Sunday, September 30, 2012

ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்


தமிழ் ஸ்டுடியோ சார்பில் படிமை திரைப்பட பயிற்சி  இயக்கத்தின் இரண்டாவது பேட்ச் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று ( 30.09.2012- ஞாயிறு ) நடந்தது .  விழாவை சாரு நிவேதிதா துவக்கி வைப்பதாக அறிவுப்பு வெளியகி இருந்தது. ஆனால் எந்த இடத்தில் நடக்கிறது என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை.

தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்கவே , இடத்தை சொல்லவில்லை என விசாரித்த போது தெரிந்தது. தமிழ் ஸ்டுடியோ அருணுக்கு ஃபோன் செய்து , நம்மை அறிமுகப்படுத்தி கொண்ட பின்புதான் , நமக்கு அனுமதி அளித்தார். சிலரை வர வேண்டாம் ,  இடம் இல்லை என பணிவாக மறுக்கவும் செய்தார்.


இப்படி ஒரு ஒழுங்குடனும் , கட்டுப்பாடுடனும்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .  உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே வந்து இருந்தனர். வழக்கமான மேடை பேச்சு போல இல்லாமல் , மொட்டை மாடியில், மாலைக் காற்று இதமாக வீச, வானுக்கு அடியில் அமர்ந்து கொண்டு நடந்த கலந்துரையாடல் உன்னதமான அனுபவத்தை தந்தது .

சாரு தன் பேச்சில் முழுக்க முழுக்க சினிமாவை பற்றியே பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது . அந்த அளவுக்கு சினிமா மீது காதல் கொண்டவர் அவர்.

 ************************************************************8


அருண் துவக்க உரை ஆற்றினார்.


படிமை என்பது சினிமா இன்ஸ்டிட்யூட் அல்ல. இது ஓர் இயக்கம். நல்ல படங்களுக்கான இயக்கம். இன்று யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் அதை விமர்சித்தால் கோபம் அடைகிறார்கள். குறும்படங்களை விமர்சித்தாலே , மிரட்டலை சந்திக்கும் நிலை உள்ளது.

அதே போல யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் என்ற நிலையும் உள்ளது. விமர்சனம் என்றால் என்னவென்று தெரியாமலேயே பலர் எழுதுகிறார்கள்.

படிமை பயிற்சியில் நாங்கள் கற்றுத்தருவதை விட , தேடலை ஊக்குவித்து அவர்களாகவே கற்கும் நிலையை ஏற்படுத்துகிறோம். இலக்கிய வாசிப்பு , ஃபீல்ட் ஒர்க் என பல கட்டங்களுக்கு பின்புதான் கேமிராவுக்கு கடைசியில்தான் வருவோம். தன்னை சுற்றி நடப்பது என்ன என தெரிந்தால்தான் , நல்ல சினிமா எடுக்க முடியும். உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்கள்தான் , இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பயிற்சியில் சேர முடியும்.

இதை துவக்கி வைக்க சரியான நபர் யார் என யோசித்த போது, சாரு நிவேதிதாதான் என் நினைவுக்கு வந்தார். அவரை போல சினிமாவைப் பற்றி எழுதியவர்கள் யாரும் இல்லை. அலைந்து திரிபவனின் அழகியல் என்ற பெயரே எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது என பாருங்கள் . ஆனால் இப்போது எழுத மாட்டேன் என்கிறார். இது பெரிய இழப்பு. சினிமா துறையினர் பலர் , அவர் ஏன் எழுதுவதில்லை என என்னிடம் கேட்கிறார்கள். அவரை மீண்டும் சினிமா விமர்சனம் எழுத வைக்க , அவர் வாசகர் வட்டம் முயல வேண்டும்.

****************************

அதன் பின் சாரு, தனக்கே உரிய பாணியில் சரளமாகவும் , இயல்பாகவும் , உணர்ச்சி பூர்வமாகவும் பேசினார். சில சமயங்களில் கோபப்பட்டார் . சில நேரங்களில் பரவசப்பட்டார். எதுவாக இருந்தாலும் , அதில் முழுமையாக இருந்தார்.

சினிமா பற்றி நான் வகுப்பு ஏதும் இப்போது எடுக்கப்போவதில்லை. சினிமா பற்றி பல புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் நான் குறிப்பிட்டு இருக்கும் படங்களை பார்க்கவே உங்களுக்கு ஆறு அல்லது ஏழு வருடங்கள் ஆகும்.  நான் பல வருடங்களாக பார்த்த படங்களைத்தான் என் புத்தகங்களில் சொல்லி இருக்கிறேன். அந்த காலத்தில் டிவிடி எல்லாம் கிடையாது , உலகப் படங்களை பார்க்க வேண்டும் என்றால் ஃபில்ம் சொசைட்டியத்தான் நம்பி இருக்க வேண்டும் . அதுவும் லத்தீன் அமெரிக்க படங்கள் பார்க்க வேண்டும் என்றால் , காத்து இருக்க வேண்டும் . எப்போது திரையிடுவார்கள் என தெரியாது.

அப்போது டில்லியில் இருந்தேன். 1978ல் ஃபில்ம் சொசைட்டியில் , லத்தீன் அமெரிக்க படங்கள் திரையிட்டார்கள். காலை ஆறு மணிக்கே நானும் , வெங்கட சாமினாதனும் கிளம்பி சென்று விடுவோம். ஒரே நாளில் ஐந்து படங்கள் கூட பார்த்து இருக்கிறேன்.

hour of furnace, battle for chile போன்ற படங்கள் மறக்க முடியாது. சில போர் காட்சிகளில் படம் பாதியிலேயே ஃப்ரீஸ் ஆகி விடும் , காரணம் , கேமிரா மேன் குண்டு வீச்சுக்கு பழி ஆகி இருப்பார். அப்படி எடுக்கப்பட்ட படங்கள் அவை.


நான் ஏன் விமர்சனம் எழுதுவதில்லை என பலர் வருத்தப்படுகிறார்கள்.  நான் ஒரு படத்தை வெகுவாக பாராட்டி எழுதி இருப்பேன். கடைசியில் பார்த்தால் , அது காப்பி அடித்து எடுக்கப்பட்ட படமாக இருக்கும். விக்ரம் நடித்த தெய்வ திருமகள் படம் அப்படித்தான் ஆனது.


விக்ரம் ஒரு சாதாரண கேரக்டரில் நடிக்க மாட்டாரா என ஏங்குகிறேன். எப்போது பார்த்தாலும் , அப் நார்மல் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார். அவர் உடல் நலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
எப்போதும் மன நோயாளியாகவே நடித்தால், உண்மையிலேயே மனம் பாதிக்கப்படும்.

இயக்குனர்கள் தம் இளமைக்கால சம்பவங்களை வைத்து ஒரு ஹிட் படம் தருகிறார்கள். ஆனால் இளமைக்காலம் ஒரு முறைதானே வரும். எனவே அடுத்த படத்தை காப்பி அடித்து எடுக்க ஆரம்பிக்கிறார்கள். காப்பி அடித்து எடுப்பதை , தன் படம் என எப்படி சொல்வது.

காப்ரியெல்லா மார்க்கெஸ் எழுத்தை நான் தமிழ் படுத்தினால் , அது மொழி பெயர்ப்பு என்றுதான் அழைக்க வேண்டும், அதை சாருவின் எழுத்து என சொல்ல முடியாது.

ஆனால் சினிமாவில் இது நடக்கிறது.இது அயோக்கித்தனம் .  ஒன்றும் தெரியாமல் படம் எடுக்க வந்து விடுகிறார்கள். இதை சொன்னால் என்னை ஜென்ம விரோதியாக பார்க்கிறார்கள்
குருதிப்புனல் படத்தில் இது ஆரம்பித்தது. நக்சலைட் ஒருவன் தன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் பணத்தை செருகி செல்வான். இப்படி ஒரு காட்சி.

ஒரு சிறுமியை பாலியல் நோக்கத்தோடு நக்சலைட் பார்ப்பது போலவும் , பிறர் மனைவி மீது ஆசைப்படுவது போலவும் காட்டி இருப்பார்கள். இப்படி எல்லாம் செய்தால், நக்சலைட் இயக்கதில் இருக்க்வே முடியாது. தூக்கில் போட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடுக்கு பேர் போனவர்கள்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் ஏன் படம் எடுக்கிறீர்கள். ஏன் அவர்களை பொறுக்கிகளாக காட்டுகிறீர்கள். நகசலைட்டுகள் என்னை வர்க்க எதிரியாக பார்க்க கூடியவர்கள். அவர்கள் ஆட்சி அமைந்தால் , என்னை நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும்  நியாயத்தை பேச வேண்டும் என விரும்புகிறேன்.

ஓர் இலக்குக்காக செயல்படகூடியவர்கள் அவர்கள். கடும் கட்டுப்பாடு நெறிகள் கொண்ட அவர்களை , பொறுக்கியாக காட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். இதை சொன்னால் கமல் என்னை எதிரியாக நினைக்கிறார். பொது இடங்களில் பார்த்தால் , கண்டும் காணாமல் சென்று விடுகிறார்.

இதை எல்லாம் பார்த்தால் , ஏன் இவர்களுடன் போராட வேண்டும் என்ற அலுப்பு ஏற்படுகிறது. அத்னால்தான் இப்போது நான் எழுவதில்லை.


இன்னொன்று நான் பரிந்துரைக்கும் வேற்று மொழி படங்களை பலர் பார்ப்பதில்லை. காரணம் ஆங்கில அறிவு போதாமை. சினிமாவில் நுழைய விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவை. ஆனால் நம் கல்வி திட்டத்தில் அதற்கு இடம் இல்லை. ஆங்கில அறிவு இல்லாமல் , அந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். போராடி போராடித்தான் ஆங்கிலம் கற்றேன்.

ஆங்கிலம் தெரியாவிட்டால் , ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை இழந்து விட்டீர்கள் என அர்த்தம். சினிமா என நாம் இது வரை கற்றுக் கொண்ட குப்பைகளை மனதில் இருந்து அகற்றவே பல ஆண்டுகள் ஆகும். இதற்கு உலக படங்களை பார்க்க வேண்டும். எனவே ஆங்கிலம் மிக மிக அவசியம்.

( தமிழ் நாட்டின் டாப் டென் mediocrates , பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் , ராமாயண எரிப்பு , சினிமாவாக எடுக்க வேண்டிய புத்தகங்கள் , சாரு நாவல்களில் எதை சினிமா ஆக்க முடியும் , கமல் நூறு முறை பார்த்த சினிமா எது , ஏன் பார்த்தார் , இசை அமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் - இது போன்ற சுவையான விஷ்யங்கள் அடுத்த இடுகையில் )

- தொடரும்



பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் - சாரு உருக்கமான வேண்டுகோள்

 நேர்மை, தெளிவு , துணிவு  ,சமூகத்தின் மீது அன்பு / அக்கறை .  இந்த காம்பினேஷனில் ஒரு மனிதரை காண்பது அரிது . மற்ற துறைகளில் ஓரளவு இந்த காம்பினேஷனுடன் சிலர் இருக்கிறார்கள் . ஆனால் சம கால எழுத்தாளர்களில் இந்த பண்புகளை ஒரு சேர காண்பது மிகவும் கடினம்.

இந்த பண்புக்ளை ஒரு சேர பெற்ற , வாராது வந்த மாமணி போல , தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் சாரு என்பது பலரது கருத்து. இந்த கருத்தை வலுப்படுத்துவது போல சாருவின் இன்றைய பேச்சு அமைந்து இருந்தது.

ஜெய் பீம் காம்ரேட் ஆவண படம் குறித்து விண் தொலைக் காட்சியில் பேசினார். இன்ன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த படம் பார்க்காதவர்கள் , தன் நண்பர்களாக நீடிக்க முடியாது என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அந்த அளவுக்கு இந்த படத்தையும் , அது சொல்லும் செய்தியையும் , உணர்வுகளையும் சாரு நேசிக்கிறார்.


சக மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வதன் அவலத்தை சுட்டிக்காட்டினார். இந்த படத்தை பார்ப்பது வரலாற்று கடமை என்றார்.

மனிதன் கழிவை மனிதன் சுமக்கும் அவலத்துக்கு எதிரான சட்டம் 1993ல் கொண்டு வரப்பட்டது , ஆனாலும் இந்த இழி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மலம் என்ற வார்த்தையை சொன்னாலே பலருக்கு வாந்தி வந்து விடும். ஆனால் இந்த கழிவுகளை சுமப்பதையே வேலையாக சிலர் செய்கிறார்களே.. அவர்களது நிலையை நாம் எண்ணி பார்த்தோமோ என்றெல்லாம் சாட்டையால் விளாசினார்.


இந்த நிலையில் இருந்து அவர்கள் வெளி வர வேண்டும் என்றால் அதை கல்விதான் சாதிக்கும் என்று சொன்னவர் தன் வாழ்க்கையை உதாரணமாக காட்டினார்.

இந்த விளிம்பு நிலை மக்களுடன் தான் , சாருவின் இளமைக் காலம் கழிந்து இருக்கிறது. மலம் அள்ளும்போது கூட சென்று இருக்கிறார் ( தேகம் நாவலில் இதை உருக்கமாக சொல்லி இருப்பார் ) மலத்தின் மீது சாம்பலை தூவி , அதை அள்ளி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றுவது அவர்கள் பணி. குடிக்காமல் இந்த வேலையை செய்ய முடியாது. காலப் போக்கில் குடிக்கு அடிமையாகி விடுவார்கள்.


கல்விதான் தன்னை இதில் இருந்து காப்பாற்றும் என உணர்ந்த சாரு , வெறித்தனமாக படிக்க ஆரம்பித்து , வேறு ட்ராக்கிற்கு வந்து விட்டார். ஆனால் , அவர் தம்பிக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் , அதிலேயே சிக்கி கொண்டார். 40 வயதிலேயே இறந்து விட்டார்.  


சாருவுக்கு இந்த படத்தின் மீதான உணர்வு பூர்வமான நெருக்கத்துக்கு , இதுதான் காரணம் போலும்.

இந்த படம் 13 ஆண்டுகளாக எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொன்னார். இப்படியெல்லாம் பாராட்டிபேசிய சாரு ,மாற்று கருத்தையும் முன் வைத்தார்.

மதம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது தவறு என ஆதாரபூர்வமாக சுட்டி காட்டினார். அமெரிக்காவில் நிலவிய இன வெறி கொள்கைக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என கேட்டார். எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர , ஹீரோ வில்லன் சண்டையாக இதை மாற்ற கூடாது என உணர்ச்சி பூர்வமாக சொன்னார்.


தமிழ் பொது புத்தி பொறுப்பை தட்டி கழிப்பதற்கு பேர் போனது. பிரச்சினைக்கு நீயோ , நானோ காரணம் இல்லை ,. ம்தம்தான் எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என சொல்லி விட்டு , மானாட மயிலாட பார்க்க சென்று விடுவோம் . ஆனால் , இதற்கு காரணம் நீதான் , மதம் காரணம் இல்லை என்று சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். சாருவுக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. 



இதோ , அவர் பேச்சின் இணைப்பு. 


Tuesday, September 25, 2012

கம்யூனிஸ்ட் யுகத்தை கண் முன் நிறுத்தும் குல்சாரி- புத்தக பார்வை


ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை  திறம்பட கண் முன்  நிறுத்தும் எழுத்துகள் ஒரு வகை. மிகவும் நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.

கால கட்டங்கள் , இடங்களை தாண்டி எல்லா தேசங்களுக்கும் , எல்லா காலங்களிலும் பொருந்த கூடிய எழுத்துகள் இன்னொரு வகை. இதற்கு நிபுணத்துவம் , அறிவு இவற்றை தாண்டி வேறு ஏதோ ஒன்று தேவைப் படுகிறது.

அப்படிப்பட்ட எழுத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மத்தவ் படைத்த புகழ் பெற்ற நாவலான குல்சாரி  நாவல்தான் அது.

தற்போது டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல் படித்துக் கொண்டு இருக்கிறேன்.  அதிலேயே வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன்.  இதனால்தான் வலைப் பக்கம் கூட அதிகம் வர முடியவில்லை.

போரும் அமைதியின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வரலாம் என ஒரு சேஞ்சுக்காக படித்தததுதான் குல்சாரி.

புரட்சிக்கு முந்தைய ரஷ்ய இலக்கியம் , புரட்சியை சித்தரிக்கும் எழுத்துகள், புரட்சிக்கு பிந்தைய சமகால ரஷ்ய இலக்கியம் போன்றவற்றில் பலருக்கு ஆர்வம் உண்டு.

ஆனால் சோவியத் யுகத்தில் படைக்கப்பட்ட , அன்றைய கால கட்டத்தை சித்திரிக்கும் எழுத்துகள் அவ்வளவாக நம் மக்களை சென்றைடையவில்லை.

என்னை பொருத்தவரை , சோவியத் கம்யூனிஸ்ட் யுகத்தை நம் கண் முன் நிறுத்தும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் சிங்கிஸ் ஐத்மத்தவ். அன்னை வயல், ஜமீலா , முதல் ஆசிரியர் என பல பொக்கிஷங்களை படைத்தவர் அவர் என்றாலும் அவற்றுள் முதன்மையானது குல்சாரி என்பது என் கருத்து.

தானாபாய் என்ற முதியவர் , தன் குதிரையுடன் பயணமாவதுடன் நாவல் ஆரம்பிக்கிறது. தன் மகனுடன் வசித்து வரும் அவர் அவமதிப்புகளை சந்தித்து , குறிப்பாக மருமகள் டார்ச்சர் தாங்க முடியாமல் , தன் ஊருக்கு கிளம்பி செல்கிறார் . அவ்ரது இளமை காலம் , குதிரையிடன் அவருக்கு ஏற்பட்ட பந்தம் போன்றவை கடந்த கால நினைவுகளாக சொல்லப் படுகிறது.

கதை நடப்பது , கிர்கிஸ்தான் நாட்டில். சோவியத் யூனியனுக்கு முன் அது எப்படி இருந்தது. சோவியன் யூனியனில் சேர்ந்த பின் ஏற்பட்ட மாற்றம் போன்றவை கதைப் போக்கில் சொல்லப் படுகிறது.

கூட்டுப் பண்ணைகள் அமைத்து வறுமையை விரட்டியது  , கட்டாய கல்வி மூலம் கல்வியறிவு  அளித்தது என பல மாற்றங்களை கம்யூனிஸ்ட் ஆட்சி கொண்டு வந்தது . ஆனால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் ஆட்சி கெடுதி மட்டுமே செய்தது , கொடுங்கோல் ஆட்சி நடத்தியது என்ற கருத்துகளே பலர் மனதில் பதிந்துள்ளது. திட்டமிட்ட பிரச்சாரத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.

கம்யூனிச கொள்கையில் ஈடுபாடுள்ள தானாபாய் , கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகிறான். அதற்காக உழைக்கிறான். அப்போதுதான் குல்சாரி என்ற குலுங்கா நடை குதிரையின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கிறது. பல போட்டிகளில் அவனுக்கு வெற்றியை ஈட்டி தந்து பிரபலம் ஆகிறது குதிரை. ஒரு கால்பந்தாட்ட வீரன் அடையும் ஹீரோ ஸ்டேட்டஸை அடைகிறது குதிரை.

சிறுவர்கள் ரஜினி , கமல் போல இமிடேட் செய்வதை போல , சிறுவர்கள் குல்சாரியை போல நடந்து இமிடேட் செய்து மகிழ்கின்றனர்.

தானாபாய் ஆடுகளை பரமாரிக்கும் வேலையில் அமர்த்தப்படுகிறான். ஆனால் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தாலும் , உதவியின்மையாலும் அந்த பணியில் தோல்வி அடைகிறான். அதிகாரியுடன் தகராறு ஏற்பட்டு , தான் நேசிக்கும் கட்சியில் இருந்து விலக்கப்படுகிறான்.

அவன் நண்பன் சோராவின் மரணமும் அவன் மனதை வெகுவாக பாதிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின் கட்சி அவனை மீண்டும் அழைக்கிறது.

தன் இன்பத்தில் , தன் கூடவே இருந்த குதிரையை , தன் கஷ்ட காலத்தில் அவன் கை விடவில்லை. அதனால் பயன் இல்லை என்ற நிலையிலும் கூட , அதன் ஒரு நண்பன் போல தன் கூடவே வைத்து இருக்கிறான்.  தன் உணர்வுகளை குதிரையிடன் தான் பகிர்ந்து கொள்கிறான்.

ஒரு நல்ல விஷ்யம் உருவாகும்போது , சிலரது தவறுகளால் அந்த நல்ல விஷயத்தின் நோக்கமே அடிபட்டு போவது யதார்த்தம், இதை அருமையாக சில அதிகாரிகள் மூலம் சித்திரித்து இருக்கிறார் ஐத்மத்தவ் . அதிகாரிகள் சிலர் அப்படி இருந்தாலும்  , தொழிலாளிகள் கட்சியை உயிருக்கு நிகராக நேசித்ததையும் அழகாக சொல்லி இருக்கிறார். குறிப்பாக சோராவின் கடைசி ஆசை நெகிழ வைக்கிறது.

இந்த புத்தகத்தை நம் ஊர் கம்யூனிஸ்ட்டுகள் உரிய முறையில் பிரபலப்படுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது.

மொழி பெயர்ப்பு வெகு அழகு. ஆங்கிலத்தில் படித்து இருந்தாலும் , கதை தெரிந்து இருந்தாலும் , மொழி பெயர்ப்பு அழக்குக்காகவே தமிழில் படித்தேன்.

கடைசியில் குதிரையை இறந்தவுடன் தானாபாய் அடையும் வேதனையை நாமும் அடைகிறோம் . கூடுதலாக சோவியத் யூனியன் மறைவும் நம் நினைவுக்கு வந்து மனதை கனக்க செய்கிறது.


குல்சாரி - தவற விடக்க்கூடாத , குறிப்பிடத்தக்க நாவல் 

வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 

விலை - ரூ 95  

Sunday, September 23, 2012

பாலகுமாரனின் இலக்கிய இடம்- ஜெயமோகன் திடீர் பல்டி- பழைய கட்டுரையும் , புதிய கட்டுரையும்



ஜே ஜே சில குறிப்புகள் வெளி வந்தபோதே , அதை விமர்சித்து எழுதியவர் சாரு நிவேதிதா. விமர்சன நூல் ஒன்றை தன் செலவிலேயே வெளியிட்டார். அப்போதெல்லாம் ஜெயமோகன் போன்றவர்கள் அந்த ஜெஜெ சில குறிப்புகளை பாராட்டி கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் ஜெயமோகனும் சாருவின் கருத்துக்கே வந்து விட்டார். சமீபத்தில் அந்த நாவல் அப்படி இன்றும் சிறந்தது அல்ல என சொல்லி விட்டார்.

ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளர் கருத்துகளை ஏற்பது ஆரோக்கியமானதே... ஆனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு நன்றி சொல்லாதது தவறு என நடு நிலையாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் வணிக எழுத்து தேவையா என்றொரு கட்டுரை ஜெமோ வலைத்தளத்தில் வெளியானது. அதை பார்த்த நடு நிலையாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். காரணம் , சில மாதங்களுக்கு முன் இதே விஷ்யத்தில்  மாறுபட்ட கருத்துகளை சொல்லி இருந்தார்.

தவறான கருத்தை சொல்லி விட்டு , திருத்தி கொள்வது நல்லதே. ஆனால் முன்பு சொன்னது தவறு என ஒப்புக்கொளவதுதானே அறிவு நாணயம்?

ஜெ மோ அன்று சொன்னது... 


  • வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
  • இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
  • சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.

ஜெ மோ இன்று சொல்வது 

  • ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது.
  • ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.
  • முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.


இந்த இரண்டு கருத்துகளையும் பார்த்தால் அவர் தற்போது தன் பழைய தவறான கருத்துகளை மாற்றிக் கொண்டது புரியும்.  தன் தவறை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் , திருத்தி கொண்டாரே , அந்த அளவுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.. அன்று சுஜாதா , பாலகுமாரன் போன்றவர்களால் இலக்கியம் வளரவில்லை என்றார் . இன்று மாற்றி பேசுகிறார். 

அவரது பழைய கட்டுரையும் , புதிய கட்டுரையும் உங்கள் பார்வைக்கு 
**************************************************


அவரது பழைய கட்டுரை 




கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரிய எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல




*********************************************************************************
அவரது தற்போதைய  கட்டுரை.
நான் வணிக எழுத்து தேவையற்றது என்று நினைப்பவன் அல்ல. சொல்லப்போனால் வணிக எழுத்தின் இடத்தை அங்கீகரித்த முதல் தமிழ் இலக்கியவாதி நான்தான்
நான் எழுத வந்த எண்பதுகளில் இலக்கியம் இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களின் வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்தது. அங்கே கேளிக்கை எழுத்தின் மீது தீவிரமான எதிர்ப்பும் வெறுப்பும் இருந்தது. அது ஐம்பதுகளில் க.நா.சுவால் உருவாக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரால் பேணி வளர்க்கப்பட்டது.
அன்றெல்லாம் எந்த ஒரு கேளிக்கை எழுத்தாளரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தக் கூடாது என்ற உறுதி சிற்றிதழ்ச்சூழலில் நிலவியது. கல்கி முதல் சுஜாதா வரை எவரைப்பற்றியும் ஓரிருவரி நக்கல்களுக்கு அப்பால் எதையும் சொல்ல மாட்டார்கள். எந்த விவாதத்திலும் அவர்களின் பெயர்களைச் சொல்வதென்பது மிகவும் அருவருப்பூட்டும் ஒன்றாகவே கருதப்பட்டது.
அதற்கான காரணமும் உள்ளது. அன்று இலக்கியத்துக்கு எந்த அடிப்படை மரியாதையும் இருக்கவில்லை. எழுத்துக்கள் வாசிக்கப்படுவதில்லை, நூல்கள் விற்பதில்லை. அச்சேறுவதே கடினம்.கல்லூரிகளும் பல்கலைகளும் வணிக எழுத்துக்களையே இலக்கியமாகக் கருதின. அவற்றுக்கே பரிசுகளும் அங்கீகாரங்களும் வந்தன. ஆய்வுகள் நடந்தன. அவை லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் பண்பாட்டின் அடையாளச்சின்னங்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.
அச்சூழலில் இலக்கியத்தை மிகுந்த ஆவேசத்துடன் முன்வைத்தாகவேண்டிய நிலை இருந்தது. வணிக எழுத்து X இலக்கியம் என்ற இருமையைத் திட்டவட்டமாகக் கட்டமைக்கவேண்டியிருந்தது. அதன் பொருட்டு இலக்கியம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இலக்கியத்தை சில விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தார்கள்.
சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல ஆத்மசுத்தி, சுதந்திரம், அழகுணர்ச்சி ஆகியவற்றால் ஆனது இலக்கியம். அவ்விழுமியங்களைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தவேண்டியிருந்தது அன்று. அதற்காக அந்த விழுமியங்களைக் கொள்ளாத வணிக எழுத்துக்களை முழுமுற்றாக நிராகரிக்கவேண்டியிருந்தது. வணிக எழுத்து ஆத்மார்த்தமானதல்ல, வாசகனுடைய ரசனைக்காக எழுதப்படுவது. அது சுதந்திரமானதல்ல, சமூகப்பொதுவான கருத்தியலை அது மீறமுடியாது. அதற்கு அழகுணர்வு முக்கியமல்ல,சுவாரசியம் மட்டுமே அதன் இலக்கு.
இக்காரணத்தால் எண்பதுகளின் இறுதி வரை வணிக எழுத்து மீதான முழு நிராகரிப்பு சிற்றிதழ் இலக்கியச் சூழலில் நிலவியது. அது தேவையான ஒன்று. தமிழில் இலக்கியத்தொடர்ச்சி அதி தீவிரமாக இலக்கியத்தை நம்பி சிற்றிதழ்ச்சூழலில் செயல்பட்ட நம் முன்னோடிகளால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எதிர்மறைச்சூழல்களில் இறுக்கமும் வேகமும் கொள்வது மானுட இயல்பு. மனைவி நகையை விற்று சிற்றிதழ் நடத்திய அம்முன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தொண்ணூறுகளில் சட்டென்று வணிக எழுத்து அர்த்தமிழந்தது. தொலைக்காட்சியின் வருகை அதற்கான காரணம். நட்சத்திர வணிக எழுத்தாளர்கள்கூடப் பின்னுக்குச்சென்று காணாமலானார்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக இலக்கியத்துக்கு கவனம் கிடைத்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் லா.ச.ராவும் ,அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள்.
ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது. இன்று தமிழ்நாட்டில் இலக்கியவாசிப்பு,தரமான வாசிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாசிப்பு கீழிறங்கியிருக்கிறது. முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.
தொண்ணூறுகளில் இதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.இலக்கியம் கேளிக்கை அல்ல, அது ஞானப்பகிர்வு. ஆனால் ஒரு சமூகத்தில் ஓர் உயர்தரக் கேளிக்கையாகவும் வாசிப்பு இருந்துகொண்டிருக்கவேண்டும் என்று சொன்னேன். அதை ஒட்டி நீண்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன. வாசிப்பைக் கேளிக்கை என்று எப்படிச் சொல்லலாம் என்று சண்டை போட்டிருக்கிறார்கள்.
வாசிப்பு ஓர் இயக்கமாக நீடிக்க வணிக எழுத்து அவசியம்.வெறுமே மனமகிழ்ச்சிக்காகவும் பொதுவான அறிதலுக்காகவும் வாசிக்கப்படும் நூல்களுக்கு சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டில் பெரும் பங்கு உண்டு. வணிக எழுத்தை இலக்கியம் என்று சொல்வது எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழை அவற்றைத் தேவையற்ற அல்லது கீழ்த்தரமான செயல்பாடு என்பது. இதுவே என் நிலைப்பாடு.
இன்னொரு அம்சத்தையும் நான் சுட்டிக்காட்டினேன். இலக்கியத்தில் ஒழுக்கநோக்குக்கும்,எளிமையான இலட்சியவாதத்துக்கும், கற்பனாவாதக் கனவுகளுக்கும் இடமில்லை. ஆனால் அவை ஒரு சமூகத்துக்குத் தேவை. இளம் மனதில் அவை உருவாக்கும் விளைவுகள் மிகச் சாதகமானவை. ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.
அறுபதுகள் முதல் தமிழில் இலக்கிய நூல்களுக்குப் பட்டியல்போடும் வழக்கம் இருந்தது. க.நா.சு அதை ஆரம்பித்து வைத்தார். அந்தப்பட்டியல்கள் வழியாகவே இலக்கியத்தொடர்ச்சி நீடித்தது. மூன்று தலைமுறைக்காலம் கைப்பிரதியாகவே அப்பட்டியல்கள் உலவின. அதன்வழியாகவே நல்ல நூல்கள் வாசிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி எனக்கு அப்படி ஒரு பட்டியலை அளித்தார்
நான் தொண்ணூறுகளில் நல்ல வணிக எழுத்துக்கான பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். சுந்தர ராமசாமி அது வீண்வேலை என்று என்னைக் கண்டித்தார். ஆனால் அதற்கான அவசியம் உண்டு என நான் நினைத்தேன். அப்பட்டியல் என் ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் பின்னிணைப்பில் உள்ளது.
நான் ஊகித்த அந்த அவசியம் இன்று வந்து விட்டது. தொண்ணூறுகளுக்கு முன் இலக்கியங்கள் கிடைக்காத நிலை இருந்தது, பட்டியல்கள் மூலமே அவை நினைவுகூரப்பட்டன. இன்று இலக்கியங்கள் கிடைக்கின்றன. அன்று எங்கும் கிடைத்த வணிக எழுத்துக்கள் மறைந்துவிட்டன. என் பட்டியல் அவற்றை நினைவூட்டுகிறது.





Saturday, September 22, 2012

பிரபஞ்ச நாயகன் எடுப்பது நல்ல படமா? உண்மையான நல்ல படம் - சாரு பேச்சு


ஏதாவது நல்ல படத்தை பார்த்து விட்டு , அதை கேவலமாக மொழி மாற்றம் செய்யக்கூடியவர் பிரபஞ்ச நாயகன்.  உதாரணமாக பல்ப் ஃபிக்‌ஷன் படத்தை அவர் பார்க்கிறார் என வைத்து கொள்ளுங்கள். அது நல்ல படம் என அவருக்கு புரிந்து விடும். ஆனால் அது ஏன் நல்ல படம் என அவருக்கு புரியாது. அந்த படத்தில் அடிக்கடி வரும்  f**  வார்த்தையால்தான் அதை நல்ல படம் என பாராட்டுகிறார்கள் என நினைத்து கொண்டு, அந்த வார்த்தையை அப்படியே அப்படி தமிழில் மொழியாக்கம் செய்து படம் எடுப்பார். உலக தரத்தில் படம் எடுத்து இருக்கிறேன் என்பார், நாமும் ஆவலாக சென்று பார்ப்போம் . பார்த்தால் , பல்ப் ஃபிக்‌ஷன் படத்தின் தரத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் அவர் படம் இருக்கும்.  f** என்ற வார்த்தை மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கும். இதை தவிர எந்த சம்பந்தமும் இருக்காது. படம் ஃப்ளாப்பாகும் . தயாரிப்பாளர் புலம்புவார். ரசிகர்களுக்கு தன் அறிவு புரியவில்லை என பிரபஞ்ச நாயகன் அறிக்கை விடுவார்.

இது கால காலமாக நடப்ப்பதுதான்.

இந்த நிலையில் உண்மையிலேயே உலக தரத்திலான ஒரு படத்தை பற்றி சாரு நிவேதிதா விண் டிவியில் பேசினார். மிக அழகான பேச்சு. 

ஆரண்ய காண்டம். 

மிக சிறந்த படத்தைப் பற்றி ஆழ்ந்த புரிதலுடன் அவர் பேசியது சிறப்பாக இருந்தது .  நல்ல சினிமா உருவாக வேண்டுமானால் , சினிமாவைத்தாண்டி மற்ற துறைகளிலும் ஆழ்ந்த அறிவு வேண்டும் என்ற அவர் கருத்து சிந்திக்க வைத்தது. படத்தின் சில காட்சிகளைப் பார்க்கையில் , ஓவிய காட்சிகளை நினைவு படுத்தும் வகையில், ஒளி ஓவியமாக ஒளிப்பதிவு இருந்ததாக சொன்ன சாரு, அதன் பின் இயக்குனரிடம் பேசியதாகவும் , ஓவியம் போல காட்சிகள் இருக்க வேண்டும் என திட்டமிட்டு அந்த காட்சிகளை அமைத்ததாக இயக்குனர் சொன்னதாகவும் சொன்னார்.

கண் மூடித்தனமாக காப்பி அடிக்கும் நம் ஆட்கள் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தால் நல்ல படங்கள் வரும் என தோன்றியது.

தேவர் மகன் படம் பார்க்கையில், பல் வேறு ஆங்கில படங்கள் நினைவு வந்ததாகவும் , ஆரண்ய காண்டம் எந்த படத்தையும் நினைவு படுத்தாத அசல் தமிழ் படம் என்றும் சொன்னார்.

மார்க்கெட்டிங் சரியில்லாதது மட்டுமே ஆரண்ய காண்டம் படத்தில் தோல்விக்கு காரணம் என தோன்றியது. காப்பி படங்களும் , மாறு வேட போட்டிக்கான படங்களும் வெற்றி அடையும் தமிழ் நாட்டில், நல்ல படங்கள் தோல்வி அடைவது வருத்தமே.

intertextuality , self-reflexivity போன்ற பின் நவீனத்துவ கூறுகள் ஆரண்ய காண்டத்தில் இருப்பதை அழகாக சுட்டி காட்டினார். 

சரி, ஆரன்ய காண்டம் என்ன சொல்கிறது?

 கலை என்பது எதையும் பிரச்சாரம் செய்வதில்லை. அது ஓர் அனுபவம். அது அளிக்கும் அனுபவம் மரண படுக்கை வரை நமக்கு மறக்காது. அந்த வகையில் , மறக்க முடியாத படம் ஆரண்ய காண்டம் என்றார் சாரு. 


Friday, September 21, 2012

புயலிலே ஒரு தோணியை மிஞ்சிய ”கடலுக்கு அப்பால்” நாவல்

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்

ப. சிங்காரத்தின் இன்னொரு நாவலான , கடலுக்கு அப்பால் மிக சிறந்த நாவல்களில் ஒன்று. ஆனால் புயலிலே ஒரு தோணி பெற்ற புகழுக்கு முன் , இந்த புகழ் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறது ( பு. ஒ . தோணி நாவலே கூட உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பது வேறு விஷயம் )

         கடலுக்கு அப்பால் நாவல், பு ஒ தோணி நாவலின் தொடர்ச்சியோ, முன் பாகமோ இல்லை. இரண்டின் கதை களமும் , கால கட்டமும் ஒன்று. ஆனால் இரண்டும் தனி தனி நாவல்கள். ஒன்றை படிக்காமலேயே இன்னொன்றை படிக்கலாம்.

ஆனால் இரண்டையும் சேர்த்து படித்தால் முழுமையான பார்வை கிடைக்கும். காரணம் இரண்டு நாவல்களும் வெவ்வேறு எதிர் துருவங்களில் இயங்குகின்றன.  புயலிலே ஒரு தோணியின் எதிர் நாவல் என்று கூட கடலுக்கு அப்பால் நாவலை சொல்லி விட இயலும்.

    நாம் பெரும்பாலும் நம்மை பற்றியேதான் யோசித்து கொண்டு இருப்போம். அன்றாட கவலைகள் , பிரச்சினைகள் என்று மனம் பிசியாக இருக்கும்.

  புயலிலே ஒரு தோணி வாழ்க்கையை , அதன் அபத்தங்களை , குரூரங்களை , மகிழ்ச்சிகளை , கொண்டாட்டங்களை , சாகசங்களை உன்னிப்பாக பதிவு செய்கிறது.

 தலைகளை வெட்டி கண்காட்சி வைப்பது , வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவி விடுவது , பேருந்துகளை கார் என அழைத்த கால கட்டம் , சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாபெரும் தலைவனைக் கூட , உணர்ச்சி வசப்படாமல் ஒரு பார்வையாளனாக கவனிக்கும் நிகழ்வு என ஒவ்வொன்றையும் பாண்டியன் மூலம் உன்னிப்பாக கவனிக்கிறோம்.

 வாழ்க்கையை பாரபட்சமின்றி ஒரு வித எள்ளலுடன் , ஒரு விலகலுடன் கவனிப்பது , மிகவும் நுட்பமான விஷ்யம். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷ்யங்களை இப்படி கவனிக்கலாம். ஆனால் நாமே சம்பந்தப்படும் விஷ்யங்களில் , இந்த வில்கல் சாத்தியம் இல்லை.

கடலுக்கு அப்பால் செல்லையா வேறு விதம்.  நம்மை சுற்ரி நிகழும் விஷ்யங்களை நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்  என தன்னை உன்னிப்பாக கவனிப்பவன் இவன்.

தன்னை கவனிப்பது ஒரு துருவம் என்றால் , தன்னை சுற்றி நிகழும் விஷ்யங்களை உன்னிப்பாக கவனிப்பது இன்னொரு துருவம்.

தன்னை அறிந்தால் உலகை அறியலாம். உலகை அறிந்தால் , தன்னை அறியலாம் என்ற நம் ஊர் சித்தர் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது .

செல்லையா போர் காலங்களில் ஹீரோவாக திகழ்ந்தவன்,  போர் இல்லாத நிலையில் அவன் வீரம் , திறமைக்கு வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய வேலைக்கு திரும்ப வேண்டிய நிலை.

இவனை வளர்த்து ஆளாக்கி தன் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் இருந்தவர் வயிரமுத்து பிள்ளை. ஆனால் அவன் ராணுவத்துக்கு சென்று வந்தது அவருக்கு பிடிக்கவில்லை.

அவர் மகள் மரகதமும் , செல்லையாவும் ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கிறார்கள்.

முன்பு இந்த காதலுக்கு ஆதரவாக இருந்த  வயிரமுத்து   பிள்ளை இந்த காதலுக்கு இப்போது எதிரி.

வயிரமுத்து ரி பிள்ளை கெட்டவர் இல்லை. கடும் உழைப்பாளி , செல்லையா உட்பட அனைவருக்கும் நல்லது நினைப்பவர். ஆனால் அவர் மூர்க்கமாக காதலை எதிர்க்கிறார்.

அவர் கொஞ்சம் கெட்டவராக இருந்தால் கூட , அவரை தூக்கி எறிந்து விட்டு காதலர்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடியும். ஆனால் இப்போது பிரிவை தவிர வேறு வழி இல்லை.

இந்த பின்னணியில் , பல விஷ்யங்களை ஆராய முடியும்.  வயிரமுத்து   பிள்ளை நல்லதுதான் நினைக்கிறார் என்றாலும் , அவர் செய்வது அனைவருக்கும் கெட்டதுதான் . அவர் மகளுக்கோ, அவர் பார்த்திருக்கும் மாப்பிளைக்கோ, செல்லையாவுக்கோ , அவருக்கே கூட தொலை நோக்கு பார்வையில் இது நல்லது இல்லை.

ஏன் இப்படி செய்கிறார் என ஆராய்ந்து பார்த்தால் சில விஷ்யங்கள் தெரியும். செல்லையாவை தன் வியாபார வாரிசாக்க நினைத்த நிலையில் , அவன் ராணுவத்துக்கு சென்றது அவர் ஈகோவுக்கு பெரிய அடி.

இன்ன்னோரு கோணத்தில் பார்த்தால் , அவர் ஆசையாக வளர்த்த அவன் மகன்  இறந்து விடுகிறான். அவர் மகன் வயதை ஒத்த செல்லையாவை பார்க்கையில் , அவர் மனதில் இனம் பெரிய பொறாமை வெறுப்பு ஏற்பட்டு இருக்க கூடும்.

மரகதத்தின் கோணத்தில் இருந்து பார்த்தால் , அவள்  நியாயம் என்பது ஊரோடு ஒத்து வாழ்வது. செல்லையாவுடன் பழகி விட்டு , இன்னொரு மணப்பது அவளை பொறுத்தவரை தவறு இல்லை.

கவனித்து பார்த்தால் , இவர்கள் இருவரையும் குற்றம் சாட்ட , வெறுக்க ஆயிரம் காரணங்கள் செல்லையாவுக்கு கிடைக்கும்.

ஆனால் செல்லையா இவர்களையோ , வாழ்க்கையையோ விமர்சிக்கவில்லை. முழுக்க முழுக்க தன்னை மட்டுமே கவனிக்கிறான்.

தனக்கு உரியவள் , தன்னை நேசித்தவள் இன்னொருவனுக்கு உடமையாவது தனக்கு பொறாமை ஏற்படுத்துகிறது என்றால், இதில் காதல் எங்கே இருக்கிறது. தன் அகங்காரம்தானே இதில் தெரிகிறது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது.

தன் காதலியை இழந்தாலும் , தன்னை புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது.

உலகம் தோன்றியது எத்தனையோ செல்லையாக்கள் , எத்தனையோ மரகதங்கள்.. எவ்வளவோ கண்ணீர்கள். கண்ணீர் சிந்திய செல்லையாக்கள் எத்தனையோ பேர்..யாருக்காக இந்த கண்ணீர். அகந்தைக்காகவே இந்த கண்ணீர் என்ற சிந்தனை உலுக்கி விடுகிறது..

காதல் , அன்பு என்று நாம் நினைத்து வைத்து இருக்கும் விஷ்யங்களை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நாவல்.


இந்த இரண்டு நாவல்களும் ஒரே புத்தகத்தில் கிடைக்கின்றன. ப சிங்காரத்தின் பேட்டி இடம் பெற்று இருப்பது இனிய போனஸ்.

புயலிலே ஒரு தோணி - ப . சிங்காரம்
தமிழினி பதிப்பகம்
விலை - ரூ 180
**************************************

என்னை கவர்ந்த வரிகள் சில


  •  பொண்டாட்டிய கூப்பிட சொன்னா , மாமியாளை கூட்டியாந்து விடிகிற பயல்ங்கிறது சரியா போச்சுல
  • தண்டமிழாசான் சாத்தன் இப்போது மணிமேகலையின் பிறப்பு மர்மத்தை நேர்முகமாக ஆராய்ந்து கொண்டு இருக்கிறான். அவனை பதினாறாம் இலக்க அறையில் இருந்து வெளியேற்றுவது கடினம்
  • தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதலில் பொதிய மலை போதையில் இருந்து விடுபட வேண்டும்
  • தனியாக சென்றாலும் நீதி கிடைக்கும் என்ற நிலை வந்தால் , ஜாதி முறையின் பிடி தளர்ந்து விடும்
  • ஒன்றை விட்டு ஒன்றை பற்றுதல் . ஆ, என்ன மடமை. சாதி சமயத்தை விட்டேன். சங்கத்தையும் , கட்சியையும் பற்றினேன். கற்பனை தெய்வ சிலைகளை நிராகரித்து , வெட்ட வெளிச்ச மானிட பொம்மைகளை தொழுகிறேன். காவி உடை சன்னியாசிகளை பழித்து , வேறு உடை செயலாளர்களை தொழுகிறேன். தேர் திருவிழாக்களுக்கு செல்வதை நிறுத்தி, மா நாடுகளுக்கு செல்கிறேன் . நெற்றியில் திரு நீறு அணிவதை விடுத்து சட்டையில் சின்னம் அணிகிறேன். மானிடனே , நண்பனே.. நீ ஏமாந்தாய். எதை விட்டு எதை பற்றினாய். அதற்கிது எவ்வகையில் நயம்?
  • போன டச்சு காரர்கள் திரும்பி விட்டனர். இருந்த ஜப்பானியர் போய் விட்டனர். மீண்டும் இவர்கள வரலாம். அவர்கள் போகலாம்.  கீர்த்தியின் விலை என்ன ? பயன் என்ன ? முடிவு என்ன ?
  •        ஒரே ஒருக்க , உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்”  செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது
  • நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?   சொல்லு   “ நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா , மரகதம்னு பேரு வைங்க
  • எந்த கழுதையும் கற்புரசியாக இருக்க முடியும். காலைக்கட்டி கொண்டு சும்மா இருந்தால் போதும்

            எல்லாம் யோசிக்கும் வேளையில், பசி தீர உண்பதும் , உறங்குவதுமாய் முடியும்


******************************


கண்டிப்பாக படித்து பாருங்கள் 

Sunday, September 16, 2012

தமிழர்கள் முட்டாள்களா ? ஜெயமோகனும் மலையாள பகவதி அம்மனும்

நகைசுவையும் தமிழ் சினிமாவும் என ஒரு கட்டுரை . அதில் மலையாளிகள்தான் ரசனையில் சிறந்தவர்கள் என்றும் , தமிழர்கள் முட்டாள்கள் என்றும் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அவர் ”சாரு நிவேதிதவிண்ட பேரு இனி எண்ட ஜீவிதத்தில் பறயுக இல்யா” என்று மலையாள பகவதி அம்மன் கோவிலில் வைத்து சத்தியம் செய்திருக்கிறாரே தவிர , தமிழர்களை கிண்டல் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்யவில்லை. எனவே அவரை பகவதி அம்மன் தண்டிக்க மாட்டாள்.




என்னதான் தமிழ் நாவல்கள் எழுதினாலும் , தமிழ் படங்ககளுக்கு வசனம் எழுதினாலும், தாய் மொழி மலையாளத்துக்கு அவர் விசுவாசமாக இருப்பது பாராட்டுக்கு உரியது. அவர் சொன்ன கருத்தையும் நான் ஏற்கிறேன்.

தமிழர்கலாகிய நாங்கள் காட்டுமிராண்டிஹதேன் .ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாலையும் தூக்கிக்கிட்டுவெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக. எங்க ரசனை இப்படித்தான் இருக்கும்.,



ஆனால் நைசாக அவாள் மீது பாசம் சொரிந்து இருப்பதுதான் நகைப்புக்கு உரியது. இட்லி , சாம்பாரை பொய் ரசித்து சாப்பிடுகிறாயே.. உனக்கு ஒன்னும் தெரியல என கிண்டல் செய்யும் ஒருவன் , கழனி தண்ணிதான் சுவையானது என சொன்னால் எப்படி இருக்கும்.



அதே போல , நம் ரசனையை கிண்டல் செய்யும் இவர் தான் ரசிப்பதாக சொல்லி இருப்பது என்ன தெரியுமா. கமல் நடித்த படங்களிலேயே மோசமான படங்ககள் இரண்டை.



வியாபார ரீதியாக தோல்வி அடைந்த மைகேல் மதன காம ராஜனையும் , கலை ரீதியாக தோல்வி அடைந்த தசாவதாரத்தையும் பாராட்டி இருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் கமலே கூட பெருமையாக நினைப்பதில்லை.



ஆனால் இவர் பாராட்டுகிறார் என்றால் , அவாள் மனதில் இடம் பிடிப்பதுதான் நோக்கம என்பது தெளிவு.



ஆனால் அவாள் , தமிழர்களை போல இளித்த வாயர்கள் இல்லை. இவர் என்னதான் பாராட்டினால் , அவாள் அவாலோடுதான் சேர்வார்கள்.



கிரேசி மோகன், பால குமாரன் , சுஜாதா என்றுதான் கமல் இருப்பாரே தவிர , ஜெயமோகனை பொருட்படுத்த போவதில்லை.  
எனவே ஜெயமோகனின் மொழிப்பற்றை மலையாள பகவதி நேசித்தாலும் , அவாள் விஷ்யத்தில் ஜெயமோகனின் கருத்தை பகவதி ரசிக்க மாட்டாள்

Monday, September 10, 2012

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்த்த நாவல்

தமிழில் படிக்க வேண்டிய முக்கிய நாவல் ஒன்றை பரிந்துரையுங்கள் என சாருவிடம் வேண்டுகோள் விடுத்தார் புதிய வாசகர் ஒருவர் ( வாசகர் வட்ட சந்திப்பு ஒன்றில் ) . சற்றும் யோசிக்காமல் சாரு சொன்ன பதில் , புயலிலே ஒரு தோணி.

 நான் படித்திராத நாவல். எனவே யார் எழுதிய நாவல் இது என்றேன். கேள்வி கேட்டது யார் என சாரு பார்ப்பதற்கு முன் , அங்கு இருந்த நண்பர் ஒருவர்  வேறு பேச்சு கொடுத்து சாருவின் கவனத்தை திசை திருப்பினார்.

அதன் பின் என்னுடன் தனித்து பேசிய நண்பர்,  ஒரு சாரு வாசகன் என்ற முறையில் இதை எல்லாம் நீங்கள் ஏற்கனவே படித்து இருக்க வேண்டும். யார் எழுதியது என கேட்கிறீர்களே என உரிமையுடன் கடிந்து கொண்டார்.

சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக அந்த நாவலை வாங்கினேன். கொஞ்சம் படித்தேன். உலக போர் , புலம் பெயர் வாழ்க்கை என நன்றாக இருந்தது.  சில பக்கங்கள் கழித்து பார்த்தால் , கப்பல் பயணம் , வட்டி தொழில், தமிழ் நாட்டு வாழ்க்கை என்றெல்லாம் இருந்தது. இலக்கில்லாத நாவலாக இருக்கிறதே , நமக்கு புரியுமா என்று கொஞ்சம் பயமாக இருந்ததால் , நாவலை அப்படியே வைத்து விட்டேன்.

அதன் பின் கொஞ்ச நாள் கழித்து , மீண்டும் எடுத்தேன். படிக்க ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்துதான், முன்பு வாசித்த முறையின் தவறை உணர்ந்தேன்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக  வாசிப்பது தவறு.

அமைதியான சூழலில், முழு கவனத்தையும் செலுத்தி, முழு நாளை ஒதுக்கி வாசித்தால்தான் முழுமையாக நாவலை உள் வாங்க முடியும். ஒரே சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம்.  இனிமையான , அழகான தமிழ் நம்மை உள்ளே இழுத்து கொண்டு விடும்.  ஒரே அமர்வில் படித்தால்தான் ,  நாவலின் வீர்யம் புரியும் என்பது என் கருத்து. மைய இழையை விட்டு இம்மி அளவு கூட விலகாமல் சீராக நாவல் பாய்ந்து செலவதை தொடர்ச்சியாக படித்தால்தான் உணர முடியும்.

எதிர்பார்க்காத பல் வேறு நிகழ்ச்சிகளால் , பல்வேறு நபர்களால் உருவாக்கப்படுவதே நம் வாழ்க்கை. இதை நான் டைப் செய்கிறேன், நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அது மிக மிக தற்செயலான நிகழ்வு. கம்யூட்டர் கண்டுபிடிப்பு, இண்டர்னெட் பயன்பாடு, போர் ஏதும் நடக்காத சூழ்னிலை என்ற பல்வேறு புற காரணிகளும் ஒத்துழைப்பதால்தான் , நான் டைப் செய்வதை , நீங்கள் படிக்கும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

அதாவது வாழ்க்கை என்பது ,  ஒத்திகைக்கு பின் நடக்கும் நடனம் அல்ல. முன் கூட்டியே யூகிக்க முடியாத , ஒaரு கால்பந்தாட்டம். கால்பந்திலாவது சில விதி முறைகள் , கால கட்டுப்பாடு உண்டு. ஆனால் வாழ்க்கை எந்த விதிகளுக்கும் உட்படாத அபத்த களஞ்சியம். எனவேதான் ”வாழ்க்கையின் இந்த அபத்தம் என்னை வாந்தி எடுக்க வைக்கிறது ” என்கிறார் சார்த்தார்.

எனவே வாழ்க்கையை எந்த கட்டுப்பாடுக்கும் , தர்க்கத்துக்கும் கட்டுப்படாத புயலுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இந்த புயலில் அல்லாடும் தோணிகள்தான் நாம் அனைவரும். ஆனால் உலகே நம்மை மையமாக வைத்து இயங்குவதாகவே நாம் நினைக்கிறோம். வாழ்க்கையின் பிரமாண்டத்துக்கு முன் நாமெல்லாம் தூசு.

சரி, இந்த புயலில் உழலாமல் அமைதியாக இருப்பது சிறந்ததா. கரையில் இருப்பது தோணிக்கு பாதுகாப்பானதுதான். ஆனால் தோணி படைக்கப்பட்டது அதற்காகவா?


கிராமத்து இனிய வாழ்வு, பால்ய வயதுக்குரிய விளையாட்டுகள் ,  உலகப்போர், வட்டிக்கடை , இந்திய தேசிய ராணுவம் , நேதாஜி, நண்பர்கள், காமம், சாகசம் , மனிதனின் மேன்மை, கீழ்மை என வாழ்க்கை எனும் புயல் கொண்டு செல்லும் பல இடங்களை ஒரு பார்வையாளனாக பார்க்கும் பாண்டியனின் கதைதான் புயலிலே ஒரு தோணி.

ஒரு பார்வையாளனாக வாழ்வது என்றால் என்ன ? சாலையில் செல்கிறோம். சாலையில் யாரோ அடிபட்டு கிடைக்கிறார்கள். பார்த்து விட்டு மெல்ல நகர்கிறோம்.

இதுவா பார்வையாளனாக வாழ்வது ? இல்லை?

இது கோழைத்தனம். ஒதுங்கி போதல். புயலில் அடிபட பயந்து கரையிலேயே தேங்கி கிடைக்கும் சோம்பேறித்தனம்.

பாண்டியன் துணிச்சலுடன் பொறுப்புகளை ஏற்கிறான் . ஆனால் அந்த பொறுப்புகளில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.  போர் கைதியாக இருக்கும்  டச்சு வீரன் டில்டனுக்கு , ரிஸ்க் எடுத்து உதவுகிறான். அதே நேரத்தில் அதை பெரிய சாதனையாக நினைக்காத விலகல் தன்மையும் அவனுக்கு இருக்கிறது.

 இப்படி வாழ்வது இருக்கட்டும். இதை வாசிக்கும்போதே கூட நமக்கு அந்த விலகல் தன்மை வாய்ப்பதில்லை.

உலகப்போர் பின்னணியில், ஜப்பானியர் படை எடுப்புடன் நாவல் ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரத்தில் நாமே , உலகபோருடன் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். நாவல் அடுத்த கட்டத்துக்கு நகரும்போது, வியாபார களத்துக்கு நாவல் செல்லும்போது , நம்மால் அதை ஏற்க இயலவில்லை. ஆனால் நாவலின் நாயகன் பாண்டியனோ வாழ்வின் போக்கில் இயல்பாக செல்கிறான்.

ஒரு கட்டத்தில் வியாபார களத்துக்கு மனம் பழகி விடுகிறது. இதுதான் யதார்த்தம் என மனம் நம்பும் நிலையில் , பாண்டியன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து , சாகச செயல்களில் ஈடுபடும்போது , நம் மனம் அதிர்கிறது. செல்லாது , செல்லாது என துடிக்கிறோம்.  நாவல் யதார்த்தத்தை மீறுவதாக நினைத்து பரிதவிக்கிறோம்.

உண்மையில் இதுதான் வாழ்க்கை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாண்டியனின் இந்த தெளிவு நமக்கு ஒரு கணத்தில் ஏற்படுகிறது.  பாண்டியன் எதிலும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளாமல் அனைத்தையும் தோன்றி மறையும் காட்சியாக பார்ப்பதைப்போல , பாண்டியனையும் விலகி நின்று  கவனிக்கும் மனப்பாங்கு நமக்கு ஏற்படுகிறது.

வழக்கமாக ஒரு நாவலில் , கதாபாத்திரங்களுக்க்குள் ஏற்படும் முரண்களே கதையாக இருக்கும். இதில் பாண்டியன் அளவுக்கு க்தை முழுதும் வரும் கதாபாத்திரங்கள் இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண் என்பது கதை இல்லை.

உலகப்போரோ, புலம்பெயர் வாழ்வோ , மதுரை வாழ்க்கையோ , தனி நபர் சாகசங்களோ கதை இல்லை. இவை எல்லாம் முக்கியமானவை தான். ஆனால் நாவல் இதைப்பற்றியது அல்ல.

கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியும் கதை அல்ல. புயலில் அலைந்து திரியும் தோணியின் பயணம் மட்டும்தான் கதை.

தலைகளை வெட்டி கண்காட்சி நடத்தும் ஜப்பானியர்கள் , அனைவரையும் நடுங்க வைத்த ஜப்பானியர்கள் பின்பு ஒடுக்கப்படுவது,

இந்த நாவலில் , கடல் பயணத்தில் ஏற்படும் புயலைப்பற்றிய குறிப்பு வருகிறது. நாவலின் உச்சம் என அதை சொல்லலாம்.

கடல் கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்த போது யாரும் கடிகாரம் பார்க்க்கவில்லை. பார்த்தபோது , எல்லா கடிகாரங்களும் நின்று போய் இருந்தன. 


இடை நில்லாமல் ஒரே மூச்சில் நாவலை படித்த நான் , இந்த இடத்தில்தான் மேலே படிக்க இயலாமல் அயர்ந்து நின்றேன்.


யுத்தம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளே ஒட்டு மொத்த பிரமாண்ட வரலாற்றுக்கு முன் தூசி என்றால், நம் வாழ்க்கையெல்லாம் ஒன்றுமே இல்லை. அதே நேரத்தில் மிகவும் மகத்தானதும் கூட..

நாவலை முடித்த பின் தோன்றுவது இதுதான்.

புயலிலே ஒரு தோணி- புகழ் சேர்க்கும் நாவல்
எழுதியவர்- ப சிங்காரம்
வெளியீடு - தமிழினி


கடலுக்கு அப்பால் என்ற அடுத்த நாவலுடன் சேர்த்து  இன்னும் கொஞ்சம் பேசலாம் , அடுத்த இடுகையில்...

( தொடரும் )





Thursday, September 6, 2012

பல்ப் ஃபிக்‌ஷன் திரைப்படம்- என்னை கவர்ந்த காட்சிகளும் , வசனங்களும்

 மேக் அப் போட்டுக்கொண்டு பல வேடங்களில் நடிப்பது , அப் நார்மலான வேடங்களில் நடிப்பது, வெளி நாட்டு படங்களை அப்படியே காப்பி அடித்து தமிழ் நாட்டு சூழலுக்கு பொருத்தம் இல்லாமல் பயன்படுத்துவது என்றெல்லாம் சிலர் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த படத்தை ரசிக்கும்படி கொடுக்க முடியும் என நிரூபித்த படம்தான் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த பல்ப்  ஃபிக்‌ஷன்.

செய்வதை ரசித்து செய்தால் , பிறராலும் ரசிக்கப்படும் என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம்.

புதுமையான கதை, புதுமையான வசனங்கள் என்றெல்லாம் இல்லாமல் வேண்டும் என்றே பழைய படங்களின் சாயலில் சட்டையர் பாணியில் கக்கி இருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க எள்ளல் , கிண்டல் என ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்து விடுகிறார்.

ஒரு ரகசிய பெட்டி, கடிகாரம் , குத்து சண்டை வீரன் , மார்சலஸ் வாலஸ் என்பவரிடம் பணி புரியும் வின்செண்ட் மற்றும் ஜூல்ஸ், மார்சலசின் மனைவி என இவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களே கதை.

ஆரம்பம் , தொடர்ச்சி , முடிவு என்ற வகையில் இல்லாமல் சம்பவங்களுக்கும் வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செதுக்கப்பட்ட படம் இது.

எனக்கு பிடித்த காட்சிகள்.

1 குத்து சண்டை வீரன் புட்ச் , தன்னை கொல்ல விரும்பும் மார்சலசுடன் சேர்ந்து இரு சைக்கோகளிடம் மாட்டி கொள்கிறான். ஆனாலும் தப்பி விடுகிறான். தான் மட்டும் தப்பி செல்ல முடியும் என்ற நிலையிலும் , மார்சலசை காப்பாற்றுகிறான்.

2 உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மார்சலஸ் , எதிர்பாராத விதமாக மோசமான நிலையில் சிக்கி கொள்கிறார். புட்சால் காப்பாற்றப்பட்ட அடுத்த கணமே தன் இயல்பான நிலைக்கு வந்து தலைமை பண்பை நிலை நாட்டுகிறார்.

3 ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என கடிகாரத்துக்காக ரிஸ்க் எடுக்கிறான் புட்ச்.

4 பிணத்துடன் ஜிம்மி வீட்டுக்கு செல்கின்றனர் ஜூல்சும் , வின்சண்டும் . பிணத்தை பார்த்தோ, போலிசுக்கோ அஞ்சாமல் , தன் மனைவி வந்தால் என்ன ஆகுமோ என பயப்படுகிறான் ஜிம்மி. உலகம் முழுதும் கணவன்மார்கள் நிலை இப்படித்தான் போல.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து ரசிக்கலாம். போதையால் உயிருக்கும் போராடும் வால்சின் மனைவியை அழைத்து கொண்டு , லேன்சின் இடத்துக்கு செல்ல முயல , அவன் அங்கு வர வேண்டும் பதறுவது செம ரகளை.

எனக்கு பிடித்த வசனங்கள்


" என் வீட்டுக்கு வரும்போது, வீட்டுக்கு முன்னாடி பிணவறை என்ற போர்டு இருந்துச்சா ?
“ இல்லை”
“ ஏன் இல்லை ?”
“ ஏன் ? ”
“ ஏன்னா, பிணங்களை பாதுகாப்பது என் வேலை இல்லை. அதனால்தான்”


” நான் அவளோட ஊர் சுத்த போகல. அவ பெரிய மனுஷன் பொண்டாட்டி. அவ முன்னாடி பவ்யமான வாய மூடி உட்கார்ந்துக்கிட்டு, அவ சொல்ற கேணத்தனமான ஜோக்குகளுக்கு சிரிச்சுக்கிட்டு இருப்பது மட்டுமே என் வேலை . அவ்வளவுதான்”
” இனிமே மதுக்கடைகளுக்கு திருட போக கூடாது. இங்லீஷ் கூட அவங்களுக்கு தெரியாது. பணத்தை எடுனு சொன்னா, நாம் என்ன கேட்குறோம்னே அவங்களுக்கு புரியாது. சரியா புரிஞ்சுக்குமா நம்மை கொன்னாலும் கொன்னுடுவாங்க “

” சரி , நாம போகலாம். நான் என்ன செய்றேனோ அதை மட்டும் செய்ங்க. வெட்டித்தனமா நீங்களா ஏதாவது செஞ்சு தொலைக்காதீங்க. புரியுதா? நான் என்ன சொன்னேன்? சொல்லு பார்க்கலாம்”
“  நீங்க வெட்டித்தனமா எதுவும் செய்யும் வரைக்கும் , நாங்களா அந்த மாதிரி செய்ய கூடாது”

” நான் பன்னி கறி சாப்பிடுவதில்லை”
“ ஏன் ?”
“ அது ஒரு அருவருப்பான விலங்கு ”
“ நாய் கறி ? ”
“ அதையும் சாப்பிடுவதில்லை”
“ ஏன்? அதுவும் அருவருப்பான விலங்கா?”
“ அப்படி சொல்ல முடியாது. அதற்கென ஒரு பர்சனாலிட்டி இருக்கிறது”
“ அப்படி பார்த்தால், பன்னிக்கும் ஒரு நல்ல பர்சனாலிட்டி இருந்தால் , அது கேவலமான விலங்காக இல்லாமல் போய் விடுமா?”

“ இந்த ஊசியை ஒரே குத்தாக குத்தி, இதயத்தில் செலுத்தணும்”
“ அப்படி செஞ்சா என்ன நடக்கும் ? “
“ அதை பார்க்க நானும் ஆவலா இருக்கேன் “

“ இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது ? “
“ இது மோட்டார் சைக்கிள் அல்ல. chopper”
“ இந்த  chopper யாருடையது ? ”
“ செட் என்பவனுடையது”
“ செட் என்றால் யார்? “
” செட் செத்து போய் விட்டான் “

”உங்க பேர் என்ன? “
“ புட்ச் “
“ புட்ச் நா என்ன ? “
“ நான் ஓர் அமெரிக்கன். எங்க பேருக்கெல்லாம் ஒரு **ம் அர்த்தம் கிடையாது “

” பெரியவர்களை மதிப்பதுதான் , ஒரு கேரக்டரை உருவாக்கும் ”
“ எனக்கு கேரகடர் இருக்கு”
“ நீ ஒரு கேரக்டராக இருக்கலாம். அதற்காக உனக்கு கேரக்டர் இருக்குனு அர்த்தம் இல்ல” 

“  நீ Blueberry pie நு சொல்லி முடிப்பதற்குள் வந்துறேன். ஓகேவா?”
“ Blueberry pie “
” ஒக்கே ..இவ்வளவு சீக்கிரம் இல்லை. முடிஞ்சளவு சீக்கிரம் வந்துறேன்”


" உனக்கு சரி ஆகிடுச்சா? ஏதாச்சும் சொல்லு”
“ ஏதாச்சும் “ 
******************************************************************************



Saturday, September 1, 2012

சோடா மூடி திரைப்படமும் , சோர்ஸ் கோட் திரைப்படமும்

ப்ளூ ஃபிலிம் இயக்குனர் ஒரு காலி பெருங்காய டப்பா என வெகு நாட்களாகவே சொல்லி வருகிறேன். சாரு விவகாரத்தினால் ஏற்பட்ட வெறுப்பினால்தான் அவரை குறை சொல்வதாக பலரும் கருதுனார்கள்.

தற்போதைய சோடா மூடி படத்தை பார்த்ததும் , என கருத்துக்கே பலரும் வந்து விட்டார்கள்.

கொஞ்சம் தாமதம் ஆனாலும் வாய்மையே வெல்லும் என்பதை அறிய மகிழ்ச்சி.

பிரபஞ்ச நாயகம், ப்ளூ ஃபில்ம் இயக்குனர் போன்றவர்கள் , ஹாலிவுட் தரத்தில் படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு , சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் காப்பி அடிப்பதே அவர்கள் தோல்விகளுக்கு காரணம்.

நம் மண்ணின் பிரச்சினைகள், சோகங்கள் , சந்தோஷங்கள் போன்றவற்றை படமாக்க வேண்டும். இல்லையா , நம் மண்ணின் சிந்தனைகளை படமாக்கலாம். சம்பந்தே இல்லாமல் , எதையாவது காப்பி அடித்தால் என்ன அர்த்தம்.,

இன்சப்ஷன் , மேட்ரிக்ஸ் , சோர்ஸ் கோட் போன்ற பல படங்கள் , நம் இந்திய சிந்தனை மரபை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளன என்பது கவனித்து பார்த்தால் தெரியும்.,
இந்த படங்களை நம் இயக்குனர்கள் , நல்ல எழுத்தாளர்கள் துணையுடன் எடுத்து இருந்தால் , படங்கள் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.

இதில் இன்சப்ஷனும் , மேட்ரிக்ஸும் ஏற்கனவே சிறப்பாகத்தான் வந்து இருக்கின்றன. ஆனால் சோர்ஸ் கோட் படம் கொஞ்சம் சறுக்கி விட்டது என படம் பார்த்த போது தோன்றியது.

எடுத்து கதைக்களன் அருமை. சொல்ல நினைத்ததும் சரியானதுதான். ஆனால் திரையில் முழுமையான ரிசல்ட் கிடைக்கவில்லை. இயக்குனர் பேட்டிகள் மூலம் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார்.

இன்சப்ஷன் , மேட்ரிக்ஸ் போன்ற படங்களில் , ஏதாவது ஒரு கதாபாத்திரமே விளக்கங்கள் கொடுத்து விடும். சோர்ஸ் கோட் படத்தில் அப்படி இல்லை.

படத்தின் கான்சப்ட் என்ன ?

ஒரு மனிதன் இறந்து விட்டாலும் , அவன் மூளையில் சில நினைவுகள் பதிவாகி இருக்கும். இந்த நினைவுகளை டவுன் லோடு செய்து கொண்டு, இந்த நினைவுகளில் இன்னொருவனை சஞ்சரிக்க வைத்தால் சில விஷயங்களை சாதிக்கலாம்.

அதாவது அந்த மனிதன் இறப்பது முந்தைய எட்டு நிமிடங்களில் என்ன நடந்தது என பல கோணங்களில் பார்க்க முடியும்.

ஒரு தொடர் வண்டியில் குண்டு வெடித்து எல்லோரும் இறந்து விடுகிறார்கள். குண்டு வைத்தவன் யார் என கண்டு பிடித்து , அவன் மேலும் சதி திட்டம் தீட்டுவதை தடுக்க வேண்டும்.

இதற்காக கால்ட்டர் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ கேப்டனை , தொடர் வண்டி விபத்தில் இறந்து போன ஒருவரின் ( சான் வெண்ட்ரஸ் ) கடைசி எட்டு நிமிடங்களை வாழ செய்கிறார்கள்.இறந்து போன ஒருவரிடம் கடைசி நிமிடங்களில் என்ன என்ன நடந்தது என விலாவரியாக விசாரிக்க முடியாது.

நமக்கு தெரிந்த ஒருவரை அந்த கடைசி நிமிடங்களில் வாழ செய்து, அந்த விபத்து நடந்த பின் , அதைப் பற்றி விசாரித்தால் தேவையான விபரங்கள் பெறலாம் அல்லவா. அதைத்தான் கால்ட்டர் ஸ்டீவன்ஸ் மூலம் செய்கிறார்கள். அவரை கால இயந்திரத்தின் மூலம் , விபத்து நடந்த கடந்த காலத்துக்கு அனுப்பவில்லை. அவர் எண்ணங்களை , இறந்து போன ஒருவரின் நினைவுகளுடன் இணைத்து , கட்ந்த கால நிகழ்ச்சிகள் மீண்டும் நடப்பது போன்ற எஃபக்டை உருவாக்குகிறார்கள். இதுதான் சோர்ஸ் கோட் எனும் முறை,

ரயில் ப்யணத்துடன் படம் துவங்குகிறது. கால்ட்டர் ஸ்டீவன்சுக்கு தான் எப்படி இங்கு வந்தோம் என்றே தெரியவில்லை. அவனை  சான் என்று அழைத்தே மற்றவர்கள் பேசுகிறார்கள். க்றிஸ்டினா என்ற பெண் அவனை நன்கு தெரிந்தவள் போல பேசுகிறாள். அவனுக்கோ அவள் யார் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் குண்டு வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது. கால்ட்டர் வேறு ஓர் அறையில் ஒன்றும் புரியாமல் திகைக்கிறான்.  தொடர் வண்டியில் பயணம் செய்தது தான் அல்ல. இன்னொருவனின் உடலில் தான் புகுந்து பயணம் செய்தததை உணர்கிறான்.

உண்மையில் கால்ட்டர் ஸ்டீவன்சும் கிட்டத்தட்ட இறந்து போனவன் தான் . ஆய்வு கூடத்தில் அவன் முற்றுலும் இறந்து போகாமல் பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள். அவன் எண்ணங்கள் மட்டும் செயல்படுகின்றன. அந்த எண்ணங்களை வைத்துதான் இதை செய்கிறார்கள் . அதாவது அவன் உடல் தொடர் வண்டிக்கு செல்லவில்லை. தொடர் வண்டியில் செல்வது போன்ற ஒரு கற்பனை உலகம் உருவாக்கப்படுகிறது.

இந்த பாணியில் , மீண்டும் ரயிலுக்கு அனுப்பட்டுகிறான். மீண்டும் விபத்து. இப்படி மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டு, புதிய புதிய தகவல்கள் சேகரித்து , கடைசியில் சதிகாரனை கண்டு பிடித்து விடுகிறான். இதனால் , மேற்கொண்டு ஏற்படும் சதி செயல்கள் தடுக்கப்படுகின்றன.

சூப்பர்.

இப்போது அடுத்த கிளைமேக்ஸ்.

இப்படி மீண்டும் மீண்டும் ஒரே பயணத்தை செய்வதன் மூலம் அடிக்கடி பார்க்கும் க்ரிஸ்டினா மேல் காதல் வயப்படுகிறான் கதானாயகன். அவளை காப்பாற்றும் பொருட்டு, அந்த ரயில் குண்டு வெடிப்பையே தடுத்து விடுகிறான். அவனை அனுப்பிய்வர்கள், எதிர்கால சதிகளை தடுப்பதற்காகத்தான் அவனை அனுப்பினார்கள். அவனோ கடந்த காலத்தையே , கட்ந்த காலத்தில் நடந்த சம்பவத்தையே மாற்றி விட்டான். அதன் பின் தன் காதலியுடன் காலம் முழுக்க இன்புற்று வாழ்ந்தான். ஆய்வு கூடத்தில் இருந்த உடலை அழிக்க சொல்லி விடுகிறான்.

படம் விறுவிறுப்புடன் இருந்தாலும் , ரசிகர்கள் கேள்வி கணைகளால் இயக்குனர்களை துளைத்து எடுத்து விட்டார்கள்.  அவரும் சளைக்காமல் பதில் சொன்னார்.

****************************************************

“ இறந்து போனவரின்  நினைவுகளில் தான் , கதா நாயகன் வாழ முடியும் என்பது கான்சப்ட். ஆனால் இறந்து போனவனின் நினைவுகளில் பதிய வாய்ப்பு இல்லாத சில காட்சிகளை கதா நாயகன் எப்படி பார்க்கிறான் ? “

” கதா நாயகனின் எண்ணம் புதிதாக ஓர் உலகை சிருஷ்டி செய்து கொள்கிறது. இறந்தவனின் எண்ணம் அடிப்படை மட்டுமே. அதை வைத்து கொண்டு , கதா நாயகனின் கற்பனை உலகம் தன்னிச்சையாக இயங்கும் . உண்மை உலகைபோல அது மெய் நிகர் இணை உலகம் “

“  கதா நாயகன் கடந்த காலத்தை மாற்றி விடுகிறானே ?  குழப்பமாக இருக்கிறதே  ? “

” கதா நாயகன் உருவாக்கிய மெய் நிகர் உலகில் விபத்தே நடக்கவில்லை. எனவே  சோர்ஸ் கோட் என்பதற்கு வேலையும் இல்லை. ஆய்வு கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கும் கேப்டன் அங்கேயே இருக்கிறான். ”

“ விபத்தே நடக்கவில்லை என்றால் , தொடர் வண்டியில் யாரும் இறக்கவில்லை. க்றிஸ்டினாவுடன் பயணம் செய்த சான் என்ன ஆனான்? தேவையே இல்லாமல் , கேப்டன் அவன் உடலில் புகுந்து கொண்டு சானை வெளியேற்றி விட்டானா ? “

“ கேப்டனின் மனம் உருவாக்கிய உலகம் அது. அதில் கேப்டனை தன்னையே சான் என்பவனாக உருவகித்து கொள்கிறான்.  ரயிலில் க்றிஸ்டினாவுடன் அவன் வருகிறான். சதிகாரனை கண்டு பிடித்து , விபத்தை தடுத்து விடுகிறான். இதில் கேப்டன் என்ற கேரக்டருக்கு வேலையே இல்லை. ஆனால் உண்மையான உலகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால் , இது எல்லாமே கேப்டனின் கற்பனைதான் “

” எட்டு நிமிடங்கள்தான் மெய் நிகர் வாழ முடியும் என முதலில் சொல்கிறார்கள் . கிளைமேக்சில் காலம் முழுக்க தன் காதலியுடன் மெய் நிகர் உலகில் வாழ்வதாக படம் முடிகிறதே ?

“ எட்டு நிமிடம்தான் வாழ முடியும் என அவன் பணியை துரிதப்படுத்த சொல்லி இருக்கலாம் அல்லவா ? ஒவ்வொரு முறையும் அவன் இறந்த பின்புதான் மெய்  உலகுக்கு வருகிறான். சில காட்சிகளில் எட்டு நிமிடங்களுக்கு மேலும் அவன் வாழ்கிறான் “

“ அவன் உருவாக்கி கொண்டது கற்பனை உலகத்தில் இருந்து , மெய் உலகத்தில் இருப்பவர்களுக்கு மெயில் எப்படி அனுப்பினான்”

“ அதுவும் அவன் கற்பனையே “

*************************************************

இந்த சால்ஜாப்புகள் தேவை இல்லாமலேயே படம் நன்றாக ஓடியது. ஆனால் எடுத்து கொண்ட கான்சப்டை இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்து இருந்தால் , cult ஸ்டேட்டஸ் கிடைத்து இருக்கும்.

 நாம் கனவு காண்கிறோம். இப்போது நாம் வாழும் வாழ்க்கை உண்மையா அல்லது வேறு யாரும் கனவா என்ற தாக்கத்தை உருவாக்காமல், வெறும் மசாலா படமாகிவிட்டடது.

கனவு உலகம் , மறு பிறவி , மாயை போன்ற கீழை நாட்டு சிந்தனைகளில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நம் ஆட்கள் ஆங்கில படங்களை காப்பி அடிக்க முயல்கிறார்கள். சில சமயங்களில் இரண்டுமே தோல்வி அடைவதுண்டு,

இக்கரைக்கு அக்கரை பச்சை.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா