Tuesday, December 25, 2018

குழந்தைகளை கனவு காண விடுங்கள் - சோவியத் எழுத்தாளர் பேட்டி

சோவியத் யூனியன் உலக இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மகத்தானது... ஆனால் சோவியத் யூனியன் மறைவுக்குப் பின் அதன் இலக்கியவாதிகள் பலரை நம் சூழலில் பேசுவதில்லை.. இது வருந்தத்தக்கது...

உலக இலக்கிய சூழலில் இவர்களைப் பேசினாலும் தமிழிலும் பேச வேண்டியது அவசியம்..

எழுத்தாளர் வலண்ட்டின் கிரிகோரியேவிச் ரஸ்புடின் அந்த காலத்தில் வழங்கிய பேட்டி ஒன்று... பேட்டி எடுத்தவர். அலக்சாண்டர் அஃபனஸ்யேவ்

தமிழாக்கம் - பிச்சைக்காரன்

----------------------------------------------

ர்ஸ்புட்டீன் : குழந்தைகள் அவர்களுக்கு உரிய குழந்தைக்கதைகளால் சூழ்ந்திருக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.. அவர்களை ஆன்மாவை பாதுகாக்கவும் வளர்க்கவும் இந்த கதைகள் அவசியம். ”உலக அறிவு ” என்று உரிய வயதுக்கு முன்பே தேவையற்றதை மூளையில் திணித்து பிஞ்சில் பழுத்து வெம்பிப்போவது நல்லதன்று’

பேட்டியாளர் - உலக ஞானம் என்பதில் என்ன தவ்று கிரிகோரியேவிச். உலகத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தையின் வாழ்க்கையும் அந்த குழ்ந்தை எடுக்கும் முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே

ர  -இப்படி நினைப்பதில் மிகப்பெரிய பிழை இருக்கிறது... இந்த சிந்தனையை நான் மறுக்கிறேன்.  உலகம் , அதன் கொடுமைகள் , தீமைகள் , நன்மை , மனித பிறவியின் நோக்கம் என அனைத்தும் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பெற்றோர்கள் சின்ன வயதில் இருந்தே குழந்தைகள் மூளையில் பாடங்களை திணிக்கிறார்கள்.. இவற்றால் பயனேதும் இல்லை.. இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள ஒரு வாழ் நாள் முழுக்க தேவைப்படும். குழ்ந்தைப்பருவத்துக்குரிய கற்பனைகள் , கனவுகள் போன்றவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.. இன்றைய சூழலில் குழ்ந்தைக் கதைகளுக்கு இடமே கொடுப்பதில்லை


குழந்தைகள் கதைகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்.. நல்லதுதான்.. ஆனால் இப்படி வளரும் குழந்தைகள் உலகை எதிர்கொள்ள தேவையான மனப்பக்குவத்தை பெற்றிருக்குமா?


ர- உண்மையான குழந்தைக்கதை என்றால் அதில் எல்லாமே இருக்கும்..  புத்திகூர்மை , தாய்ப்பற்று , தேச பக்தி , நன்மை தீமைக்கான போராட்டம் , நன்மை வெல்வதன் அவசியம் என எல்லாமே இருக்கும். குழந்தைக்கதைகள் பொழுது போக்கி மகிழ்வூடுதல்ல... இவை கற்பிக்கின்றன... மரியா ரோடியோவ்னா என்று ஒரு கதை சொல்லும் பெண் கிடைத்திரா விட்டால் புஷ்கின் என்றொரு மாபெரும் கவிஞன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

 நெறிகளை விழுமியங்களை சொல்லித்தர வேண்டாமா

நன்மை எது தீமை எது என அனைவருக்கும் தெரியும்.. சொல்லித்தர வேண்டிய இல்லை... எழுத்தாளன் என்பவன் சமூகத்தை கண்காணிக்கும் போலிஸ்காரன் அல்லன்


( சம காலப்பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல் எழுத்தாளன் விலகி இருக்க வேண்டுமா...     ஆன்மிக வெற்றியும் உலகியல் வெற்றியும் ஒன்றாக அடையக்கூடியதா... எதை இலக்க்கியம் முன் வைக்க வேண்டும்... அடுத்த பதிவில் பார்ப்போம்)

- தொடரும்


Sunday, December 23, 2018

ராயல்ட்டி யாருக்கு... வைரமுத்து காமெடி

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை.. பிரியாணி கொடுத்தும் காசு கொடுத்தும்தான் கூட்டம் திரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது...

இது ஆரோக்கியமான போக்காகும்

இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் தமிழாற்றுப்படை எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கபிலர் குறித்து வைரமுத்து பேசினார்.

நல்ல கூட்டம்.. குடும்ப தலைவிகள் பலரும்கூட , தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர்... மகிழ்ச்சி..

வைரமுத்துவுக்கு பேசியவர்கள் சிறப்பான ஆழமான உரை வழங்கினர்..
(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை உரை. முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை)

வைரமுத்து மிக உன்னிப்பாக இந்த உரைகளை கவனித்து தன் பேச்சில் மேற்கோள் காட்டினார்... இது நல்லதொரு பண்பாகும்.. பலர் மற்றவர் உரைகளை கவனிப்பதில்லை


இருவர் படத்தில் தான் எழுதிய நறுமுகையே பாடலில் வரும் அற்றைத்திங்கள் என்ற வரிக்கு ராயல்ட்டி கொடுப்பதென்றால் , கபிலருக்குதான் கொடுக்க வேண்டும் என யாரையோ மறைமுகமாக கேலி செய்து நகைச்சுவையாக பேசினார்


புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறார் வள்ளுவர்... புலி தற்காலிகமாக தோற்றிருக்கலாம்.. யானையின் சூழ்ச்சியால் தோல்வி.. ஆனால் புலிதான் வெல்லும் என்று வைரமுத்து பஞ்ச் ஆக பேசினார்... ஆனால் சூழ்ச்சியால் புலியை வீழ்த்திய யானையுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த பஞ்ச் வசனம் சரியாக எடுபடவில்லை


அவரது பேச்சு முன்பு தினமணியில் வந்தது... பிறகு தமிழ் ஹிந்துவில் வந்தது... இந்த பேச்சு நக்கீரனில் வருகிறது..

இது வளர்ச்சியா வீழ்ச்சியா என தெரியவில்லை

ஆனால் ஒரு நல்ல தமிழ் விருந்து... எந்த பந்தியில் பரிமாறப்பட்டாலும் நல்லதுதான்..


 

Tuesday, December 11, 2018

இங்க் பேனாவும் இள மாணவனும்இங்க் பேனாவின் இனிமை குறித்து எழுதி இருந்தேன் அல்லவா..,, அதை எழுதும்போது , இன்க் பேனாவெல்லாம் நம் தலைமுறையோடு முடிந்தது என நினைத்தேன்.

ஆனால் அந்த கட்டுரையைப் படித்த பள்ளி மாணவன் ஒருவன் , நல்ல பள்ளிகளில் எல்லாம் இங்க் பேனாவில்தான் எழுதச்சொல்லி பழக்குகிறார்கள் என்ற தகவலைச் சொன்னான்.. அதற்கு காரணம்  ஒரே பேனாவில் எழுதினால்தான் கை எழுத்து கன்சிஸ்டெண்ட் ஆக அழகாக இருக்கும்...

என் கை எழுத்து தலை எழுத்த்து போல இருப்பதற்கு காரணம் , அது போன்ற பள்ளிகளில் படிக்காததுதான்,,   நான் படித்த அரசுப்பள்ளியில் அது போல கண்டிஷன் போட்டால் பாதிபேர் வர மாட்டார்கள்.. அதனால் , தக்காளி , நீ எப்படியாவது எழுதித்தொலை என தண்ணி தெளித்து விட்டு விட்டனர்,, எழுத்தாணியால் எழுதினாலும் சரி... இங்க் பென் என்றாலும் சரி,, உன் பேனா,,உன் சுதந்திரம்

எது எப்படியோ..., நம்மை விட நம் அடுத்த தலைமுறை சிறப்பான நிலையில் இருப்பது எல்லா உயிர்க்கும் இனிது.. அம்மாணவன் சொன்னது மகிழ்ச்சி அளித்தது

இன்க் பேனாதான் நல்லது என நான் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டதை அந்த பள்ளி சுலபமாக சொல்லிக்கொடுத்து விட்டது


இதே போல , ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தின் சாராம்சங்கள் சுலபமாக கிடைக்கின்றன.. நாம் அதை தெரிந்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு தெரிந்து கொள்கிறோம்


Sunday, December 9, 2018

படையப்பாவுக்கு பிறகு ரஜினி படங்கள் - ஓர் அலசல்


படையப்பா திரைப்படம் வெளி வந்து வரலாறு காணா வெற்றி பெற்றதும் ரஜினிக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது... அடுத்து என்ன என்ற யோசனை... வெற்றியின் உச்சத்தை பார்த்தாயிற்று... அதற்கு மேல் என்ன செய்வது என்ற நியாயமான யோசனை... வெற்றி என்பது மட்டும் போதாது..  வேறு ஏதோ ஒன்று கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.. இதனால் 1999ல் வெளிவந்த படையப்பாவுக்கு பின் இரண்டு ஆண்டுகள் ரஜினி படம் ஏதும் வரவில்லை..

2000த்துக்கு பின்புதான் அவர் படங்கள் வரலாயின... அந்த படங்கள் படையப்பாவின் வெற்றியை மிஞ்சினவா..  ஓர் அலசல்

----

2002 - பாபா...

  சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. சினிமா பத்திரிக்கைகள் மட்டும் அல்ல.. அரசியல் , ஆன்மிகம் , கில்மா , குடும்பம் , விளையாட்டு என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அதில் பாபா குறித்து ஏதேனும் செய்தி வந்து விடும்... 

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை...  ஆனால் பாபா என்ற மகான் குறித்து பரவலாக மக்கள் அறிந்தார்கள்... அப்போதையை எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர இன்றும் பார்க்கும்படி இருக்கிறது... வியாபார ரீதியாக பண இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்...  ஆனால் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் படம்


2005 - சந்திரமுகி

அவ்வளவுதான் ரஜினி என பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்தே அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகளின்போது சிலர் சொல்வதும் ரஜினி மீண்டு எழுவதும் வரலாறு...  என்னைப்பத்தி ஆயிரம் பேரு , என்னென்ன சொன்னாங்க.. இப்பென்ன செய்வாங்க.. என ரஜினிக்காக கண்ணதாசன் எழுதி இருப்பார்... அந்த வரலாற்று தருணங்களை பலர் படித்திருப்பார்கள்.. நேரில் அனுபவித்து இருக்க மாட்டார்கள்...

2005ல் வர்லாறு மீண்டும் படைக்கப்பட்டது... ரஜினி அவ்வளவுதான் என்று சொல்லப்பட்ட சூழலில் 2005ல் சந்திரமுகி வெளியானது.. அதே தினத்தன்று கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ்.. விஜயின் சச்சின்.. வெளியாகின.. அஜித்தின் வரலாறு ( காட் ஃபாதர் ) படமும் அதே தினத்தன்று திட்டமிடப்பட்டு பிறகு ஒத்தி வைக்கப்பட்டது

ஆக , ஒரு உச்சகட்ட மோதல் அன்று நிகழ்ந்தது....  ஆனந்த விகடன் விமர்சனத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் , சச்சின் ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்தான் சந்திரமுகிக்கு கொடுத்தனர்

ஆனால் மக்கள் சந்திரமுகி படத்துக்குதான் முதல் இடம் கொடுத்தனர்.. முதல் இடம் மட்டும் அல்ல...முதல் மூன்று இடங்களையுமே சந்திரமுகி பெற்றது.. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே முதலிடம் என நிரூபித்த சந்திரமுகி ரஜினிக்கு பெருமை சேர்த்த படம்

2007 , சிவாஜி

ஜெண்டில்மேன் , இந்தியன் ,  முதல்வன் உட்பட பல பட்ங்களை ரஜினியை மனதில் வைத்தே ஷ்ங்கர் எழுதினாலும் அந்த காம்பினேஷன் சில காரணங்களால் உருப்பெறவில்லை... சிவாஜி படத்தில் இந்த ஷங்கர- ரஜினி காம்பினேஷன் உருவானது சிவாஜி த பாஸ் என்ற விளம்பரமே அதிரடியாக இருந்தது...   ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த வெற்றிப்படம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான படம்

2008  குசேலன்

ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம் என்றாலும் ரஜினி படம் என்றே அறியப்பட்டது.. எனவே ரஜினி படமாகவும் இல்லாமல் , ரஜினி பொறுப்பேற்கும் குழப்பமான சூழல் உருவானது

ரஜினிக்கு பெருமை சேர்க்காத படம்.. தவிர்த்திருக்கலாம்

2010  எந்திரன்

ஒரு டிரண்ட் செட்டர்...    அதிரடி வெற்றியையும் மீறி ஒரு டிரண்ட் செட்டர் என்ற வகையில் பெருமை சேர்க்கும் படம்.. இதன் வெற்றி அடுத்த பாகத்துக்கும் வழி வகுத்தது.. 8 ஆண்டுகள் கழித்து அடுத்த பாகம் வந்தாலும் இந்த படத்தை நினைவு வைத்து ரசிகர்கள் இதன் ரெஃபர்னஸ் காட்சிகளை ரசித்ததே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று

2014 கோச்சடையான்

இனி வெற்றி மட்டும் வேண்டாம்.. புதிதாக முயல்வோம் என நினைத்து அனிமேஷன் டெக்னாலஜியை முயன்ற படம் இது... அந்த முயற்சி சிறப்பாக அமையவில்லை... முயலை குறி வைத்து வெல்வதை விட யானையை குறி வைத்து குறி தவறுவது மேல் என்பதைபோல் நல்ல முயற்சி என்பதில் பெருமைப்படலாம்

2014    லிங்கா

அவசரமாக எடுக்கப்பட்ட படம்...  தவிர்த்திருக்க வேண்டிய படம்.. எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை...


2016 கபாலி

வழக்கமான மசலாக்களில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய பாணியில் எடுக்கப்பட அழகான படம்.. நல்ல வெற்றி... ஜானி , முள்ளும் மலரும் பட வரிசையில் வைக்கத்தக்க பெருமைப்படத்தக்க படம்

2017  காலா

தேவர் மகன் என்றெல்லாம் ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்கள் மத்தியில் முதன் முறையாக நம் மண் குறித்த நம் மக்கள் பெருமை பேசிய படம்.. அதுவும் சொந்தப்படம்...  என்றென்றும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம்

2018  2.0

வயதாகி விடட்து என்பது மட்டுமே இப்போதெல்லாம் ரஜினி மீது வைக்க்கப்படும் “ குற்றச்சாட்டு “ எல்லோருக்கும் வயதாகும்.. ஓய்வெடுப்பார்கள்..ஆனால் இந்த வயதிலும் இப்படி ஒரு ஹிட்.. அதுவும் உலக அளவில் ஒரு ஹிட்,,,, நம்ப முடியாத ஓர் அற்புதம்

மொத்ததில் நடிப்பு வாழ்வின் இந்த கால கட்டத்தில் தொடர்ந்து நல்ல படங்களையே ( இரண்டு மட்டும் விதிவிலக்குகள்)  வெற்றி படங்களையே தந்து வருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான் என்று தோன்றுகிறது 


Friday, December 7, 2018

கன்னட மொழிச் சித்தர் -பசவண்ணா


 நமது சித்தர்கள் , நாயன்மார்கள் பாடல்கள் போல கன்னட மொழியில் பாடல்கள் உண்டு.. கச்சேரிகளில் அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்

குறிப்பாக பசவண்ணாவின் பாடல்கள் வீரியமிக்கவை.. இவர் தீவிர சிவ பக்தர்..  முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்.. சாதி ,மத , பால் , மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவர்..

வெகு சுருக்கமாகவே இவர் பாடல்கள் இருக்கும்.. ஆனால் கருத்தாழம் மிக்கவை

சில சாம்பிள்கள்

----------------

 நலம் விசாரிப்பதால் உன்

பணம் பறந்து விடப்போகிறதா என்ன?

அன்பாக ஒருவனை அமரச்சொன்னால்

உன் இல்லம் இடியப்போகிறதா?

தகுந்த பதில் அளிப்பதான் உன்
தலை நொறுங்கப்போகிறதா?

யாருக்கும் எதையும் கொடுக்காவிட்டாலும்
அன்பாக இருப்பதில் என்ன கஷ்டம்?

அன்பற்ற நெஞ்சை இறைவன் ஏற்பது கஷ்டம்

-----------------------

பகட்டான ஆலய்ங்களை
பணக்காரன் கட்டக்கூடும்

ஏழை நான் என் செய்வேன்?

கால்களை தூண்களாக்கி

என் உடலையே கோயிலாக்குவேன்

என் தலை ஆகட்டும் தங்க கோபுரமாய்

என் இறைவா.. நீ அறிவாய்

மண்ணில் நிற்பது அழியும்

மண்ணில் நகர்வது நிலைக்கும்

------------------------------


வீடு ஒன்றைக் கண்டேன்

புழுதி படிந்திருந்தது

களைகளும் குப்பைகளும் சூழ்ந்திருந்தன

உரிமையாளரால் கைவிடப்பட்ட
உயிரற்ற வீடு போல என எண்ணிக்கொண்டேன்

மனிதர்கள் பலரை காண்கிறேன்

உடல் முழுக்க பொய்கள்

மனம் முழுக்க அசுத்தம்

கைவிடப்பட்ட உயிரற்ற உடல்கள் போலும்

-------------------


மண் இன்றி

குடம் இல்லை

பொன் இன்றி

நகை இல்லை

குரு இன்றி

உயர்வில்லை

____________________-


Thursday, December 6, 2018

பட்சிராஜனாக கமல் நடித்திருந்தால் - 2.0 சில If....


2.0 உலகளாவிய வெற்றியை பெற்று ஓடினாலும் தமிழ் ரசிகர்களுக்கு  கிடைத்துள்ள இந்த மாபெரும் விருந்து மறக்க முடியாது... திரையரங்களில் குழந்தைகள் முதியோர் இளைஞர் என அனைத்து தரப்பினரையும் பார்க்க முடிகிறது..

 அக்‌ஷய் குமாருக்கும் இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.. கமலுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளை அவர் அள்ளிக்குவித்து வருகிறார்...


கமல் நடித்திருந்தால்...  இன்னும் வசனங்கள் அதிகமாக இருந்தால்.. இளையராஜா இசை அமைத்திருந்தால்..

பார்ப்போமோ

1 கமல் நடித்திருந்தால்,,,

கண்டிப்பாக தமிழ் நாட்டில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கும்... ரஜினிக்கும் கமலுக்கும் மிகப்பெரிய நடிப்பு போட்டி நடந்திருக்கும்.. ஆனால் படம் இந்த அளவு உலகளாவிய வெற்றியை பெற்றிருக்க முடியாது.. தமிழ் நடிகர்களின் படம் என ஒதுக்கி இருப்பார்கள்.. தமிழகத்தில் மட்டும் ஓடி இருக்கும்.. படத்தின் பட்ஜெட்டுக்கு அது போதாது...


2 இளையராஜா இசை அமைத்திருந்தால்...

பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.. என்னதான் அவர் பாடல் இனிமையாக இருந்தாலும் படத்தின் வேகம் மட்டுப்பட்டிருக்கும்


3 வசனங்கள் கூடுதலாக இருந்திருந்தால்...


சினிமா என்பது காட்சி ஊடகம் என்பது ஆணித்தரமாக இந்த படத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது...   ஆரம்ப காலங்களில் பாடல்களுக்காக படங்கள் ஓடின.. பிறகு வசனங்களுக்காக ஓடின.. இதை உடைத்து காட்சிகளுக்காக ஓடும் முதல் சினிமா என்ற வரலாறை 2.0 படைத்துள்ளது... வசனங்கள் கூடுதலாக இருந்திருந்தால் இந்த பெருமை கிடைத்திராது

அளவான வலுவான வசனங்கள் படத்தின் பலங்களில் ஒன்று

Sunday, December 2, 2018

மண்டூகங்கள் - மதியிலிகள் - சிட்டுக்குருவிகள் - செல்போன்கள்


 ஒரு புளிய மரத்தின் கதை நூலைப் படித்து விட்டு , புளிய மரத்தைப் பற்றி நூல் சரியாக விளக்கவில்லையே என கேட்கும் மக்கள் நிரம்பிய தேசம் இது

புளிய மரம் என எதை குறிப்பால் உணர்த்துகிறார் என நூலாசிரியர் விளக்கினால்தான் புரியும்.. 

நூல்களுக்கு விளக்கவுரை எழுதுவது போல இப்போது சினிமாவுக்கும் விளக்கவுரை தேவைப்படும் காலம் வந்து விட்டது...  ஒரு சராசரி ரசிகனுக்கு எந்த சிக்கல்களும் இல்லை.. உற்சாகமாக படத்தை ரசிக்கிறான்

ஆனால் சில இலக்கிய  பத்திரிக்கைகளுக்குத்தான் விளக்கம் தேவைப்படுகிறது

2.0 படத்தில் , பறவை ஆர்வலர் ஒருவர் இருக்கிறார்..செல்போன்களால் பறவை அழிகிறது என நினைத்து அதே செல்போன்களை ஆயுதமாக்கி பழி வாங்குகிறார் என்பது கதை..   செல்போன்களால் குருவி அழிகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது இந்த ஆர்வலரின் எதிர் தரப்பின் கருத்து... இந்த இருவரும் மோதுகின்றனர் என்பதுதான் கதை

செல்போன்களால் குருவி அழிவதாக படம் சொல்கிறது என பலர் ஆய்வுக்கட்டுரை எழுகின்றனர்... உண்மையில் படம் அப்படி சொல்லவில்லை.. அதில் வரும் ஒரு கேரக்டர் சொல்கிறது.. அவ்வளவுதான்


 நுகர்வு வெறி தவறு என அந்த கேரக்டர் நினைக்கிறது..அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை

   ஒரு சாதாரண விஷ்யத்தை புரிந்து கொள்ள இவர்கள் எல்லாம் பத்திரிக்கை ஆசியர்களாக இருப்பது விந்தைதான்

  தினமலர் , இந்து போன்ற பல இதழ்கள் நடு நிலைமையாக அழகாக எழுதியுள்ளர்.. ஒரு சில இலக்கிய இதழாசிரியர்கள்தான் விபரமின்றி குப்பையாக எழுதுகின்றனர்


Friday, November 30, 2018

ரஜினி + ஷங்கர் + ஜெயமோகன் = இலக்கிய தரத்தில் ஒரு சினிமா


டெக்னாலஜி வளர்ச்சி  என்பது ,மனிதனின் அதிமுக்கிய சாதனைகளுள் ஒன்று.. ஆனால் மனிதனின் இந்த அறிவு , வளர்ச்சிக்கு மட்டும் அல்ல. சக மனித உயிராகிய நியாண்டர்தால் மனிதன் போல பல உயிரிகளின் அழிவுக்கும் காரணமாகி உள்ளது..

எனவே டெக்னாலஜி வளர்ச்சியை கவனமாக கையாள வேண்டும் என்பது நியாயமான எண்ணம்.

ஆனால் நல்ல விஷ்யமான டெக்னாலஜி வளர்ச்சி எப்படி தீமைக்கு காரணமாகிறதோ அதே போல , டெக்னாலஜி வளர்ச்சியில் கவனம் தேவை என்ற நியாயமான எண்ணமும்கூட தீமைக்கு காரணமாகலாம்.. எத்தனையோ நல்ல போராட்டங்கள் திசை மாறி போவதை பார்த்திருக்க்க்றோம் அல்லவா.

 நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டத்தைத்தான் சினிமாக்களில் பார்த்திருப்போம்..  டெக்னாலஜி வளர்ச்சி என்ற நன்மைக்கும் , அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற நன்மைக்கும் இடையேயான போராட்டம்தான் 2.0

வழக்கமாக இலக்கியங்களில்தான் இப்படிப்பட்ட அறச்சிக்கல்களை பார்த்திருப்போம்.. முதன் முறையாக சினிமாவில் அறச்சிக்கலை பார்க்கிறோம்

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூலிழைதான் வித்தியாசம்.. இபப்டி ஒரு நடு நிலை பார்வையுடன் நூல்கள் படித்திருப்போம்...  துரியோதனன் வில்லன் தான்..  ஆனால் யாரோ ஒரு தேரோட்டி மகனுக்கு அரசாட்சி அளித்தபோதோ , என்னதான் பீஷ்மரை சூழ்ச்சியால் வீழ்த்தினீர்கள் என்றாலும் அவருக்கு மரியாதை செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று அறிவித்தபோதோ அவனை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்க முடியும்


  நன்மையே உருவான ஹீரோ...தீமையே உருவான வில்லன் என்றுதான் சினிமாவில் பார்த்திருக்கிறோம்

ஏதாவது பிரச்சனை செய்தால் , உன் உயிருக்கு சமமான புறாவை கொன்று விடுவேன் என மிரட்டும் ஹீரோவும் அதற்கு கண்கலங்கி அஞ்சும் இளகிய மனம் கொண்ட வில்லனும் ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு இதுவே முதல் முறை

 வில்லனுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் என்பதும் நாம் பார்த்திராத ஒன்று

 படம் எடுக்கப்பட்ட விதம் இந்தியாவுக்கு புதிது..


 • பின் வாங்குவது என்பது என் சாஃப்ட்வேரில் கிடையாது
 • வாங்கடா செல்ஃபி பிள்ளைங்களா
 • நம்பர் ஒன் நம்பர் டூ இதெல்லாம் குழந்தை விளையாட்டு
 • பசிக்குதே என்பதற்காக கையை வெட்டி சாப்பிட முடியாது
 • குறைந்த பட்சம் பறவைகளுக்கு தண்ணி வைங்க
 • மெசேஜ் ஃபார்வார்ட் பண்றது என்பது சமூக சேவை அல்ல
என பல இடங்களில் கைதட்டல்கள்

 • வடை போச்சே
 • ( போனில் முத்தம் கொடுக்க முற்படும்போது போன் பறந்து விடுகிறது ) இதுதான் ஃபிளையிங் கிஸ்ஸா?
 • காதலுக்கு மரியாதை யா?
 • நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை
 • ( unknowncallar என மெசேஜ் வருவதைப்பார்க்கும் அமைச்சர் ) யாருயா அது உன்னி கிருஷ்ணன்?
இப்படி படம் முழுக்க மெலிதான நகைச்சுவை... ரஜினி , அக்சய் , எமி ஜாக்சன் மட்டும் அல்ல .. மயில்சாமி  கலாபவன் சஜான் உட்பட அனைவருமே ஷங்கரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளனர்

அமைச்சர் பாத்திரத்துக்கு கலாபவன் தான் வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருந்து , அவர் கால்ஷீட்டுக்கு காத்திருந்து அவர் காட்சிகளை எடுத்தார்.. 

3- டி வெகு வெகு சிறப்பு

படம் முடிந்து 3 டிக்காகவே ஒரு பாடல் காட்சி என்பது நாம் பார்த்திராதது.. அற்புதம்... பாடல், பின்னணி என அனைத்திலுமே ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் இசைப்புயல் .


  பட்சிராஜன் என்ற பெயர் முதல் ஆன்மிக விளக்கங்கள் வரை ஜெயமோகனின் இருப்பு தெரிந்து கொண்டே இருக்கிறது/ ..இலக்கியம் சினிமாவுடன் கைகுலுக்குவதால் கிடைக்கும் நன்மைக்கு எடுத்துக்காட்டாக படம் இருக்கிறது

பறவைகளை , இயற்கையை நாம் அழித்துக்கொண்டே சென்றால் , ஒரு கட்டத்தில் இயற்கை கோபம் அடைந்து நம்மை திரும்ப தாக்க ஆரம்பிக்கும் என்பதை வெகு அழகாக குறியீட்டுரீதியாக காட்சிப்படுத்தி இருப்பது இலக்கியத்தரத்துக்கு ஓர் உதாரணம்

வரலாற்றில் இடம் பெறும் படம்.. Monday, November 12, 2018

சாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும்சாய் பாபா , காஞ்சிப் பெரியவர் ,  விசிறி சாமியார் , ஓஷோ , ஜேகே என ஒரே கால கட்டத்தில் பல்வேறு ஆன்மிக ஆளுமைகள் பிரபலமாக இருந்தது ஒரு வரலாற்று அபூர்வம்

இதில்  புட்டபர்த்தி சாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும் பக்தி மார்க்கத்துக்கு இடம் கொடுத்த வகையில் தனித்து நிற்க கூடியவர்கள்

 இருவருமே உயரிய ஆன்மிக தத்துவங்களைப் பேசியவர்கள் .. பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்கள்

ஆனால் இருவருக்கும் வேறுபாடுகளும் ஏராளம்

தன்னை சன்னியாசியாகவும் மடத்தின் தலைவராகவும் சொல்லிக்கொண்டவர் பெரியவா

ஒரு பாவனைக்காககூட பிற தெய்வங்களை வணங்காமல் , தன்னையே கடவுள் என முன் வைத்தவர் சாய் பாபா

அரசினால் செய்ய முடியாத தண்ணீர் திட்டங்கள்  , கல்விப் பணிகள் , மருத்துவ சேவைகள் என ஏராளமான சமூக சேவைகள் செய்தாலும்கூட , அதை எல்லாம் தாண்டி சாய் பாபா தன்னை கடவுளாகவே  , அவதாரமாகவே முன் வைத்தார்


பெரியவர் தன்னை கடவுள் என சொல்லா விட்டாலும் , அவரிடமும் தெய்வீக ஆற்றல் வெளிப்பட்டதாக தகவல்கள் உண்டு


எம் எஸ் சுப்புலட்சுமி , ரா கணபதி என இருவரையுமே தெய்வமாக போற்றியவர்களும் ஏராளம்


சரி,, சாய்பாபாவும் மகா பெரியவரும் ஒருவரை ஒருவர் எப்படி மதிப்பிட்டனர்?


தனக்காக எதையும் செய்ய தயாராக இருந்த , தன்னுடனேயே வசிக்க விரும்பிய ரா கணபதியை , இந்து மதத்தின் ஆவணமாக திகழவிருக்கும் “ தெய்வத்தின் குரல் “ நூலை எழுதுவதுதான் முக்கியம்... காஞ்சிப்பெரியவர் கூடவே இருந்து அதை செய்து முடி..என் ஆசிகள் என கூறி காஞ்சிக்கு அனுப்பி வைத்தவர் பாபா;.. அதிகாரபூர்வமாக வெளிப்படையாக காஞ்சிப்பெரியவரின் மேன்மையை சாய் பாபா ஏற்றுக்கொண்டுள்ளார்

ஆனால் காஞ்சிப்பெரியவர் நிலை வேறு... தன் பக்தர்கள் சிலரை சாய் பாபாவிடம் அனுப்பி உங்கள் குரு அவர்தான் என கூறினாலும் , அவை எல்லாம் தனிப்பட்ட கருத்துகளாகவே இருந்தன.. ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக சாய் பாபாவின் மேன்மையை இவர் சொன்னதில்லை

அதற்கு காரணங்கள் உண்டு

பாரம்பர்யத்தை கறாராக கடைபிடிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர் மகா பெரியவர். சாய் பாபாவோ அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்...  ஜாதி வேற்றுமை , மத வேற்றுமை இன்றி செயல்பட்ட பாபாவை , ஆச்சாரசீலரான பெரியவர் அதிகாரபூர்வமாக ஏற்க இயலாது

அதேபோல அவதாரம் என்பதை தனிப்பட்ட முறையில் பெரியவா ஏற்கலாம்.. ஆனால் அவரது மடத்தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு எப்படி ஏற்க இயலாது


இது போன்ற காரணங்களால் இருவரும் ஒன்றிணைவது சாத்தியமின்றி போனாலும் இருவரையுமே வணங்கியவர்கள் , இருவருக்குமே நெருக்கமானவர்கள் என இருந்தவர்கள் பலர்

  என் பார்வையில் இருவரும் எப்படி ?

  மொழி ஆளுமை , சொற் சிலம்பம்  , சொற்பொழிவு போன்றவற்றில் பாபாவுக்கு நிகர் பாபாதான்

  இந்திய ஞான மரபு , பாரம்பரிய தொடர்ச்சியை நிலை நாட்டுதல் போன்றவற்றில் பெரியவா , பெரியவாதான்


பாபாவிடம் ஜாதி வேற்றுமை கிடையாது...  பெரியவரிடம்ஜாதி துவேஷம் இல்லை என்றாலும் ஜாதி வேற்றுமை உண்டு


    இருவருமே ஞான விளக்குகள் என்றாலும் அணுகு முறைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் உண்டு

அந்த வித்தியாசங்களையும் மீறி இருவரையும் ரசிப்பவர்களும் உண்டு.. இருவரையுமே வெறுப்பவர்களும் உண்டுSunday, November 11, 2018

சூப்பர் ஸ்டாரை பேட்டி கண்ட சூப்பர் ஸ்டார்- ரஜினி அசத்தல்


 அந்த காலத்தில் அரசு தொலைக்காட்சிகளும் , அரசு வானொலிகளும்தான் கோலோச்சி வந்தன...

   அவர்கள் சிறப்பான சேவை செய்து வந்தாலும் , அவர்கள் வரம்புக்குட்பட்ட முறையிதான் பேச முடியும் என்பதால் இயல்புத்தன்மை குறைவாக இருப்பதாக சிலர் கருதினர்

அந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சிகள் பிரபலமாகின.. வாய்ப்புகள் தேடிக்கொண்டிந்த பல திறமைசாலிகள் வெளிச்சத்துக்கு வந்தனர், அவர்களுள் முக்கியமானவர் அர்ச்சனா.. சன் டிவியில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தன..

அதன்  பின்வணிகமயமாகி விட்ட ஊடக சூழலில் தனித்துவம் மிக்கவர்கள் அரிதாகிப்போனார்கள்.. ஆங்கிலம் கலந்து பேசுவது , மேக் அப் , ஈர்ப்பான ஆடைகள் போன்றவற்றையே பலர் நம்ப ஆரம்பித்தனர்

இந்த சூழலில் ரஜினியை அர்ச்சனா பேட்டி காண்கிறார் என்பது மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியது,, சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் தொகாவில் அர்ச்சனா சூப்பர் ஸ்டார்தான்.. சூப்பர்ஸ்டாரை , சூப்பர் ஸ்டார் பேட்டி எடுப்பது அரிதான் ஒரு நிகழ்வு என்பதால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இது இருந்தது

 நிகழ்ச்சி , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும்.. பேட்டி எடுப்பவர் , கொடுப்பவர் என இருவருமே இயல்பாகவும் மனதில் இருந்தும் பேசினர்

   மாறுவேடத்தில் சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் தலைவா என அழைத்ததை கேட்டு பதறி விட்டேன்... எப்படி கண்டு பிடித்தார் என குழப்பமாக இருந்தது.. கடைசியில் பார்த்தால் அவர் என்னை அழைக்கவில்லை ..யாரோ ஒருவரை தலைவா என அழைத்திருக்கார்.. ஹாஹா.. என வெகு இயல்பாக பேசியது ரஜினிக்கே உரித்தான எளிமை


எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்திருந்தால் நான் முன்னுக்கு வந்திருக்க முடியாது,,, கமலுடன் முதன் முறை காரில் பயணித்தபோது அதை நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் என்றெல்லாம் வெகு தன்னடக்கமாக பேசினார்

கனவில் இருக்கும் சந்தோஷம்  நிஜத்தில் இருக்காது.. கல்யாணம் உட்பட.. ஹாஹா ஹா.. என ஒரு சராசரி மனிதர்களில் ஒருவராக தன்னைக்காட்டிக்கொண்டார்
ஆனால் என்னதான் அவர் சராசரி மனிதனாக தன்னைக்காட்டிக்கொண்டாலும் அறிவார்ந்த நூல்களைப் படிக்கும் உணர்வே பேட்டியில் வெளிப்பட்டது

அவுட்லையர்ஸ் என்றொரு புத்தகம்... மனிதனின் வெற்றிக்கு அவன் பிறந்த சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் காரணிகளாக இருக்கின்றன என்பது புத்தகத்தின் செய்தி

அதை ரஜினி சுட்டிக்காட்டினார்.. வெற்றி பெற ஆரம்பித்த ஆரம்ப கால கட்டத்தில் தான் ஒரு தனி பிறவியோ என்றெல்லாம் நினைத்ததாகவும் , பிறகுதான் எல்லாம் ஒரு காலம் என்ற தெளிவு ஏற்பட்டதாகவும் கூறியது வேறு லெவல்

அதே போல எளிமை குறித்த பார்வையும் அபாரம்...  எளிமை என்பது மனம் சார்ந்தது...  சில நேரங்களில் சில சூழலில் ஏஸி என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும்.. ஏஸி என்பது ஆடம்பரமாக இருப்பதும் உண்டு.. எனவே ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் வைத்து எளிமையை வரையறுத்து விட முடியாது என்ற பார்வை ஜே கிருஷ்ணமூர்த்தியை ஒத்திருந்தது


ஃபடாபட் ஜெயலட்சுமியை ராதிகாவை குறிப்பிட்டு கூறியது சிறப்பாக இருந்தது

 அர்ச்சனாவின் துணைக்கேள்விகளும் எதிர் வினைகளும் அழகு... 

மொத்தத்தில் வெகு சிறப்பான நிகழ்ச்சி
Saturday, November 10, 2018

ஓர் எழுத்தில் மாறும் அர்த்தம் - இளையராஜா குறித்து மேத்தா ருசிகரம்


கவிதை உலகில் மு மேத்தாவுக்கு என தனி இடம் உண்டு.. புதுக்கவிதைகளுக்கு என தனி இடம் உருவாக்கி கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்

அதே நேரத்தில் அற்புதமான திரை இசை பாடல்களும் தந்தவர்


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோபடிச்சவங்க விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
படிக்காதவன் விடுற பட்டமும்
காகிதம் தான் காகிதம் தான்
புத்தகம் உள்ளது பையில அங்க
வித்தைகள் உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுஷன தாண்டாகண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கல கலவென துள்ளி குதிக்கும் சின்னஞ்சிறு அலையே
என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தன்னால் அடங்கிவிடும்
உங்களைப்போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு

என பல அற்புதமான வரிகள் தந்தவர் இவர்

..
--------------------------

இளையராஜாவின் செல்லப்பிள்ளை இவர்,,, அவருடனான சில சுவையான நிகழ்வுகள்

ஆகாய கங்கை படத்தில் இளைய ராஜா இசையில் எழுதினார்..


தேனருவியில் நனைந்திடும் மலரோ,,, என பாடல் ஆரம்பிக்கும்... 
அந்த பாடலில் இளையராஜா ஒரு மாற்றம் செய்தார்

 நீ நிலவோ... ஏன் தொலைவோ என்பது இவர் எழுதிய வரி,

 நீ என்ன நிலவோ... எட்ட முடியா தொலைவில் இருக்கின்றனயே என பொருள் தருகிறது,,, கவித்துவமாக இருக்கிறது...   ஒரு கவிதையாக சிறப்பாக இருக்கிறது...  ஒரு தனி கவிதை என்றால் மிகச்சிறப்பாக இருக்கும்

ஆனால் இது பாடல்.. அதுவும் பிரிவைப்பற்றிய பாடல்...   நிலவின் குணாதிசங்களை விட பிரிவைச் சொல்வதுதான் முக்கியம்

எனவே இதை இப்படி மாற்றினார் ராஜா... 

ஏன் தொலைவோ,.... நீ நிலவோ

ஏன் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறாய்?  நீ குளிர் பொருந்திய இனிமையான நிலவு என்பதால் இந்த தொலைவோ,,,

நச் என பொருந்துகிறது அல்லவா


இதே போல இன்னொரு சம்பவம்

சிறையில் மோகன் இருக்கிறார்.. ரேவதி வெளியில் இருந்து பாடுகிறார் , 

 நிலவைப்பார்த்தபடி மோகனுக்கும் பொருந்தும்படி பாடுகிறார்

பாடு நிலாவே.. தேன் கவிதை,, பூ மலர    என்பது அவர் எழுதிய வரி

இளையராஜா கேட்டார்,.. நல்ல வரிதான்.. ஆனால் சிறையில் இருக்கும் மோகன் இதை எப்படி பாட முடியும்,, அவருக்கு நிலா தெரியாதே 

ஒரே ஒரு எழுத்து மாற்றம் இந்த சந்தேகத்தை போக்கியது

இப்படி மாற்றப்பட்டது

பாடும் நிலாவே.. தேன் கவிதை... பூ மலரே

ஹீரோயின் பாடும்போது , பூ மலர்வதற்காக பாடுவாய் நிலவே என்ற அர்த்தம் வருகிறது

ஹீரோ பாடும்போது , ஹீரோயினை நிலவு என்றும் மலர் என்றும் வர்ணிப்பது போல வருகிறது’

தமிழ் அழகு,.. இசை இனிது.... மு மேத்தா இளையராஜா போன்றோரின் திறமை இனிது


எம் ஜி ஆர் திரைப்படங்களும் அரசியலும்


சினிமா மூலம் எம் ஜி ஆர் வளர்ந்ததாக நினைத்து பலர் அரசியல் படங்கள் எடுக்கின்றனர்..

ஆனால் இந்த ஃபார்முலா ஒரு போதும் வெற்றி அடைந்ததில்லை.. எம் ஜி ஆரே கூட , தன் படங்களில் அரசியல் விளக்க படங்களாக எடுத்தது கிடையாது..

தன் படங்கள் நன்றாக இருக்க வேண்டும் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது.. அவர் முதல்வராக ஆசைப்பட்டு இருந்தால் , அண்ணா மறைவுக்கு பின் எளிதாக அதை அடைந்திருக்கலாம்.. அவருக்கு சினிமாதான் முக்கியமாக இருந்தது

அவரது ரசிகர்களுக்கு திமுக தொல்லை கொடுக்க ஆரம்பித்தபோது ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கிதான் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

தேர்தலில் வென்ற பின்பும் கூட , படப்பிடிப்பை முடித்த பின்புதான் முதல்வராக பதவியேற்றார்...

முதல்வரான பின்பும்கூட ஒரு படம் நடக்க பேச்சு நடந்தது... விளம்பரங்களும் வெளியாகின.. இசை : இளைய ராஜா...

அந்த அளவுக்கு சினிமாவை காதலித்தார் அவர்

இப்போது பலர் சினிமாவை , அரசியலுக்கான ஒரு விசிட்டிங் கார்டாக நினைக்கின்றனர்

அப்படி நினைத்து எடுக்கப்படும் படங்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை... இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளனFriday, November 9, 2018

குடியின் கேடு- கண்ணதாசன் வாழ்வில் ருசிகரம்


மாபெரும் கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது.. பெரிய தலைவர்கள் , வி ஐ பிகள்,. திரை உலக பிரபலங்கள் குழுமி இருந்தனர்

ஆனால் நிகழ்ச்சி தொடங்கவில்லை.. கண்ணதாசன் வந்துதான் துவக்க உரை ஆற்ற வேண்டும் என்பதால் காத்திருந்தனர்..

அனைவருக்கும் டென்ஷன்   கோபம்

இரண்டு மணி நேரங்கள் தாமதமாக அவர் வந்தார்

வந்ததும் மன்னிப்பு கேட்டார்

- நண்பர்கள்.. இவ்வளை மக்களை  பெரியோர்களை காத்திருக்க செய்தது மாபெரும் தவறு .. மன்னித்து விடுங்கள்.. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காரணம் குடிதான்.. நேற்று இரவு முழுக்க குடி.. அதனால்தான் தாமதம்.. மதுவின் தீமைக்க்கு நானே ஓர் உதாரணம் என்பதை கண்கூடாக பார்த்து விட்டீர்கள்

தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்... நானும் குடிக்க மாட்டேன் என்றார்

அனைவரும் கைதட்டினர்

- ஆனால் ஒன்று.. இப்போது நான் துவக்க உரை ஆற்ற வேண்டும்.. கொஞ்சம் சரக்கு உள்ளே போனால்தான் என்னால் பேச முடியும்.. தயவு செய்து இன்று மட்டும் குடித்துக் கொள்கிறேன்.. நாளை முதல் குடிக்க மாட்டேன் என்றார்

கூட்டத்தில் பயங்கர சிரிப்பு கைதட்டல்


அதன் பின் லேசாக சரக்கு அடித்து விட்டு , அதன் பின் சிறப்பாக பேசினார்

பிரச்சினைகளுக்கு தீர்வு யாதென கேட்டேன் - பிரசுரம் ஆகாத கண்ணதாசன் கவிதை கேவலமான சாலைகளுக்கு

தீர்வு யாதெனக் கேட்டேன்

ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு

அபராதம் போடுவோம் என்றார்

அரசாங்க பிரதிநிதி

ஆலைகள் , புகை என சுற்றுச்சூழல்

சீர்கேடுகளுக்கு தீர்வு என்ன என்றேன்

தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும்

குழந்தைகளை சிறை வைப்போம் என்றார் அரசு அதிகாரி

வேலை இல்லா திண்டாடத்துக்கு தீர்வு கேட்டேன்

வேலை இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்க

யோசிக்கிறோம் என்றார் அவர்


பிளாஸ்டிக் குப்பை மலைகளை

எப்படி சமாளிப்பீர்கள் என கேட்டேன்

பிளாஸ்டிக் பையில் பொருட்கள் வாங்க

கூடுதல் கட்டணத்தை உங்கள் மீது திணிப்போம் என்றார் அவர்

தக்காளி... எல்லா பிரச்சனைகளுக்கு பலி ஆடுகள் நாங்கள் என்றால்

அரசு என ஒன்று எதற்கு என கேட்டேன்

அரசாங்க பிரதி நிதி அருகே வந்து ரகசியமாய் சொன்னார்..


அந்த பிரச்சனைகளை உருவக்குவதற்கு ஆள் வேண்டாமா

அவற்றை உருவாக்குவதே நாங்கள்தானே 

Thursday, November 8, 2018

பேனா - சில சிந்தனைகள்


  ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்..  ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கினார்..    நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்ப்போது அவரிடம் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டார்.. பேனா கொடுங்க என அவர் அருகில் இருந்தவர்களிடம் கை நீட்டினார்..  யாரிடமும் இல்லை.. பேனா என்பதே சற்று வழக்கொழிந்த சாதனமாகி விட்டது என்பதால் பலரிடம் இல்லை...

எனது இங்க் பேனாவை எடுத்து கொடுத்தேன்... எனக்கு ஒரு நண்பர் பரிசளித்த அழகான இங்க் பேனா அது...  அதில் கையொப்பம் இட்டார்.. அந்த பேனா குறித்த விபரங்கள் கேட்டார்..சொன்னேன்..

அத்தனை பேருக்கு நடுவில் பேனா சரியாக எழுதாமல் தகராறு செய்திருந்தால் , தர்ம சங்கடமாக போயிருக்கும்...  ஆனால் என் பேனா தகராறு செய்யாது என நன்கு தெரிந்திருந்தால்தான் அதை அளித்தேன்

 பந்து முனைப்பேனாவுக்கும் இங்க் பேனாவுக்கும் இதுதான் வித்தியாசம்..  பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவோம்.. ஆனால் இங்க் பேனா பல மாதங்களாக  நம்முடன் இருப்பவை,,, பல ஆண்டுகளாக ஒரே பேனாவை பயன்படுத்துவோரும் உண்டு... எனவே நம் பேனா குறித்து நமக்கு நன்றாக தெரியும்.. ஒரு வித உறவு அல்லது நட்பு அல்லது புரிதல் அதனுடன் ஏற்பட்டு விடும்

இங்க் பேனாவை முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கையில் சற்று முரண்டு பிடிக்கும்.. எழுத எழுத நம் கைகளின் அழுத்தம் , எழுதும் கோணம் , வேகம் என பலவற்றை அது புரிந்து கொள்ளும்.. அதற்கேற்ப அதன் நிப் மாறும்.. நாமும் பேனாவை புரிந்து கொண்டு அதற்கேற்ப எழுதுவோம்..

இந்த உறவு பந்துமுனைப்பேனாவில் இல்லை.. ஆனால் பந்து முனைப்பேனாவுக்கு என சில பயன்பாடுகள் உண்டு.. எனவே அதை தவிர்க்க இயலாது.. உதாரணமாக டெலிவரி சலான், பில் போன்றவை எழுதும்போது கார்பன் நகல் சரியாக வருவதற்கு பந்து முனைப்பேனாவின் அழுத்தம் முக்கியம்

  ஆனால் சிறப்பான சேவையை தருவது மசி பேனாக்கள்தான்... இங்க் பேனா வாங்கினால் ஒருபோதும் மலிவானவற்றை வாங்க கூடாது.. அது எழுதும் இன்பத்தையே கெடுத்து விடும்.. தரமானவற்றை மட்டுமே வாங்க வேண்டும்..

பைக் , கார் போன்றவற்றை அவ்வப்போது சர்வீஸ் செய்வது போல , பேனாவை மாதம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்...  ஒருவர் பயன்பாட்டில் பேனா இருக்க வேண்டும்

ஐந்து அல்லது 10 ரூபாய் விலையில் கிடைக்கும் பந்து முனைப் பேனா ஒன்றை ஓசி கொடுப்பதற்கு என வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

வெளியூர் செல்கிறோம்.. ரொம்ப நாள் பயன்படுத்தப்போவதில்லை என்றால் முழுமையாக மசியை வெளியேற்றி வைக்க வேண்டாம்.. இல்லாவிட்டால் மசி அடைப்பு ஏற்படலாம்

பேனா வாங்கும்போது , ஒல்லி பேனாவா  குண்டு பேனாவா என நம் கை வாகுக்கு ஏற்றபடி வாங்க வேண்டும்

இப்படி கவனமாக தேர்ந்தெடுத்து ஒழுங்காக பராமரித்தால் கை எழுத்து மாறாமல் சிறப்பாக இருக்கும்.. கல்லூரி தேர்வெழுத பயன்படுத்திய பேனாவை , பணிகளில் பயன்படுத்துவோர் உண்டு என்பது ஆச்சர்யமான உண்மை

Friday, November 2, 2018

கலைஞரின் பெருந்தன்மை


எந்த தகுதியும் இன்றி யாரும் வாழ்வில் உயர முடியாது...   வாழ்வில் வென்றவர்களின் நற்பண்புகளை கவனித்து , அவற்றை நாமும் பின் பற்ற முயல வேண்டும்


கார்ட்டூனிட்  மதி பல்வேறு அரசியல் கார்ட்டூன்களுக்காக புகழ் பெற்றவர்.. பல்வேறு பத்திரிக்கைளில் வரைந்தாலும் இவரது துக்ளக் கார்ட்டூன்களுக்கு தனி இடம் உண்டு....

இவர் பல கட்சியினரை கேலி செய்வது போல , இவரையும் அரசியல் தலைவர்கள் கேலி செய்வதுண்டு.. மதி கெட்டவர்.. அறிவற்றவர் என பலர் விமர்சிப்பது வழக்கம்தான்


 திமுகவை இவர் சற்று அதிகமாகவே விமர்சித்துள்ளார்

இவரது கார்ட்டூன்களின் தொகுப்பு நூல் திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டது,, நூலை வெளியிட , முதல்வர் கலைஞரை இவர் அழைத்து கடிதம் அனுப்பினார்

 நூலை படித்த கலைஞர் பதில் அனுப்பினார்


  நூலில் பல்வேறு கட்சிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.. அதில் திமுகவும் உண்டு... அதில் வருத்தமில்லை

எங்களை விமர்சித்துள்ள நூலை வெளியிட்டுப் பேசுவதில் ஒரு முதல்வராக எனக்கு எனக்கு பிரச்சனை இல்லை

ஆனால் நூலின் அட்டைப்படத்திலேயே அழகிரி நாடு, ஸ்டாலின் நாடு’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இதை நான் வெளியிட்டால் எனது கழக உடன்பிறப்புகள், ‘தலைவரே இதை வெளியிடலாமா?’ என வருத்தப்பட வாய்ப்பு உண்டு

இது தர்மசங்கடமான சூழலை உருவாக்கும்... எனவே நூலை வெளியிட முடியாத நிலையில் உள்ளேன் என தன் மறுப்பை தெரித்தார்

நூல் வெளியீட்டு விழா முடிந்த அடுத்த நாள் முரசொலியில், `வசைபாடும் கார்ட்டூனிஸ்ட் மதிக்கு வாழ்த்துகள்' என ஒரு பெரிய தலையங்கம் வடிவில் கட்டுரை எழுதி, பாராட்டி யிருந்தார்  ,, அதில் நாசூக்கான கேலிகளும் இருந்தன


 தன்னை விமர்சித்த நூலுக்கான வெளியீட்டு விழா அழைப்பை , அவர் மறுக்க எல்லா உரிமையும் உண்டு,,, அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை.. அவர் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் , அந்த அழைப்பு தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து கோபப்பட்டு இருப்பார்

ஆனால் கலைஞரோ  தன் மறுப்பை நாகரிகமான சொன்னது மட்டும் அன்றி. இதை நினைவு வைத்து முரசொலியிலும் எழுதி இருக்கிறார்

  இவர் போன்ற ஒரு தலைவர் இனி பிறப்பதரிது என எஸ்கேப் ஆகாமல் , அவரது நற்பண்புகளை பிறரும் பின்பற்ற வேண்டும்Wednesday, October 31, 2018

படித்தவை சில


எம் ஜி ஆர் போன்றவர்களுடன் பழகிய , கவிஞர் முத்துலிங்கம் வாழும் வரலாறாக நம்மிடையே இருக்கிறார்... பல இலக்கிய நிகழ்ச்சிகளில் இவரைக் காண முடியும்..

அவ்வளவு அறிவும் அனுபவமும் பெரியோர்களுடன் பழக்கமும் இருந்தாலும் வெகு எளிமையாக காட்சி அளிப்பார்

ஒரு வருடங்களுக்கு மேல் தினமணி இதழ் ஞாயிறு இணைப்பிதழில் அவர் எழுதி வந்த ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என்ற தொடர் சென்ற ஞாயிறு ( 28 10 2018 ) நிறைவுற்றது

பொதுவாக நாளிதழ்களுடன் வரும் இணைப்புகள் அவ்வளவு தரமாக இராது என்ற கருத்து பலருக்கு உண்டு.. ஆனால் தினமணி இணைப்பிதழ்கள் , சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த தொடர் ஒரு சான்று..

எத்தனையோ அனுபவங்கள் , பல்வேறு கவிஞர்கள் என வரலாற்று பொக்கிஷமாக அந்த தொடர் இருந்தது... நூலாக வர வேண்டும்

அவற்றில் சில முக்கிய பகுதிகளை அவ்வப்போது எழுதுவேன்

-----------------

திராவிட இயக்க சிந்தனையாளர் பேரறிஞர் குத்தூசி குருசாமியின் சிறு நூல் ஒன்றை படித்தேன்...   பட்டுக்கோட்டை மா நாட்டில் அவரது தலைமை சொற்பொழிவின் நூலாக்கம்..  வெகு சிறப்பு... இன்றைய மேடைகள் இந்த தரத்தை இழந்து விட்டது வருத்தம்தான்
Tuesday, October 30, 2018

சபா நாயகர்களின் பவரைக் காட்டிய சட்ட எரிப்பு போராட்ட காமெடி- அரசியல் ஃபிளாஷ்பேக்


எம் எல் ஏக்கள் பதவி நீக்க சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் இது சார்ந்த ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்வது நம் கடமை

சபா நாயகர்களுக்கு என சில அதிகாரங்கள் உண்டு.. அதில் யாரும் தலையிட முடியாது என முதன் முதலில் சுட்டிக்காட்டி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் பி எச் பாண்டியன் தான்...


எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக சார்பில் சட்ட எரிப்பு போராட்டம் நடந்தது

தூக்கு மேடை ஏறத்தயார்,,, போலிசாரின் துப்பாக்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்.. சிறைச்சாலை எங்களுக்கு பசுஞ்சோலை... சட்டத்தை எரித்தே தீர்வோம் என திமுக முழக்கமிட்டது

தடைகளை மீறி எரிப்போம் என்ற திமுகவின் அறிவிப்பை அதிமுக கண்டு கொள்ளவே இல்லை.. எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டு விட்டது


பயந்து விட்டார்கள் போலயே என நினைத்தபடி திமுக சட்டமனற உறுப்பினர்கள் சட்டத்தை எரித்தனர்


 வெற்றி வெற்றி என சந்தோஷமாக சட்ட எரிப்பு புகைப்படங்களை தமது பத்திரிக்கைகளில் வெளியிட்டு மகிழ்ந்தனர்

ஆனால் அதிமுகவின் அமைதிக்கான காரணம் பிறகுதான் புரிந்தது

 சட்டத்தை மதிப்பதாக உறுதி மொழி அளித்து பதவி ஏற்ற சட்ட உறுப்பினர்கள் சட்டத்தை எரித்து , உறுதி மொழியை மீறி விட்டனர்.. எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அதிரடியாக அறிவித்தார்  சபா நாயகர்  பி எச் பாண்டியன்

அதிர்ந்து போனது திமுக... கோர்ட்டுக்கு போவோம் என்றனர்... சபா நாயகர் அதிகாரம் வானளாவியது... நீங்கள் கோர்ட்டுக்குப்போனாலும் சரி,,, பீச்சுக்கு போனாலும் சரி,,, நான் சொன்னால் சொன்னதுதான் என தில் ஆக அறிவித்தார் பி எச் பாண்டியன்

 நாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை.. வெறும் பேப்பரைத்தான் எரித்தோம்  திமுக என எவ்வளவோ பணிந்தும் பதவி மீட்டெடுக்க முடியவில்லை

Monday, October 29, 2018

நடிக்க மறுத்த சிவாஜி - சினிமா ஃபிளாஷ்பேக்ஒவ்வொரு எழுத்தாளர்க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று

அந்த காலத்தில் கல் தூண் என்று படம் வந்தது,,, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார்

ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும்,   எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார்..

ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை

சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி,, மேஜர் அசந்து போனார்...  நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்

   என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி


சாதனை என்றொரு படம்.. அதில் சிவாஜிக்கு இயக்குனர் வேடம்... பிரபுவுக்கு நடிப்பு சொல்லித்தருவது போல காட்சி


 எப்படி நடப்பது என பிரபுவுக்கு சொல்லித்தருவது போல காட்சி ... நீங்கள் அவருக்கு நடந்து காட்ட வேண்டும் என்றார் இயக்குனர்

இந்த காட்சியை நாளை எடுக்கலாமா என பணிவுடன் கேட்டார் சிவாஜி


ஏன் என வியப்புடன் கேட்டார் இயக்குனர்

பிரபுவுக்கு நடப்பதற்கு சொல்லித்தரும் முன் , முதலில் நான் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் சிவாஜி


இந்த சிரத்தைதான் சிவாஜி...

Sunday, October 28, 2018

கலைஞர் vs புரட்சித் தலைவர் எலுமிச்சம்பழ யுத்தம் - சுவராஸ்ய ஃபிளாஷ்பேக்


 அண்ணா மறைவுக்குப் பின் யார் முதல்வர் என்ற குழப்பம் ஏற்பட்டது...   திமுகவின் முன்னணி தலைவராக விளங்கிய நாவலரை ஓரம் கட்டி தான் முதல்வராக கலைஞர் முயற்சி செய்து கொண்டிருந்தார்,., பலர் மக்கள் திலகத்தையே முதல்வராக்க விரும்பினர்

இந்த சூழலில் அடிமைப் பெண் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை , கலைஞர் சந்தித்துப் பேசினார்... பேச்சின் முடிவில் கலைஞரை முதல்வராக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார்...

சினிமா புகழ் போதும் என நினைத்ததும் ,  நல்லாட்சி தருவதாக கலைஞர் அளித்த உறுதி மொழியும் எம் ஜி ஆரை இந்த முடிவுக்கு வர வைத்தன

ஆனால் எம் ஜி ஆர் எதிர்பார்த்த நல்லாட்சியாக அந்த ஆட்சி அமையவில்லை... கட்சியினர் எம்ஜி ஆரிடம் முறையிட்டனர்,...     குறிப்பாக எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தினர் கொந்தளிப்பில் இருந்தனர்

  கலைஞர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி , இனி தவறுகள் நடக்காது என் உறுதி அளித்தார்...  திமுகவில் பிரச்சனைகள் வேண்டாம் என எம் ஜி ஆர் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்

சைதை துரைசாமி போன்றோர் , காரில் ஏற இருந்த எம் ஜி ஆரை தடுத்து நிறுத்தி , எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு முக முத்து ரசிகர் மன்றம் அமைக்க தலைமை தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டினர்...  எம் ஜி  ஆர் , பொறுமையாக இருங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்

இது நடந்து சில நாட்களிலேயே எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்... பெரியார் , அண்ணா போன்றோர் கட்டிக்காத்த திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்

இதனால் எம் ஜி ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்... தமிழ் நாடே கொந்தளித்தது... எம் ஜி ஆர் படம் ஒட்டப்படாத வாகனங்கள் சாலையில் ஓட முடியாத நிலை ஏற்பட்டது


மக்கள் விரோத எம் எல் ஏக்கள் தம் பதவிகளை ராஜினாமா செய்யக்க்கோரி அந்தந்த பகுதி மக்கள் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும் என எம் ஜி ஆர் கோரினார்

அதன்படி கலைஞரை சந்திந்த சைதை துரைசாமி மனு அளித்தார். அதை வாங்கிய கலைஞர் , சைதை துரைசாமிக்கு எலுமிச்சம் பழம் அளித்தார்... ஏதோ நினைவுப் பரிசு போல என நினைத்து அவர் வாங்கிக்கொண்டார்

பிறகு பேட்டி அளித்த கலைஞர், எம் ஜி ஆர் ஆதரவாளர்களுக்கு மூளை குழம்பி இருக்கிறது.. அதனால்தான் தலையில் தேய்த்து குளிக்க எலுமிச்சை அளித்தேன் என்றார்... இது தலைப்பு செய்தி ஆனது... எம் ஜி ஆருக்கு இதில் வருத்தம்’

சில நாட்கள் கழித்து , திமுக கூட்டம் ஒன்று சைதையில் நடந்தது

கலைஞர் பேசி முடித்ததும் ஒவ்வொருவராக வரிசையில் நின்று அவருக்கு மாலை அளித்தனர்

சைதை துரைசாமியும் மேடை ஏறினார்.. கலைஞருக்கு எலுமிச்சம்பழ மாலை ஒன்றை அணிவித்தார்...  எம் ஜி ஆரை நீக்கிய உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும்தான் எலுமிச்சம்பழ சிகிச்சை தேவை என்றார்..

மக்கள் ஆதரவை இழந்த கருணா நிதியே ...ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டு கிளம்பினார்


அவனை பிடிங்கடா...என கலைஞர் உத்தரவிடவே கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அதன் பின் எம் ஜி ஆர் தன் நேரடி கவனிப்பில் சைதை துரைசாமியை வைத்துக்கொண்டார்

அதன் பின் , அதிமுக வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததும் , சைதை துரைசாமிக்கு மிரட்டல்கள் குறைந்தனMonday, August 27, 2018

தேகம் நாவலும் மிஷ்கினும் - சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு..

ஒரு முறை நான் , செல்வா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் உங்களுடன் சேர்ந்து உணவருந்தியபடி உரையாடிக் கொண்டிருந்தோம்.. பல விஷயங்கள் சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது.. அப்போது செல்வா திடீரென ஒரு கேள்வி கேட்டார்

- சாரு.. உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் எழுத்தாளர்கள் குறித்தும் அவர்கள் படைப்புகள் குறித்தும் எழுதுகையில் , அவர்கள் படைப்பின் சில பகுதிகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்கிறீர்கள் என்றும் இதனால் உங்கள் கருத்துகளுக்கான இடம் குறைந்து விடுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.. கட் அண்ட் பேஸ்ட் என்பதற்கு உங்கள் விளக்கம் என்றார்

எனக்கு செம ஷாக்... சும்மா ஜாலியாக பேசும்போது இப்படி குற்றம் சாட்டுவது போல ஒரு கேள்வியக்கேட்கலாமா என எனக்கு செல்வா மீது கோபம்தான்.

ஆனால் நீங்கள் உங்களுக்கே உரிய ஒரு மென் சிரிப்புடன் அதற்கு லாஜிக்கலாக ஒரு பதில் சொன்னீர்கள்.. பொது இடம் என்பதையும் மறந்து  நாங்கள் மூவரும் கைதட்டி பாராட்டினோம்

எதற்கு சொல்கிறேன் என்றால் விமர்சனங்களுக்கு இடம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை

தேகம் நாவல் வெளியீட்டின் போது , அதைப் படிக்கவில்லை என்று மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆனது... படிக்காமல் ஒரு விழாவுக்கு செல்வது தவறு அல்லவா.. மற்றபடி அது த்ரில்லர் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல், பாக்கெட் நாவல் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல் என்று எப்படியும் சொல்லலாம்


காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் துப்பறியும் நாவல்  வார்ப்புருவில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்... அகராதி வடிவில் மிலோரத் பாவிச் உலக இலக்கியம் படைத்திருக்கிறார்..

அதுபோல சரோஜா தேவி கதைகளின்  வார்ப்புருவில் தேகம் இருக்கிறது என ஜாலியாக மிஷ்கின் பேசியதை , சரோஜா தேவி எழுத்தை விட சாரு எழுத்து எந்த விதத்தில் சிறப்பு என அவர் பேசவே இல்லை...  அவர் பேசாததை பேசியது போல திரித்து சொல்கிறார் உங்கள் நண்பர் ஒருவர்


தேகம் என்ற படகை வைத்துதான் வாழ்க்கை எனும் கடலை கடக்க வேண்டும் என்பது ஆன்மீகம்.  தேக இன்பங்களை துய்ப்பதே வாழ்வின் பயன் என வாழ்வது உலகவியல்...     கிடைத்த தேகத்தை மக்களுக்காக உழைப்பதில் பயன்படுத்த வேண்டும் என உழைப்பது  தொண்டு...  தொண்டு செய்து பழுத்த பழமாக வாழ்ந்த பெரியார் இதற்கோர் உதாரணம்.  பிறர் உடலை துன்புறுத்து வதைத்து அச்சத்தை விளைவித்து அதிகாரத்தை கைப்பற்றுதல் சர்வாதிகாரிகளின் அரசியல்..   ஹிட்லர் இதற்கோர் உதாரணம்

இப்படி ஆன்மிகம் , அதிகாரம் , அரசியல் ,  காமம் என அனைத்துக்குமே அடிப்படை தேகம்தான் . உடலை புரிந்து கொண்டால் உன்னுள் இருக்கும் உத்தமனை புரிந்து கொள்ளலாம்..

இதை சொல்ல சரோஜா தேவி வார்ப்புரு பொருத்தமானதுதான்...  மிஷ்கின் அதை விளக்கமாக பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது மட்டுமே குறை..

கேவலம் , சில டிவி வாய்ப்புகளுக்காக உங்கள் நண்பர் இவ்வளவு கீழே இறங்கி இருக்க வேண்டாம்

டிவீ வாய்ப்பெல்லாம் வாழ்க்கையில் எந்த மூலைக்கு ?

திமுக மதுரை மா நாட்டுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்த மு க முத்து இன்று எப்படி இருக்கிறார்?

தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் பதினைந்து நிமிட புகழுக்காக திமுகவை ஆதரித்து பிற்காலத்தில் துணை நடிகராக மாறவில்லையா?


எ ம் ஜி ஆரின் சினிமா வாரிசு என அழைக்கப்பட்ட பாக்யராஜ் திமுகவுக்கு ஆதரவளித்த பின் என்ன ஆனார்?

எம் ஜி ஆரை எதிர்த்து திமுக ஆதரவு கொடுத்தபோது , தற்போது  உங்கள் நண்பருக்கு  கிடைக்கும் விளம்பரத்தை விட அதிக விளம்பரம் , டி ராஜேந்திருக்கு கிடைத்தது ?  இன்று அவர் எப்படி இருக்கிறார்?

வரலாறு நமக்கு பாடங்கள் கற்பிக்கிறது... நாம்தான் கவனிப்பதில்லை... உங்கள் நண்பரை கொஞ்ச காலம் கவிதையை மறந்து விட்டு வரலாறு படிக்க சொல்லவும்

அன்புடன்

பிச்சை

Sunday, June 17, 2018

ரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி

----

ரஜினி அரசியல்  நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா 

-காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்... இந்த பட விவாதத்தின்பே ாது  ரஜினி அரசயல் நுழைவை அறிவிக்கவில்லை. செ ால்லப்   ே பானால் தேர்தல் அரசியலை  களமாக  கெ ாண்ட  கதை ஒன்று  அவர்க்கு பிடித்திருந்த பே ாதும் அதில் நடிக்க விரும்பவில்லை


அரசியல் அறிவிப்பை  ெ வளியிட்டதும் திரைக்கதையில்  மாற்றங்கள் ஏதும் செய்ய செ ான்னாரா

-இல்லை...இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பவர் ரஜினி சார்.. இது மக்கள் பிரச்சனைகளைப்பேசும் மக்கள் படம்..  குடும்பம் குறித்தான படமும் கூட...இந்த தீம் அனைவர்க்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை  அவருக்கு இருந்தது

நிலம் என்பதை  கதைக்களமாக ஏன்தேர்ந்தெடுத்தீர்கள்

தாராவி என்பது  பல பிரிவினர் வசிக்கும் ஒரு மினி இந்தியா.. இருப்பவர்கள் இல்லாதவர்கள் பிரச் னை எங்கும் உள்ளது..  இதைத்தான் படம்பேசுகிறது..   இதை  இயக்கியவன் நான  என்பதால் சாதிய முத்திரை  குத்துகிறார்கள்

காலாவில் ரஜினி ரஞ்சிதை பயன்படுத்தி கெ ாண்டாரா அல்லது ரஞ்சித் ரஜினியை யா ?

இரண்டும் இல்லை..  எனக்குப்பிடித்த நான் ஈடுபாடு  ெ காண்டுள்ள அரசியலையும்  மக்கள் மீது ரஜினி   ெ காண்டுள்ள அக்கறையையும் கலந்து உருவான படம் காலா

ரஜினியின ஆன்மிக அரசியல் குறித்து ?

சம நீதி மற்றும் மக்கள் நல் வாழ்வு இவை தான் அவர் செ ால்லும் ஆன்மிக அரசியல்.  படப்பிடிப்பு இடைவேளைகளில் சாதாரணமாகபேசும் பே ாதும் மக்கள் குறித்தும்  அவர்களுக்கு  ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும்தான்  விவாதிப்பார்

காலா கதை தங்களுடையது என சிலர்செ ால்கிறார்களே

வெங்கல் கிராமத்தில் பஞ்சாயத்து  தலைவராக இருந்த என் தாத்தாவின் வாழக்கையை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய கதைதான் இது

Friday, June 15, 2018

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து - அச்சில் வராத சுவாரஸ்யங்கள்

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து கட்டுரை  வாசித்ததை  அறிவீர்கள்..  அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை தமிழ் இநதுவில் வாசித்திருப்பீர்கள்..   அதில் இடம்பெறாத சில  சுவாரஸ்யங்கள் உங்களுக்காக  நம் வலைத்தளத்தில்...  படியுங்கள்...ரசியுங்கள்

-----
♥ஜெயகாந்தனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன்..  சாப்பிடுவது இரண்டாம் பட்சம்..  அவருடன் சற்றுபேசுவதே விருந்தின்  நே ாக்கம்..   ரெமி மார்ட்டின் உட்பட எல்லாம் உள்ளன.. என்ன வேண்டும் என்றேன்..  நீங்கள் மது அருந்துவீர்களா என்றார்..  ஒருோதும் இல்லை என பதில் அளித்தேன்..  அப்படியானால் எனக்கும வேண்டாம் என்றார்... டேபிள் நாகரிகம் என்பதை காட்டினார்


♥ அவர் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டார்..   நான் அணிவித்த தங்க மே ாதிரதை ஏற்றுக்கெ ாண்டார்...  அவர் ஏற்றது எனக்குப் பெருமை

♥ஜெயகாந்தன் எழுத்தில் அவர் குரல் அதிகம் ஒலிப்பதாக சிலர் விமர்சிப்பதுண்டு..  இதை மறுக்கிறார் ஜெயமே ாகன்..  அவர் எழுதுகிறார்  :
ஆசிரியன் குரல் கதாபாத்திரத்தில் ஒருபோதும் வெளிப்படகூடாது என்று கருதும் நம் விமரிசகர்கள்  தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளைப்பற்றி என்ன சொல்கிறார்கள் ? கதேயின் ஆக்கங்களின்மீது அந்த அளவுகோலை போடுவார்களா ? இப்பேரிலக்கிய ஆசிரியர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் முகமாகவே கதாபாத்திரங்களைப் படைப்பவர்கள். 

♥ ஜெய காந்தன் என் மீதுபேரன்பு கெ ாண்டவர்..   நிறைய பேசுவே ாம்..   ஒரு  முறை  அவரிடம் கேட்டேன்...  நீங்கள்செய்த ஏதாவது ஒன்றுக்காக பிற்காலத்தில் வருந்தியதுண்டா.. ?  அவர் பதிலளிக்க  மூன்று நிமிடங்கள எடுத்து கெ  ாண்டார்...மேதைகள்  எதையும் யே ாசித்தே பேசுவார்கள்

என்  நூல்   வெ ளியீட்டுக்காக வெ ளிநாடு  பே ாயிருந்தேன்... அந்த  நாட்டு கல்வி அமைச்சர்  கலந்து  கெ ாண்டார்

- தாங்கள்  இந்தியா வந்ததுண்டா என கேட்டேன்..
ஆம்  அல்லது இல்லை  என எளிதாக பதில்செ ால்லவேண்டியகேள்விக்கு  மூன்று நிமிடங்கள்  யே ாசித்து அற்புதமான ஒரு பதில் செ ான்னார்

( அடுத்த பதிவில் அந்த பதிலை  காண்பே ாம்)

Thursday, June 14, 2018

காலாவுககு வரவேற்பு எப்படி - ஓர் அலசல்

 சிங்கப்பூர்/மலேசியா
சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்றே திரையிடப்பட்டது.  வெளியானது வார நாள் என்றாலும், சிங்கப்பூரில் மாபெரும் ஓப்பனிங்கைப் பெற்று சாதனை படைத்தது.
மலேசியா தலைவர் கோட்டை என்பதை கபாலிக்குப் பின் காலா மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. மலேசியா-வில் "Hot Movie Checks"-ல் முதல் இடத்தைப் பிடித்து மக்களிடம் இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்தியது காலா.

2. ஆஸ்திரேலியா
முதல் இரெண்டு நாட்களின் வசூல் 1 கோடி. இது, ஆஸ்திரேலியாவில் 2018-ல் வெளியான அனைத்து தமிழ்ப்படங்களை விட மிக மிக அதிகம். ஓப்பனிங் A$105,672, வெள்ளிக்கிழமை அன்று A$100,662, சனிக்கிழமை A$110,616, ஞாயிற்றுக்கிழமை A$85,263 என்று வசூலித்து, ஆஸ்திரேலியாவின் டாப் 5 வரிசையில், பத்மாவதிற்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் (A$402,213) இருக்கிறது.  

3. USA
- இதுவரை வெளியான தலைவரின் படங்களிலேயே மிக பிரம்மாண்டமாக, நிறைய திரையரங்குகளில் வெளியான படம் காலா மட்டுமே.
- காலா, 1 மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கும் தலைவரின் 4வது படமாகும். (கபாலி, எந்திரன் மற்றும் லிங்கா மற்ற படங்கள்). இந்த வார இறுதியில் 2 மில்லியன் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018-ன் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்து சாதனை. அமெரிக்காவில் இன்னும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
- முதல் வார இறுதியில் திரையிடப்பட்ட 324 இடங்களில், வார இறுதியில் மட்டும்  $1,625,614 வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் இடம் எது? நம்ம "கபாலி" தான்! கபாலியின் இமாலய சாதனையான $3,616,002-ஐ வேறு எந்த படங்களும் நெருங்குவதற்கு சில வருடங்கள் ஆகும்.

4. இந்தியா
- சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒரு நாள் வசூல் செய்து சாதனை படைத்தது காலா  - 1.76 கோடி
- காலாவின் 15 கோடி ஓப்பனிங், 2018-ல் வெளிவந்த அனைத்து படங்களை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 15.4 கோடி.
- காலாவின் இரண்டாம் நாள் வசூல் 10.5 கோடி...இது சாதாரண விஷயமல்ல! பொதுவாக, படத்தைப் பற்றிய விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை விட, 50% குறைந்துவிடும்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 85% அரங்கு நிறைந்த காட்சிகள். விடுமுறை வாரம், பண்டிகை வாரம் என்று எதுவுமே இல்லாமல் இவ்வளவு கூட்டம் வருவது பெரிய விஷயம்.
- சனிக்கிழமை (9ம் தேதி) அன்றும், ஞாயிற்றுக்கிழமை (10ம் தேதி) அன்றும் முறையே  8.4 கோடி மற்றும் 9.3 கோடி வசூல் செய்தது. ஆக மொத்தம், முதல் 4 நாட்களில் 43.6 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
- சென்னையைப் பொறுத்த வரை, இதுவரை கிட்டதட்ட 6.6 கோடி வசூலித்துள்ளது.
- சென்னை சத்யம் திரையரங்கில், நேற்று (12ம் தேதி) மேட்னி காட்சி house full என்ற செய்தி கிடைத்துள்ளது. வார நாளான நேற்று பகல் காட்சி house-full ஆவது படத்தின் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
- சென்னையை அடுத்து, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் சிறப்பான வசூல் செய்கிறது.
- பொதுவாக, எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இலாபம் கொடுக்கும் அளவிற்கு படம் ஓடுவது அரிதாகி விட்டது. இப்போது, சேலம் சினிப்ளெக்ஸ் ட்விட்டர் பதிவின் படி, அவர்களின் முதலீட்டை மீட்டு விட்டதாகவும், இனிமேல் வரும் வசூல் அனைத்தும் இலாபம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வார நாட்களிலும் 95% அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றி நடை போடுவதாக அறிவித்துள்ளனர்.
- இதே போல், புதுக்கோட்டை சினிமாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 34 ஷோக்களில் அனைத்து காட்சிகளும் house-full ஆக மொத்தம் 22.6 லட்சம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு படத்தின் உண்மையான வெற்றியை, அப்படம் தென் மாவட்டங்களில் பெறும் வசூல் தான் முடிவு செய்யும். அவ்வகையில், காலா மாபெரும் வெற்றி கண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று!

5. சவுதி அரேபியா
- சவுதியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை "காலா" பெற்றுள்ளது. மற்றும், சவுதியில் வெளியான 2வது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.  இதற்கு முன், ஹாலிவுட் தயாரிப்பான "Black Panther" வெளியானது.


6. மற்ற நாடுகள்:
- நைஜிரியாவில் காலாவைக் கொண்டாடுகிறார்கள், தென் ஆப்ரிக்காவில் படம் செம ஹிட் என்று கண்டம் தாண்டி தலைவர், தனது ஆளுமையை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்.
- தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும்  காலாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய இடங்களில் தினசரி காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
- வளைகுடா நாடுகளில் இதுவரை 7 கோடி வசூல் என்று தகவல் கிடைத்துள்ளது. ரமலான் நோன்பு முடிந்தவுடன் வரும் வார இறுதியிலிருந்து இன்னும் சிறப்பான வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவிலும் வரும் வார இறுதி ரமலான் விடுமுறையை ஒட்டி வருகிறது  என்பதால், மேலும் ஒரு சில வசூல் சாதனைகளை எதிர்ப்பார்க்கலாம்.
- ரஷ்யாவில், மாஸ்கோ நகரில் படம் வெளியாகி, கடந்த வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- ஜப்பானைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? வழக்கம் போல், அங்கிருக்கும் தலைவரின் ரசிகர்களின் பேராதரவால் படம் சக்கைப் போடு போடுகிறதுTuesday, June 12, 2018

நான்தான் காலா - படத்தைகெ ாண்டாடும் அரசியல் தலைவர்கள்

பாட்ஷா அண்ணாலை பே ான்ற படங்களை பே ான்ற படஙகளை   பார்க்கும் சிறுவர்கள்  தம்மை அந்த பட  நாயகன்க ளாக நி னைப்பது வழக்கம்..
காலா படத்தை பெ ாருத்தவரை  தலைவர்களும் இப்படி கெ ாண்டாடி வருகின்றனர்

கலைஞர் தான் காலா என திமுகவினரும்  சீமான் தான் காலாவில் வரும் ராவணன் என்றும் அந்தந்த கட்சியினர் கூறுகின்றனர்...  இன்னும் பல கட்சியினரும் காலா என்பது தாங்கள்தான்  என செ ால்லி படத்தை கெ ாண்டாடி வருகின்றனர்..

இதற்கெல் லாம் உச்சமாக குஜராத் எம் எல் ஏவான ஜினேஷ்மேவானியும் இப்படி கூறியிருக்கிறார்

காலா படம் பார் தேன்  என்னையே பார்ப்பது ோல  இருந்தது...  சமூக நீதியை  கமர்சியல் அம்சத்துடன் தந்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள்..

இப்படி அவர்ட்வீட்செய்துள

சிறுகதைப் பே ாட்டிகள்


Monday, June 11, 2018

காலா -நாயகன் : ஆறு வித்தியாசங்கள்

காலா  நாயகன் ஒப்பிடுக


1 நாயகன் தனி மனிதபே ாராட்டம்..  காலா சமூக நீதிோராட்டம்


2 காட் ஃபாதர் நாயனை கமல் பிரதி எடுத்திருப்பார்..  ரஜினியின் இயல்பான பாணியை ரஞ்சித் பயன்படுத்தி இருப்பார்

3 மகன் இழந்ததும் அழும் காட்சியில் டை நாடகஙளை கமல் நினைவு படுத்துவார்..  அதே பே ான்ற காட்சியில் ரஜினி உலக சினிமாக்களை நினைவு படுத்துவார்

4 மும்பையிலேயே  வாழ்ந்தாலும் மெ ாழி பெயர்ப்பாளர் மூலம்பேசு வார்  நாயகன்..  இந்தியில் பஞ்ச்பேசுவார் காலா

5 பாலகுமாரன் மணிரத்னம் கமல் என்ற அவாள் கூட்டணியில் உருவானது நாயகன்..  ரஞ்சித் மகிழ்நன் ஆதவன்தீட்சண்யா ரஜினி என கருப்பு மக்களால் உருவானது காலா

6 நாயகிக்கு வாழ்வு கெ ாடுப்பார் நாயகன்..  ந ாயகியால் உருவாக்கப்பட்டுபெண்களால் காக்கப்படுபவர் காலா

Sunday, June 10, 2018

காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ? -ரஞ்சித்பேட்டி

கீழ்த்தரமான அவதூறுளையும் தடைகளையும் மீறி காலா சாதனை படைக்கும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் அளித்தபேட்டி

------
ரஜியை வித்தியாசமாக காட்ட எப்படி தே ான்றியது

- கபாலி ஷுட்டிங் இடைவேளைகளில் சாதாரணமாக ரஜினி சாரிடம் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. சினி மா ரஜினியை விட இயல்பான ரஜினி பவர்புல்லாக இருந்ததை கண்டேன்...  அதை காட்சிப்படுத்தினேன்..  அதுதான் காலா

- காலா உயிதெழும் காட்சி எதன் குறியீடு

-சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழை யாரும் தெ ாடக்கூட முடியாது.. அது ஒன்று...  காலா எனும் தத்துவத்துக்கு என்றும் அழிவில்லை   இவற்றத்தை தான் அந்த காட்சி காட்டுகிறது

-காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ?

கண்டிப்பாக இது சூப்பர் ஸ்டார் படம்தான்... அவர் அனுமதியின்றி ஒரு காட்சியும் வசனமும் இடம்பெறவில்லை
அவர் வழிகாட்டுதலுடன் என் கருத்துளை படத்தில் வைதேன்..  சமூக நீதி கருத்துகள் இதன் மூலம் உலக அளவில்சென்றுசேர்ந்துள்ளது
கியாரே செட்டிங்கா -காலா வசனகர்த்தாபேட்டி


கா லா  படத்துக்கு வசனம் எழுதியவர்களில் ஒருவரான மகிழநன் விகடனுக்கு வழங்கியபேட்டி


 . 
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல் கண்ணோட்டம் இங்கே இருந்த பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகலை. பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்ற மகிழ்நனிடம் சில கேள்விகள்.  


காலா
"இயக்குநர் ரஞ்சித்துடனான பழக்கம்..?"
"தோழர் ரஞ்சித் எனக்கு முகநூல் நண்பர். அவ்வப்போது நான் எழுதுவதைப் படித்திருக்கிறார். அப்பப்போ போன்ல பேசியிருக்கோம், பின்னர் உற்ற நண்பர் ஆனார். 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி இயக்குநர் என்ற தோரணை எதுவுமே அவரிடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. 'கபாலி' முடிந்ததும் ஒருநாள் போன் பண்ணி, 'தோழர் வாங்க, தாராவி போயிட்டு வருவோம்'னு சொன்னார். இணை இயக்குநர்கள் பார்த்தி, ஜெனியோடு போய் அங்கே நாங்க சந்திச்ச மனிதர்கள்தான், 'காலா' கதாபாத்திரங்கள் ஆனார்கள். 


நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் யார்னு சொல்ல முடியும். உதராணத்துக்கு, செல்வி கதாபாத்திரம் பல தாராவி பெண்களோட பிரதிபலிப்பாக இருந்தது. ஆரம்பத்துல என்னை வசனம் எழுதச் சொல்வார்னு தெரியாது. எனக்கு ரஞ்சித் தோழரை ரொம்பப் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேலை செய்யணும்னுதான் அவர்கிட்ட கேட்டேன். 'கொஞ்சம் பொறுங்க, உங்களுக்குனு ஒரு வேலை இருக்கு'னு சொன்னார். பிறகு, கதை விவாதத்துல இணைச்சுக்கிட்டார். வசனம் எழுதுறதுக்கு ரஞ்சித், ஆதவன் தோழர்களோடு நானும் சேர்ந்துக்கிட்டேன்." 
"நீங்க தாராவியைச் சேர்ந்தவர்னுதான் வசனம் எழுத வச்சாங்களா?"
"படம் பார்க்கும்போதுதான் எனக்கு ஏன் வசனம் எழுதுற வேலை கொடுத்தார்னு புரிஞ்சது. ரஞ்சித் தோழர்கிட்ட தாராவியைப் பத்தி நான் பல விஷயங்கள் பேசியிருக்கேன். நான் பேசுற தமிழும் திருநெல்வேலி ஸ்லாங்கும்கூட காரணமா இருக்கலாம். படத்துல இயக்குநர் காட்சிக்குத் தேவைப்படுற வசனங்களைக் கேட்பார். அவருக்குத் தேவையான வசன ஆப்ஷன்ஸ் கொடுக்கிறதுதான் என் வேலை. நல்ல வசனங்களா பார்த்துத் தேர்ந்தெடுத்ததும் திருத்தினதும் இயக்குநர்தான்." 


காலா காட்சியில் மகிழ்நன்
" 'கியாரே... செட்டிங்கா' வசனம் உருவான விதத்தைச் சொல்லுங்க, படத்துல பன்ச் வசனங்கள் கம்மியா இருக்கக் காரணம் என்ன?" 
"பாம்பேல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ரஞ்சித் தோழர், 'ஒரு பன்ச் வசனம் எழுதனும்'னு சொன்னார். எனக்கு ரஜினி சாருக்கு பன்ச் எழுதுற டென்ஷனைவிட, தோழருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு டென்ஷன். சில ஆப்ஷன்ஸ் கொடுத்தேன். அதுல, இயக்குநர் ரஞ்சித் தேர்ந்தெடுத்ததுதான், 'கியாரே செட்டிங்கா' வசனம். மக்களோடு மக்களாக இருக்கிற காலா பன்ச் வசனங்களைவிட, மக்களோட உணர்வுகளைப் பேசணும். கதையோட எல்லையும் அதுதானே!"


"தாராவி மக்கள்ல ஒருத்தனா நீங்க சந்திச்ச பிரச்னைகளைப் படத்துல ரஜினி பேசுனதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
"தாராவில நான் 10x10 ரூம்லதான் பிறந்தேன். பெரும்பாலான இரவுகள்ல வீட்டுக்கு வெளியே உறங்கும் நிலைதான் எனக்கு. காலா கதாபாத்திரம், தாராவி பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் பல இளைஞர்களோட பிரதிபலிப்புதான். படத்தில் பேசும் அரசியல், துண்டு பிரசுரம் கொடுப்பது, சமூகம் சார்ந்து பேசுற பசங்க... என எல்லாம் நிஜ தாராவியில் நடக்கும் விஷயம்தான். சமுத்திரக்கனி கதாபாத்திரம்கூட தாராவியில் இருக்கும் பல மனிதர்களோட பிரதிபலிப்புதான்."  
தாராவி


"படத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வசனங்கள் உள்ளதா?"            
"ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னாடி தாராவியை டாப் ஆங்கிள் ஷாட்டில் எடுத்தார்கள். அதை எனக்குப் போட்டுக் காட்டும்போது என் கண் கலங்கிடுச்சு. படத்துல செல்வி கதாபாத்திரம் பேசுற பல வசனங்கள் எங்க அம்மா என்னை எப்படித் திட்டுனாங்கனு கேட்டு எழுதுனேன். சில இடங்களில் காலா பேசுற 'எரிச்சாலும் புதைச்சாலும் இங்கதான். இது இந்த இடத்தில வளந்த மரம்'னு சொல்லும்போது, எங்க அம்மாவுக்கு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரியே இருந்தது. பல பசங்களுக்கு அந்த 'விழித்திடு இளைஞர் இயக்கம்' பெயரைப் பார்த்துட்டு, தாராவி பசங்க நடத்துற விழித்தெழு இளைஞர்  இயக்கத்தோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. என் அக்கா பையன், லெனின் கதாபாத்திரத்தோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுனு சொன்னான். காலா மக்களை ஒன்றுதிரட்டி, 'உடம்புதான் நம்ம ஆயுதம்'னு  சொல்லும்போது, ரொம்ப உணர்வுபூர்வமாய் இருந்தது." 
'' 'காலா' படத்துல தாராவியின் அரசியல் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கா?"
"தாராவி மிகப்பெரிய ஏரியா. அதுல பல அரசியல் இருக்கு. தாராவி ஒரு ரியல் எஸ்டேட் ஹப் மாதிரிதான். நிறைய பில்டர்ஸ் அணுகுறாங்க. அங்கே இருக்கிற எல்லோருக்கும் ஒரு நல்ல கட்டடம், வீட்டுக்குள்ளேயே டாய்லெட்னு எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கு. ஆனா, அதுக்காக நிலத்துல பாதியைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிற திட்டத்தோடதான் வர்றாங்க. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து மக்கள் உருவாக்கிய நிலம் அது. அது மொத்தமும் தாராவி மக்களுக்குத்தான் சொந்தம். அந்த வகையில, 'காலா' தாராவியைப் பற்றி யாரும் பேசாத அரசியலைப் பேசியிருக்குனுதான் சொல்வேன். இப்படம் தாராவி மக்களுக்கே தாராவியைப் பற்றி எடுத்துச் சொல்ல பெரிதும் உதவியிருக்கிறது!"  என்கிறார் மகிழ்நன்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா