்கு தெரியப்போவதில்லை.

தர்பார் படத்தைப்பொருத்தவரை அசத்தலான படம் . ஆனால் ஒரு சராசரி ரஜினி ரசிகனுக்கு இது ரஜினி படமாக தெரியவில்லை. ஏன் ?

1 வழக்கமான ரஜினி கதாபாத்திரங்கள் இந்த படம் போல பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைவதில்லை

2 ரஜினிதான் பெண்களை காப்பதாக அவர் படங்கள் இருக்கும். இதில் அவரால்"அவர் மகளை காக்க முடிவதில்லை. மாறாக மகள் இவரை காக்கிறாள்

3 கதாநாயகி இப்படத்தில் வெறுமனே டூயட் பாடுவதில்லை. யாரோ ஒருவர் என்ற நிலையில் துவங்கி மகள் இல்லாத,நிலையில் அவர் துணை தேவை என பார்வையாளர்களை நினைக்க வைப்பது போல நயன்தாரா கேரக்டர் செதுக்கப்பட்டுள்ளது

4 கூட ஆட்களை கூட்டி வர நினைத்தேன். சரி நாமே பேசிப்பார்க்கலாம்னு வந்தேன் என ரஜினியிடம் பேசும் கதாபாத்திரங்களை 90களில் பார்த்திருக்க மாட்டோம். இதில் பார்க்கிறோம்

5 வழக்கமாக ரஜினியை பில்ட்அப் கொடுத்து காட்டுவதுதான் ஒளிப்பதிவாளர்கள் பணியாக இருக்கும். இப்படத்தில் அவை இருந்தாலும் ஒரு விஷுவல் விருந்தே படைத்து விட்டார் சந்தோஷ் சிவன். செம

6,தன் மகளை கொன்றவனை தேடிப்போகிறார் ரஜினி. ஆனால் அவன் இறந்து விட்டான் என அறிந்து ஸ்தம்பிக்கிறார். இப்படி ரஜினியை குழம்பி நிற்கும் காட்சியை 90களில் பார்த்திருக்க மாட்டோம்

7 கதாநாயன் தன் முயற்சியால் மட்டுமே சினிமாட்டிக்காக வெல்வதில்லை. தற்செயல்களும் உதவுகின்றன ( நம் அன்றாட வாழ்வைப்போல)
இந்த காட்சிகள் படத்துக்கு நம்பத்தன்மை அளிக்கின்றன. கதை அந்தரத்தில் தொங்காமல் மண் மேல் நடக்கிறது

ரயில் நிலைய சண்டை போன்றவைகூட ராஜாதிராஜா , ராஜா சின்ன ரோஜா பட,வகை ரஜினி சண்டை இல்லை. ஆனாலும் ரசிக்க வைக்கின்றன

கண்டிப்பாக இது 90களின் ரஜினி படமல்ல.,முருகதாசின் படம்.  பழைய ரஜினியை பார்க்க முடியவில்லை என ரஜினி ரசிகன் வருந்தாமல் புதிதாக ஒரு ரஜினியை பார்ப்பதில் ரசிகர்களை மகிழ,வைத்ததில் முருகதாஸ் வெற்றி பெற்று விட்டார் !hats off  முருகதாஸ்

புத்தக கண்காட்சியில் கைகுலுக்கிய முவ − கநாசு

நூல் வாசிப்பு என்பது தரும் மகிழ்ச்சி தனித்துவமானது. மனதில் அது நிகழ்த்தும் ரசவாதம் , அது அளிக்கும் திறப்பு போன்றவை அனுபவிக்க அனுபவிக்க திகட்டாதவை

இணைய வருகையால் சில தவறானவர்கள் தவறான பாதையை உருவாக்க முயன்றாலும் வாசிப்பு உயிர்ப்புடன்தான் உள்ளது

பொய்த்தேவு நாவலை சில நாட்கள் முன் படித்து அது குறித்து எழுதினேன். தொடர்ந்து அது குறித்த விவாதங்கள் வாசிப்பு என"அந்நாவல் என்னுள் வளர்ந்து கொண்டு இருந்தது;

இலக்கியவாதிகள் என்ற வகைப்பாட்டில் முவ அவர்களை வைக்க முடியாது . சிறந்த சிந்தனையாளர் , தமிழறிழர் அவர்.  சில இலக்கியவியாதிகள் தப்பும்தவறுமாக தமிழ் எழுதக்காரணம் நல்ல தமிழ் வாசிப்பு என்பது அவர்களிடம் இல்லை

என்னைப்பொருத்தவரை தமிழ் ஆளுமையை மனதில் கொண்டு முவ எழுத்துகளைப் படிப்பேன்

அந்தவகையில் புத்தக கண்காட்சியில் முவ எழுதிய கயமை நாவல் வாங்கிப்படித்தேன்.

அதில் ஒரு காட்சி.

அதில் வில்லனாக வரும் ஒரு அதிகாரி தனக்கு கீழே இருப்பவனை கடவுள் நம்பிக்கை அற்றவன் என சித்திரிக்க விரும்புகிறார். கதை நாயகனான அவனை அழைத்துப் பேசிகிறார்.

கடவுள் நம்பிக்கை பற்றி என்ன நினைக்கிறாய் என வினவுகிறார்.

அவன் சொல்கிறான்
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.

என திருவாசகத்தில் சொல்வதுதான் என் கருத்துமாகும்

அந்த தெய்வம்,இந்த தெய்வம் என பல பொய் தெய்வங்களிடம் சிக்காமல் உண்மைக்கடவுளாம் சிவனை அடைந்தேன் என்கிறார் மாணிக்கவாசகர்;
இதன் நீட்சியாக வஞ்சகம் , சுயநலம் போன்றவை பொய் தெய்வங்கள் என்றும் உண்மையாக இருப்பதே உண்மை தெய்வம் என்றும் நான் புரிந்து கொண்டு அதன்படி வாழ்கிறேன் என்பான்;
இந்தக் காட்சியை படிக்கும்போது பொய்த்தேவு நாவல் முழுதும் என் மனதில் வந்து போனது.
திருவாசகத்தின் திருக்கோத்தும்பி நினைவுக்கு வந்தது , சாரு நிவேதிதாவின் ராசலீலா காட்டும் அலுவலக சூழல் நினைவுக்கு"வந்தது , ஜெயமோகனின் அறம் தொகுப்பு நினைவுக்கு வந்தது

பொய் எழுத்தாளர்கள் எனும் இருளில் இருந்து விடுபட வழிகாட்ட எத்தனையோ மேதைகள் இவ்வுலகில் .;
அனைவருக்கும் நம் வணக்கங்கள்




Saturday, January 11, 2020

தர்பார் பேட்ட ஒப்பீடு

1 இரண்டுமே ரஜினிபடம் போல இருந்தாலும் அந்தந்த இயக்குனர்களின் முத்திரைகளைக் கொண்டவை

2 பேட்ட திரைக்கதை நுட்பமான வித்தைகளைக் கொண்டது. தர்பார் திரைக்கதை விறுவிறுப்பு

3 இரண்டிலும் பின்னணி இசை வேறு லெவல்

4 இரண்டிலும் திருநங்கைகள் கவுரவப்படூத்தப்படுகின்றனர்

5 தர்பாரில் பெண் கதாபாத்திரங்கள் உருவாக்கம் அருமை

6 வில்லனுக்கான பில்ட் அப் தர்பாரில் அதிகம்

7 பேட்ட கிளைமேக்ஸ் தனித்துவமான சிறுகதை. தர்பார் கிளைமேக்ஸ் ஒட்டு மொத்த பயணத்தின் உச்சம்

8 துணை பாத்திரங்கள் உருவாக்கம் தர்பாரில் சிறப்பு. 

9 இடைவேளை இரண்டிலுமே சூப்பர்

10 ரஜினியையே கேலி செய்யும் கவுண்டமணி பாணி காமெடி தர்பாரில் செம



Tuesday, January 7, 2020

ford vs ferrari திரைப் பார்வை

விளக்கை ஏற்றுபவன் அதை பலர் காணும்படி மேஜையில் வைப்பான். ஒளித்து வைக்க மாட்டான் என்பார் இயேசு.
அதுபோல நல்ல எழுத்தாளர்கள் , இயக்குனர்களின் படைப்புகள் அனைத்தும் நல்ல படைப்பை உருவாக்குவதன் ரகசியத்தை வெளிப்படையாக சொல்கின்றன. கவனிக்கத்தான் ஆட்கள் குறைவு

ford vs ferrari
அப்படி ஒரு சிறப்பான படம்

போட்டி நிறுவனத்தை சமாளிக்க முடியாமல் திணறும் கார் நிறுவன அதிபர் , இதன் விளைவாக பணி இழப்பு அபாயத்தை சந்திக்கும் விற்பனை மேலாளர் , கார் ரேஸ் ரத்தத்தில் ஊறிய"டிரைவர் ,  கார் வடிவமைப்பில் கில்லாடியான இஞ்சினியர் ஆகிய மேநைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் இயற்கை விளையாட்டுதான் படம்

இவர்கள் அனைவருமே உண்மை,மனிதர்கள். தனித்தனியாக வாழக்கை வரலாறு எழுதிய வரலாற்று நாயகர்கள்

விற்பனை மேனேஜர் லீ அயகோக்கா அன்றைய டொனால்ட் டிரம்ப். ஆனால்,அவ்வாய்ப்பை மறுத்தார் என்பது வரலாறு

யாரையும் தாழ்த்திவிடாமல் நன்றாக பேலன்ஸ் செய்து விறுவிறுப்பான படமாக்கியுள்ளனர்;

போர்ட் நிறுவனத்துக்கும் பெராரிக்கும் போட்டி என்பது தலைப்பு என்றாலும் தமக்குள்ளான முரண்களைத்தான் படம் பேசுகிறது

இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வருமா
என்ற ஏக்கம் இல்லை
காரணம் அரங்கு நிறைந்த காட்சிகளாக  ஆங்கிலத்திலேயே படம் பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்


Sunday, January 5, 2020

தமிழ் எழுத்துகளின் தரத்தில் வீழ்ச்சி. இலக்கிய சிந்தனை அமைப்பு வேதனை

இலக்கிய சிந்தனை அமைப்பு பற்றிய என் மரியாதையை பல முறை குறிப்பிட்டுள்ளேன்

பல்வேறு இதழ்களில் வரும் கதைகளில் ஒன்றை ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையாக தேர்ந்தெடுப்பார்கள்

12 மாதங்களில் இப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 கதைகளில் ஒரு கதையாக தேர்ந்தெடுத்து அந்த எழுத்தாளருக்கு ஒரு விழாவில் பரிசளிப்பார்கள்

அந்த 12 கதைகளும் ஒரு நூலாக வெளியிடப்படும்

அந்த கதைகளின் குறை நிறைகளை சுஜாதா போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் அலசுவார்.

ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் மதிப்புரைகளை அவ்வளவு சிறப்பாக இருக்கும்

இப்போது என்ன கொடுமை என்றால் தேர்ந்தெடுக்க தகுதியுள்ள கதைகள் தற்போது கிடைப்பதில்லை என்பதால் இந்த நிகழ்வை நிறுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது இலக்கிய சிந்தனை அமைப்பு

வருத்தமளிக்கும் நிகழ்வு

இன்று தரமான இளம் எழுத்தாளர்கள் பலர் உண்டு

ஆனால் பத்திரிகைகள் பலவும் அரசியல் அக்கப்போரில் சிக்கிவிட்டன. தமிழே தெரியாதவர்கள்தான் இன்று பதிப்பாளர்கள்  , பத்திரிக்கை ஆசிரியர்கள்.

எனவே பத்திரிக்கைகளின் தரம் வீழ்ந்து விட்டது

இதை மாற்றி , தரமான தமிழ் எழுத்துகளை காப்பாற்றுவது நம் கடமை