Saturday, May 1, 2010

குஷ்பூ வுக்கு நீதி கிடைத்தது... தமிழ் பெண்களுக்கு ? - மறந்து போன உண்மைகள்



(இந்த படம் , ஆபாசமாக இருக்கிறது என பெண்கள் அல்லது பெண்மையை மதிக்கும் ஆண்கள் என் மேல் கோப பட்டால், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்...

தமிழ் பெண்களை பற்றி இவர்க்கு என்ன தெரியும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான் என் நோக்கம்... பிடிக்கவில்லை என்றால், படத்தை எடுத்து விடுகிறேன் ).)


கற்பு விஷயத்தில் கருத்து சொன்னதற்காக, குஷ்பூ மேல் தொடரப்பட்ட வழக்கில் குஷ்பூவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து இருக்கிறது....

கடும் போராட்டங்கள், நேர செலவு, பண செலவு இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தன கருத்து உரிமையை , குஷ்பூ நிலை நாட்டி இருக்கிறார்.... அதே போல, திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்வது தவறில்லை என நீதி மன்றத்தையே சொல்ல வைத்து, இந்த விஷயத்தில் ஒரு சட்ட தெளிவை ஏற்படுத்த உதவி இருக்கிறார்..எந்த வகையில் இது ஒரு திருப்பு முனை தீர்ப்பு.வராலற்று சிறப்பு மிக்கது....

அவர் அப்படி பெட்டி கொடுத்த போது, கோபப்பட்ட சில பெண்கள் தங்கள் எதிர்ப்பி தெரிவித்தது காட்டு மிராண்டி தனம் என இப்போது உறுதி ஆகிவிட்டது..... ஒரு வேலை தமிழ் பெண்களை , குஷ்பூ இழிவி படுத்தி இருந்தாலும், அந்த பெண்கள், வழக்க் போட்டு இருக்கலாம்.அல்லது வலை பதிவு எழுதி இருக்கலாம்.. போராடியது முட்டாள்தனம்....

இப்படியெல்லாம், பலர் கருதிகிரார்கள்...

இவர்கள் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ள வில்லை...


கல்யாணத்துக்கு முன் பாலுறவு தவறு என்ற எந்த சட்டமும் இந்தியாவில் இல்லை....

பாதுக்கபான உடலுறவு என்பதைத்தான் அரசு விளம்பரங்கள் வலியுரித்துகின்றன.... ஆக, குஷ்பு இந்த கருத்தை பேசியது சட்டப்படி தவறு இல்லை என்பது உண்மைதான்.. தீர்ப்பு இப்படி வந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை... அவர் புரட்சி ஒன்றும் செய்து விடவில்லை...

உண்மையில் அப்போது என்ன நடந்தது என்ன ?

ஒரு பத்திரிகை, சர்வே எடுத்தது... பெண்கள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்கிறார்களா. என்பது கேள்வி...

குஷ்பூவின் கருத்து கேட்க பட்டது.... அவர் " திருமணத்துக்கு முன் பாலுறவு தவறில்லை.... பெர்டோகள் இதை எதிர்க்க கூடாது... பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவுரை சொல்ல வேண்டும் " என்றார்... இதை சிலர் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்... அனால், அது கருத்து சுதந்திரம்.... ஒன்றும் செய்ய முடியாது...

அனால், இந்த கருத்தை ஏற்காத சிலர் அவருடன் வாதம் செய்தனர்... அப்போது அவர் " தமிழ் பெண்கள் எல்லோரும் திருமணத்துக்கு முன் பலருடன் பாலுறவு கொள்கிறார்கள்... இது இயல்பான ஒன்றாக மாற்றிவிட்டது... இப்போது போய் என்னுடன் வாதம் செய்வது அபத்தமாக இருக்கிறது " என்று சொல்லி விட்டார் ( அல்லது அவர் சொன்னதாக செய்தி பரவியது )

இதுதான், ஒழுக்கமாக வாழும் , சாமான்ய பெண்களை கோப படுத்தியது.... அவர்களுக்கு வழக்கு பற்றியோ, வலை பதிவு பற்றியோ தெரியாது... தங்களை இழிவு படுத்தி விட்டார் என்ற தார்மீக கோபத்துடன் தங்கள் எதிர் வினையை காட்டினர்.... ஒழுக்கமாக வாழும் ஒரு பெண்ணை, நீ பலருடன் திருமத்துக்கு முன் குஜால் செய்தாய் என்று சொன்னால், அவர் செருப்பை திக்குவது நியாயமா என ஒரு பெண்தான் சொல்ல முடியும் ,..அனால், இந்த ஆணாதிக்க சமுகம , அந்த பெண்கள் செய்தது தவறு என முத்திரை குத்தியது/..

பிரச்னை கிளம்புவதை உணர்ந்த அரசியல் கட்சிகள் சில, அந்த பெண்கள் சார்பாக நின்றன,,,, குசு தன தவறை உணர்ந்து அழுதெல்லாம் பேட்டி கொடுத்தார்... குஷ்பூவுடன் லாவணி பாட அந்த பெண்களுக்கு நேரமோ , பணமோ இல்லாததால், அவர்கள் அத்துடன் அந்த பிரச்னையை விட்டு விட்டனர்....

அனால், இதி இறங்கிய கட்சிகள், அப்படி விடுவது மான பிரச்சினை என்ற நிலையில் வழக்கு தொடர்ந்தன... அனால், தமிழ் பெண்களை இழிவு படுத்தி குஷ்பூ பேசியதற்கு ஆதாரம் இல்லாத நிலையில், வழக்கு வெற்றி பெறாது என்பது தெறித்த நிலையில், தீவிர ஆர்வம் யாருக்கும் இல்லை...

எல்லோருக்கும் தெரிந்த, விஷயமான, பாதுகாப்பான உடலுறவு என்பத்தைதான் தான் பேசினேன் ...
.இதில் சட்டப்படி தவறு இல்லை என வழக்கிட்டு குஷ்பூ வெற்றி பெற்று விட்டார்...

இதில் , அவரது வீரமோ, நேர்மையோ எங்கு தெரிகிறது? அவரது புத்தி சாலித்தனம் தான் தெரிகிறது....

அனைவரும், அவர் வெற்றியை கருத்து சுதந்திரத்தின் வெற்றி என கொண்டாடுகின்றனர்....

இப்போது அவர் சொல்லும் கருத்தை யாரும் அப்போது எதிர்க்கவில்லை என்பதை பலர் மறந்து விட்டனர்...

தமிழ் பெண்களை இழிவு படுத்தி அப்போது அவர் பேசியதுதான் ( அல்ல்லது அவர் பேசியதாக வெளியான செய்திதான் ) சாமான்ய பெண்களை கோப படுத்தியது...

குஷ்பூ அந்த கருத்தை காப்பாற்ற போராடி கருத்து சுதந்திரத்தை நிலை நாட்டவும் இல்லை... அல்ல்லது தெளிவான அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்கவும் இல்லை...

சுற்றி வளைத்து ஏதோ பேசி தப்பித்து விட்டார்...

அவருக்கு நீதி கிடைத்து இருக்கலாம்.... அனால், அவரால் இழிவு படுத்தபட்ட, அனால் அவரளவுக்கு பணமோ , வசதிகளோ , ஆதரவோ இல்லாத சாமான்ய தமிழ் பெண்களுக்கு நீதி கிடைத்து இருக்கிறதா ??

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா